For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் அதிசய நந்தி சிலை

கோவில்களில் சிவனுக்கு முன்புறம் மட்டுமே இருக்கும் நந்தி இந்த கோவிலில் மேலே இருப்பது மட்டுமில்லாமல் அபிஷேகமும் செய்கிறது.

|

இந்த உலகம் அதிசயங்களாலும், ஆச்சரியங்களாலும் நிறைந்தது. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும் அதை ஒதுக்கிவைத்துவிட்டு

நம்மை சுற்றி இருக்கும் அதிசயங்களை பார்க்கதான் வேண்டும்.

Spirtual

புராணங்களில் சிவபெருமானின் வாகனமாக குறிப்பிடப்படும் நந்தி சிவபெருமானின் தீவிர பக்தர் ஆவார். எனவேதான் அனைத்து சிவன் கோவில்களிலும் சிவபெருமானை நோக்கியே

நந்தியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். ஆனால் கர்நாடகாவில் ஒரு கோவிலில் நந்தி சிவபெருமானுக்கு மேலே ஒரு மேடையில் இருப்பதுடன் எந்நேரமும் நந்தியின் வாயிலிருந்து நீர்

வந்துகொண்டே இருக்கிறது. அந்த நீர் சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்வது போல் விழுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நந்தி தீர்த்தா

நந்தி தீர்த்தா

ஸ்ரீ தக்ஷிண முஹா நந்தி தீர்த்த கல்யாணி கோவில் சுருக்கமாக நந்தி தீர்த்தா என்றழைக்கப்டும் இந்த கோவில் பெங்களூரு நகரின் வடமேற்கு பகுதியிலுள்ள காடு மல்லேஸ்வரா

கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது. நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் இந்த கோவிலுக்கு நந்தி தீர்த்தா என்னும் பெயரை பெற்றுத்தந்துள்ளது.

தள வரலாறு

தள வரலாறு

இந்த கோவிலின் சரியான தள வரலாறு கிடைக்கவில்லை. 1997 ஆம் ஆண்டு காடு மல்லேஸ்வரர் கோவிலுக்கு எதிரே இருந்த நிலத்தில் கட்டுமான பனி தொடங்கியது. அதற்காக குழி தோண்டும்போது உள்ளே ஒரு கோவிலின் கோபுரம் தெரிவதை தொழிலாளிகள் கண்டுபிடித்தனர். எனவே முழுதாக தோண்டி பார்த்தபோது உள்ளே குளத்துடன் கூடிய கோவில் இருந்தது. வழக்கமாக பெரிய கோவில்களைதான் குளத்துடன் கட்டுவார்கள், எனவே இது காடு மல்லேஸ்வரர் கோவிலுடன் இணைந்த கோவிலாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள் இந்த கோவில் 400 வருடங்கள் பழமையானது என கண்டறிந்தனர்.

சிறப்புகள்

சிறப்புகள்

மணணில் புதைந்திருந்த இந்த கோவிலுக்குள் ஒரு குளமும் அதை சுற்றி கற்களால் ஆன படிகளும், தூணும் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முன்னரே கூறியது போல்

இந்த கோவிலில் நந்தி சிவபெருமானுக்கு முன்புறம் இல்லாமல் மேலே இருப்பது சிறப்பு. அதிலும் நந்தியின் வாயிலிருந்து விழும் நீர் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது கூடுதல்

சிறப்பாகும்.

சிறப்பாகும்.

மர்மம்

தொல்பொருள் ஆராச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது, நந்தியின் வாயிலிருந்து ஒரு சிறிய நீரோடை போல தொடர்ந்து நீர் வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டது. வாயிலிருந்து விழும் நீர்

நேராக கீழே உள்ள சிவலிங்கத்தின் மீது விழுந்து பின் அங்குள்ள குளத்தில் கலக்கிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது மர்மமாகவே உள்ளது. மேலும் இதுதான் ரிஷபாவதி ஆற்றின்

பிறப்பிடம் எனவும் கருதப்படுகிறது. சிலர் இது கோவிலுக்கு அருகில் உள்ள சாங்கி தண்ணீர் தொட்டியில் இருந்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அது கட்டப்பட்டது 1882 ஆம் ஆண்டு

ஆனால் இந்த கோவிலின் கட்டமைப்பு அதைவிட பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: god
English summary

The Bangalore shiva temple has a mysterious thing

The Shivalinga continuously bathed with water dripping from the Nandi statue
Story first published: Tuesday, July 10, 2018, 14:44 [IST]
Desktop Bottom Promotion