For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே நாளில் 27 பெண்களை திருமணம் செய்துகொண்ட ஆண்...

|

பங்குனி என்பது தமிழ் மாதங்களில் கடைசி மாதம். அந்த மாதத்தில் வருகிற பௌர்ணமியன்று உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும். அதை மிக விமரிசையாக மக்கள் கொண்டாடுவார்கள். குறிப்பாக, உலகத்தில் உள்ள எல்லா முருகன் கோவில்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபாடு நடத்துவார்கள்.

special rituals of panguni uttiram and fasting rules

இந்த நாளில் விரதம் இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்குமாம். பங்குனி உத்திர விரதத்துக்கு கல்யாண விரதம் என்றே மற்றொரு பெயரும் இருக்கிறதாம். சரி அப்படி ஒரு புனித நாளில் யார்தான் இப்படியொரு திருமணத்தை செய்து கொண்டது என்று தானே கேட்கிறீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்

தமிழ் மாதத்தின் 12 ஆம் மாதமான பங்குனியில் 12ஆம் நட்சத்திரமான உத்திரம் இணைகிற முழு நிலா நாளான பௌர்ணமியைத் தான் நாம் பங்குனி உத்திரம் என்று சொல்கிறோம். அந்த பங்குனி உத்திரத்தின் போது மக்கள் முருகன் கோவிலில் குவிவது நமக்குத் தெரியும். அதனால் இது வெறுமனே முருகனுக்கு மட்டும் உகந்த நாள் என்று நினைத்துவிடாதீர்கள்.

பங்குனி உத்திர விரதப்பலன்

பங்குனி உத்திர விரதப்பலன்

வளமான பலன்களை அள்ளித் தரக்கூடிய விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்துக்கு கல்யாண விரதம், திருமண விரதம் என்று பல பெயர்கள் இருக்கின்றன. சிவன் பார்வதியை பங்குனி உத்திரத்தன்று அவருக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டாராம். அதுபோல பங்குனி உத்தரத்தன்று விரதம் இருக்கும் பெண்களுக்கு சிவனைப் போன்ற மணமகன் கிடைப்பார் என்பது ஐதீகம். இந்த நாளில் ஓம்சிவாயநம, ஓம் பராசக்தி நம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். மதியம் ஒரு வேளை உணவு உண்ணலாம். காலையும் இரவும் பால். பழம் சாப்பிடலாம்.

சூரியனும் சந்திரனும்

சூரியனும் சந்திரனும்

உத்திர நட்சத்திரத்தின் அதிபதி, அந்த நட்சத்திரத்துக்கு நாயகனாக இருப்பது சூரியன். அந்த நாளில் சந்திரனும் முழு நிலவாக இணைவது மேலும் அதிக பலன்களைத் தரும். இப்படி சூரியனும் சந்திரனும் இணையும் பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.

ஐய்யப்பன் பிறந்த நாள்

ஐய்யப்பன் பிறந்த நாள்

சாஸ்தாவின் அவதாரமாகத் திகழ்கிற ஐய்யப்பன் சபரிமலையில் கோயில் கொண்டிருக்கிறார். மாத பூஜை தவிர கோயில் நடை திறக்கும் முக்கிய நாட்களுள் பங்குனி உத்தரமும் ஒன்று. இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. இந்த பங்குனி உத்திரத்தன்று தான் ஐய்யப்பன் பிறந்த நாளாம்.

ஸ்ரீராமர்- சீதா தேவி கல்யாணம்

ஸ்ரீராமர்- சீதா தேவி கல்யாணம்

பெண்களிடம் யாரைப் போல் கணவர் வேண்டுமென்றால் ராமனைப் போல என்று சொல்லக் கேட்டிருப்போம். அத்தகைய ராமபிரான் சீதையை மணந்தது இந்த பங்குனி உத்திரத்தன்று தான். அதனால் தான் இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் ராமனைப் போல கணவனைப் பெறலாம் எனவும் சொல்லப்படுகிறது.

27 பெண்ணை மணந்த ஆண்

27 பெண்ணை மணந்த ஆண்

என்னடா இது! ஒரே நாளில் எப்படி 27 பெண்ணை மணக்க முடியும் என்று தானே கேட்கிறீர்கள்?... அப்படித்தான் ஒருவர் மணந்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லைங்க. நாம் நிலா என்று கொஞ்சி விளையாடுகிற சந்திரன் தான் அது. பங்குனி உத்திர நாளன்று அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 27 நட்சந்திரங்களையும் ஒரே நாளில் மணந்து கொண்டார். அவனவன் ஒரு மனைவியையே சமாளிக்க முடியாமல் திணறும்போது, 27 பேரை ஒரே நாளில் மணந்த சந்திரன் உண்மையிலேயே தைரியம் மிக்க ஆண்மகன் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

special rituals of panguni uttiram and fasting rules

special rituals of panguni uttiram and fasting rulesbrowser title - specials of panguni uttiram and fasting rulesmeta description -Panguni is the last month of the year as per Tamil calendar. The specialty of Panguni Uthiram is the coming together of the full moon day and the Uthira Nakshatra thereby setting phase for the various fervent celebrations.
Story first published: Friday, March 30, 2018, 17:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more