For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'அந்த' காட்சியை ஷூட் செய்யும் போது, உண்மையில் என்ன நடக்கும்? நடிகைகள் பகிர்ந்த உண்மை அனுபவம்!

By John
|

இந்திய படங்களில் படங்களில் ஹீரோ, ஹீரோயின் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிகள், முதலிரவு காட்சிகள் படமாக்கும் போது, டக்கென்று இரு மலர்களை உரசவிட்டும், கதவை சாத்தியும் சீனை முடித்துவிடுவார்கள். அல்லது வண்டு பூவில் தேன் உறிஞ்சுவதை காண்பித்து ரசனையுடன் கட் செய்துவிடுவார்கள்.

ஆங்கில படங்களில் அப்படி இல்லை. முத்தத்தில் இருந்து மொத்தம் என்ன நடந்தாலும் ஒளிவுமறைவு இன்று அனைத்தையும் காட்சி படுத்திவிடுவார்கள். ஆனால், எல்லா நடிகர், நடிகைகளும் இந்த காட்சிகளில் நடிக்க ஒப்புதல் வழங்க மாட்டார்கள்.

Secrets and Shocking Things Happened Behind the Love Making Scenes in Hollywood Movies and Web Series

உதாரணமாக நாம் பார்க்கும் பல காட்சிகள் அந்த நடிகை, நடிகரின் உடல் மாதிரியை 3டியில் வடிவமைத்து அனிமேட், வி.எப்.எக்ஸ் மூலமும் கலவுதல் காட்சி அங்கே எடுக்கப்படுகின்றன. சிலர் கிரீன் மேட் எல்லாம் வைத்து வெகு சில டெக்னீஷியன் முன்னிலையில் அந்த காட்சியை இரகசியமாக எடுத்துவிடுவார்கள்.

சில நேரம், படத்திற்கு தேவை என்பதால் லைவாக நடித்துக் கொடுக்கும் நடிகர், நடிகைகளும் இருக்கிறார்கள். சில படங்களில் நடிகர்கள் நிஜமாகவே கலவி நடித்ததும் உண்டென ஹாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

உண்மையில் இப்படியான கலவுதல் காட்சிகளை படமாக்கும் போது அங்கே நடந்த அதிர்ச்சியான சில உண்மைகளை, தாங்கள் எதிர்கொண்டு அனுபவங்களை சில நடிகர், நடிகைள் கூறி இருக்கிறார்கள். அதுக்குறித்து இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எமிலியா கிளார்க்!

எமிலியா கிளார்க்!

கேம் ஆப் த்ரோன்ஸ் ஆங்கில தொடரை கண்டு வருவோருக்கு எமிலியா கிளார்க் மிக பரிச்சயமான நடிகை. கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் ஏகப்பட்ட கலவி காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதில் எமிலியா கிளார்க் மற்றும் இவரது பார்ட்னர் ஜேசன் மொமாவ் இடையே கலவி காட்சி ஒன்று எடுக்க படக்குழு ஆயுத்தமானது.

எப்போதும் இதுபோன்ற கலவி காட்சிகளை எடுக்கும் போது ஆண் நடிகர்கள் தங்கள் அந்தரங்க உறுப்பு பகுதியில் அதை மறைக்கும் அல்லது மூடி கொள்ளும்படியான சாக்ஸ் போன்ற ஒன்றை அணிந்துக் கொள்வார்கள். நடிகைகளும் தங்கள் பிறப்புறுப்பு பகுதியில் வெஜ் பேடை பொருத்திக்கொள்வார்கள்.

ஆனால், அந்த காட்சியின் போது ஜேசன் எப்போதும் பொருத்தும் அந்த சாக்ஸ்க்கு பதிலாக பிங்க் நிறத்திலான பஞ்சு போன்ற எதையோ வைத்து மறைத்திருக்கிறார். அப்போது எமிலியா கிளார்க் எதை பார்த்தார் என்று தெரியவில்லை, படக்குழுவினரிடம், இது ரொம்ப பெரிதாகவும், பிங்கியாகவும் இருக்கிறது என செய்வதறியாது புலம்பி இருக்கிறார்.

ஹென்றி கவில்!

ஹென்றி கவில்!

