For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட! சிவலிங்கத்துள் ஒளிந்து கொண்டிருக்கிற இந்த தத்துவம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

இந்து மதத்தில் லிங்கம் அல்லது சிவ லிங்கம் என்பது இறைவன் சிவபெருமானைக் குறிப்பதாக அறியப்படுகிறது.

By Kripa Saravanan
|

இந்து மதத்தில் லிங்கம் அல்லது சிவ லிங்கம் என்பது இறைவன் சிவபெருமானைக் குறிப்பதாக அறியப்படுகிறது. எல்லா கடவுளை விடவும் சக்தி வாய்ந்த கடவுளாக உள்ள சிவபெருமானை, சிவ லிங்க வடிவாக வழிபடுகின்றனர்.

god

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஆற்றலையும் குறிக்கும் விதமாக சிவ லிங்கம் உள்ளது. லிங்கம் தியானத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், வழிபாடுகளில் மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிங்கம் பற்றிய ஆராய்ச்சி

லிங்கம் பற்றிய ஆராய்ச்சி

இயற்கை சக்தியான இனவிருத்தியை குறிக்கும் ஒரு சின்னமாக சிவலிங்கம் பார்க்கப்படுகிறது. இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் பல இந்த தகவலுக்கு எதிராக இருக்கின்றனர். இந்து மதம் மட்டுமல்லாமல், சிவலிங்கத்தை பல வகையான மனோதத்துவ துறைகளும் ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கில், லிங்கம் என்பது ஒரு இந்திய ஆற்றின் ஒரு குறிப்பிட்ட கல்லை குறிக்கிறது. இது மனதை, உடலையும், ஆன்மாவையும் குணப்படுத்துவதற்கான அதிகாரங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இப்படி இரண்டு விதமாக நம்பப்படும் சிவ லிங்கத்தை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினோம் . இவை இரண்டிற்குமான வித்தியாசம் மிகப் பெரியது. ஆனால், அதன் அடிப்படை பொருள், சிவபெருமான் என்ற ஒற்றை சொல்லில் தொடர்பு கொண்டுள்ளது. முதலில் அதன் தோற்றத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

சிவலிங்கம் : சிவனின் சின்னம்

சிவலிங்கம் : சிவனின் சின்னம்

சமஸ்கிருதத்தில், லிங்கா என்பது ஒரு அனுமானத்தைக் குறிக்கும் ஒரு "குறி" அல்லது ஒரு சின்னமாகும். இதனால், எல்லாம் வல்ல இறைவனாகிய உருவமில்லாத , சிவபெருமானின் சின்னமாக இந்த சிவலிங்கம் வழங்கப்படுகிறது. இந்து மத பக்தர்களிடம் சிவ லிங்க வடிவில் சிவபெருமான் மௌன மொழியில் பேசுகிறார். இது சிவபக்தியின் வெளிப்புற சின்னம் மட்டுமே, சிவபெருமான், உங்கள் இதயத்தின் அறையில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஆன்மாவாக இருக்கிறார். அவர் உங்களுக்குள்ளே இருக்கிறார். உங்கள் ஆன்மாவும் அவரே தான் . அவரே பரப்பிரம்மம் .

படைப்பின் சின்னம் - லிங்கம்

படைப்பின் சின்னம் - லிங்கம்

பழங்காலத்தில் லிங்கம் என்பது ஒரு வாசனை, நிறம் மற்றும் சுவை இல்லாத ஒரு இயற்கையாக பார்க்கப்பட்டது என்று இந்து நூலான லிங்க புராணம் கூறுகிறது. வேத காலத்திற்குப் பிறகு சிவபெருமானின் சக்தியின் அடையாளமாக லிங்கம் மாறியது.

லிங்கம் ஒரு முட்டையை போல் தோற்றமளிப்பதால் இது அகண்ட பிரம்மாண்டத்தைக் குறிக்கிறது. லிங்கம் என்பது இயற்கையின் சக்தியான ஆண் மற்றும் பெண்ணின் படைப்பைக் குறிக்கிறது. சத்தியம், ஞானம், அனந்தம் என்னும், உண்மை, அறிவு மற்றும் முடிவில்லாத சர்வத்தையும் இந்த லிங்கம் குறிக்கிறது.

