For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாங்காங்கிலிருந்து துணி துவைக்க அழைத்துச் செல்லப்படும் மக்கள்! காரணம் தெரியுமா?

துணி துவைப்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத வரலாற்று கதை ஒன்றினை இப்போது பார்க்கலாம்.

|

இன்றைக்கு பல தொழில்நுட்பங்கள் கொண்ட வாசிங் மிஷின் வந்து விட்ட காலத்தில் துணி துவைப்பது என்பது சாதரண வேலையாகிவிட்டது. அதற்கு முன்னால் வீட்டில் நாமே துவைக்க வேண்டியதாய் இருந்தது. வாசிங் மெஷின் கண்டுபிடிக்காத காலத்தில் ஹாங் காங் மக்கள் என்ன செய்தாரக்ள் தெரியுமா?

நம்மால் கொஞ்சம் கூட இப்படியெல்லாமா செய்வார்கள் என்று யோசித்துப் பார்க்கவே முடியாது. சராசரி குடும்ப உறுப்பினர்களின் அளவு இன்றைக்கு மூன்று அல்லது நான்கு தான் அதிகபட்சமாக இருக்கிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் இந்த அளவும் அதிகம். நம்மைப் போல அம்மாக்கள் வீட்டு வேலை செய்ய என்று தனியாக ஒதுக்கி வைத்திருப்பார்களா என்ன?

அங்கே அம்மாக்களும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். இந்த துணி தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது அவர்களுக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

வாரத்தில் ஒரு நாள் வாஷிங் டே என்று கொண்டு வந்தார்கள். அன்றைக்கு எல்லாருக்கும் விடுமுறை. பெட்ஷீட், டவல், போன்றவை எல்லாம் தண்ணீர் நிரம்பிய ஓரு செம்பு பாத்திரத்தில் போட்டுவிடுவார்கள். அந்த அண்டா தழும்பத் தழும்ப நீர் இருக்கும். அதில் ஆடைகளை முக்கி அதோடு நெருப்பு பற்ற வைப்பார்கள்.

சிறிது நேரத்தில் நீர் கொதிக்கத் துவங்கியதும் நீளமான ஓர் குச்சியை வைத்து ஏதோ உணவினை கிளறுவதைப் போல கலக்குவார்கள். பின் அதிலிருந்து ஒவ்வொரு துணியாக எடுத்து லாண்டரி சோப் கொண்டு துவைத்து காயப்போடுவார்கள். சீனாவில் இந்த நடைமுறை தான் நீண்ட காலமாக நடந்திருக்கிறது.

Image Courtesy

#2

#2

சீனாவின் லாண்டரி வரலாற்றினை படித்தால் ஹாங் காங்கில் வாழும் மக்களைப் பற்றிய ஓர் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். உலகின் பல பகுதிகளுக்கும் சென்று சீனர்கள் லாண்டரி ஆரம்பித்திருக்கிறார்கள்.

கார்பெண்டர்களாக,தோட்ட தொழிலாளர்களாக எப்படி இங்கிருந்து ஆட்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்களோ அதே போல இங்கிருந்து மக்கள் துணி துவைப்பதற்கென்று அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

#3

#3

கிழக்கு ஆசியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து சீனாவின் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் துணி துவைக்க வேண்டுமென்று கேட்டுச் சென்றார்கள். இதனை மையமாக வைத்தே சீனர்கள் பலரும் தங்களின் குடும்பங்களோடு வெளியூர்களுக்கு பயணமாகி செட்டில் ஆனார்கள்.

குடும்பத்தின் எல்லாருக்கும் வேலை வாய்ப்பினை வழங்கியது. துணை துவைப்பதுடன், அதனை காய வைத்து, மடித்து ஐயர்ன் செய்து கொடுப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து கொள்ள வீட்டிலிருந்து சிறுவர்களும் இந்த தொழிலுக்கு வந்தார்கள். வருமானம் பெருகியது.

Image Courtesy

#4

#4

தாங்கள் பயன்படுத்தும் துணிகளை சிலர் தங்கள் வீடுகளிலேயே துவைத்துக் கொண்டாலும் பெரிய பெரிய துணிகளை இவர்களிடம் மட்டுமே கொடுத்தார்கள். சிலர் அன்றாட துணிகளையும் கொடுத்தார்கள்.

