For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விரட்டி அடிக்கும் சூரியனிடம் இருந்து தப்பிப்பது எப்படி? ஒரு கலகல போட்டோ கலக்ஷன்!

விரட்டி அடிக்கும் சூரியனிடம் இருந்து ஓடித் தப்பிப்பது எப்படி? ஒரு கலகல போட்டோ கலக்ஷன்!

By Staff
|

ஏப்ரல், மே, மாசங்கள்ல எங்களுக்கு பிடிக்காத பேரு. இதுவரைக்கும் எத்தனையோ வருஷம் மழைக் காலத்துல மழை வராம இருந்திருக்கு, குளிர் காலத்துல குளிர் அடிக்காம இருந்திருக்கு.

ஆனா, இந்த வெயில் காலத்துல மட்டும் வெயில் அடிக்காம இருந்து நாம பார்த்திருக்கோமா? இல்லவே இல்ல. சூரியனுக்கு நம்ம மேல அம்புட்டு பாசமா... இல்ல காடுகள எல்லாம் அழிச்சுட்டதுனால நம்ம மேல அம்புட்டு கோபமான்னு தெரியல. கடந்த நாலஞ்சு வருஷமா நம்மள வறுத்து எடுக்கிறாரு.

சரி! என்ன செய்ய முடியும்... பண்ண பாவத்துக்கு தண்டனைய அனுபவிச்சு தானே ஆகணும். ஆனாலும்..., சூரியனோட வெயில் தாக்கத்துல இருந்து தப்பிக்க சில வழிகள் இருக்குன்னு.. நம்ம பயலுக கண்டுப்பிடிச்சு வெச்சிருக்காங்க. ஒருவகையில இது உதவும்னாலும் கூட... இத நீங்க ட்ரை பண்ணிங்கனா.. அடுத்த வருஷ கட்டுரையில.. உங்க படமும் கூட இடம் பெறலாம்.

அதெல்லாம் நமக்கெதுக்கு கொஞ்ச நேரம் ரசிக்கவும், சிரிக்கவும்... கேலியான கோடைக்கால புகைப்படங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன சுகம்...

என்ன சுகம்...

என்ன சுகம்.. ஆஹா என்ன சுகம்னு திறந்த மேனியா அமுலு குட்டி ஜாலியா வாஸ் பேசின்ல தூங்குறாங்க. அப்பா ஏசி வாங்கி தரலயாம். அதான் அம்மா இங்க படுக்க வெச்சுட்டு போயிட்டாங்க. மண்டை மேல இருந்த கொண்டை மறந்துட்டாங்க அம்மா. தண்ணி பைப் திறந்து விடலையே. சரி, சரி... நமக்கு தான் இன்னும் காவிரி தண்ணி வரல இல்ல.

அட்ரா சக்க!

அட்ரா சக்க!

நம்ம ஆளுங்க அறிவு இருக்கே அத அடிச்சுக்கவே முடியாது. காருக்குள்ள, பஸ்குள்ள, ஏன் லாரிக்குள்ள கூட ஃபேன் வெச்சு பார்த்திருப்பீங்க. பைக்குல பார்த்திருக்கீங்களா? இதோ பாருங்க. அண்ணன் ஒரு அறிவு பெட்டகம். இன்னொன்னு கவனிச்சீங்களா? அண்ணன் தலைக்கு மேல மட்டும் இல்ல, தன்னோட ஹேண்டில் பார் மேலையும் இன்னொரு ஃபேன் வெச்சிருக்காரு.

வெயில் காயிராங்கலாம்...

வெயில் காயிராங்கலாம்...

பொதுவாக குளிர் அதிகமாக இருக்கும் போது, நாலஞ்சு விறகு கட்டை எல்லாம் எடுத்து கொளுத்திப் போட்டு குளிர் காய்வோம் அல்லவா. அத அப்படியே ரிவர்ஸ் பண்ணி, வெயில் கொளுத்தும் போதும், ஐஸ் கட்டிய ரோட்டுல போட்டு வெயில் காயிராங்கலாம். புத்திசாலிங்க நம்ம பசங்க.

அடடே!

அடடே!

