கட்சி முத்திரையின் மூலம் சூசகமாக ரஜினி வைத்திருக்கும் செக் - இத நீங்க கவனிச்சிங்களா?

Posted By:
Subscribe to Boldsky

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பாபாவை ரொம்பவே பிடிக்கும் என்பது அவரது இரசிகர்கள் என்று மட்டுமில்லாது, ரஜினி பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும். அதற்காக தான் மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என பாபா என்ற படத்தையும், அதில், பாபாவின் முத்திரையையும் அறிமுகப்படுத்தினார் ரஜினி.

இப்போது தான் அரசியலில் களம்காணப்போவதாக கூறியிருக்கும் ரஜினி, தனது கட்சி சின்னமாக முன்னிறுத்தி இருப்பதும் அதே பாபா முத்திரையை தான். ரஜினி ரசிகர்கள் முதல் அரசியல் ஆர்வலர்கள் வரை பலரும் ரஜினியின் கட்சிச் சின்னத்தை வெறும் பாபா முத்திரையாக தான காண்கிறார்கள்.

ஆனால், அதற்கு பின்னணியில் சில இரகசியங்களும் இருக்கிறன்றன என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாபா முத்திரை!

பாபா முத்திரை!

பாபா முத்திரை நாம் அனைவரும் சின்னத்தின் உண்மை பெயர் அபான முத்ரா (Apana Mudra). இந்த முத்திரைக்கு என சில சிறப்புகள் இருக்கின்றன. இது உடலில் இருக்கும் நச்சுக்களை அழிக்கவும், உடலில் இருந்து அவற்றை வெளியேற்றவும் உதவுகிறது என்று மருத்துவ ரீதியாக அறியப்படுகிறது.

அரசியல் அழுக்கு....

அரசியல் அழுக்கு....

பொதுவாகவே அரசியல் என்பது சாக்கடை, அதில் இருப்பவர்கள் எல்லாம் அழுக்கானவர்கள் என்ற வாக்கு கூறப்பட்டு வருகிறது. இந்த பாபா முத்திரை என அறியப்படும் அபான முத்ராவை ரஜினி தனது கட்சி சின்னமாக பயன்படுத்தக் காரணம், தான் அரசியலில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்து, களையெடுக்கப் போகிறேன் என்பதை தான் சூசகமாக கூறுகிறாரோ என எண்ண வைக்கிறது.

ஆன்மீக அரசியல்!

ஆன்மீக அரசியல்!

ரஜினி ஆன்மீக அரசியல் என்றதுமே, பலரும் இவர் காவிக் கட்டிக் கொள்ள போகிறார். இவர் தாமரை கட்சியின் பினாமியாக தான் செயற்படவிருக்கிறார் என கூறி வருகின்றனர். மேலும், ரஜினி ஒரு ஆன்மீகவாதி என்பதால், இப்படி தான், பொதுமக்களும் கருதுகிறார்கள்.

சுத்தம்!

சுத்தம்!

ஆனால், ஆன்மிகம் என்பது ஜாதி, மதம் என குறிப்பிடப் படுவதல்ல. ஒவ்வொரு நபரும் ஆன்மீகத்தை நாடுவது ஏன்? தங்கள் மனதில் இருக்கும் அழுக்கைப் போக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள தான். ஆக, ரஜினி கூறும் ஆன்மீக அரசியல் என்ற புதுமையான பெயரில் இருந்து, பாபா முத்திரை வரை அனைத்திலும் சூசகமாக, நான் அரசியலை சுத்தப்படுத்தபோகிறேன் என்பதை குறிக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

மகாவதார் பாபா ஜி!

மகாவதார் பாபா ஜி!

ரஜினியின் ஆன்மீக குருவாக கருதப்படுபவர் ஸ்ரீ குரு பாபாஜி எனப்படும் மகாவதார் பாபா ஜி. இவர் இந்த அபான முத்ராவை தான் பயன்படுத்தி வந்தார். அதையே ரஜினியும் பின்பற்றி வந்தார்.