பீரியட் டிராமாவான டூடர்ஸ்ல் ஹென்றி நடித்திருக்கிறார். இதில் வெளிப்படையான ஒரு கலவுதல் காட்சி இடம்பெறவிருந்தது. அதை இரவு ஷூட் செய்ய படப்பிடிப்பு குழு திட்டமிட்டிருந்தனர். ஹென்றி மேன் ஆப் ஸ்டீல் படத்தில் சூப்பர் மேன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டூடர்ஸ்ல் அந்த காட்சி படமாக்கப்பட இருந்த இடம் கொஞ்சம் கரடுமுரடாக இருந்துள்ளது. கலவி காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஹென்றி மீது அந்த நடிகை மேலே அமர்ந்து கலவியில் ஈடுபடுவது போல காட்சியை படம்பிடித்து வந்துள்ளனர். அப்போது, நடிகை ஹென்றியுடன் மிக நெருக்கமாக நடித்துக் கொண்டிருக்கும் போது, நிஜமாகவே விறைப்பு கொண்டுவிட்டாராம் ஹென்றி.

இதற்காக அந்த நடிகையிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அது நடிக்கும் இடம். நான் கொஞ்சம் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அந்த சூழலில் நடிகை நிர்வாண நிலையில் சில செய்கைகள் செய்த போது, என் கட்டுப்பாட்டை மீறி அது நடந்துவிட்டது. என்ன இருந்தாலும் நான் செய்தது தவறு தான். அதை மறுக்க முடியாது என்று ஹென்றி ஒருமுறை பேட்டியில் கூறி இருந்தார்.

கிறிஸ்டோபர் மின்த்ஸ்!

கிறிஸ்டோபர் மின்த்ஸ்!

சூப்பர் பேட் (Super Bad) என்ற படத்தில் கிறிஸ்டோபர் நடித்த போது அவர் வயது 17. அப்போது டீன் செக்ஸ் காமெடி காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டி இருந்ததது. பதின் வயது என்பதால் உடன் பெற்றோர் இருக்க வேண்டிய அவசியமும் இருந்தது. எனவே, சூப்பர் பேட் படத்தில் தான் அந்த காட்சியை பெற்றோர் முன்னிலையில் நடித்து முடித்தேன் என்று கிறிஸ்டோபர் கூறி இருக்கிறார்.

அது போலியான காட்சி என்ற போதிலும், அந்த நிகழ்வுக்கு பிறகு ஒருமுறை கூட நாங்கள் விவாதிக்கவில்லை. இன்று வரையில் ஒரு வார்த்தை கூட அன்றைய நிகழ்வு குறித்து நாங்கள் பேசியதே இல்லை என்று கிறிஸ்டோபர் கூறி இருந்தார்.

ஜெனிபர் லாரன்ஸ்!

ஜெனிபர் லாரன்ஸ்!

ஜெனிபர் லாரன்ஸ் ஹாலிவுட்டின் முன்னணி நடிகை. நிறைய ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், அவர் முதன் முதலில் நிஜமாக ஒரு கலவி காட்சியில் நடித்து சயின்ஸ் ஃபிக்ஷன் படமான பேசஞ்சர் திரைப்படத்தில் தான். இதில் ஜெனிபர் லாரன்ஸ் க்றிஸ் பிராட் உடன் நடித்திருந்தார்.

அந்த காட்சி படமாக்கப்பட்டவுடன் நான் நிறையவே குடித்தேன். வீடு திரும்பியதில் இருந்து என்னுள் நிறைய பதட்டமும் கூட. நானா இப்படி செய்தேன், ஏன், எனக்கு தெரியவில்லை. மேலும், க்றிஸ் திருமணமான நபர். என் வாழ்வில் திருமணமான வேறொரு ஆணை முதல் முறையாக அந்த படப்பிடிப்பின் போது தன் முத்தமிட்டிருந்தேன்.

இதெல்லாம் என்னுள் ஒரு மோசமான உணர்வை ஏற்படுத்தியது என்று ஜெனிபர் லாரன்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

அன்னே ஹாத்வே

அன்னே ஹாத்வே

அன்னே ஹாத்வே லவ் அன்ட் அதர் ட்ரக்ஸ் என்ற திரைப்படத்தில் ஜேக் கிலென்ஹால் எனும் நடிகருடன் அந்த காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. இந்த படத்தில் நிறைய செக்ஸ் காட்சிகள் வைத்திருந்தனர். ஒருமுறை ரிஹர்சல் நடக்கிறது என்று தெரியாமல் அன்னே ஹாத்வே ஜேக் கிலென்ஹால்ன் நண்பர் முன்னியிலை நிர்வாணமாக தோன்றிவிட்டார்.

