For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நண்பனை பள்ளியில் கொலை செய்த சிறுவன் 10 வருடங்கள் கழித்து விஸ்வரூபம்!!

ஹரியானாவின் முன்னணியைச் சேர்ந்த கேங்கஸ்டர் டான் குறித்து இதுவரை வெளிவராத தகவல்.

By Staff
|

2007 ஆம் வருடம் பதினான்கு வயதுடைய அக்‌ஷை யாதவ் என்ற சிறுவன் பள்ளிக்கு தந்தையின் 0.32 ஹரிசன் பிஸ்டலை எடுத்துச் செல்கிறான். எடுத்துச் சென்றவன் பள்ளியின் கழிவறையில் வைத்து உடன் படிக்கும் மாணவன் ஒருவனை சுட்டு கொலை செய்கிறான். மூன்றாண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு பின் வெளியேற்றப்படுகிறான் அக்‌ஷை யாதவ்.

பதினோறு வருடங்கள் கழித்து மீண்டும் இவனது பெயர் அடிப்பட்டிருக்கிறது, இம்முறை எப்படி தெரியுமா? ஹரியானா மாநிலத்தில் முன்னணி க்ரிமினல் குற்றவாளிகளின் தலைவனாக இருக்கிறானாம் அக்‌ஷை யாதவ். ஹரியானா அண்டர் வோர்ல்டு டான் என்றே இவனை குறிப்பிடுகின்றனர்.

ஒரு குற்றம் நடந்தால்.... குற்றத்தை பற்றி மட்டுமே பேசப்படுகிறது, கொலையாளியை பிடித்து தண்டனை கொடுப்பதுடன் நம் வேலை முடிந்து விட்டதாக நினைக்கிறோம் . ஆனால் குற்றம் செய்தவனின் மனநிலை, தண்டனை காலம் முடிந்து வெளியே வருகிறான் அல்லது ஜாமினில் வெளிவந்தால் அவனது செயல்பாடுகள் எல்லாம் எப்படியிருக்கிறது, இந்த சமூகம் அவனை எப்படி எதிர்கொள்கிறது ஆகியவற்றை எல்லாம் பேச மறந்து விடுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2007 :

2007 :

2007 நவம்பர் மாதம் பதினோராம் தேதி ரியல் எஸ்டேட் டீலரான அசத் சிங் யாதவ் தன்னுடைய துப்பாக்கியை காணவில்லை என்பதை கண்டுபிடிக்கிறார். கடந்த வாரம் தான் ஒரு டீலரிடம் இருந்து அந்த துப்பாக்கியை வாங்கி வைத்திருந்தார். அதில் ஐந்து புல்லெட்டுகளும் இருந்தது.

திடிரென வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை காணவில்லை என்றதும் பதட்டமடைந்து தேட ஆரம்பித்திருக்கிறார்.

Image Courtesy

ஆகாஷ் யாதவ் :

ஆகாஷ் யாதவ் :

இவருடைய மூத்த மகன் ஆகாஷ் யாதவ். இவரும் இவருடைய தம்பியும் குர்ஹானில் சர்வதேச பள்ளி ஒன்றில் படித்து வந்திருக்கிறார்கள். ஒரு வேளை மகன்கள் தெரியாத்தனமாக எடுத்துச் சென்றுவிட்டார்களா என்று சந்தேகித்து பள்ளிக்கு போன் செய்து மகன்களிடம் பேசியிருக்கிறார்.

இருவருமே துப்பாக்கி குறித்து எதுவும் எங்களுக்கு தெரியாது நாங்கள் பார்க்கவில்லை என்றிருக்கிறார்கள்.

Image Courtesy

ஜோசியம் :

ஜோசியம் :

அசத் சிங் யாதவ், தொலைந்து போன துப்பாக்கி எங்கேயிருக்கிறது, அதனை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொலைந்து போன பொருட்கள் குறித்து தன்னுடைய ஞான திருஷ்டியால் பார்த்து சொல்லக்கூடிய ஓர் ஜோதிடரிடம் கேட்டிருக்கிறார்.

அவரோ துப்பாக்கி உன் இடத்திற்கு தானாக திரும்ப வரும் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

பள்ளியிலிருந்து... :

பள்ளியிலிருந்து... :

இப்போது லேசாக நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஜோதிடர் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது போன் கால் வருகிறது, அதில் பேசிய ஆசிரியர், உடனடியாக பள்ளிக்கு வர சொல்கிறார்.

என்னவென்று விசாரித்த போது.... உங்களுடைய மூத்த மகன் ஆகாஷ், உடன் படிக்கும் மாணவனை துப்பாக்கியால் சுட்டுவிட்டான் என்கிறார்கள்.

