காதலிகளுக்கு மிக கேவலமான பரிசுகள் கொடுத்து டிரால் செய்த அல்டிமேட் காதலர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

காதலிகள் மற்றும் மனைவியருக்கு எப்போதும் சர்ப்ரைஸ் கொடுக்கும் துணையை மிகவும் பிடிக்கும். சின்ன, சின்ன விஷயத்தில் கூட கொஞ்சம் சர்ப்ரைஸ் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், ஆண்கள் தரும் எல்லா சர்ப்ரைஸ்ம் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலர் சர்ப்ரைஸ் தருகிறேன் என தங்கள் துணைக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று அறியாமல் ஏதாவது சொதப்பி விடுவார்கள்.

ஆனால், சில கில்லாடி ஆண்கள், வேண்டும் என்றே வெறுப்பேற்ற சில்மிஷமான பரிசுகள் கொடுத்து டார்ச்சர் செய்வார்கள். அல்லது தங்கள் துணைக்கு பிடித்த பொருளை மோசமான முறையில் பேக்கிங் செய்து சீரழித்து கலாட்டா செய்வார்கள்.

அப்படியாக தங்கள் மனைவி, காதலிக்கு பரிசு, சர்ப்ரைஸ் என்ற பெயரில் அவர்களை வாட்டி எடுத்த சில கில்லாடி துணைகளின் செயல்கள் தான் இவை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேக்கு!

கேக்கு!

இணையங்களில் பரவிய கேலிக் கிண்டல் நிறைந்த பிரபலமான படங்களில் இது கொஞ்சம் கவன ஈர்த்த ஒன்று. தனது காதலியின் பிறந்தநாள் கேக்கில் அவரது வாயு தொல்லையை கிண்டல் செய்து பிறந்தநாள் வாழ்த்து வாசகம் எழுதி அனுப்பிய காதலனின் சில்மிஷம் இது!

இதுவும் கேரட் தானே...

இதுவும் கேரட் தானே...

பொதுவாக தங்கம் மற்றும் வைர நகைகளின் தரம் அது எத்தனை கேரட் என்பதை வைத்தே வகை பிரிக்கப்படும். அப்படியாக, தனது ஆசை காதலி அந்த கேரட்டில் கேட்ட பரிசுக்கு... இந்த கேரட்டில் மோதிரம் பரிசளித்து அசத்தியுள்ளார் ஒரே பலே கில்லாடி.

பேக்கிங்!

பேக்கிங்!

எப்போதுமே, ஒரு பரிசு பொருள் வாங்குவதாக இருந்தால், அந்த கடைக்கரர்களே கிப்ட் பேக்கிங் செய்துக் கொடுக்கட்டுமா என கேட்பார்கள். அப்படியாக கிப்ட் பேக்கிங் செய்ய கோரியப் போது... அதை எவ்வளவு கேவலமாக பேக் செய்ய முடியுமோ அப்படி பேக் செய்யுங்கள் என்று கேட்டு வாங்கியுள்ளார் இந்த காதலன்.

இதுவும் டபுள் மீனிங் தான்!

இதுவும் டபுள் மீனிங் தான்!

இந்த லெட்டரின் ஒரு பாதியை படித்தால்... லவ் ப்ரேக் அப் செய்தது போலிருக்கும். அதுவே, அவர் கட் செய்து வைத்திருக்கும் மறுபாதியை சேர்த்து வைத்து படித்து பார்த்தால் காதல் ததும்பி இருக்கும். அட! இவங்களுக்கு எல்லாம் எங்க இருந்து இப்படி யோசனை வருதுன்னே தெரியல?!

கிட்டத்தட்ட இதுவும் ஒரு டபுள் மீனிங் லெட்டர் தான்.

பஞ்சு போல...

பஞ்சு போல...

தனக்கு பஞ்ச போன்ற கேக் வாங்கி வர கூறிய ஒரே காரணத்திற்காக பஞ்சின் மீது கேக் க்ரீம் பூசி அதையே கேக் போல அலங்கரித்து கொண்டுவந்து துணைக்கு அளித்துள்ளார் இந்த காதலர். கண்டிப்பாக ஆசை, ஆசையாக இதை கட் செய்த அந்த பெண் பெருங்கோபம் அடைந்திருப்பார்.

ஹாரர்!

ஹாரர்!

குழந்தையை கண்காணிக்க வைக்கப்பட்ட கேமரா ஃபிரேமுக்குள் பேய் போல அலங்காரம் செய்து அமர்ந்திருக்கிறார் இந்த கணவர். இதன் மூலம், வேலை செய்யும் இடத்தில் இருந்து தனது ஆக்ஸஸ் மூலம் மனைவி காணும் போது அச்சத்தில் உறைந்து போவார் என்ற எண்ணத்தில் இப்படி செய்திருக்கிறார்.