அந்த காட்சியின் போது அன்னே ஹாத்வே தனது ட்ரென்ச் கோட்டை கழற்றி ஜேக் முன்னர் நிர்வாணமாக தோன்ற வேண்டும். நிஜமாகவே காட்சியை தான் படம்பிடிக்கிறார்கள் என்று தவறாக நினைத்து வந்த அன்னே ஹாத்வே, ரிஹர்சல் நடந்துக் கொண்டிருக்கும் போது ஜேக் கிலென்ஹால்ன் நண்பர், வெளிநபர்கள் பலர் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றிவிட்டார்.

ராபர்ட் பாட்டின்சன்!

ராபர்ட் பாட்டின்சன்!

மேப்ஸ் டு தி ஸ்டார்ஸ் என்ற படத்தில் ஜூலியானா மோரே உடன் அனல்பறக்கும் காட்சியில் ராபர்ட் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்த காட்சியின் போது எதிர்பாராத விதமாக ராபர்ட் பாட்டின்சன்க்கு நிறைய வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.

அப்போது ஜூலியானா பின்னே இருந்து கலவுதல் போல எடுக்கப்பட்ட காட்சியின் போது, ராபர்டின் வியர்வை அவர் உடல் முழுக்க சொட்ட, ஒருக்கட்டத்தில், உங்களுக்கு ஏதாவது பேணிக் அட்டாக் ஏற்பட்டுவிட்டதா? ஏன் இப்படி வியர்த்து கொட்டுகிறது என்று ஜூலியானாவே கேட்டுவிட்டாராம்.

இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளானதாக ராபர்ட் குறிப்பிட்டிருந்தார்.

ரியான் ரெனால்ட்ஸ்

ரியான் ரெனால்ட்ஸ்

தி சேஞ் அப் என்ற படத்தில் டெட் பூல் ஹீரோ ரியான் நடித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் மிக ரொமான்சான காட்சி எடுக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியின் போது, நடிகை ரியான் ரெனால்ட்ஸ் மீது அமர்ந்து இருப்பது போலவும். ரியான் அவரது ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றுவது போலவும் காட்சி படமாக்கப்பட்ட வந்தது.

ஒரு ஷாட்டில், ரியான் நடிகையின் மேலாடைகள் அனைத்தையும் கழற்றிய பிறகு, ரொமான்ஸ் அடுத்தக் கட்டத்திற்கு செல்வதை படமாக்க துவங்கியது படக்குழு. அப்போது நடிகை தனது மார்பில் ரியானின் கைகளை எடுத்து வைக்க.. நடுக்கத்தில் கைகளை உடனே ஷாக் அடித்தது போல எடுத்துவிட்டாராம் ரியான்.

அந்த காட்சியின் போது தான் பேச வேண்டிய எல்லா வசனங்களும் மறந்து போய்விட்டாராம் ரியான். அந்த படத்தின் போது மட்டுமல்ல, எந்த படத்தில் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க நேர்ந்தாலும், பதட்டத்தில் வசனங்களை மறந்துவிடுவேன் என்று கூறி இருக்கிறார் டெட் பூல் ஹீரோ ரியான்.

அலிசன் ஜேனி!

அலிசன் ஜேனி!

லைப் டியூரிங் வார் டைம் என்ற படத்தில் அலிசன் மைக்கேல் லார்னர் என்பவருடன் ஒரு கலவுதல் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. ஓர் அறையில் அந்த காட்சி எடுத்துக் கொண்டிருந்தனர். காட்சி எடுக்கும் போது நடிகர், நடிகை மீது வியர்வை சுரப்பது போல காட்சிப்படுத்த ஸ்ப்ரே செய்துக் கொண்டே இருப்பார்களாம்.

அன்று அந்த காட்சி ஷூட் செய்த தளம் மார்பில்ஸ் தரை என்பதாலும், ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட்டுக்கு ரெடியாக மைக்கேல் அலிசனை தூக்கி கொண்டு ரொமான்ஸ் செய்ய நடிக்க தயாரான போது, தரையில் படர்ந்திருந்த அந்த ஸ்ப்ரே காரணத்தால் ஹீரோ வழுக்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்க நேரிட்டது என்று அலிசன் கூறி இருக்கிறார்.