Image Courtesy

என்ன நடந்தது? :

என்ன நடந்தது? :

மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை. ஆகாஷ் வீட்டிலிருந்து கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கழிவறைக்குச் செல்கிறான். சிறிது நேரத்தில் தன்னுடைய எதிரியான அபிஷேக் தியாகி இன்னொரு சிறுவனுடன் கழிவரைக்கு வருகிறான்.

தன் முகத்திற்கு நேராக அபிஷேக் வந்ததும், ஆகாஷ் கொண்டு வந்த துப்பாக்கியினால் சுட ஆரம்பித்தார்.

Image Courtesy

சிறுவன் :

சிறுவன் :

ரத்த வெள்ளத்தில் விழுந்த சிறுவன் அபிஷேக்கை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கே சிறுவன் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. நிலைமை சீரியசானது.

அபிஷேக்கின் பெற்றோர் ஆகாஷின் பெற்றோர் போலீஸ், பள்ளி ஆசிரியர்கள் என எல்லாரும் மருத்துவமனையில் இருந்தார்கள்.

Image Courtesy

காரணம் :

காரணம் :

இந்த கொலைக்கு காரணமாக சொல்லப்படுவது ஆகாசை விட அபிஷேக் ஸ்போர்ட்ஸில் சிறந்தவனாக இருந்திருக்கிறான். அதோடு இந்த சம்பவம் நிகழ ஒரு வாரத்திற்கு முன்பு கால்பந்தாட்டம் விளையாடிய போது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.

அப்போதே ஆசிரியர் இருவரையும் அழைத்து பேசி சமாதனப்படுத்தி அனுப்பியிருக்கிறார்.

பெண் தோழி :

பெண் தோழி :

ஆனால் ஆகாஷ் யாதவ் குடும்பத்தினர் பெண் தோழி பிரச்சனையில் தான் இந்த விபரீதம் நிகழ்ந்திருக்கும் என்றார்கள். ஏனென்றால் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய பெண் தோழியை அபிஷேக் கிண்டல் செய்ததாக அம்மாவிடம் கூறியிருக்கிறான் ஆகாஷ் யாதவ்.

அதோடு ஆகாஷ் யாதவின் தம்பி சுமிட் யாதவ் அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான் அவனும், அண்ணனின் தோழியை அவன் கிண்டல் செய்தான் அதனால் கோவப்பட்ட அண்ணன் அவனுக்கு சரியான பாடத்தை கற்பிப்பேன் என்று என்னிடம் சொன்னான் என்று சொல்லியிருக்கிறான்.

பரபரப்பு :

பரபரப்பு :

விஷயம் மிகவும் பரபரப்பாக ஊரெங்கும் பரவியது, ஆகாஷ் யாதவின் வீடு, பள்ளி எல்லாம் முற்றுகையிடப்பட்டது. மாணவர்களின் மனப்பாங்கு குறித்து விவாதங்கள் எல்லாம் நடந்தது.

வழக்கு விசாரணையை எல்லாரும் கூர்ந்து கவனித்தார்கள். பள்ளி சிறுவர்கள் பள்ளியில் வைத்தே உடன் படிக்கும் தோழனை கொலை செய்வது சாதரண விஷயம் கிடையாதே.

கல்விமுறை :

கல்விமுறை :

ஹரியானா மாநிலத்தின் புகழ் சீர்குலைந்து விட்டது என்றெல்லாம் பேசினார்கள். ஹரியானா மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு நீதி நெறி குறித்து பாடமெடுக்க வேண்டும் என்று கட்டாயமாக்கினார்.

தொடர்ந்து பல தன்னம்பிக்கை பேச்சாளர்களை அழைத்து பள்ளியில் பேச வைத்தார்கள்.

தீர்ப்பு :

தீர்ப்பு :

அதே ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி தீர்ப்பு வந்தது. ஆகாஷை ஃபரீதாபாத் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் மூன்றாண்டுகள் இருக்க வேண்டும் என்றும், லைசன்ஸ் இல்லாமல் வீட்டில் சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்ததால் ஆகாஷ் யாதவின் அப்பாவிற்கு ஒரு வருடம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

Image Courtesy

பத்து குழு :

பத்து குழு :

குர்ஹான் போலீசின் கணக்குப்படி மாநிலத்தில் குறைந்தது பத்து க்ரிமினல் குழுக்கள் சுற்றிக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது. குர்ஹானின் அண்டர் வேர்ல்டு குறித்து அறிய மாநிலத்தின் வரலாற்றினை சற்று திரும்பி பார்க்க வேண்டியது அவசியம்.

