For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமாயணம் கட்டுக்கதை அல்ல என நிரூபிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்

இராமாயணம் என்பது கதையா அல்லது உண்மையாக நடந்ததா என்பது இன்றளவும் பதில்கூறம் முடியாத கேள்வியாகவே இருக்கிறது. இராமாயணம் உண்மைதான் என நிரூபிக்கும் ஆதாரங்கள் பல இப்பொது கிடைத்துள்ளது.

|

இராமாயணம் நமது சமூகத்தில் மறுதலிக்க முடியாத ஒரு மாபெரும் காவியமாகும். இதில் வரும் ஒவ்வொரு கதாபத்திரமும் நமக்கு எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதை எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. இராமனை போன்ற கணவன் வேண்டுமென்றோ, இலட்சுமணன் போன்ற தம்பி வேண்டுமென்றோ விரும்பாத ஆணோ. பெண்ணோ இங்கு இருக்க முடியாது.

Spiritual

இராமாயணத்தை வால்மீகி முதலில் வடமொழியில் எழுதினார், பின்னர் பல மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் இராமாயணத்தை கம்பர் இயற்றினார், எனவே அது கம்ப ராமாயணம் என அழைக்கப்படுகிறது. சிலர் இராமாயணத்தை கற்பனை காவியம் என்று கூறுகிறார்கள், ஆனால் பலரும் இராமாயணம் உண்மையாக நடந்த கதை என நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கையை உண்மையாகக்கும் வகையில் இராமாயணம் உண்மையாக நடந்ததென்ன நிரூபிக்கும் பல ஆதாரங்கள் இப்பொழுது கிடைக்க தொடங்கியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசோகவனம்

அசோகவனம்

சீதையை கடத்தி சென்ற இராவணன் அவரை இலங்கையில் சிறைவைத்த இடம் என்னவென்று அனைவருமே அறிவோம். ஆனால் உண்மையிலேயே இலங்கையில் இன்றும் அசோகவனம் என்ற இடம் இருப்பது பலரும் அறியாத ஒன்று.

நாகராஜ குகை

நாகராஜ குகை

சிங்கிரியாவில் உள்ள நாகராஜா ஹூட் குகை 100% இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இது ஒரு பாம்பை போலவே அச்சுஅசலாக உள்ளது. மனிதர்கள் இந்த குகையின் வடிவத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. ஆனால் இந்த குகையின் உட்புறம் சீதையை இராவணன் கடத்தி சென்ற வரைப்படங்கள் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

புறப்பட்ட இடம்

புறப்பட்ட இடம்

இராமர் எவ்வாறு தன் தந்தை தசரதன் மூலம் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார் என்று இராமாயணம் தெளிவாக கூறுகிறது. இராமன் சீதையுடனும், தன் தம்பி இலட்சுமணனுடனும் வனவாசத்தில் தங்கிய இடம் பஞ்சவடி என்று இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் நாசிக் அருகில் பஞ்சவடி என்ற இடம் உள்ளது, மக்கள் இந்த இடத்தில் பல இராமர் கோவில்களை கட்டி இன்றும் வழிபட்டுவருகின்றனர்.

இலங்கையின் மணல்

இலங்கையின் மணல்

சீதையை பார்க்க ஆஞ்சநேயர் இலங்கை சென்ற போது இராவணன் ஆஞ்சநேயரின் வாலில் தீ வைத்ததாகவும், ஆஞ்சநேயர் அந்த தீயை வைத்து பாதி இலங்கையையே எரித்ததாகவும் இராமாயணத்தில் குறிப்புகள் உள்ளது. இன்றும் இராவணனின் கோட்டைக்கு பக்கத்திலும், இலங்கையின் சில இடங்களில் இருக்கும் மணலிலும் அதிக பிஹெச் மற்றும் கார்பன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அறிவியலின் கூற்றுப்படி நெருப்பானது மணலுடைய கார்பன் மற்றும் பிஹெச் அளவை மாற்றக்கூடும்.

