For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏர் போர்ட் பரிசோதனையில் அகப்பட்ட வித்திரமான விஷயங்கள் - டாப் 7

ஏர் போர்ட் பரிசோதனையில் அகப்பட்ட வித்திரமான விஷயங்கள் - டாப் 7

By Staff
|

வாழ்நாளில் ஒரு தடவையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று ஆசை அனைவர்க்கும் இருக்கும். ஆகாயத்தை, பறந்து விரிந்து கிடைக்கும் அந்த சமுத்திரத்தை, தேவதை கதைகளில் மட்டுமே அருகே கண்ட அந்த மேகங்களை நிகராக, கண்ணெதிரே அருகாமையில் காண யாருக்கு தான் ஆசை இருக்காது.

ஆசை இருந்தால் மட்டும் போதாது கொஞ்சம் கவனமும் வேண்டும். ஜீன்ஸ் படத்தில் நடிகை லட்சுமி ஆசை, ஆசையாய் எடுத்து செல்லும் ஊறுகாய் பாட்டில்கள் எல்லாம் விமான நிலைய அதிகாரிகள் சோதனையின் போது எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று கூறி எடுத்து வீசி விடுவார்கள்.

ஆனால், விமான நிலைய அதிகாரிகளே அதிர்ச்சி அடையும் படி பயணிகள் சிலர்.. சில பொருளை தங்கள் லக்கேஜ் உடன் எடுத்து சென்றுள்ளனர். அவற்றை குறித்து தான் இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனித மண்டை ஓடு!

மனித மண்டை ஓடு!

கடந்த 2013ம் ஆண்டு ப்ளோரிடா விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் ஒரு மண்டை ஓட்டின் காரணமாக சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உண்டானது. ட்ரான்ஸ்போர்ட் செக்கியூரிட்டி ஏஜென்சி நடத்திய சோதனையின் போது, ஒரு பயணியின் லக்கேஜில் பானை போன்ற ஒரு பொருள் இருந்தது. அதை அவர் சுற்றுலா வந்த போது வாங்கியதாக கூறினார். அதை ஸ்கான் செய்த போது, உள்ளே ஏதோ எலும்பு துண்டுகள் இருப்பது போல தெரியவந்தது.

திறந்து பார்த்த போது, அதனுள் மனித மண்டை ஓடு பகுதிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பயணி கூறியது போலவே அது சுற்றுலா வந்த இடத்தில் வாங்கப்பட்ட பொருள் தான். ஆனால், மனித எலும்பு துகள்கள் இருந்த காரணத்தால், ஏதேனும் குற்ற சம்பவம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை இது எழுப்பியது. இதனால் அந்த விமான நிலையத்தில் சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

நெருப்பு!

நெருப்பு!

நாம் லக்கேஜ் பேக் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது. அட்லாண்டிக் சிட்டி விமான நிலையத்தில் ஒரு பயணியின் லக்கேஜை சோதனை செய்துக் கொண்டிருந்த போது திடீரென மூன்று அடி உயரத்திற்கு தீ எழும்பியது. அனைவரும் அதிர்ச்சியடைந்து அந்த தீயை அணைக்க முயன்றனர்.

எப்படி திடீரென தீப்பற்றியது, இவர் ஏதேனும் அபாயமான பொருட்களை எடுத்துவந்தாரா என்று சோதனை செய்த போதுதான், அந்த பயணியின் பைக்குள் இருந்த பாடி ஸ்ப்ரே லீக் ஆகி கொண்டிருந்ததும், அவர் அதனருகே வைத்திருந்த லைட்டர், சோதனையின் போது உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியது அறிய வந்தது.

பிணம்!

பிணம்!

இது தான் இருப்பதிலேயே கொடுமையானது. ஒரு அம்மா, மகள், 91 வயது மிக்க இறந்த நபரை (அவர்களது கணவர் /அப்பா என்று கருதப்படுகிறார்) உடல்நலம் குன்றி இருப்பது போல மேக்கப் செய்து, கண்ணாடி அணிவித்து ஒரு சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்தனர்.