ஓர் ஊரின் தொழிலாகவே இது மாறியிருந்தது. அதேயிடத்தில் இருந்து தொழில் செய்வது கடினம் என்று நினைத்தவர்கள் தங்கள் ஊரின் அடையாளத்தைக் கொண்டு வெளியூருக்கு பயணமானார்கள் ஹாங்காங்கிலிருந்து வருகிறோம் என்று சொன்னாலே துணி துவைப்பீர்களா என்று கேட்டு துணியைக் கொடுத்தார்கள் மக்கள்.

Image Courtesy

#5

#5

இன்றைக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இவர்களின் தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது எல்லாம் தனி வீடு என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. எல்லாமே நானோ ஃப்ளாட், மைக்ரோ யூனிட் என்ற பெயரில் இடத்தை சுருக்கி சுருக்கி புதிய புதிய பெயர்களில் தங்குமிடங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது வந்து துணியைத் துவைத்து காயப்போடுகிறேன் என்று சொன்னால் அவ்வளவு தான். வாசிங் மெஷின் வைக்கிற இடத்துல ஒரு மைக்ரோ யூனிட் கட்டி பேச்சிலர வாடகைக்கு விடலாம் என்று சொல்வார்கள். அதனால் பெரும்பாலான மக்கள் இன்றும் தங்களது துணியை இவர்களிடம் கொடுத்து தான் துவைக்க வைக்கிறார்கள். பொருளாதார ரீதியாகவும் கட்டுப்படி ஆகிறதாம்.

Image Courtesy

#6

#6

ஆரம்ப கால ரோம் மக்கள் துணி துவைக்க பயங்கரமாக மெனக்கட்டிருக்கிறார்கள். துணியை கலெக்ட் செய்வது, தண்ணீரை எடுத்து வருவது, விறகு எடுத்து வருவது போன்றே மக்கள் சிறுநீரையும் சேகரிப்பார்களாம்.

சிறுநீரில் இருக்கிற அமிலம் துணியில் இருக்கும் அழுக்கைப் போக்கும் என்று நம்பியிருக்கிறார்கள்.

Image Courtesy

#7

#7

துணியை துவைப்பது மட்டுமின்றி துணியை அயர்ன் செய்து அணியும் பழக்கத்தையும் சீனர்கள் தான் முதலில் துவக்கியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்த வழக்கம் துவங்கியிருக்கிறது. ஆரம்ப காலங்களில் வெப்பக்காற்று செலுத்தி துணியில் இருக்கும் சுருக்கங்களை போக்கியிருக்கிறார்கள்.

பின்னர் மெல்ல மெல்ல துணிக்கு வெப்பக்காற்றுடன் அழுத்தம் தர வேண்டும் என்பதை உணர்ந்து அயர்ன் பாக்ஸ் பிறந்திருக்கிறது.

Image Courtesy

#8

#8

துணி பயன்பாடுகளை கட்டுப்படுத்த என்னென்னவோ ஐடியாக்கள் செய்தார்கள். இங்கே துணி மட்டுமா செல்வாகிறது தண்ணீரும் தானே? ஒரு முறை வாசிங் மெஷினில் துவைத்தெடுக்க 50 கலோன் தண்ணீர் வரை செலவாகிறது.

டிஸ்னியில் தங்கள் பணியாளர்களுக்கு அண்டர் வியர் முதற்கொண்டு வழங்கியது. அதையே பயன்படுத்த வேண்டும் என்று நிர்பந்தித்தது.

1916 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரின் சமயம் சோப்பு பற்றாகுறை ஏற்பட்டது. அப்போது அறிமுகமானது தான் சோப்புத்தூள்.

Image Courtesy

#9

#9

இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து வாசிங் மெஷின்களிலும் டிரையர்கள் சேர்ந்தேயிருக்கிறது தானே ஆனால் 1960க்கு முன்னால் டிரையரை வீட்டில் பயன்படுத்த தடையிருந்திருக்கிறது. காரணம் டிரையர் அதிக விலை இருந்தது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Story About Unknown Laundry History

Story About Unknown Laundry History
Desktop Bottom Promotion