ஆஞ்சநேயரின் கால்தடம்

ஆஞ்சநேயரின் கால்தடம்

அசோகவனத்திற்கு அருகே மனித கால்தடங்களை விட சில மிகப்பெரிய கால்தடங்கள் உள்ளன. ஆஞ்சநேயருக்கு தன் உருவத்தை சிறிதாகவும், பெரிதாகவும் மாற்றிக்கொள்ளும் சக்தி இருந்ததாக இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் இலங்கைக்கு பறந்து சென்றபோது இங்குதான் இறங்கி அசோகவனத்தை சென்றடைந்தாக நம்பப்படுகிறது. இராமாயணம் உண்மையென நிரூபிக்க இது முக்கியமான ஆதாரமாகும்.

லெபாக்ஷி

லெபாக்ஷி

இராவணன் சீதையை கடத்தி சென்ற போது அவரை காப்பாற்ற ஜடாயு வந்தார். இராவணன் ஜடாயுவின் இறக்கையை வெட்டி ஜடாயுவை தரையில் வீழ்த்திவிட்டு சென்றான். இராமனும், இலட்சுமணனும் திரும்பி வந்தபோது ஜடாயு இறக்கும் தருவாயில் இருந்தார். அதை கண்ட இராமன் தன் சக்தி மூலம் லெபாக்ஷி அதாவது மீண்டு வா என்று கூறி ஜடாயுவை காப்பாற்றினார். சொன்னால் நம்பமாட்டிர்கள் இன்றும் ஆந்திராவில் லெபாக்ஷி என்ற இடம் உள்ளது. இதுவே ஜடாயு வீழ்ந்த இடமாக கருதப்டுகிறது.

ராமர் பாலம்

ராமர் பாலம்

இன்றும் பல சர்ச்சைகளை கிளப்பி கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது இராமர்பாலம் தான். இராமர் தன் வானர சேனைகளுடன் இந்த பாலம் வழியாகத்தான் இலங்கை சென்றதாக இன்றளவும் நம்பப்படுகிறது. இராமர் தன் திவ்ய சக்திகள் மூலம் கற்களை தண்ணீரின் மேல் மிதக்கவைத்து கிட்டத்தட்ட 50கிமீ தூரத்திற்கு இந்த பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. கடல் வழியாக இலங்கைக்கு செல்லும் தூரமும் அதேதான் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

சஞ்சீவினி மலை

சஞ்சீவினி மலை

இலங்கை போரில் இலட்சுமணன் மூர்ச்சையுற்றபோது அவரை காப்பாற்ற ஆஞ்சநேயர் சஞ்சீவினி மூலிகை இருந்த மலையை தூக்கிக்கொண்டு வந்தார் என்பது மிகவும் புகழ்பெற்ற சம்பவம். இந்த மழையின் பெயர் தனகிரி. மருந்தை உபயோகபடுத்தியபின் இராமர் அந்த மலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கும்படி ஆஞ்சநேயரிடம் கூறினார், ஆனால் ஆஞ்சநேயர் அந்த மலையை வைக்கும்போது அதன் ஓரத்தில் சேதாரங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த அடையாளங்கள் இன்றும் அப்படியே உள்ளது.

கொண்டா கணு காலா

கொண்டா கணு காலா

இந்த இடத்திற்குத்தான் இராவணன் சீதையை இடம் மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் பல குகைகள் இன்றும் இருக்கின்றன. இந்த பாதைகள் அனைத்தும் இராவணனின் கோட்டையுடன் தொடர்புடையவை. இராவணனின் கட்டிடக்கலை ஆற்றலுக்கு இது ஒரு சிறந்த சான்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual
English summary

Proofs which clearly shows Ramayana was real

The Ramayana is a mythological or real. It is always an unanswerable question. But here are some proofs that indicate Ramayana was real
Story first published: Saturday, July 21, 2018, 16:23 [IST]
Desktop Bottom Promotion