For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

70வது ஆண்டுகளாக தொடரும் சூப்பர்மேன் சாபம், மர்மமாக பாதிக்கப்படும் நடிகர்கள்!

70வது ஆண்டுகளாக தொடரும் சூப்பர்மேன் சாபம், மர்மமாக பாதிக்கப்படும் நடிகர்கள்!

By Staff
|

பல தசாப்தங்கள் கடந்தாலும், காமிக்ஸ், கார்டூன், திரைப்படம், அனிமேஷன், 3டி என பல வடிவங்களில், பல பாகங்களாக வெளிவந்து நம்மை அசத்திய கதாப் பாத்திரம் சூப்பர்மேன்.

இன்றும் சூப்பர்மேன் போன்ற சக்தி கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள், உணவு சாப்பிடாமல், மூச்சு விடாமல் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானலும் உயிருடன் இருக்கலாம் என்றால் யாருக்கு தான் சூப்பர்மேனாக வாழ ஆசை இருக்காது.

ஆனால், சூப்பர்மேனாக நடித்தவர்கள், பின்னணி குரல் கொடுத்தவர்கள் சிலரது வாழ்க்கை சூப்பராக இல்லை. அவர்களை ஒரு சாபம் பின்தொடர்கிறது. அதை தான் சூப்பர்மேன் சாபம் என்கிறார்கள்.

சூப்பர்மேனாக ஜொலித்தாலும், வேறு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போவது, வறுமையில் வாடுவது, திடீர் விபத்தில் சிக்குவது, மர்மமான முறையில் இறப்பது என ஒரு சாபம் பின்தொடர்ந்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிர்க் அலின் (Kirk Alyn)

கிர்க் அலின் (Kirk Alyn)

டி.ஸி காமிக்ஸ்-ன் 1940-களில் சூப்பர்மேன் நாடகங்களில், படங்களில் நடித்து வந்தவர் கிர்க் அலின். இவர் ஒரு அமெரிக்க நடிகர் ஆவார். ஆனால், சில படங்களுக்கு பிறகு இவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இவரது உருவமும், குரலும் சூப்பர்மேன் கதாபாத்திரத்துடன் ஒத்துப் போனதால், அது வேறு பாத்திரங்களுக்கு ஏற்புடையதாக அமையவில்லை என்று காரணம் கூறி இவரை பலரும் நிராகரித்தனர்.

இறக்கம்!

இறக்கம்!

பிறகு இவர் மீது இறக்கப்பட்டு விளம்பரங்களில் பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்புகளும் சிறுசிறு கதாப்பாத்திரங்களும் கொடுத்தனர். கடைசியாக இவர் 1978ல் வெளியான சூப்பர்மேன் படத்தில் தோன்றினார். இவர் அல்சைமர் நோய் காரணத்தால் 1999ல் இறந்தார்.

பட் காலியர் (Bud Collyer)

பட் காலியர் (Bud Collyer)

அமெரிக்காவில் வானொலி நடிகர் மற்றும் அறிவிப்பாளராக பணியாற்றி வந்தவர். பிறகு இவர் டிவி கேம் ஷோ-க்கள் தொகுத்தி வழங்கினார். பட் காலியர் 1941-1943ல் வெளியான முதல் சுப்பர்மேன் கார்டூனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர்.

1966ல் நியூ அட்வென்ச்சர் ஆப் சூப்பர்மேன்-க்கு பின்னணிக் குரல் கொடுத்தார். அடுத்த மூன்றே வருடத்தில் திடீரென உடல்நலம் குன்றி இறந்து போனார் பட் காலியர்.

Image Source:booksteveslibrary

லீ க்விக்லி (Lee Quigley)

லீ க்விக்லி (Lee Quigley)

கிறிஸ்டோபர் ரீவ் நடிப்பில் ரிச்சர்ட் டோனர் இயக்கத்தில் 1978ல் டிசி காமிக்ஸ் கதாபாத்திரத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் சூப்பர்மேன் (1978).

லீ க்விக்லி 1978ல் வெளியான இந்த சூப்பர்மேன் படத்தில் குழந்தை வேடத்தில் நடித்திருந்தார். 1991ல் தனது 14வது வயதில் லீ தவறாக பூச்சிக்கொல்லி மருந்து ஸ்ப்ரே சுவாசித்து பரிதாபமாக இறந்தார்.

ஜார்ஜ் ரீவ்ஸ் (George Reeves)

ஜார்ஜ் ரீவ்ஸ் (George Reeves)

ஜார்ஜ் ரீவ்ஸ் 1951ல் வெளியான சூப்பர்மேன் அன்ட் தி மோல் மென் என்ற படத்தில் நடித்தவர். இவர் அட்வென்ச்சர் ஆப் சூப்பர் மேன் சீரீஸ்லும் நடித்திருந்தார். அலின் போலவே இந்த கதாபாத்திரத்துடன் மிகவும் ஒன்றிப் போயிருந்தார். 1959 ஜூன் 16ல் இவர் திருமணம் செய்துக் கொள்வதற்கு சில நாட்களே இருந்த தருணத்தில் துப்பாக்கி குண்டடிப்பட்டு தனது வீட்டில் இறந்துக் கிடந்தார்.