சிவலிங்கத்தின் உள் அர்த்தம்

சிவலிங்கத்தின் உள் அர்த்தம்

சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அதன் அடிப்பகுதி பிரம்மாவைக் குறிக்கிறது . மத்தியப் பகுதி விஷ்ணுவைக் குறிக்கிறது, மேல் பகுதி, சிவனைக் குறிக்கிறது. இந்து மதத்தின் முப்பெரும் தெய்வங்கள் பிரம்மர், விஷ்ணு மற்றும் சிவபெருமான். பிரம்மர், படைத்தல் தொழிலை செய்பவர், விஷ்ணு, காத்தல் தொழிலை செய்பவர், சிவன் அழித்தல் தொழிலை செய்பவர்,

சிவலிங்கத்தின் வட்டமான அடிப்பகுதியை பிரம்ம பீடம் என்று கூறுவர். அதற்கு மேல் ஒரு கிண்ணம் அல்லது டீ குடுவையின் வாய் போன்ற அமைப்பை கொண்டிருக்கும் பகுதி விஷ்ணு பீடம் என்றும், அதற்கு மேல் ஒரு சிலின்டர் போன்ற அமைப்பை கொண்டிருக்கும் பகுதி சிவ பீடம் என்றும் கூறுகின்றனர்.

பொதுவாக , சிவலிங்கம் கல்லில் இருந்து செதுக்கப்படுகிறது. பல கோயில்களில் சிவலிங்கம் மிகப்பெரியதாக பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் மிகச் சிறிய லிங்கம் கூட பல கோயில்களில் உண்டு. பல சிலைகள் மிகவும் பாரம்பரிய கலை நயத்தோடு பல உருவங்களை செதுக்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில லிங்கம் மிகவும் சாதாரணமாக எளிமையாக செதுக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் இருக்கும் புனித லிங்கங்கள்

இந்தியாவில் இருக்கும் புனித லிங்கங்கள்

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சிவலிங்கம் இருந்தாலும், சில இடங்களில் உள்ள சிவலிங்கம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றன. அதில் மிக முக்கியமாக சிவலிங்கங்கள் இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஜோதி லிங்கம் என்றும் மற்றொன்று பஞ்ச லிங்கங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

12 ஜோதி லிங்கங்கள்

12 ஜோதி லிங்கங்கள்

திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கர் கோவில், மத்தியார்ஜுனா என்றும் அழைக்கப்படுகிறது, இது தென் இந்தியாவின் பெரிய சிவன் கோவில் ஆகும்.

இந்தியாவில், 12 ஜோதி லிங்கம் மற்றும் 5 பஞ்ச பூத லிங்கம் உள்ளது. கேதார்நாத் , காஷி விஸ்வநாதர், சோம்நாதர் , வைத்தியநாதர் , ராமேஸ்வரர் , குஷிமேஸ்வரர் , பிம்ஷங்கர், மஹாகாளர் , மல்லிகார்ஜுன் , அமலேஷ்வர் , நாகேஷ்வர் மற்றும் த்ரையம்பகேஷ்வர் ஆகியவை 12 ஜோதி லிங்கமாகும்.

பஞ்ச லிங்கங்கள்

பஞ்ச லிங்கங்கள்

இந்த பிரபஞ்சத்தின் மிக அடிப்படையாக இருப்பது பஞ்ச பூதங்கள் தான். அந்த பஞ்ச பூதங்களின் ஒவ்வொன்றின் அடையாளமாக சிவன் கோவில் கொண்டிருக்கும் ஸ்தலங்கள் தான் இந்த பஞ்ச பூத ஸ்தலங்கள். காலஹச்தீஸ்வரர் , ஜம்புகேஸ்வரர் , அருணாச்சலேஸ்வரர் , காஞ்சிபுரத்தின் ஏகாம்பரேஸ்வரர் , சிதம்பரத்தின் நடராஜர் ஆகியவை பஞ்ச பூத லிங்கமாகும்.

ஸ்படிக கல் சிவலிங்கம்

ஸ்படிக கல் சிவலிங்கம்

ஸ்படிக கல்லால் ஆன சிவலிங்கம் ஸ்படிக லிங்கம் என்று அழைக்கப்படும். சிவபெருமானின் ஆழ்ந்த வழிபாட்டுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கல்லுக்கு சொந்த நிறம் எதுவுமில்லை, ஆனால் இது தொடர்பில் வரும் எந்த பொருளின் வண்ணத்தை அது எடுத்துக் கொள்ளும்.. நிர்குண பிரம்மன் , வடிவமற்ற சிவனை இது குறிப்பதாகக் கூறப்படுகிறது.