ஆனால், விமான நிலைய செக்கியூரிட்டிகள் சோதனை செய்த போது, அவர் இறந்தவர் என்பது அறியவந்தது. இறந்த உடலை விமானத்தில் எடுத்து செல்ல, கூடுதல் செலவாகும் என்று கருதிய அவர்கள், இப்படியான செயலில் ஈடுபட்டது விசாரணையின் அறியவந்தது.

240 மீன்கள்!

240 மீன்கள்!

செல்ல பிராணிகளை விமானத்தில் அழைத்து செல்லலாம். செல்ல பிராணிகளுக்கு என தனி பகுதி விமானத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கே கூண்டுகளில் அடைத்துவிடுவார்கள். ஆனால், ஒரு விசித்திரமான பயணி மீன்களை எடுத்து வந்தால், ஒன்றல்ல, இரண்டல்ல.. 240 மீன்கள்.

அவற்றை எடுத்து வர அவர்கள் கூடுதலாக பல லக்கேஜ் பேக்குகள் கொண்டு வந்திருந்தார் அவை முழுக்க முழுக்க நீரும், மீன்களுமாக நிறைந்திருந்தன. இதை கண்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ந்து போயினர். மீன்களை கொண்டு செல்லலாம் என்றாலும், அதற்கென இவ்வளவு மீன்களா என்ன?

விஷத்தன்மையான பாம்புகள்!

விஷத்தன்மையான பாம்புகள்!

நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஒரு நகரம் நெவார்க். இந்நகரின் விமான நிலையத்தில் ஒருமுறை பயணி ஒருவர் தான் கொண்டு வந்த லக்கேஜ் பேக்குகளில் நீர் நிரப்பும் பாட்டில்களில் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை அடைத்து எடுத்து வந்திருந்தார்.

லக்கேஜ் பரிசோதனை சிஸ்டத்தில் அபாயமான பொருள் ஏதோ லக்கேஜில் இருக்கிறது என அலார்ம் அடித்துக் காண்பித்தது. பிறகு தான் அவை இறந்த பாம்புகள் என்று அறியவந்தது. இதனால் கொஞ்ச நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தை!

குழந்தை!

சயூனிட்டட் அரப் எமிரேட்ஸ் விமானத்தில் பறக்கவிருந்த ஒரு இளம்ஜோடி பரிசோதனையின் போது விமான நிலைய அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்கள். அவர்களது லக்கேஜ் ஸ்கான் செய்த போது, ஒரு பேட்டியில் உயிருடன் யாரோ இருப்பது அறியவந்தது.

லக்கேஜை திறந்து பார்த்த போது, அதில் அவர்களது குழந்தை இருந்தது. எதிர்பார்த்த நேரத்தில் குழந்தைக்கு விசா கிடைக்கவில்லை என்பதால், இப்படியான செயலில் ஈடுபட்டதாக அவர்கள் விசாரணையின் போது பதில் கூறி இருந்தார்கள். நல்லவேளையாக குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேரிடவில்லை.

சாமுராய் கத்தி!

சாமுராய் கத்தி!

பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பயணி சாமுராய் வாளினை எடுத்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். விமானத்தில் எந்தெந்த பொருளை எல்லாம் எடுத்து செல்லாம். அதை எப்படி எடுத்து செல்லலாம், எதை எல்லாம் எடுத்து செல்ல தடை அல்லது அனுமதி இல்லை என்று அறிய சில மொபைல் செயலிகளே இருக்கின்றனவாம்.

எனவே, அடுத்த முறை விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் தாங்கள் எடுத்து உடைமைகளை அதில் சரிபார்த்து எதை எல்லாம் எடுத்து செல்லலாம், எடுத்து செல்ல கூடாது என்று சரி பார்த்து கொண்டால் நேர தாமதாம் ஆகாமல் விமானத்தில் பயணிக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Things That Spotted on Airport

Strangest Things Ever Found by Airport Security
Desktop Bottom Promotion