For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வயசுலயே என்னவெல்லாம் செஞ்சு அசத்தியிருககங்க பாருங்க!

குழந்தைகள் மிகவும் இளவயதில் மேற்கொண்ட அசாத்திய சாதனைகளைப் பற்றிய ஓர் தொகுப்பு

|

குழந்தைகளின் உலகம் தான் மிகவும் சுதந்திரமானது. எந்த விதமான கவலையுமின்றி மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று அவர்களின் உலகத்தைப் பார்த்து பொறாமைப்படுவோம். அவர்களுக்கென்ற வேலைகள், கடமைகள் என எதுவும் இருக்காது. மிக முக்கியமாக பொறுப்புகள் இருக்காது.

சுதந்திரமான வாழ்க்கை என்று சொன்னால் அது குழந்தைகளின் வாழ்க்கை என்று தான் சொல்ல வேண்டும். குழந்தைகள் தான் சிறு வயதில் பார்ப்பதை, கற்றுக் கொள்வதை, மனதில் பதிய வைப்பதைத்தான் தங்களது வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கிறார்கள். தங்களுடைய விருப்பு வெறுப்புகளுடன் கூடிய ஒர் திசையை அப்போதே அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால்....

பெரியவர்களால் கூட செய்ய முடியாத விஷயங்களை எல்லாம் இளம் வயதிலேயே செய்து சாதனை படைத்து விடுகிறார்கள். மிகவும் கடினமாக உழைத்து பல ஆண்டுகள் காத்திருந்து ஒரு வெற்றியை அடைந்தால் இவர்கள் போகிற போக்கில் எளிதாக பெற்று விடுகிறார்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய வசதியும் வாய்ப்புகளும் அந்தளவிற்கு இருக்கிறது என்றாலும் இந்த காலத்து குழந்தைகள் எல்லாருக்கும் இருக்கக்கூடிய பொதுவான குணங்களில் ஒன்று வேகம்.

எல்லாமே வேகமாக வேண்டும், எதுவாக இருந்தாலும் சீக்கிரம் கிடைத்துவிட வேண்டும் என்ற பரபரப்பான எண்ணவோட்டம் தான் இருக்கிறது. அதுவும் வெற்றி தோல்வியை சரிசமமாக பார்க்கத் தெரியாதவர்களாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயம் ஒரு விஷயத்திற்காக காத்திருக்க வேண்டும் என்பதையே மறுக்கிறது. நம்மவர்களும் ஒரே குழந்தை, என் உயிருக்கு உயிரான குழந்தை என்று சொல்லி கேட்ட மறுகணமே வாங்கி கொடுத்துவிடுகிறார்கள்.

இதோ இங்கே பத்து குழந்தைகளின் தொகுப்பு வந்திருக்கிறது இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளம் பாட்டி :

இளம் பாட்டி :

ரிஃப்கா ஸ்டானிஸ்கு என்ற பெண் தன்னுடைய 23வயதில் பாட்டியாகியிருக்கிறார். உலகிலேயே மிக இளவயது பாட்டி என்ற அந்தஸ்த்து இவருக்கு கிடைத்திருக்கிறது. ரோமானியாவைச் சேர்ந்த இவர் தன்னுடைய பன்னிரெண்டு வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு பதினொரு வயதான போது ஒரு குழந்தையை பெற்றெடுத்திருக்கிறது. இதன் மூலம் 23வயதிலேயே பாட்டியாகியிருக்கிறார் ரிஃப்கா.

Image Courtesy

டேட்டூ :

டேட்டூ :

இன்றைக்கு டேட்டூ குத்திக் கொள்வது மிகவும் ஃபேஷனாகி விட்டது. நம்முடை நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் ஒர் இடமாக நம் உடல் மாற ஆரம்பித்துவிட்டிருக்கிறது. இவர்களுக்காகவே களத்தில் இறங்கியிருக்கிறார் ரூபி டிகின்சன். தன்னுடைய நான்கு வயதிலிருந்தே டேட்டூ ஆர்ட்டிஸ்ட்டாக களமிறங்கியிருக்கிறார்.

தந்தையின் சலுனில் உட்கார்ந்து பல மாதங்கள் தன்னுடைய டாய் கிட்டில் பயிற்சி எடுத்திருக்கிறாராம்.

Image Courtesy

கம்ப்யூட்டர் :

கம்ப்யூட்டர் :

ஸ்மார்ட் போனை கையில் கொடுத்தால் போதும் அதை பிரித்து மேய்ந்து அக்குவேர ஆணிவேராக பிரித்திவிடுகிற குழந்தைகளுக்கு மத்தியில் தான் மார்கோ கால்சன் இருக்கிறார்.

மாஸ்டோனியாவைச் சேர்ந்த இவர் கணினியில் பயங்கர திறமை கொண்டவர்.

உலகிலேயே மிகவும் இளவயதில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுக்கூடிய ஆற்றல் இவரிடம் தான் இருக்கிறது.

