For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராவணனுக்கு 10 தலைகள் எப்படி வந்தது? அவற்றிற்கு என்னென்ன சக்திகள் உள்ளன?

ராவணனின் 10 தலைகளும் குறியீட்டு ரீதியாக பல அர்த்தங்களைக் கொடுக்கின்றன. அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி தான் இது.

|

இந்து புராணங்களில் ராவணன் ஒரு அற்புதமான கதாபாத்திரம் ஆகும். இவரின் வெல்ல முடியாத மனோ பாவம் மற்றும் அசைக்க முடியாத போர் சக்திகளால், மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமருக்கும் இவர் மிகப் பெரிய சவாலாக இருந்தார். ராவணனின் தீய எண்ணங்களையும் துயரங்களையும் எண்ணி நாம் வருத்தப்படும் அதேநேரம், ராவணன் புகழ்பெற்ற சிறப்பம்சங்கள் மற்றும் சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு வியப்புமிக்க எழுச்சியூட்டும் ஆளுமை என்பதையும் மறுக்க முடியாது.

significance of Ravanas 10 heads

பெரும்பாலும் ராவணனின் பத்து தலைகள் அவரது உடலில் சேர்க்கப்பட்டதா அல்லது அவை ஏதோ ஒன்றின் அடையாளமாக குறிக்கப்பட்டுள்ளனவா என்பது விவாதத்திற்குரிய விஷயம். இந்த கேள்வியானது பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
10 தலைகள் உடலுடன் இணைக்கப்பட்டதா?

10 தலைகள் உடலுடன் இணைக்கப்பட்டதா?

ராவணனின் உடலில் 10 தலைகள் உடல் ரீதியாக மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதார பூர்வ விளக்கங்கள் எதுவும் இல்லை. ஆனால் பொதுவாக இந்து புராணங்களில் ஒரு உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைகள் இருப்பதற்கு அவசியமான காரணங்கள் இருக்கும். ஆகவே இந்த கேள்வி எழுகிறது. இந்து மதத்தின் பல கடவுள்களுக்கு ஒன்றுக்கும் மேற் பட்ட தலைகளைக் காணலாம். அப்படி இருக்கும் தலைகள் அந்த கடவுளின் அம்சங்களையும் சக்திகளையும் பறைசாற்றுபவையாக உள்ளன. அந்த வகையில் தொடர்பு படுத்தி பார்க்கும்போது, ராவணனின் தலைகளும் அவருடைய சாதனைகள் மற்றும் சக்தியைக் குறிப்பவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

10 தலைகளும் அதன் சக்திகளும்

10 தலைகளும் அதன் சக்திகளும்

ராவணன் ஒரு புகழ்பெற்ற வம்சத்தில் வந்தவர். உண்மையில் அவர், படைக்கும் கடவுள் பிரம்மனின் பேரன் ஆவார். கடுமையான தவத்தின் மூலம் ராவணன் பல்வேறு அற்புதமான வரங்களை பெற்றார். அழிவில்லாத அல்லது மரணமற்ற வாழ்க்கை என்ற நடைமுறைக்கு சாத்தியப்படாத வரத்தைத் தவிர , ராவணன் கேட்ட மற்ற எல்லா வரங்களையும் பிரம்ம தேவன் அவருக்கு அளித்தார். ராவணனுக்கு கிடைத்த வரத்தின்படி, அவருடைய தலை பத்து முறை துண்டிக்கப்பட்டாலும் அது மறுபடி வந்து உடலில் இணைந்து கொள்ளும். அவருடைய 10 தலைகள் இதனைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.

சிவனுக்காக ராவணனின் நம்பமுடியாத பிரசாதம்

சிவனுக்காக ராவணனின் நம்பமுடியாத பிரசாதம்

ஒரு முறை ராவணன் சிவபெருமானைக் காண கைலாயம் சென்றார். அப்போது வாயிலில் சிவபெருமானின் பாதுகாவலர், நந்தி ராவணனை வழிமறித்தார். இதனால் கோபமுற்ற ராவணன், கைலாய மலையை வேரோடு பிடுங்கினார். அதிர்ச்சியில் மலை குலுங்கும் போது சிவபெருமான் தனது கால் விரலால் மலையை அழுத்தி அவன் தோள்களை நெருக்கினார். இறைவன் சிவபெருமானை மகிழ்விக்க, ராவணன் தனது ஒரு தலையை வெட்டி எடுத்து இறைவனுக்கு படைத்து அவரின் புகழைப் பாடலாகப் பாடினார். ராவணன் தனது பாடலுக்கு யாழ் மீட்டுவதற்காக தனது நரம்பை அறுத்து யாழின் நரம்பாக பயன்படுத்தினார். இதன் பிறகு ராவணனுக்கு ஒன்பது தலைகள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

10 தலைகள் அடையாளங்கள்

10 தலைகள் அடையாளங்கள்

ராவணன் ஒரு பெரிய அறிவாளி. நான்கு வேதகளையும் ஆறு சாஸ்திரங்களையும் கற்றறிந்தவன். ஆக மொத்தம் இந்த பத்து சாஸ்திரங்களில் அறிகுறியாக ராவணனுக்கு பத்து தலைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மனித உயிரின் ஆறு குணங்கள் மற்றும் பத்து அம்சங்களைக் குறிப்பதாக அமைந்தது இந்த பத்து தலை என்றும் கூறுவார். அவை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மத்சர்யம்(வெறுப்பு மற்றும் பொறாமை), மனசு, புத்தி, சித்தம், அகங்காரம்.

அவருடைய சக்திகளை துஷ்பிரயோகம் செய்தல்

அவருடைய சக்திகளை துஷ்பிரயோகம் செய்தல்

வெவ்வேறு வழிகளில், ராவணனின் 10 தலைகள் அவருடைய சக்திகள், திறமைகள், சாதனைகள், அம்சங்கள் மற்றும் அறிவு ஆகியவற்றைக் குறிக்கின்றன. ஒருமுறை மகாபலி மன்னன் ராவணனுக்கு அறிவுரை கூறும்போது, மனிதனின் பத்து அம்சங்களில் ஒன்றான புத்தி, மற்ற ஒன்பது அம்சங்களையும் ஆட்சி செய்வதால் மட்டுமே நல்ல வழியில் செல்ல முடியும் என்று கூறினார். ஆனால் ராவணனுக்கு இந்த அறிவுரை கோபத்தை கொடுத்தது. பெரியவர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறும் நல்ல அறிவுரைகளை ராவணன் என்றும் காது கொடுத்து கேட்டதே இல்லை. இறுதியில் அவரது காமமும் அகந்தையும் அவரது அழிவுக்கு வழிவகுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The significance of Ravana's 10 heads

ravana's heads symbolically denoted something. This question needs to be studied from different perspectives.
Story first published: Tuesday, August 14, 2018, 11:55 [IST]
Desktop Bottom Promotion