வரலாறு :

வரலாறு :

டெல்லியின் தென்மேற்கு பகுதியில் 32 கிமீ வரை நீண்டிருந்த பகுதி தான் குர்ஹான் . 90களின் ஆரம்பத்தில் டெல்லியில் காலத்தை ஓட்ட முடியாத, அல்லது டெல்லியில் வியாபாரம் செய்ய முடியாத நடுத்தர வர்க்கத்தினரின் சிறந்த தேர்வாக குர்ஹான் மாறியது.

1995 ஆம் ஆண்டு புண்ட்டி யாதவ் என்பவர் தன்னுடைய பிஸ்னஸை பாதுகாக்கவும், அடியாள்களை வைத்து மிரட்டவும் அடியாட்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அதில் 1996 ஆம் ஆண்டு ராஜேஷ் தக்ரான் என்பவர் சேர்ந்து கொண்டு நிறைய குற்றங்களை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

வெளியேறு :

வெளியேறு :

இதில் பண்ட்டி யாதவிற்கும் ராஜேஸுக்கும் மனக்கசப்பு உண்டாகவே ராஜேஷை வெளியின்னார் பண்ட்டி. அங்கிருந்து வெளியேறிய ராஜேஷ் முன்னால் போலீசாக இருந்த திலீப் குமாருடன் இணைந்து ஒரு கூட்டத்தை உருவாக்கினார். ஆரம்பத்தில் இவர்கள் இரண்டு குழுக்களுக்கு இடையிலும் நிறைய சண்டைகள் வந்தன.

தொடர்ந்து கொலை, கடத்தல், மாஃபியா என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முயன்றனர்.

சந்தீப் :

சந்தீப் :

இவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவர் தான் சந்தீப் கந்தோலி என்கிற கேங்கஸ்டர். அவரை ஒரு கட்டத்தில் போலீசார் சுற்றி வளைத்தனர் 2015 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்த சம்பவத்தில், போலீசாரிடமிருந்து தப்பியோடினான் சந்தீப்.

அப்போது அவன் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போலீசார் இரண்டு டைரிகளை கண்டுபிடிக்கிறார்கள்.

லஞ்சம் :

லஞ்சம் :

முதல் டைரியில் எந்தெந்த கடைகளிலிருந்து, யாரிடமிருந்து எல்லாம் தான் மிரட்டி பணம் வாங்கியிருக்கிறேன் என்ற ஒரு லிஸ்ட் இருந்தது. இரண்டாவது டைரியில் தன்னையும் தன் கூட்டத்தினரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காக எந்தெந்த போலீஸ் அதிகாரிகளுக்கு எல்லாம் எப்போது? எவ்வளவு லஞ்சம் கொடுத்தேன் என ஒரு பட்டியல் அதில் இருந்தது.

இதில் உயர்பொறுப்பில் இருந்த பல அதிகாரிகளின் பெயரும் அடிப்பட்டது.

என்கவுண்டர் :

என்கவுண்டர் :

விஷயம் வெளியே கசியவே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. 2016 பிப்ரவரி மாதம் குர்ஹான் போலீஸ் சந்தீப்பை என்கவுண்டரில் கொலை செய்தனர். சந்தீப் குர்ஹானில் டாப் லிஸ்டில் இருந்த ஒரு கேங்கின் தலைவன்.

அவனது மறைவிற்கு பிறகு அவன் இடத்தினை நிரப்ப பலரும் போட்டியிட்டார்கள்

பழைய வாழ்க்கை :

பழைய வாழ்க்கை :

சிறையில் இருக்கும் போது பேசிய ஆகாஷிடம் பேசியவர்களிடம் நான் மீண்டும் பள்ளி செல்ல விரும்புகிறான் தெரியாமல் செய்துவிட்டேன் அது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கவில்லை அந்த பழைய வாழ்க்க திரும்ப வேண்டும் என்று பேசியிருக்கிறான்.

ஆகாஷ் யாதவ் :

ஆகாஷ் யாதவ் :

மூன்று வருடங்கள் கழித்து வெளியே வந்தா ஆகாஷை அழைத்துக் கொண்டு குர்ஹானில் இருக்கிற தங்களது சொந்த கிராமத்திற்கே சென்று விட்டனர் பெற்றோர். அங்கே பதினோராம் வகுப்பு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

பள்ளி ஆரம்புத்து சில மாதங்கள் சென்ற நிலையில், ஆகாஷ் குறித்து உடன் படித்த நண்பர்களுக்கு பரவியது, அவர்கள் மூலம் பெற்றோருக்கும் தெரியவரவே, அந்த மாணவனுடன் எங்கள் குழந்தையை படிக்க அனுமதிக்க மாட்டோம் என போர்க்கொடி தூக்கினர். நிலைமை சற்று சீரியசாக போகவே ஆகாஷை பள்ளியிலிருந்து நீக்கினார் தலைமையாசிரியர்.

