For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மாதிரியான செல்ஃபி எல்லாம் இந்தியாவுல மட்டும் தான் பார்க்க முடியும் - புகைப்படத் தொகுப்பு!

இந்த மாதிரியான செல்ஃபி எல்லாம் இந்தியாவுல மட்டும் தான் பார்க்க முடியும் - புகைப்படத் தொகுப்பு!

By Staff
|

ஆரம்பத்துல ஆல்கஹால், சிகரெட், பாலியல் போன்ற விஷயம் தான் அடிக்ஷன்னு சொல்லப்பட்டது.. அப்பறம் டென்ஷன் அது இதுன்னு சொல்லி அதிகமா காபி குடிக்கிறது கூட ஒருவகையான அடிக்ஷன்தான்னு சொன்னாங்க... உலக ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்கன்னா... மூணு பேருல ஒருத்தர்க்கிட்ட நிச்சயமா ஏதாவது ஒரு வகையான அடிக்ஷன் இருக்குமாம்.

அந்த அடிக்ஷன் போதையா இருக்கலாம், மொபைல் யூஸ் பண்றதா இருக்கலாம், பொண்ணுங்க பின்னாடி சுத்துறதா இருக்கலாம்... அதுகமா சாப்பிடறதா இருக்கலாம்.. ஏன் செல்ஃபீ எடுக்குறதா கூட இருக்கலாம்.

செல்ஃபி எடுக்குறது தப்பு இல்ல. எப்ப பார்த்தாலும் செல்ஃபீ எடுத்துக்கிட்டு இருக்கிறது தான் தப்புன்னு சொல்றாங்க. அதுலயும், சிலர் எல்லாம் விதவிதமா, வித்தியாசமா செல்ஃபீ எடுப்பாங்க. இன்ஸ்டாகிராம்ல ஒரு லவ் ஜோடி அபாயமான உயரத்துல நின்னு செல்ஃபீ எடுக்குறத வழக்கமா வெச்சிருக்காங்க. ஆனா, அவங்கனால கூட, நம்ம பயலுக எடுக்குற இந்த மாதிரியான செல்ஃபீ எல்லாம் எடுக்கவே முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அதென்னமோ தெரியிலைங்க எதனால நம்ம பயலுகளுக்கு மட்டும் இப்படி தோணுது. அதுபாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்க... செல்ஃபீ படம் எடுக்க போறேன்னு பக்கத்துல போயி போன நீட்டுனா... அது சும்மா இருக்குமா.. அது படமெடுத்து பொட்டுன்னு போட்டுடும்ல. கொஞ்சம் சூதானமா இருங்க தம்பி.

#2

#2

தில்லு நிரூபிக்கணும்னா ட்ரெயின்ல கயிறு கட்டி, அத இழுத்து காமிக்கலாம்... இல்ல இது மாதிரியான வேற ஏதாவது சாதனை பண்ணலாம். அதவிட்டுட்டு வேகமா வந்துட்டு இருக்க ட்ரெயின் முன்ன நின்னு செல்ஃபீ எடுத்தா.. அதுக்கு ஆளுன்னு தெரியுமா, ஆடுன்னு தெரியுமா.. தட்டி தூக்கி வீசிட்டு போயிட்டே இருக்கும். கொஞ்சம் மிஸ் ஆனா உசுரு போயிடும்.

#3

#3

இப்ப தெரியுதா நம்மாளுங்க ஏன் சிங்கிள்ஸாவே இருக்காங்கன்னு ரோஜாப்பூவ எதுக்கு யூஸ் பண்ணனும்னு தெரியுறது இல்லை. அலங்காரத்துக்கு வெச்ச ரோஜாப்பூவ... எடுத்து செல்ஃபீ எடுத்துக்கிட்டு இருக்காரு அண்ணன். அதுலயும் நிக்கிற ஸ்டைல் பாருங்களேன் வேற லெவல். ஸ்டைல் ரொமான்ஸ் கிங்கா இருப்பாரு போல.

#4

#4

என்னப்பா இது மண்டை மேல ஏதோ கொண்டை. ஓ! அதே ரோசாப்பூ! அவனவன் முதல் ஐ-போன், முதல் ஆடி காரு வாங்கி செல்ஃபீ எடுத்துட்டு இருந்தா.. நம்மாளு முதல் ரயில் டிக்கெட் வாங்கி செல்ஃபீ எடுத்துக்கிட்டு இருக்காரு. சரி எடுக்குறது தான் எடுக்குறீங்க கொஞ்சம் சிரிச்ச முகமா எடுக்கலாம்ல எடுத்து அம்புட்டு வெறப்பு!

#5

#5

ஏனுங்க சிஸ்டர்... பின்னாடி என்ன தாஜ்மஹால், அரபிக் கடல்ன்னு அழகான விஷயங்களா இருக்கு... ரயில்வே தண்டவாளத்துல என்னெல்லாம் கெடக்கும்ன்னு எல்லாருக்குமே தெரியும்... அங்க உட்கார்ந்து எதுக்கு செல்ஃபீ...? பொதுவா ரெஸ்ட்ரூம்ல தான பொண்ணுங்க செல்ஃபீ எடுப்பாங்க... காலைக்கடன் டைம்ல ரெஸ்ட் எடுத்துட்டு போன இடத்துல எல்லாமா செல்ஃபீ எடுப்பாங்க...