லிங்கம் என்றால் என்ன ?

லிங்கம் என்றால் என்ன ?

விவரிக்க முடியாத ஒரு மர்ம சக்தி லிங்கத்தில் இருப்பதாக அறியப்படுகிறது . இது மனதை ஒருநிலைப் படுத்தி கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த காரணத்திற்காகவே, பல சித்தர்களும், ஞானிகளும், கோயில்களில் சிவலிங்கம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். ஒரு உண்மையான சிவ பக்தருக்கு சிவ லிங்கம் என்பது ஒரு கல் இல்லை. இது எல்லா கதிரியக்கங்களும் கொண்ட ஒரு அண்டம். இந்த லிங்கம் அவருடன் பேசுகிறது, உடல் உணர்வைத் தாண்டி அவரை மேலே எழுப்புகிறது, கடவுளிடம் தொடர்பு கொள்ள அவரைத் தூண்டுகிறது. ராம பிரான், ராமேஸ்வரத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டிருக்கிறார். இராவணன், தங்க லிங்கத்தை அதன் மாய சக்திகளுக்காக வழிபட்டு வந்தார்.

மனோதத்துவ துறை

மனோதத்துவ துறை

மனோதத்துவ துறை, சிவலிங்கத்தை ஒரு சிறப்பு மிக்க கல்லாகப் பார்க்கிறது. லிங்கத்தை ஒரு குணப்படுத்தும் கல் என்று அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பாலியல் கருவுறும் ஆற்றலுக்கும், அதே போல் ஒட்டுமொத்த நல்வாழ்வு, சக்தி மற்றும் ஆற்றலுக்கும் பயன்படுகிறது.

க்ரிஸ்டல் அல்லது ஸ்படிக கற்கள் பயன்படுத்தி நோய்களை குணமாக்கும் மருத்துவர்கள் சிவ லிங்கத்தை மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கூறுகின்றனர். இதனை வைத்திருப்பவர்களுக்கு வாழ்வில் ஒரு சமநிலை மற்றும் இணக்கமான சூழல் இருப்பதாக அறியப்படுகிறது. மேலும், உடலின் ஏழு சக்கரங்களுக்கு இது மிகப்பெரிய ஆற்றலைத் தருகிறது என்றும் கூறப்படுகிறது.

நர்மதா ஆறு

நர்மதா ஆறு

இந்த அமைப்பில், சிவலிங்கம் என்பது இந்து பாரம்பரியத்தில் இருக்கும் வடிவை ஒத்து இல்லாமல் வேறு விதமாக உள்ளது. மர்தத்தா மலையில் உள்ள நர்மதா ஆற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட பழுப்பு நிறத்தில் முட்டை வடிவில் இருக்கும் ஒரு கல்லாக இது பார்க்கப்படுகிறது. இந்த கல்லை எடுத்து பாலிஷ் செய்து ஒளி வீசும் கல்லாக மாற்றி, உலகெங்கும் உள்ள ஆன்மீக பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் அளவு, அரை இன்ச் முதல் பல அடிகள் வரை கிடைக்கிறது. இதில் காணப்படும் அடையாளங்கள் , சிவபெருமானின் நெற்றியில் காணப்படுவதாக அறியப்படுகின்றன.

கருவுறுதல் சின்னம்

கருவுறுதல் சின்னம்

சிவலிங்கத்தின் மத்தியில் இருக்கும் நீளமான தண்டு ஆணாகவும், அதன் முட்டை வடிவம் பெண்ணாகவும் பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் இணைந்து வாழ்க்கையின் அடிப்படை படைப்பு மற்றும் இயற்கை மற்றும் அடிப்படை ஆன்மீக சமநிலை ஆகியவற்றை எடுத்துக் கூறுவதாகக் கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Real Meaning of Shiva's Linga Symbol

The Shiva Linga or Lingam is a symbol that represents Lord Shiva in Hinduism.
Story first published: Friday, April 13, 2018, 13:19 [IST]
Desktop Bottom Promotion