கேங்க்ஸ்டர் :

கேங்க்ஸ்டர் :

பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆகாஷ் தனித்தேர்வராக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார். அதன் பிறகு சட்டம் படிக்க விரும்பிய ஆகாஷ் கல்லூரிக்கு செல்ல நினைத்தார். சிறையில் இருந்த போது அறிமுகமான சில கேங்க்ஸ்டர்கள் தங்களிடம் வந்து விடுமாறும் தங்கள் குழுவில் சேர்ந்து கொள்ளுமாறும் ஆகாஷை அணுக ஆரம்பித்தனர்.

தவிப்பு :

தவிப்பு :

நிம்மதியாக தூங்க முடியாமல் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியிருந்தார் ஆகாஷ், அவருக்கு இருந்தது வழிகள் இனி நார்மலான வாழ்க்கையை வாழ விட மாட்டார்கள். எங்கே சென்றாலும் இவன் கொலை செய்து விட்டு சிறைக்குச் சென்றவன் என்று துறத்தி விடுவார்கள்.

வெளியே வந்தால் எங்களிடம் வந்து இணைந்து கொள் என்று நச்சரிக்க, ஒரு கூட்டம் காத்திருக்கிறது இவர்களிடமிருந்தும் தப்பிக்க வேண்டுமென்றால் என்ன செய்வது என்று சிந்தித்த போது தான் ஆகாஷிற்கு இந்த ஐடியா வந்திருக்கிறது.

டான் :

டான் :

தானே தனியாக புதிய கேங்க் ஒன்றினை உருவாக்கினார். யாரிடம் எவ்வளவு மிரட்டி பணம் வாங்க வேண்டும் என்பதிலிருந்து கேங்கஸ்டர்களின் நுணுக்கமான அசைவுகளை எல்லாம் ஏற்கனவே அறிந்திருந்ததால் இதில் ஆகாஷிற்கு எதுவும் சிரமமாக இருக்க வில்லை.

2016 ஆம் ஆண்டே அவன் மீது பல வழக்குகள் பதியப்பட்டன. கேங்கஸ்டர்களையே அச்சுறுத்தக்கூடிய புதிய தலைவனாக உருவெடுக்க ஆரம்பித்தான் ஆகாஷ்.

Image Courtesy

100 அடியாட்கள் :

100 அடியாட்கள் :

ஹரியானாவின் பலம் வாய்ந்த கேங்கஸ்டர் குழுவாக ஆகாஷின் கேங் இருந்தது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஆகாஷுக்கு கீழ் இருந்தனர்.

ஆகாஷின் இந்த வளர்ச்சிக்கு அவரது பெற்றோரும் துணை நின்றிருக்கின்றனர். அவர்கள் கூறுகையில் பிற ரவுடிகளைப் போல என் மகன் பாலியல் வன்கொடுமை,திருட்டு, ஆகியவற்றையெல்லாம் செய்யவில்லை. அவன் அதிகமாக பணம் வைத்திருப்பவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறான். இது தவறில்லையே என்றார்கள்.

கேங் வார் :

கேங் வார் :

தொடர்ந்து ஆகாஷ் குழுவிற்கும் பிற குழுவினருக்கும் சண்டை வளர்ந்து கொண்டே போனது. ஆகாஷை கைது செய்வதும் பின் வெளிவருவதும் வழக்கமானது, இவர்களது கேங்கில் இருந்த மணீஷ் என்பவன் சுட்டுக்கொல்லப்படுகிறான். ஆகாஷுக்கும் அவனுக்கும் இந்த முன் விரோதமே இந்த கொலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

கொல் அல்லது கொல்லப்படுவாய் :

கொல் அல்லது கொல்லப்படுவாய் :

விசாரணையில் மணீஷ் உடலில் பாய்ந்த குண்டு ஆகாஷின் துப்பாக்கியிலிருந்து வரவில்லை என்று வாதிடுகிறார்கள். இந்த சம்பவம் நடக்க சில நாட்களுக்கு முன்பு தான் ஆகாஷ் செய்த குற்றங்களுக்கு துணை போனதாக தம்பியை கைது செய்கிறார்கள்.

ஆகாஷ் வழக்கில் போதிய சாட்சிகள் இன்றி விடுதலை செய்யப்படுகிறார். அப்போது கேட்கையில், என்னையும் தம்பியையும் கைது செய்ததற்கு காரணமானவர்களை சும்மா விட மாட்டேன் என்கிறார்.

அதோடு நான் திருப்பி அடிக்க வேண்டும். அவர்களை நான் கொல்லவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவார்கள் என்று சொல்கிறான் இளம் கேங்க்ஸ்டர் ஆகாஷ்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Story About Young Haryana Gangster Don

Story About Young Haryana Gangster Don
Story first published: Thursday, March 15, 2018, 15:20 [IST]
Desktop Bottom Promotion