For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா?... படிச்சா ஆச்சர்யப்படுவீங்க...

ஓம் என்பது சாதாரண வார்த்தை கிடையாது. அதனுள் ஆழமான அர்த்தம் அடங்கியுள்ளது. இது தியானம் மற்றும் பல்வேறு ஆன்மீக பயிற்சிகள் மூலமாக நம்மை ஒட்டு மொத்த பிரபஞ்சத்துடனும் இணைக்கும் பேரற்புதமான வார்த்தை.

|

ஓம் என்பது சாதாரண வார்த்தை கிடையாது. அதனுள் ஆழமான அர்த்தம் அடங்கியுள்ளது. இது தியானம் மற்றும் பல்வேறு ஆன்மீக பயிற்சிகள் மூலமாக நம்மை ஒட்டு மொத்த பிரபஞ்சத்துடனும் இணைக்கும் பேரற்புதமான வார்த்தை.

meaning of OM mantra in tamil

ஓம், ஆன்மீகத்தில் அதிகமாக பயன்படும் வார்த்தை. நீங்கள் பிரார்த்தனை செய்யும்போதும் த்யானம் செய்யும்போதும் இந்த வார்த்தையை உச்சரித்திருப்பீர்கள். ஆனால் இந்த வார்த்தை ஏன் விருப்பத்தேர்வாக உள்ளது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓம் என்னும் மந்திரம்

ஓம் என்னும் மந்திரம்

'ஓம்' வழக்கமாக நாம் பயன்படுத்தும் சாதாரண வார்த்தைகள் போல் அல்ல. அது ஆன்மீக முக்கியத்துவம் நிறைந்தது. இந்தியாவில் உள்ள பல மக்களுக்கு ஓம் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் தெரிவதில்லை. எனவே நாங்கள் ஓம் என்ற வார்த்தையின் அதிசயிக்க வைக்கும், நீங்கள் அறிந்திராத உண்மைகளை கூறி உங்களை ஆச்சரியப்பட வைக்கப்போகிறோம். படியுங்கள் தெரிந்துகொள்ள!

ஓம் என்ற வார்த்தையின் அர்த்தம்:

ஓம் என்ற வார்த்தையின் அர்த்தம்:

உங்களுக்குத் தெரியுமா? ஓம் என்ற நாதம் இந்த உலகில் உள்ள மனிதர்கள் பேசும் அனைத்து மொழிகளையும் குறிக்கிறது. வாய் மற்றும் உதடுகளின் இடைவெளியில் இருந்து இந்த சப்தம் ஒலிக்கிறது. நாக்கின் ஆழத்தில் ஆரம்பித்து உதடுகளின் விளிம்பில் முடிகிறது. தொண்டையில் ஆ என்ற சப்தமும் உதடுகளில் ம் என்ற சப்தமும் உருவாகிறது. இதற்கு நடுவில் நாம் பலவாறாக நாக்கை சுழற்றி பல்வேறு சப்தங்களை உருவாக்குகிறோம். எனவே இந்த வார்த்தையை உச்சரிப்பது, உள் அமைதியையும் மனதில் நேர்மறையான எண்ணங்களையும் தருகிறது.

மூளையில் ஏற்படும் மாற்றங்கள்:

மூளையில் ஏற்படும் மாற்றங்கள்:

'ஓம்' நம்மை ஒட்டுமொத்த ப்ரபஞ்சத்துடனும் இணைக்கிறது. இதை செய்வதின் மூலம் நம்முள் இருக்கும் சக்தி ஒன்று திரண்டு நம்மை வலிமையாக்குகிறது. எனவே எப்போது இந்த வார்த்தையை உச்சரித்தாலும், பிரபஞ்சத்தின் சக்தி நமக்குள் பாய்ந்து நம் மூளையை வலிமையாக்குகிறது. எளிதில் நேர்மறையான ஆற்றலைப் பெறச்செய்து நம் ஆன்மாவை தூய்மையாக்குகிறது. நேர்மறை ஆற்றலைப் பெற்ற பிறகு நம் மூளை எல்லா வலிகளையும் மற்றும் எதிர்மறையையும் வெளியே தள்ளி விடும் என்பதால் இது நிகழ்கிறது.

ஓம் என்ற வார்த்தையின் உச்சரிப்பு:

ஓம் என்ற வார்த்தையின் உச்சரிப்பு:

த்யானம் செய்யும் போது 'ஓம்' உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தருகிறது. இது எதிர்மறையான எல்லாவற்றையும் நீக்குவதன் மூலம் வாழ்க்கையில் நல்ல அதிர்வுகளைப் பெறச் செய்கிறது. இந்த வார்த்தையின் உச்சரிப்பு நாக்கின் ஆழத்தில் தொடங்கி உதட்டில் முடிகிறது.

தியானம் மற்றும் ஓம் இடையே உள்ள தொடர்பு:

தியானம் மற்றும் ஓம் இடையே உள்ள தொடர்பு:

தியானம் மற்றும் 'ஓம்' உச்சரிப்பின் இடையே ஒரு ஆழமான உறவு உள்ளது. இதனால் தான் த்யானம் செய்யும்போது மக்கள் இந்த வார்த்தையை உச்சரிக்கின்றனர். இது வாழ்க்கையில் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்குகிறது. இந்த வார்த்தை, உடலின் மையத்திலிருந்து அதிர்வுகளை ஏற்படுத்தி மனதை தூண்டுகிறது. இது நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றுவதோடு நம்மை ஆரோக்கியமாகவும் வைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Some Amazing And Unknown Facts About OM

OM, that makes yogi's wholeheartedly chant its glory and live in its symbolic presence?.
Desktop Bottom Promotion