Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
கியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10!
கியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10!
கியூபாத் தீவு மற்றும் வேறு சில தீவுகளை இணைத்த ஒரு கரீபியன் தீவு நாடு கியூபா. ஒரு காலக்கட்டத்தில் அமெரிக்காவின் பொம்மை ஆட்சியாக கியூபாவை சேர்ந்த ஆட்சியாளர்கள் செயற்பட்டு வந்தனர். ஆகையால் அடிக்கடி போராட்டங்கள் வெடித்தவண்ணம் இருந்தன.
ஜப்பான் - அமெரிக்க போருக்கு பிறகு கையெழுத்தான உடன்படிக்க காரணமாக அமெரிக்கா போர்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ் போன்ற சில பகுதிகளை விட்டுக்கொடுத்து. பிறகு கியூபா 1902ல் அமெரிக்காவிடம் இருந்து சுதந்திரம் பெற்று கியூபா குடியரசாக மாறியது.
இதன் பிறகும் பல பிரச்சனைகள் எழ, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேராவின் போராட்டத்தால் வெற்றிக் கண்டு 1959ல் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் பொதுவுடைமை கொள்கையுடன் ஒரு முன்னேற்ற பாதையில் பயணிக்க துவங்கியது கியூபா.
கியூபாவிற்கென தனி சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றை குறித்து இந்த கட்டுரையில் காண்போம்...

பாலே நடனம்!
கியூபா என்றால் நினைவிற்கு வரும் அளவிற்கு அங்கே குத்துச்சண்டை தான் பிரபலம் என்று பலரும் அறிவார்கள். ஆனால், தற்சமையம் கியூபாவில் பேஸ்பால் விளையாட்டுக்கு மவுஸு அதிகரித்து காணப்படுகிறது. ஆயினும், கியூபன் பாலே நடனம் ஆடுவதை அவர்கள் பெருமையாக கொண்டிருக்கிறார்கள்.
கியூபன் தேசிய பாலே நடனமானது உலகிலேயே சிறந்த ஒன்றாக காணப்படுகிறது. கியூபர்கள், "ரஷ்ய பாலே நடனம் ஈர்ப்பு கொண்டிருக்கும், பிரெஞ்சு பாலே நடனம் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். ஆனால், கியூப பாலே நடனம் இந்த இரண்டும் கொண்டிருக்கும்" என்று கூறுகிறார்கள்.
நம் நாட்டில் பிறந்ததில் இருந்து படி படி படி என்று பெற்றோர்கள் கூறுவார்கள் என்றால், கியூபாவில் பிறந்ததில் இருந்து குழந்தைகளை விளையாட்டில் அதிக கவனம் செலுத்த கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பிடல் காஸ்ட்ரோ அவருக்கு தான் நன்றி கூற வேண்டும் என்றும் மக்கள் கூறுகிறார்கள். கியூப மக்கள் மத்தியில் உடற்தகுதி வலுவாக இருப்பதற்கு இதுவும் பெரும் காரணம் என்று அறியப்படுகிறது.

இன்டர்நெட்!
சென்ற ஆண்டு வரை கியூபாவில் இன்டர்நெட் வசதி பெரிதாக இல்லை. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தான் 500க்கும் மேற்பட்ட பொதுவிடங்களில் அதிவேக வை-பை வசதிகள் நிறுவப்பட்டன. மொபைல் இன்டர்நெட் இன்னும் கியூபாவில் ஒரு ஆடம்பர பொருளாக தான் காணப்படுகிறது. சுமார் ஒரு மணிநேரம் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் எனில், கியூபாவில் ஒரு டாலர் வரை செலவாகுமாம். மாதம் வெறும் 17 - 30 டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கும் மக்களுக்கு இது பெரும் தொகை என்று கூறுகிறார்கள்.
மற்ற நாடுகளில் மக்கள் காலை எழுந்ததும் மொபைலில் கண்விழித்து சோசியல் மீடியாவில் நியூஸ் ஃபீட் பார்த்துக் கொண்டிருந்தால், கியூபாவில் மக்கள் காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் பழரசம் பருகிக் கொண்டிருப்பார்கள். நீங்களே சொல்லுங்கள்.. இதில் எது ஆரோக்கியமானது.