என் வாழ்நாளில் அந்த காட்சியை படமாக்கிய நாளை மறக்கவே மாட்டேன். அது மிகவும் மோசமான விபத்து என்று தெரிவித்திருக்கிறார் அலிசன்.

மேலும், நிர்வாண காட்சிகளில் நடித்த நடிகைகள் அதுக்குறித்து தங்கள் அனுபவம் மற்றும் அதற்கு பின் எடுத்து முடிவுகள் குறித்து என்ன கூறி இருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து காணலாம்...

எமிலியா கிளார்க்!

எமிலியா கிளார்க்!

கேம் ஆஃப் த்ரோன்ஸில் இவர் நிர்வாணமாக நடித்திருப்பார். ஆனால் இதில் சீசன் 4 க்கு பிறகு நிர்வாணக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

செக்ஸ் காட்சிகள் மிகவும் நுட்பமாக இருப்பதாகவும் அதனால் அது போன்ற காட்சிகளில் நடிப்பதை குறைத்துக் கொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் படத்தில் நிர்வாணமாக நடித்ததற்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் எமிலா.

கேட் வின்செல்ட் :

கேட் வின்செல்ட் :

டைட்டானிக் படத்தில் நிர்வாணமாக தோன்றியிருப்பார் கேட் . அந்த திரைப்படத்தில் நிர்வணாமாக ஓவியம் வரைய போஸ் கொடுத்திருப்பார். இன்றளவும் தன்னுடைய நிர்வாண ஓவியத்தை படத்தின் காட்சியிலிருந்து எடுத்து வந்து ஆட்டோகிராஃப் வாங்குகிறவர்கள் இருக்கிறார்களாம்!

ஆனால் அதில் கேட் தன்னுடைய கையெழுத்து போட்டுத் தர மறுத்துவிடுவாராம். இது பெரும் தர்மசங்கடமான நிலையாக இருக்கிறது என்றிருக்கிறார் கேட். அதோடு பல வருடங்களுக்கு முன்னர் திரையில் வந்த காட்சிக்காக நிர்வாணமாக நடித்தேன் அதற்காக இன்றைக்கும் கூட என்னுடைய நிர்வாணப் படத்தை எடுத்து வைத்திருப்பது என்பது எந்த வகையில் நியாயம்?

நடாலியே போர்ட்மென் :

நடாலியே போர்ட்மென் :

முதலில் நிர்வாணக்காட்சிகளில் நடிப்பது தவறு இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர், அவருடைய நிர்வாண காட்சி பல்வேறு அடல்ட் இணையங்களில் பரவ தன்னுடைய கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார்.

நிர்வாணமாக நடிப்பது குறித்து வெளிவரும் கருத்துக்கள் எல்லாம் என்னை அதிகமாக மனச் சோர்வை தருகிறது. அப்படி நடித்திருக்ககூடாதோ பெரிய தவறு செய்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்வைத் தருகிறது. செக்ஸ் என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கம், ஆனால் அதற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்.... திரையில் தோன்றுகிற பிற காட்சிகளை கடந்து செல்வது போல இந்த காட்சிகளையும் கடந்து செல்ல ஏன் முடியவில்லை என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

ஜெனிஃபர் லாரன்ஸ் :

ஜெனிஃபர் லாரன்ஸ் :

2018 ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படமான ரெட் ஸ்பேரோவில் இவர் நடித்திருப்பார். நிர்வாணக்காட்சியில் நடிப்பது முதலில் விசித்திரமான மிகவும் வினோதமாக தோன்றியதாகவும் பின் சகஜமாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் பள்ளியில் எல்லா மாணவர்கள் மத்தியில் நிர்வணாமாக நிற்பது போன்ற ஒரு காட்சி வரும், முதலில் தயக்கத்துடன் நிர்வாணமாக நிற்கமுடியாமல் நெளிந்திருக்கிறார், சிறிது நேரத்தில் சகஜமாகி தைரியமாக நின்று விட்டாராம். இவர் தைரியமாக நிற்பதை பார்த்து எதிரில் உட்கார்ந்திருந்தவர்கள் நெளிய ஆரம்பித்து விட்டார்களாம்.