அங்கயுமா?

அங்கயுமா?

குழந்தை பிறக்கவிருக்கும் தருணத்தில் பிரசவ வழியில் துணை துடித்துக் கொண்டிருக்கும் போது வாயை பிளந்து சிரித்து செல்ஃபீ எடுத்துக் கொண்டிருக்கும் கணவன். ஏம்ப்பா... என்ன தான் இருந்தாலும், அந்த இடத்துல இது ரொம்ப அவசியமா?

ச்சீ... ச்சீ... ச்சீ...!

ச்சீ... ச்சீ... ச்சீ...!

சோபா அலங்கார பொருளாக மனைவி ஆசை, ஆசையாக வாங்கி வைத்த கோல்டன் கலர் சாப்ட் குஷனில் எழுதக்கூடாததை எழுதி வம்பிழுத்திருக்கும் கணவர். உங்க கிரியேட்டிவிட்டியே காண்பிக்க வேற இடமே தெரியலயா?

கோமாளி!

கோமாளி!

கம்ப்யூட்டர் டப்ளின் மவுஸ் பேடில் இருந்து, குளியலறை கண்ணாடி வரை என தனது காதலி தங்கியிருந்த வீடு முழுக்க அவர் காணும் இடமெல்லாம் கோமாளி படம் ஒட்டிவைத்து அச்சுறுத்தியிருக்கிறார் இந்த காதலன்.

வேற லெவல் யோசனை!

வேற லெவல் யோசனை!

தனது காதல் துணையின் பிறந்தநாள் விழாவில் தோரணம் கட்ட வேண்டிய இடத்தில் தோரணம் என எழுதி தொங்கவிட்டுள்ளார் இந்த காதலன். இது மட்டுமல்ல, பரிசு என்று எழுதி பரிசாகவும், பிறந்தநாள் வாழ்த்து அட்டை என எழுதி அதையே பரிசாகவும், க்ரீன் மீது கேக் என்று எழுதியும் அசத்தியுள்ளார் இந்த வினோத காதல் கணவன். அனைத்துக்கும் மேல், பிறந்தநாள் வாழ்த்து அட்டையில் கையொப்பம் இடும் இடத்தில் கூட தனது பெயரை எழுதாமல், உன் கணவன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடப்பாவி!

அடப்பாவி!

மனைவி பிரசவ வலியில் மருத்துவமனியில் படுத்திருக்கும் வேளையில், இதற்கு நான் தான் காரணம் என்று கூறுவது போல ஆங்கிலத்தில் எழுதி, அதில் தனது படத்தையும் சேர்த்து பிரிண்ட் செய்து ஆச்சரியத்தை அளித்துள்ளார் இந்த காமெடி கணவர். இந்த படத்தில் பின்னாடி இவரது மனைவி அளிக்கும் லுக்கை வைத்தே... அவர் எம்புட்டு கோபமாக இருப்பார் என்று அறிந்துக் கொள்ளலாம்.

குளியல்!

குளியல்!

ஆங்கிலத்தில் டோஸ்டி ஷவர் என்று குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. அதாவது குளுமையான நீரில் குளிக்காமல் கொஞ்சம் இதமானம, வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை இப்படி குறிப்பிடுவார்கள். டோஸ்ட் என்றால் நாம் பிரெட் டோஸ்ட் செய்வதையும் கூட குறிப்பாக எடுத்துக் கொள்வோம் அல்லவா. அப்படி தான் வேண்டும் என்றே டோஸ்ட்டி ஷவர் எடுக்க விரும்புவதாக மனைவி கூற... குளியலறை முழுவதும் டோஸ்ட் அடுக்கி வைத்து கடுப்பேற்றியுள்ளார் இந்த கணவர்.

டோன்ட் டேக் ரிஸ்க்! வெளிநாட்டில் பெண்கள் கொஞ்சம் விளையாட்டாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் இவற்றை எல்லாம் பார்த்து ஒருசில நொடி சிரிப்பதோடு நிறுத்துக் கொள்வது நல்லது. ஏன் நாமளும் இதே மாதிரி ட்ரை பண்ணக்கூடாது என முயர்ச்சித்திட வேண்டாம்... பின் பலநாள் பட்டினி கிடக்க வேண்டிய சூழல் உருவாக நீங்களே காரணமாக இருந்துவிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Worst Gifts Ever Boy Friends Given To Their Lovers!

The Worst Gifts Ever Boy Friends Given To Their Lovers!
Subscribe Newsletter