#6

#6

இந்த மாதிரி கேஸ் நம்ம நாட்டுல நிறையவே இருக்குங்க... ஒரு ஆக்ஸிடென்ட் நடந்துச்சுன்னா முன்ன எல்லாம் பதறி அடிச்சுக்கிட்டு ஒடுவாங்க... என்னாச்சோ, ஏதாச்சோன்னு ஒரு பதட்டம் இருக்கும். இப்ப என்னடான்னா ட்ராபிக் போலீஸ் அத க்ளியர் பண்றதுக்குள்ள எப்படியாவது செல்ஃபீயோ, ஃபேஸ்புக் லைவோ எடுத்திடனும்ன்னு நினைக்கிறாங்க.. எல்லாரும் இல்ல.. நம்ம தம்பிய போல சில பேர்.

#7

#7

இது ஒரிஜினல் மிலிட்டரி ஷூட்டிங்கா.. இல்ல சினிமா ஷூட்டிங்கான்னு தெரியல... சாவகாசமா நம்ம பய கூட படுத்துட்டு போட்டோ எடுக்குறது பார்த்தா.. ஒன்னு வார் ஃபீல்ட்ல ரிப்போர்ட் பண்ண போன பயலா இருக்கணும்.. இல்ல ஷூட்டிங் ஸ்பாட்ல வேடிக்கை பார்க்க போன பயல இருக்கணும். என்ன நடந்தா நமக்கென்ன.. நமக்கு தேவை ஒரு செல்ஃபீ... அதுக்கு நூறு லைக்ஸ்.

#8

#8

அடடே! பெரிய சினிமாட்டோகிராபரா இருப்பாரு போல... அந்த பயலாவது நின்னுக்கிட்டு தான் போட்டி எடுத்தான். ஏம்பா... அங்க இரண்டு வண்டி தீப்பிடுச்சு எரிஞ்சு சாம்பலாகி நிக்கிது... நீ கண்ணாடி எல்லாம் போட்டுக்கிட்டு.. ஏங்கில் பார்த்து செல்ஃபீ எடுத்துக்கிட்டு இருக்க... இதெல்லாம் நியாயமாரே!

#9

#9

ஏதோ ஜனாதிபதிகிட்ட அவார்டு வாங்குறது மாதிரி போஸ் வேற... ட்ராபிக் ரூல மதிக்காம போய் ஃபைன் கட்டிட்டு இதுல செல்ஃபீ வேற... சார்! இவங்கள எல்லாம் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார். அப்ப கூட... கம்பிக்கு பின்னாடி நின்னு செல்ஃபீ எடுப்பாய்ங்க... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல... நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்!

#10

#10

அடேயப்பா! பாகுபலி படம் எடுத்த கேமரா மேன் கூட இப்படி ஒரு ஏங்கில் யோசிச்சிருக்க மாட்டாரு... பயபுள்ள உடம்பெல்லாம் மூளை போல. ஏம்மா.. இப்படி ஒரு போட்டோ எடுத்ததுக்கு அப்பறம் கூடவா இந்த பயல லவ்வுர... விதி வலியதுன்னு சொல்வாங்களே... அது இதுதானோ... என்னம்மோ ஒன்னு.. நல்லப்படியா வாழ்ந்தா சரி!

#11

#11

ஏனுங்க அங்கிள்... கொஞ்சம் விட்டிருந்தா அந்த பாம்பு அவரோட கழுத்த நெரிச்சிருக்கும்... அப்படி ஏதாவது அபாயமான சம்பவம் நடந்திருந்தா கூட இப்படி தான் ஹாஃப் பாயில் சிரிப்போட செல்ஃபீ எடுத்துட்டு இருப்பீகளா...பின்னாடி நிக்கிற கும்பல் கூட செல்ஃபீக்கு தான் போஸ் கொடுக்குறாங்க போல... நம்மாளுங்க எதுல ஒற்றுமையா இருக்காங்களோ இல்லையோ.. செல்ஃபீ எடுக்குறதுல ஒற்றுமையா இருக்காங்க...

#12

#12

அடடே! குருநாதா நீங்க இங்கயும் வந்துட்டீங்களா... சரி! சரி! நீங்க போகாதா நாடா... நீங்க பார்க்காதா கேமராவா...உலக நாடுகளின் தலைவர்கள் பட்டியல்ல.. அதிகமா போட்டோ எடுத்துக்கிட்டது யாருன்னு ஒரு போட்டியோ, கின்னஸ் ரெக்கார்டோ வெச்சா.. நம்ம குருநாதர் தான் முதல் இடம் பிடிப்பாரு. என்ன இருந்தாலும் அவரு சும்மாவா போட்டோ எடுக்குறாரு.. மனுஷன் எல்லாரும் வாக்களிக்கணும்னு சொல்லி படத்துலேயே பாடம் எடுத்துக்கிட்டு இருக்காரு!

#13

#13

போதுமடா சாமி! முடியல... கக்கா போகும் போது போன் யூஸ் பண்றதுனால ஏதேதோ பிரச்சனை எல்லாம் வருதுன்னு உலக ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் சொல்றாங்க... கக்கா போகும் போசு போனே யூஸ் பண்ண வேண்டாம்ன்னு சொன்னா.. நம்ம பயலுக ஜாலியா செல்ஃபீ எடுத்துக்கிட்டு இருக்காங்க. போட்டோ எடுக்குற தம்பி... நீங்க நாசூக்கா எஸ்கேப் ஆயிட்டீங்க.. உன் ஃபிரெண்டு என்ன பாவம் பண்ணா.. அவரு மானம் தான இப்ப பறக்குது இன்டர்நெட்டுல...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Types Selfies That You Can Take Only in India!

You can't see these kind of selfies in anywhere around world. Because, These Guys from India is Brave enough and Crazy overloaded to take such selfies. Take a look in These Indian Selfies.
Desktop Bottom Promotion