அறிவா இருக்க பொண்ணுங்க எல்லாம் அழகா இருக்க மாட்டாங்க, அழகா இருக்க பொண்ணுக எல்லாம் அறிவா இருக்க மாட்டாங்கன்னு ஹிப்பாப் தமிழா இசை அமைச்ச பாட்டு பொய் ஆயிடுச்சு பாருங்களேன். இந்த பொண்ணு அழகாவும் இருக்கு, வெயில் கிட்ட இருந்து தப்பிச்சு எப்படி குளுகுளுன்னு இருக்கணும்கிற அறிவும் இருக்கு. சபாஷ்... செம்ம டோழி!

கோழியாரே

கோழியாரே

என்ன தான் இருந்தாலும் உமக்கு மூளை கொஞ்சம் கம்மி தான் கோழியே. சூரியன் அங்க சுட்டேரிச்சுட்டு இருக்காரு. உனக்கு முக்கியம் செருப்பு இல்ல, குடை. இப்படியே வெளியே போனா... சூரியனே உண்ண வறுத்து தின்னுடுவாறு. பார்த்து சூதானமா இருந்துக்க கோழியாரே!

தட் ஆசம் மொமன்ட்!

தட் ஆசம் மொமன்ட்!

வெளிய நாள் முழுக்க சுத்திட்டு வந்து வீட்டுக்குள்ள புகுந்ததும் இப்படி யாராச்சும் தண்ணி டியூப் எடுத்து தண்ணிய பீச்சி அடிச்சாங்கன்னா.. அதானுங்க சொர்க்கம். வேற என்ன வேணும். சில சமயம் நீங்க சென்னையில சில ரோட்டோர கடையில இந்த காட்சி பார்த்திருக்கலாம். வாட்டர் பாக்கெட் வாங்கி குடிக்கிறாங்களோ இல்லையோ... மூஞ்சியில, கழுத்துல தண்ணிய பீச்சி அடிச்சுப்பாங்க. வெயில் அம்புட்டு ரணகளமா இருக்கு.

உருகுதே...

உருகுதே...

அடிக்கிற வெயில ஐஸ் க்ரீம் உருகுனா அதுல ஒரு நியாயம் இருக்கு. சாலையே உருகுனா அதுல என்ன சூரியனாரே நியாயம் இருக்கு. கொஞ்சம் இறக்கம் காட்டுன்னு உன்கிட்ட கேட்கவும் முடியாது. நீ பாட்டுக்கு இறங்கி வந்துட்டா இன்னும் உஷ்ணம் ஆயிடும். என்ன தான் உன்கிட்ட சொல்ற.. பேசாம கொஞ்சம் ஏற்றம் காட்டுன்னு சொல்லலாம்ன்னு பார்த்தா.. அத நீ தப்ப புரிஞ்சுக்கிட்டு சூட்ட ஏத்திட்டா ஆத்தி எங்க கதி அதோ கதி தான். ஏதாவது பார்த்து பண்ணும் ப்ளீஸ்.

சிங்கிள்?

சிங்கிள்?

நீங்க சிங்கிளா பாஸ்ன்னு இவர பார்த்து யாராச்சும் கேள்வி கேட்கலாம். சாரி பாஸ். கமிட்டடாவே இருந்தாலுமே கூட ஏப்ரல் மேயிலே ஐஸ் கட்டிய தான் கட்டிப்புடிச்சு தூங்க முடியும். அந்த பக்கமா திரும்பி கட்டி பிடிச்சா எட்டி மிதிப்பாங்க. எல்லாம் அவன் செயல்.

பார்ரா...

பார்ரா...

சும்மா நசநசன்னு நின்னுக்கிட்டே இருந்தா எப்படி... அடிச்சு சொல்லுங்கிற மாதிரி.... அதான் இவ்வளோ பெரிய கடல் இருக்கே.. இன்னும் ஏண்டா பார்த்துட்டு சும்மா நிக்கிற... என்ன கொஞ்சம் கூலாக்குன்னு சொல்ற மாதிரியே இருக்கு. சரி அதுக்கும் சுடுமா இல்லையா...

செம்ம ஐடியா..

செம்ம ஐடியா..

