Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த தீபாவளியில் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படபோகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்
உங்கள் வாழ்க்கையை சிலநாட்கள் மட்டும் திருவிழாவாக மாற்றும் தீபாவளி உங்கள் வாழ்க்கையை மொத்தமாகவே திருவிழாவாக மாற்றக்கூடிய மாற்றங்களை உண்டாக்கும்.
இந்தியர்களின் மிகமுக்கியமான பண்டிகை என்றால் அது தீபாவளிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தியாவில் அனைவருமே ஆண்டு முழுவதும் காத்திருக்கும் ஒரு தருணம் என்றால் அது தீபாவளிதான். இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் கொண்டாடும் இந்த தீபாவளி வாழ்க்கையில் பல திருப்பங்களை கொண்டுவரும்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மற்றொரு நாள் போல இருக்காது. உங்கள் வாழ்க்கையை சிலநாட்கள் மட்டும் திருவிழாவாக மாற்றும் தீபாவளி உங்கள் வாழ்க்கையை மொத்தமாகவே திருவிழாவாக மாற்றக்கூடிய மாற்றங்களை உண்டாக்கும். அதுபோன்ற மாற்றங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் முன் சில அறிகுறிகள் தோன்றும். இந்த பதிவில் தீபாவளிக்கு முன் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை உங்களுக்கு உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

அறிகுறிகள்
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நல்லதும் சரி கெட்டதும் சரி அறிகுறிகள் இல்லாமல் ஏற்படாது. அதனை உணர்வதற்கு நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான காரியம் கவனமாக இருப்பது மட்டுமே. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கு முன்னும் அதன் முடிவு குறித்து முன்னரே உங்களுக்கு சில அறிகுறிகள் தெரியும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

தீபாவளி பூஜை
தீபாவளியன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து மஹாலக்ஷ்மி மற்றும் விநாயகரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் பெற பூஜை செய்வார்கள். இந்த நல்ல நாளில் மஹாலக்ஷ்மி மற்றும் விநாயகர் இருவரும் இதயம் முழுவதும் பக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் தங்களை வணங்குபவர்களுக்கு அவர்கள் விரும்பும் அனைத்தையும் வழங்குவார்கள் என்பது அனைவரின் நம்பிக்கையாகும். எனவே தீபாவளியன்று மறக்காமல் லக்ஷ்மியையும் - விநாயகரையும் மறக்காமல் வழிபடுங்கள்.

அறிகுறி 1
பணம் தவறி விழுவது எப்பொழுதும் நல்ல அறிகுறியாகும். பண பரிமாற்றத்தின் போது அடிக்கடி உங்கள் கையிலிருந்து பணம் நழுவுவது அது கனவில் இருந்தால் கூட உங்களுக்கு பணவரவு வரப்போகிறது என்பதன் அறிகுறியாகும். இந்த அறிகுறி உங்கள் பணம் மற்றும் சொத்து அதிகரிக்கப்போவதை உணர்த்தும்.

அறிகுறி 2
உங்கள் கை மற்றும் மார்பு பகுதியில் தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால் அது நல்ல செய்தி வரபோவதற்கான அறிகுறியாகும். இந்த அறிகுறி உங்கள் செல்வச்செழிப்பு அதிகமாக கூடிய வாய்ப்பு வரப்போகிறது என்று அர்த்தம்.

அறிகுறி 3
உங்களுக்கு நடக்கப்போகும் நல்லதோ, கெட்டதோ முதலில் அதனை உங்களுக்கு உணர்த்துவது கனவுகள்தான். அதிலும் உங்கள் கனவில் உங்கள் மூதாதையர்கள் வருவது நல்ல அறிகுறியாகும், குறிப்பாக இது போன்ற சிறப்பான நாட்களில் உங்கள் முன்னோர்கள் வருவது சிறப்பானதாகும். இவ்வாறு நடந்தால் உங்கள் பரமபரை சொத்து தொடர்பான நல்ல செய்திகள் வரும்.

அறிகுறி 4
பொதுவாக 8 என்பது துரதிர்ஷ்டத்தின் எண் என்ற கருத்து உள்ளது. ஆனால் உண்மையில் 8 ஆம் எண்ணை தொடர்ச்சியாக பார்க்க நேர்ந்தால் அது நல்ல அறிகுறி ஆகும். திட்டமிட்டு பார்க்காமல் எதேர்ச்சையாக இந்த எண்ணை பார்த்தால் நிச்சயம் நல்ல செய்தி தேடிவர போகிறது என்று அர்த்தம். இந்த எண் மகாலக்ஷ்மியுடன் தொடர்புடையது.

அறிகுறி 5
பூச்சிகளை பார்ப்பது உங்களுக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு நல்லது நடக்க போகிறது என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும். குறிப்பாக உங்கள் வீட்டுக்குள் எறும்புகள் ஊர்ந்து செல்வதை நீங்கள் பார்த்தால் கடவுள் உங்கள் நல்லது நடக்க போவதை உங்களுக்கு உணர்த்துகிறார் என்று புரிந்துகொள்ளுங்கள்.

அறிகுறி 6
சிலந்தி வலை என்பது உங்களுக்கு மிகப்பெரிய செல்வம் காத்திருக்கிறது என்பதற்கான அறிகுறி ஆகும். உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு மூலையில் பலமான சிலந்தி வலை காண நேர்ந்தால் அது நல்ல செய்திக்கான அறிகுறி ஆகும்.



Click it and Unblock the Notifications











