For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சிளம் குழந்தைகளுக்கு சிறையா? அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்திருந்த ஜீரோ பாலிசி என்ற கொள்கையால் அமெரிக்காவின் அகதிகள் கைது செய்யப்பட்டார்கள்.இதன் ஒரு பகுதியாக அகதிகளின் குழந்தைகளும் தனியே சிறையில் அடைக்கப்பட்டார்கள்

|

நேற்று வெளியான டைம் பத்திரிக்கையின் அட்டைப்படம் பயங்கர வைரலாய் பரவிக் கொண்டிருக்கிறது. இரண்டு வயதேயான குழந்தையுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நின்றுக் கொண்டிருக்கிறார். குழந்தை ட்ரம்பின் முகத்தைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறது. வெல்கம் டூ அமெரிக்கா என்று எழுதப்பட்டிருக்கும் அந்த அட்டைப்படம் வைரலாய் பரவிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவிற்கு அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி மாற்றங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். அது தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் சமீபத்தில் அவர் அறிவித்த ஜீரோ டாலரென்ஸ் விவகாரம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கடந்த மே மாதம் புதிதாக குடியேற்ற சீர்திருத்தம் ஒன்றினை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதன் படி மெக்ஸிகோ எல்லையை சட்டவிரோதமாக தகுந்த ஆவணங்கள் இல்லாமல் கடக்கும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். அது மட்டுமின்றி ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் விலகுவதாக அறிவித்தது அமெரிக்கா

#2

#2

கைது செய்யப்படுபவர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனி சிறைகளிலும் அவர்களின் குழந்தைகளை அமெரிக்காவில் இருக்கிற சுகாதார மற்றும் மனித சேவைத் துறை பராமரிப்பின் கீழ் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்படி பிரிக்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Image Courtesy

#3

#3

ட்ரம்ப்பின் மனைவி மெலானியாவும் இந்த விவாகரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து இதற்கு கண்டனக்குரல்கள் எழுந்ததையெடுத்து அவர் எடுத்த சீர்திருத்த கொள்கையில் மாற்றம் செய்தார். அதன் படி பெற்றோரும் குழந்தைகளும் ஒரேயிடத்தில் தங்கலாம் ஆனால் அவர்கள் மீது அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளில் துளியும் சகிப்புத்தன்மை இருக்காது என்று தெரிவித்திருந்தார்.

தங்கள் நாட்டில் வாழ வழியின்றி புகழிடம் தேடி வரும் மக்களிடம் இப்படி நடந்து கொள்வது அநாகரிகமானது என்று பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

#4

#4

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டைம் இதழின் அட்டைப்படம் அமைந்திருந்தது. இந்த மாற்றம் மேற்கொள்வதற்கு முன்னால், மெக்ஸிகோவிலிருந்து அகதிகளாய் வந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் போது தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தை அழும் காட்சியை படம் பிடித்திருந்தார் புகைப்படக் கலைஞர் ஜான் மூர்.

சுற்றிலும் போலீஸ் நிற்க தன் அம்மாவையும் அவர்கள் கூட்டிச் செல்வதைப் பார்த்து கதறியழுத அந்தக் குழந்தையின் புகைப்படத்துடன் ட்ரம்பின் படத்தை சேர்த்து வெளியிட்டிருந்தது டைம் பத்திரிக்கை. இந்த புகைப்படக்கலைஞர் புலிட்சர் விருது பெற்றவராவார்.

#5

#5

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லை அருகில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த குழந்தையின் படம் தான் டைம் அட்டைப் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. மெக்ஸோவின் ரியோ க்ராண்டே என்ற எல்லையை கடந்து அமெரிக்காவிற்கு நுழைந்த போது எல்லை பாதுகாப்பு வீரர்களால் இந்த குழந்தையுடன் வந்தவர்களை கைது செய்திருக்கிறார்கள் போலீசார்.

அப்போது இருந்த நடைமுறையின் படி குழந்தையும் தாயும் பிரித்து தனித்தனியாக அனுப்ப, தன்னை விட்டு தாயை மட்டும் பிரித்து அழைத்துச் செல்லப்படுவதை பார்த்து கதறியழும் இரண்டு வயது குழந்தை.

Image Courtesy -John Moore, Staff / Getty Images

#6

#6

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புலம் பெயர்ந்து வந்த மக்களை பிடிக்க அவர்களுடன் உள்ளூர் போலீசும் இணைந்து ஆவண சோதனையில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் சோதனை முடித்த பிறகு அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். பெற்றோருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்த போலீசை ஆச்சரியத்துடன் பார்க்கும் சிறுமி.

Image Courtesy -John Moore, Staff / Getty Images

 #7

#7

பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரிப்பது குறித்து மக்கள் தொடர்ந்து தங்களது கண்டன குரல்களை எழுப்பிக் கொண்டேயிருந்திருக்கிறார்கள். அதோடு குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ள காப்பகங்களுக்கு முன்னாலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது தன்னுடைய ஒரு வயது குழந்தை லியார்ண்டோ ஃபெர்னாண்டஸுடன் பங்கேற்ற தாய் அவ்ரா ஃபெர்னாண்டஸ்.

Image Courtesy -Michael Ciaglo, Houston Chronicle / Houston Chronicle

#8

#8

நடுரோட்டில் நிலவொளியில் நிற்கும் மூன்று வயதேயான இந்த சிறுவன் தன் தாய் ஜெனி மரிசா ரோட்ரிக்ஸுடன் எல்லையை கடந்து வந்திருக்கிறான். இவர்களாகவே எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரண்டர் ஆகியிருக்கிறார்கள். வழியில் வந்த இன்னொரு கும்பலுடன் கணவன் தப்பிச் செல்ல மனைவியும் குழந்தையும் மட்டும் மாட்டியிருக்கிறார்கள்.

அமெரிக்க எல்லையில் கைது செய்யப்பட்டு தாயும் மகனும் பிரிக்கப்பட்டு தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

Image Courtesy -Michael Ciaglo, Staff

#9

#9

அமெரிக்காவிற்கு மெக்ஸிகோவிலிருந்து புலம் பெயர்ந்து வரும் மக்கள் ட்ரம்பின் சீர்திருத்த கொள்கையினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பு படை வீரர் தன் தாயை சோதனையிட பயத்துடன் பார்க்கும் குழந்தை.

Image Courtesy -John Moore, Staff / Getty Images

#10

#10

அமெரிக்க எல்லையில் அமைந்திருக்கும் உயரமான புல் மற்றும் மரங்களுக்கு இடையில் அகதிகள் யாரேனும் ஒளிந்திருக்கிறார்களா என்று சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி டேவிட் வேரா சோதனையிடுகிறார். எல்லை வேலி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அருகில் இந்த புதர் மண்டிக்கிடக்கும் இடம் இருக்கிறது.

Image Courtesy -Marie D. De Jesus, Houston Chronicle

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Shocking News About Zero Tolerance Policy in America

Shocking News About Zero Tolerance Policy in America
Story first published: Friday, June 22, 2018, 16:15 [IST]
Desktop Bottom Promotion