கூடை பொருட்கள்!
கியூபாவில் சராசரியாக ஒரு நபரின் மாத வருமான 17 - 30 டாலர்கள். பென்ஷன் பெறுவோருக்கு மாதம் 9.5 டாலர்கள் தான் அளிக்கப்படுகிறது. எனவே, மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கூடையில் டஜன் முட்டை, ஒரு லிட்டர் வெஜிடபிள் ஆயில், இரண்டு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை மற்றும் இறைச்சி, சிக்கன், மீன் போன்றவை அளித்துவிடுகிறார்கள்.
மேலும், கியூபாவில் கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக அரசே வழங்குகிறது. குழந்தைகளுக்கு பள்ளி சீருடைகள் முதற்கொண்டு அரசே இலவசமாக வழங்கி விடுகிறது என்றும் அறியப்படுகிறது.

மருத்துவர் ஊதியம்!
கியூபாவில் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால், மருத்துவராக பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு மாதம் அயிரம் டாலர்கள் வரை ஊதியமாக அளிக்கப்படுகிறது. மேலும் தங்கும் இடமும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
அறுபதுகளுக்கு முன் இங்கே அமெரிக்கன் கல்வி முறை பின்பற்றப்பட்டது. எழுபதுகளுக்கு பிறகு சோவியத் கல்வி முறை பின்பற்றப்பட்டது. கியூப மருத்துவர்கள் இலத்தின் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவிலும் கூட வேலை செய்கிறார்கள்.
தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வெளி நாட்டை சேர்ந்தவர்களும் கூட கியூபா வந்து மருத்துவம் செய்துக் கொள்வதாக அறியப்படுகிறது. இங்கே, அபாயமான நோய்களுக்கு கூட பல மருத்துவமனைகள் சிறந்த மருத்துவம் அளிப்பதாக அறியப்படுகிறது.

கார்கள்!
கியூபாவில் அதிக கார் வாங்க ஒப்புதல் வழங்கப்படுவதில்லை. ஆகையால் கியூபா தெருக்களில் அதிகமாக கார்கள் காண இயலாது. கியூபாவின் சாலைகளில் அதிகம் பழைய கார்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே இங்கே சுற்றுலாவிற்கு வரும் மக்களுக்கு தனி ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
2009ல் கியூபா சீன கார் நிறுவனத்திடம் இருந்து சீடான் வகை கார்களை இறக்குமதி செய்தது. இந்த கார்கள் காவல் வாகனம் மற்றும் டாக்ஸி, வாடகை கார்களாக உபயோகப்படுத்தப்பட்டது. 2013ல் இருந்து தான் கியூப மக்கள் புதிய கார் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதுவும் அம்மாநில டீலர்களிடம் இருந்து மட்டும் தான்.

நாய்களுக்கு ஐடி!
கியூபாவில் மக்களுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியம். பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் நாய்களை காண முடியும். தெருவில் இருக்கும் நாய்களும் கூட ஒரு சுற்றுலா ஈர்ப்பு விஷயமாக தான் இருக்கிறது. கியூபாவில் எல்லா தெரு நாய்களுக்கும் ஒரு ஐடி நம்பர் இருக்கிறது. அதில், அவற்றின் பெயர், புகைப்படம், மருத்துவ நிலை, அவரின் ஸ்பெஷல் விஷயங்கள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

கோல்டன் ஏஜ்!
கியூபாவில் ஆண்கள் ஓய்வு பெரும் வயது 65, பெண்கள் ஓய்வு பெரும் வயது 60. கியூப மக்கள் கொஞ்சம் ஆரோக்கியமானவர்கள். ஆகையால் தான் இங்கே நூறு வயதை தாண்டி வாழ்வது இன்றும் சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.
முதலில் மக்கள் இங்கே ஆரோக்கியம் சார்ந்து அலட்சியமாக இருக்க கூடாது என்று அறிவுரைக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, இங்கே மக்கள் புகை மற்றும் மது பயன்படுத்த கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள். சிலர் இதை மீறி கியூபாவின் சிகரட் மட்டும் பயன்படுத்துகிறார்கள்.
கியூபாவில் பென்ஷன் பெரும் நபர்கள் சுதந்திரமாகவும், தனியாகவும் வாழ்கிறார்கள். இவர்களது ஆரோக்கியத்தை கண்காணிக்க மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் அங்கே இருக்கும் அனைத்து வீடுகளில் வாழும் மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க மருத்துவர்கள் 24/7 வேலை செய்து வருகிறார்களாம். ஆண்கள் 87 வயது வரையிலும், பெண்கள் 78 வயது வரையிலும் சராசரி ஆயுளாக கொண்டிருக்கிறார்கள்.