நாம் எதிர்கொள்வதில் தான் பிரச்சனை இருக்கிறது என்கிறார்.

மேரி லூயிஸ் பார்கர் :

மேரி லூயிஸ் பார்கர் :

நிர்வாணக்காட்சிகளில் நடித்ததற்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் இவர். இந்த இடத்தில் நிர்வாணமாக காட்சி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் இவர் நடித்திருக்கிறார் என்று பல புகார்கள் எழுந்தது.

என் திரைப்படத்தின் இயக்குநர் இந்த காட்சியில் நீங்கள் உடைகளை களைத்து பாத் டப்பில் விழ வேண்டும் என்று காட்சியை வர்ணிக்கிறார், நான் நடிக்கிறேன். அப்படி நடிக்க நான் பெரிதாக விரும்பவில்லை தான் சரி அவர்கள் எடிட்டிங்கில் எடுத்துவிடுவார்கள் என்றுன் நினைத்தேன் ஆனால் அவர்கள் நீக்கவில்லை .

பமீலா ஆண்டர்சன் :

பமீலா ஆண்டர்சன் :

நான் நிர்வாணமாக நடித்திருப்பதை என் குழந்தைகள் கிண்டலடிக்கிறார்கள். நீங்கள் இன்று நிர்வாணமாக நடிக்கும் போது, சில ஆண்டுகளுக்கு பின்னர் வருங்காலத்தில் உங்கள் குழந்தைகள் கூட இதை பார்ப்பார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இனி நிர்வாணக்காட்சிகளில் நடிக்ககூடாது என்று முடிவெடுத்தாலும் அடுத்தடுத்து கிடைக்கிற வாய்ப்புகளால் அதனை கடைபிடிக்க முடியவில்லை. ப்ளே பாயின் இறுதி பதிப்பில் நிர்வாண போஸ் கொடுத்திருந்தார் பமீலா

ஹெலன் மிர்ரன் :

ஹெலன் மிர்ரன் :

எப்படி சொல்வது என்று தெரியவில்லை, திரைக்கு வந்த புதிதில் நிர்வாணக்காட்சிகள் எல்லாம் நடிக்கலாம் இதில் என்ன இருக்கிறது என்ற எண்ணம் இருந்தது ஆனால் இப்போது அந்த காட்சிகள் எல்லாம் தேவை தானா என்று யோசிக்கிறேன்.

நீங்கள் மட்டும் நிர்வாணமாக நிற்கும் போது தான் உங்களுக்கு கூச்சமாக இருக்கும், ஆனால் செட்டில் இருப்பவர்கள் பலரும் நிர்வாணமாக இருந்தால்? 1979 ஆம் ஆண்டு வெளியான காலிகுலா என்ற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார், அதில் அப்படி நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை, காரணம் கதைக்களத்தின் படி நாங்கள் கேம்ப்புகளில் நிர்வாணமாக அடைத்து வைத்திருக்கும் காட்சி. அங்கே உடையுடன் இருந்தால் தான் நீங்கள் வித்யாசமாக தெரிந்திருப்பீர்கள்.

ஹலே பெர்ரி :

ஹலே பெர்ரி :

மான்ஸ்டர்ஸ் பால் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அகாதமி விருது வென்ற நடிகை இவர். அந்த திரைப்படத்தின் பெயரைச் சொன்னாலே நடிகர் பில்லி பாபுடன் மிகவும் ஆழமான செக்ஸ் காட்சிகளில் நடித்த சீன் தான் எல்லாருக்கும் நினைவுக்கு வருமாம் .

அதே போல ஸ்வார்ஃபிஷ் என்ற திரைப்படத்தில் நிர்வாண காட்சியில் தோன்றியிருப்பார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், நிர்வாணக்காட்சியில் நடிப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம், அதோடு அது அந்த கதைக்களத்திற்கும் தேவைப்பட்டிருக்கிறது.

என்னைப் பொருத்தவரையில் பெண் நிர்வாணக்காட்சியில் நடிக்க முடிவெடுப்பது என்பது மிகவும் தைரியமான முடிவாகும். இந்த காட்சியில் நடிக்க சம்மதித்தற்கு இன்னொரு காரணமும் உண்டு, கதைப்படி என்னுடைய கதாப்பாத்திரம் அப்படி.