ஃபிரிட்ஜ் இருக்க ஒவ்வொருவரும் இந்த ஐடியாவ ட்ரை பண்ணலாம். ஆனா, என்ன அம்மா, பொண்டாட்டி கையில செமத்தியா அடிவாங்க வேண்டிய விபரீதம் ஏற்படலாம். இதவிட ஒரு நல்ல ஐடியாவும் இருக்கு பேசாமா யாரும் இல்லாத நேரமா பார்த்து வீட்டுல இருக்கு தொட்டி இல்ல, தண்ணி டிரம் குள்ள தஞ்சம் புகுந்திரலாம்.

ஏர் கூலர் எதுக்கு?

ஏர் கூலர் எதுக்கு?

ஐஸ் வாட்டரும், டேபிள் ஃபேனும் இருக்கும் போது ஏர் கூலர் எதுக்கு. இது போதுமே எனக்கு... இது போதுமேன்னு சந்தோசமா ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை பண்ணிட்டு இருக்காது தம்பி. ஆனா, இவரு வெளிய மட்டும் கூல் பண்ற மாதிரி தெரியலையே? புரியலையா.. தம்பி மானிட்டர்ல என்ன பார்த்துட்டு இருக்கார்ன்னு கொஞ்சம் உத்து பாருங்க....

ச்சோ ஸ்வீட்..

ச்சோ ஸ்வீட்..

பார்வைகளுக்கு ஆறு அறிவு இல்லன்னு யாருங்க சொன்னா.. பாருங்க கொளுத்துற வெயில்ல எம்புட்டு சமத்தா... சரியா மரத்தோட நிழல் விழுகுற இடத்துல வரிசையா உட்கார்ந்துட்டு இருக்கு பாருங்க. ஒரு பக்கம் படம் அழகா இருந்தாலும், நாம அதுகளுக்கான இடங்கள மரங்கள, காடுகள அழித்து எடுத்துக்கிட்டோம்ங்கிற சோகமான உண்மையும் இதுல வெளிப்படுது.

எந்த கடையில வாங்குன தம்பி?

எந்த கடையில வாங்குன தம்பி?

இப்படி ஒரு தொப்பி கிடைச்சிட்டா போதுமே.. சூரியன் செஞ்சூரி அடிச்சாலும் அசராம நிக்கலாம். ஆனா, இந்த தொப்பி எங்க கிடைக்கும்ன்னு தான் தெரியல... தம்பி வேற எந்த ஊரு கார பயல்ன்னு தெரியல... சரி இருக்கவே இருக்கு கூகிள்ல தேடி பார்ப்போம்... இல்லாங்காட்டி மூங்கில் பாய் நெய்யிற அண்ணன்கிட்ட கேட்டா உடனே செஞ்சு கொடுத்திட போறாரு.

எச்சரிக்கை!

எச்சரிக்கை!

இதுக்கெல்லாம் ஒரு மன தைரியம் வேண்டும். கொஞ்சம் அசஞ்சாலும், ஆயிசு வழுக்கிட்டு போயிடும். நம்ம ஆளுங்களுக்கு தில்ல பாருங்களேன்... எல்லா சம்மர் காலத்துலயும் இந்த போட்டோ ஏகபோகமா டிரெண்ட் ஆகுது. இதுல ரவுண்டு கட்டி உட்கார்ந்து ஏதோ விளையாடுறாங்க போல...

ஞாபகம் இருக்கா?

ஞாபகம் இருக்கா?

போன வருஷம் ஒரு செய்தி வந்துச்சு.. மக்கள் வெயிலோட தாக்கம் தாங்காம.. சிக்னல் நூறு மீட்டருக்கு தள்ளி இருந்தும், ஒரு ரயில் பாலத்துக்கு அடியில வரிசையா நின்னுட்டு இருந்தாங்க. அப்படி தான் இருக்கு இதுவும், ஓடாத விமானத்துக்கு கீழ எவ்வளோ பேரு வெயில் தாங்காம உட்கார்ந்துட்டு இருக்காங்க. ஏதோ சிந்தின இனிப்ப சுத்தி எறும்பு மொய்க்கிற மாதிரி இல்ல இருக்கு இந்த படம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Summer Funny Photos Collection

Here is a collection of picture about funny things people done on summer days and it will give you a idea, how to rid off summer heat. Lets Check this summer funny photos collection.
Story first published: Tuesday, April 17, 2018, 12:01 [IST]
Desktop Bottom Promotion