மர்மம்!

மர்மம்!

இவரது மரணம் தற்கொலை என்று கூறப்பட்ட போதிலும், அதில் மர்மம் இருந்ததாக கூறப்பட்டது. ஏனெனில், ஜார்ஜ் ரீவ்ஸ் பயன்படுத்திய துப்பாக்கியில் அவரது கைரேகை இல்லை.

இவருக்கு எம்ஜிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் எடி மன்னிக்ஸ் என்பவரது மனைவியுடன் தொடர்பில் இருந்தார் என்றும், அதன் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதினார்கள்.

கிறிஸ்டோபர் ரீவ் (Christopher Reeve)

கிறிஸ்டோபர் ரீவ் (Christopher Reeve)

1978 முதல் 1987 வரையிலும் வெளியான சுப்பர் மேன் படங்களில் நடித்தவர் கிறிஸ்டோபர் ரீவ். சூப்பர்மேன் தொடர் படங்களில் ஒன்றிப் போன காரணத்தால், மற்ற படங்களில் இவரால் சரியாக ஒத்துப் போவது போல நடிக்க முடியாமல் போனார். ஆனாலும், இவர் சுப்பர்மேன் படங்கள் மூலமாகவே மிகப்பெரிய பிரபலம் ஆனார்.

விபத்து!

விபத்து!

ஆனால், 1995 மே மாதம் 27ம் நாள் தனது குதிரையில் பயணம் செய்துக் கொண்டிருந்த கிறிஸ்டோபர் ரீவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து கழுத்துக்கு கீழ் முடக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். இதன் பிறகு இந்த முடக்கம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆராய, தீர்வுக் காண ஃபவுண்டேஷன் ஒன்றும் துவங்கினார் கிறிஸ்டோபர் ரீவ்.

இவர் பிறகு இயக்கம், தயாரிப்பில் ஆர்வம் காட்டினார். 2004ல் இதயம் செயலிழந்த காரணத்தால் மரணம் அடைந்தார்.

வெளியாகாத சூப்பர்மேன்

வெளியாகாத சூப்பர்மேன்

ஜெர்ரி சீகல் மற்றும் ஜோ ஷஸ்டர் எனும் இருவர் தான் சூப்பர்மேன் கதாபாத்திரத்தை 1933ல் உருவாக்கினார்கள் ஆனால், அப்போது அந்த கதாப்பாத்திரம் வெளியிடப்படவில்லை.

பிறகு அப்போதரிய டிடக்டிவ் காமிக்ஸ்க்கு (இன்றைய டி.ஸி காமிக்ஸ்) விற்ற பிறகே (வெறும் 130 டாலர்களுக்கு என்று கூறப்படுகிறது) சூப்பர்மேன் கதாப்பாத்திரம் வெளியானது.

பறக்க இயலாது..

பறக்க இயலாது..

ஆரம்பத்தில் சூப்பர்மேன் கதாப்பாத்திரம் ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு குதித்து தாவும் சக்தி மட்டும் கொண்டிருந்தார். ஆனால், 1940களில் கார்டூன்களில் முட்டி மடக்கி குதிப்பது போல அனிமேட் செய்வது கடினமாக இருந்ததால் சூப்பர்மேனுக்கு பறக்கும் சக்தியை கொடுத்தனர்.

உணவு, மூச்சு!

உணவு, மூச்சு!

சூப்பர்மேன் உயிர் வாழ உணவு சாப்பிட வேண்டும், மூச்சுவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த கதாப்பாத்திரம் சூரிய கதிர்வீச்சு மூலமாகவே உயிர்வாழும் திறன் கொண்டிருக்கும். இது சூப்பர்மேனின் பல சக்திகளில் ஒன்றாகும்.

சக்தியற்ற சூப்பர்மேன்!

சக்தியற்ற சூப்பர்மேன்!

சூப்பர்மேனின் சக்திகளில் ஒன்று தனது உடலில் இருந்து சூரிய ஒளி / வெளிச்சத்தை வெளிப்படுத்துவது. இதனால், ஒரு அதிர்வெடி நிகழ்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஆனால், இதை வெளிப்படுத்திய அடுத்த 24 மணி நேரத்திற்கு சூப்பர்மேன் சூப்பராக இருந்தாலுமே கூட, வெறும் மேனாக தான் இருக்க முடியும். சக்திகள் மீட்டெடுக்கு அடுத்த 24 மணிநேரம் தேவைப்படும்.

இயக்கப்படாத சூப்பர்மேன்!

இயக்கப்படாத சூப்பர்மேன்!

கோஸ்ட்ரைடர் நிக்கோலஸ் கேஜ் டிம் பர்டன் எனும் அமெரிக்க இயக்குனர்ருக்கு சூப்பர்மேன் படம் இயக்க 20 மில்லியன் டாலர் கொடுத்தார். ஆனால், கடைசியில் அந்த படம் முழுமையாக முடிக்கப்படாமல், வெளிவராமல் போனது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Know About Superman Curse

Do You Know About Superman Curse? The Superman curse refers to a series of supposedly related misfortunes that have plagued creative people involved in adaptations of Superman in Film or Television.
Desktop Bottom Promotion