எமிலி ப்ளண்ட் :

எமிலி ப்ளண்ட் :

நிர்வாணக் காட்சிகளில் நடிக்க எல்லாம் அவ்வளவு பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில் காட்சியில் தேவைப்பட்டால் நடித்து தானே ஆகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார், ஆனால் தாய்மை அடைந்த பிறகு இந்த எண்ணம் அடியோடு மாறியிருக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு இனி நிர்வாணக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் நெகட்டிவ் கதாப்பாத்திரங்களில் மற்றும் மிகவும் ஆக்ரோசமான காதாப்பாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

இனியும் நான் நிர்வாணக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் ஏனென்றால் இன்னும் நான் இளம் பெண் கிடையாது. முன்னால் அப்படி நடித்தேன் என்பதற்காக இப்போதும் அப்படியே நடிக்க வேண்டுமா என்ன? அதைவிட நிர்வாணக்காட்சிகள் எல்லாம் திரைப்படத்தில் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

நடாலியே டோர்மெர் :

நடாலியே டோர்மெர் :

கேம் ஆஃப் த்ரான்ஸ் படத்தில் நடித்த நடாலியே டோர்மர் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறில்லை என்று சொல்லியிருக்கிறார் அதோடு நிர்வாணக் காட்சியில் பெண்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஆண்களும் நடிக்கலாம் என்றிருக்கிறார்.

இவர் சொன்னது போல கேம் ஆஃப் த்ரோன்ஸில் ஏராளமான ஆண் நிர்வாணக் காட்சிகள் இடம்பெறும் செக்ஸ் என்பது நம் இயல்பு வாழ்க்கையில் கடந்து செல்லக்கூடிய ஒன்று தானே.... பிறகு, சினிமாவில் இயல்பு வாழ்க்கையை காட்சிப் படுத்தும் போது செக்ஸ் இருக்ககூடாது என்று சொல்வது எப்படி நியாயமாகும்?

க்றிஸ்டென் ஸ்டீவார்ட் :

க்றிஸ்டென் ஸ்டீவார்ட் :

ட்வலைட் சீரிஸின் ஒரு காட்சியில் தெருவில் நிர்வாணமாக நிற்பது போன்ற ஒரு காட்சி வரும்,இங்கே அதுவும் நிர்வாணமாக முடியவே முடியாது என்றிருக்கிறார், திரைத்துறைக்கு நுழைந்து மிகவும் தர்மசங்கடமான காலகட்டமது என்று நினைவுகூர்கிறார்.

ஆனால் ஒரு வழியாக அந்த காட்சியில் நடித்துவிட்டிருக்கிறார். அந்த காட்சியை இப்போது பார்க்கையில் மிகவும் வினோதமாக இருக்கிறது யார் அது? அது நான் தானா..... எப்படி நிர்வாணமாக நடிக்க சம்மதித்தேன் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ரூத் வில்சன் :

ரூத் வில்சன் :

த அஃப்ஃபர் என்ற சீரிஸில் ரூத் வில்சன் டாம்னிக் வெஸ்டுடன் பல்வேறு செக்ஸ் காட்சிகளில் நடித்திருப்பார் அதில் எல்லாம் நிர்வாணமாக தோன்றிருப்பார். இதில் இருவருமே சர்ச்சையில் சிக்கினார்கள்.

காட்சிக்கு தேவைப்பட்டது அதனால் நடித்தோம் என்றார்கள். இது குறித்து ரூத் கூறுகையில், திரையில் பெண்களை எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். பெண்கள் என்றாலே குறைவான உடை அணிந்து வர வேண்டும் என்ற கட்டாயமா என்ன?

ஒலிவியா வைல்ட் :

ஒலிவியா வைல்ட் :

இதில் எந்த கூச்சமும் இல்லை என்கிறார். மிகவும் இயல்பாக சிரித்த முகத்துடன் நிர்வாணக் காட்சியில் நடிப்பேன் என்கிறார் ஒலிவியா. பிறர் செய்யத் தயங்குகிற விஷயத்தை நாம் தைரியமாக முன்னெடுத்து செய்கிறோம் என்பதில் பெருமை இருக்கத்தானே செய்யும் என்கிறார்.