மேலும், அந்த முத்திரையின் கீழே ஒரு வெள்ளை தாமரை இருந்தது. தாமரை என்பது தேசிய மலராக இருப்பினும், இந்திய அரசியலில் அது பா.ஜ.க.-வை குறிப்பதால், இதை சுற்றி, ரஜினி பா.ஜ.கவின் விழுதாக இருந்து, தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறார் என பல சலசலப்புகள் எழுந்தன.

பாம்பு!

பாம்பு!

மேலும், பாபா முத்திரையை சுற்றி ஒரு பாம்பு இருப்பது போல ரஜினி கட்சியின் சின்னத்தில் நாம் மிக எளிதாக காண இயல்கிறது. இந்த வட்டமான பாம்பின் உருவமானது மறுபிறப்பை குறிக்கிறது என கூறப்படுகிறது. அதாவது, மாற்றம், நிலையானது மற்றும் குணமடைதல் போன்ற பல பொருளை பெற்றுள்ளது.

சிஸ்டம் சரியில்ல...

சிஸ்டம் சரியில்ல...

ரஜினி தனது ஆரம்பக் கால அரசியல் பேச்சாக சில மாதங்களுக்கு முன் கூறியதாவது " சிஸ்டம் சரியில்ல" அதை புத்துயிர் பெறவைக்கவும், மாற்றியமைக்கவும் போகிறேன் என்பதை தான் கட்சி சினனத்தின் மூலமாகவே, தனது ஆன்மீக பாணியில் கூறியிருக்கிறார் ரஜினி என யோசிக்க வைக்கிறது.

முத்திரை விளக்கம்!

முத்திரை விளக்கம்!

அபான முத்ரா என்பது, வாயு முத்ரா (நடுவிரலை மடக்குதல்) மற்றும் பிரித்திவி முத்ராவின் (மோதிர விரலை மடக்குதல்) இணைப்பாகும். இது உடலை புத்துயிர் பெற உதவும் முத்திரை ஆகும். மேலும், இது உடலில் இருக்கும் கழிவுகளை போக்க உதவுகிறது. நச்சுக்களை அழித்து, செரிமனாம் சிறக்க பயனளிக்கிறது.

கரண முத்ரா

கரண முத்ரா

அபான முத்ரா போன்ற புத்த மதத்தில் கரண முத்ரா என்ற ஒன்று இருக்கிறது. இதை சில புத்தர் ஓவியங்களில், சிலைகளில் காண முடிகிறது. இந்த முத்ரா கெட்ட ஆவிகளை, சக்திகளை அழிக்கவும்,நெகட்டிவ் எனர்ஜியை போக்க உதவும் என கூறப்படுகிறது.

Image Source:pinterest

டெவில் ஹார்ன்!

டெவில் ஹார்ன்!

1970-களில் ராக் ஸ்டார் ரோனி ஜேம்ஸ் டியோ இந்த முத்திரையை கொஞ்சம் பிரபலமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த முத்திரையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என கேட்டப்போது, இது தனது மூதாட்டியிடம் இருந்து கேட்றேன். அவர் இது கெட்ட சக்தியைப் போக்கும் முத்திரை என்றார் என ராக் ஸ்டார் ரோனி ஜேம்ஸ் கூறியுள்ளார்.

ஆக, ரஜினி தேர்வு செய்திருக்கும் பாபா முத்திரைக்கு பின்னணியில் பெரிய அர்த்தம் புதைந்திருக்கிறது. அது வெறுமென பாபா படத்தில் பயன்படுத்திய முத்திரையாக இல்லாமல், அரசியலில் இருக்கும் கெட்ட சக்திகளை அழிக்க ரஜினி தனது கட்சியின் சின்னத்தில் இருந்தே பயணத்தை ஆரம்பித்துவிட்டார்.

Image Source: rjforster/Wikimedia Commons

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Secrets Behind The Party Emblem of Rajnikanth

The Secrets Behind The Party Emblem of Rajnikanth
Story first published: Tuesday, January 2, 2018, 16:40 [IST]