15வது பிறந்தநாள்!
கியூபாவில் பெண்களுக்கு 15வது பிறந்தநாள் மிகவும் ஸ்பெஷல். சிறுமிகள் பருவம் அடையும் வயதாக இது கருதப்படுகிறது. ஆகவே, 15வது பிறந்தநாளை இவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த வயதின் போது அவர்களுக்கான மதிப்பு கூடுகிறது.
இந்த வயதின் போது அவர்களுக்கு நிறைய விஷயங்கள் கற்றுத்தருவார்கள். சமூகத்த்தில் ஒரு சிறந்த பெண்ணாகவும், வருங்காலத்தில் நல்ல மனைவியாகவும் இருக்க என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தும் ஒரு பெண்ணுக்கு 15 வயதில் இருந்து கற்பிக்கப்படுகிறது.
ஒரு பெண் 15 வயதை எட்டினால், அந்த வீட்டில் பெரும் பார்ட்டி நடக்கும். பணக்காரர்களாக இருந்தால் பார்ட்டி பெரியதாக இருக்கும், சிலர் நாளிதழ்களில் எல்லாம் விளம்பரம் செய்வார்கள்.

பேப், கியூட்டி!
சுய மரியாதை மதிப்பு அதிகம் கொண்டிருப்பவர்கள். ஒருவரின் வசதியை மட்டும் வைத்து மதிக்கும் பழக்கம் கிடையாது. மிகவும் நெருங்கி பழகும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இவர்கள் பெண்களை பியூட்டி, பேப், டால் என்றெல்லாம் கூப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் திகைக்கும் சுற்றுலா பயணிகள், பின்பு, இவர்களது கனிவான குணத்தால் அதற்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துக் கொள்கிறார்கள்.
கியூபாவில் குற்றங்கள் மிகவும் குறைவு, பணம் அதிகம் இருப்பவர் அதை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஏழ்மையில் இருப்பவர்கள் அதை காரணம் காட்டி திருட மாட்டார்கள். கியூப மக்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காதே, அனைவர்க்கும் உதவு என்பதை தங்கள் வாழ்க்கை தத்துவமாக வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

உணவு!
கியூப மக்களுக்கு நன்கு உண்ணும் பழக்கம் உண்டு. உணவில் தாராள மனம் கொண்டுள்ளவர்கள். தங்களது கலாச்சார உணவு வகையை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவர்கள்.
இவர்களது உணவில் அதிகம் பீன்ஸ் மற்றும் இறைச்சி இருக்கும். இவர்கள் உணவை சமைப்பதற்கே அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள்.
இரண்டு மூன்று நாட்கள் முன்னரே வாங்கி வைத்தோ, பதப்படுத்தியோ உணவை உண்ணும் பழக்கம் இவர்களிடம் கிடையாது, உணவை ஃபிரஷாக உண்ண வேண்டும் என்பது இவர்களது விருப்பம்.
கியூப மக்களின் உணவு ஆரோக்கியமானது என்றும் குறிப்பிடுகிறார்கள். கொழுப்பு பற்றி கவலைப்படாமல் ருசித்து உண்ணும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள்.
இறைச்சி என்றால் அதில் அதிக கொழுப்பு இருக்கும், உருளைக்கிழங்கு என்றால் அதை அதிகமான எண்ணெயில் சமைத்து உண்பார்கள். கொலஸ்ட்ரால் பற்றி இவர்களுக்கு கவலையே இல்லை.
கியூபாவில் கியூபன் சான்ட்விச் மிகவும் பிரபலம், இதில் கியூப பிரெட், வறுத்த பன்றி இறைச்சி, சீஸ், ஊறுகாய் போன்ற பலவன கலந்திருக்கும். இப்படியாக பல விஷயங்கள் கியூபாவை உலக நாடுகளில் தனித்துவமான நாடாக காண செய்கிறது.



Click it and Unblock the Notifications