தன்னுடைய எட்டு வயதிலேயே சிஸ்டம் அட்மினிஸ்டேட்டராக சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

Image Courtesy

வைன் :

வைன் :

ஜப்பான் நாட்டில் இதனை ஷேக் என்கிறார்கள். ஷேக் என்றால் அரிசியிலிருந்து தயாரிக்ககூடிய ஒரு வகை வைன் ஆகும். இது பல நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதை தயாரிகக் வேண்டுமென்றால் ஷேக் சர்வீஸ் இன்ஸ்டிட்டியூட்டில் நீங்கள் படித்து தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

அப்போது தான் இந்த ஷேக் நீங்கள் தயாரித்து விற்பது சட்டப்படி அனுமதிக்கப்படும். அகானே நிகுரா என்ற சிறுமி அந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். உலகேயே முதல் இளவயது ஷேக் எக்ஸ்பெர்ட் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். சர்டிஃபிக்கேட் வாங்கிய போது அகானேவுக்கு வெறும் 10 வயது தான்.

Image Courtesy

டெத் ரைடர் :

டெத் ரைடர் :

சில சர்க்கஸ் காட்சிகளில் ஒரு கூண்டிற்குள் பைக்கில் சுற்றுகிற காட்சியை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்போம். அதே போல வெளிநாடுகளில் இதனை மோட்டார் சைக்கிள் டெத் அம்மியூஸ்மெண்ட் பார்க்கில் பைக் ரேஸ் நடக்கும். இதனை டெத் ரேஸ் என்றே குறிப்பிடுகிறார்கள் அந்த அளவிற்கு மிகவும் ஆபத்தான ரைடாக இருக்கிறது.

இந்த ரைடை மேற்கொண்ட மிகவும் இள வயது பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஜெய்மி டைரெல். இவர் டெத் ரேசில் முதன் முதலில் பங்கேற்ற போது 17 வயது. லைசென்ஸ் வாங்குவதற்கு கூட முழுமை பெறாத வயதில் டெத் ரேசில் பங்கேற்றிருக்கிறார் ஜெய்மி.

Image Courtesy

 ஷூட்டர் :

ஷூட்டர் :

நீளமான எந்த பொருள் கிடைத்தாலும் துப்பாக்கி போல பாவித்து வாயிலேயே டூமில்.... டிஸ்யூம் என்று சத்தமெல்லாம் கொடுத்து விளையாடும் வயதில் ப்ராக்டிக்கல் ஷூட்டராக தகுதி பெற்றிருக்கிறார் மிக்கோ ஆண்ட்ரெஸ்.

நான் ஆயுதங்களை மதிக்கிறேன், அதற்குரிய மரியாதையை கொடுக்கிறேன்.

இவற்றை கையாளும் போது மிகவும் ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறேன் என்கிறார் எந்த சுட்டி ஷூட்டர். ப்ராக்டீல் ஷூட்டராக அங்கீகரிக்கப்பட்ட போது இவருக்கு வயது ஆறு.

Image Courtesy

சி இ ஒ :

சி இ ஒ :

இந்த பட்டியலில் ஒரு இந்திய குழந்தை கூட இல்லையா என்ற உங்களது ஏக்கப் பெருமூச்சு கேட்கிறதோ. இதோ உங்களுக்காக..... இந்தியாவைச் சேர்ந்த சிந்துஜா ராஜாராமன் செப்பன் கம்பெனியின் சி இ ஓ வாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் உலகிலேயே மிக இளவயது சி இ ஓவாக அறியப்படுகிறார். சி இ ஒ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது இவருக்கு வயது 14.

Image Courtesy

அறுவை சிகிச்சை :

அறுவை சிகிச்சை :

மிக இளவயதில் பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார் கிம் பிட்ராஸ்.ஜெர்மனைச் சேர்ந்த இவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது இவருக்கு வயது 16. இவருக்கான உதவித்தொகையை ஜெர்மன் அரசு வழங்கியது.

Image Courtesy

யோகா டீச்சர் :

யோகா டீச்சர் :

இவரும் இந்தியாவைச் சேர்ந்தவர் தான். ஸ்ருதி பாண்டே என்ற சிறுமி மிக இளவயதிலேயே யோகா பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அதில் ஆர்வம் காட்டியதால் பெற்றோர் தனி வகுப்பிற்கு ஏற்பாடு செய்தனர். நான்கு வருடங்கள் யோகா கலையில் கற்றுத் தேர்ந்த ஸ்ருதி ஆறு வயதில் யோகா ஆசிரியராக களமிறங்கினார்.

உலகில் மிக இளம் வயது யோகா ஆசிரியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

சர்ஃபிங் :

சர்ஃபிங் :

வெளிநாடுகளில் பலருக்கும் கடலில் சர்ஃபிங் செய்வது ஒரு ஹாபியாக இருக்கும். ஜெலன் அமோர் என்ற சிறுவன் இந்த சர்ஃபிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கும் மிக இளவயது சிறுவன் என்ற சாதனையை படைத்திருக்கிறான்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த ஜெய்லன் சர்ஃபிங் செய்ய ஆர்மபித்த போது வயது இரண்டு. பல நிறுவனங்கள் ஜெயலனுக்கு ஸ்பான்சர் செய்ய முன் வந்திருக்கின்றன. தொடர்ந்து பயிற்சி பெறவும் ஊக்குவித்தது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse child
English summary

Surprising Achievements of Kids

Surprising Achievements of Kids
Story first published: Saturday, April 14, 2018, 11:44 [IST]
Desktop Bottom Promotion