ஜெசிகா அல்பா :

ஜெசிகா அல்பா :

நிர்வாணத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். நிர்வாணமாக போஸ் கொடுப்பது என்பது தேவையற்ற ஒன்று, நம்முடைய உடலை ஏன் பிறருக்கு காட்ட வேண்டும்..... உங்கள் பெற்றோரோ அல்லது தாத்தா பாட்டியோ உங்களை பொது இடத்தில் நிர்வாணமாக பார்த்தால் எப்படி உணர்வார்கள்? பிறரைப் போல அவர்களும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

மெகன் ஃபாக்ஸ் :

மெகன் ஃபாக்ஸ் :

ஹாலிவுட்டின் மிகவும் செக்ஸியான நடிகை என்ற அடைமொழியுடன் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் மெகன். ட்ரான்ஸ்ஃபார்மர் திரைப்படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து செக்ஸ் காட்சிகளில், நிர்வாணக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றே கேட்டு வந்திருக்கிறார்கள் .

ஒரு படத்தில் அப்படி நடித்துவிட்டால் அப்படியே எங்களுக்கு முத்திரை குத்திவிடுவதா? எங்களால் அந்த காட்சிகளை மட்டும் தான் செய்ய முடியும் என்று அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள்.

எம்மா வாட்ஸன் :

எம்மா வாட்ஸன் :

சரியான படத்தில், மிகவும் அவசியமான காட்சியில் நீங்கள் நிர்வாணமாக நடிப்பது தவறில்லையே, அது அந்த இடத்தில் உங்களது முக்கியத்துவத்தை ப்ரதிபளிக்கும். இது என்னுடைய வேலை அவ்வளவு தான்.

ரேச்சல் பில்சன் :

ரேச்சல் பில்சன் :

இது நம் கையில் தான் இருக்கிறது.திரையில் வெற்று சர்ச்சைகளை கிளப்புவதற்காக நிர்வாணக்காட்சிகளை சேர்ப்பார்கள், நாம் தான் அதில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் தவிர்க்க வேண்டிய ஒன்று.

க்றிஸ்டீனா ஹெண்ட்ரிக்ஸ் :

க்றிஸ்டீனா ஹெண்ட்ரிக்ஸ் :

என் நடிப்பை பற்றி விமர்சிக்க எல்லாருக்கும் உரிமையுண்டு அதற்காக என் உடலமைப்பை கிண்டல் செய்ய விடமாட்டேன். மிகவும் தைரியமாக நிர்வாணமாக போஸ் கொடுக்க, நடிக்க தயாராக இருக்கிறேன். நானும் சராசரி பெண் தான்.

என் நடிப்பை பற்றிய விமர்சனத்தை கேட்பதற்கு பதிலாக என் உடலைப் பற்றிய விமர்சனம் கேட்க வேண்டியதாய் இருக்கிறது.

லீனா டுன்ஹம் :

லீனா டுன்ஹம் :

கேர்ல்ஸ் என்ற நிகழ்ச்சியில் நிர்வாணமாக தோன்றியிருப்பார் லீனா. இது பலத்த எதிர்ப்பை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து நிர்வாணக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தம் செய்யப்படும் போது நான் காதலில் இல்லை யாருக்குமே நான் யாரென்று தெரியாது, எனக்கான உலகத்தில் நானுண்டு என் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தேன். கேமரா முன்பாக உடையை கழற்றுவது என்பது எனக்கு கஷ்டமான வேலையாக இருக்கவில்லை, ஆனால் இப்போதும் அப்படித்தான்.

முதலில் யாருக்கும் என்னைத் தெரியாது என்ற தைரியம் இப்போது அவர்களின் ரியாக்‌ஷன் இப்படித்தான் இருக்கும். இதற்கு கடுமையான எதிர்ப்புகளும் கண்டங்களும் கிளம்பும் என்று தெரிந்து வைத்திருப்பதால்.

அலீசா மிலானோ :

அலீசா மிலானோ :

பல்வேறு திரைப்படங்களில் நிர்வாணமாக தோன்றிருக்கிறார். சில காலங்களுக்கு முன்னர் ட்விட்டரில் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற செல்ஃபிக்களை பகிர திரையில் நடிப்பவர்களுக்கு இப்படியான போட்டோ எடுத்துப் போடுவது சகஜமாக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது , அதோடு அவரை அப்போதும் நிர்வாணப் பொருளாகவே நினைத்து விமர்சனங்களை கொடுத்திருக்கிறார்கள்.

எம்மி ரோசும் :

எம்மி ரோசும் :

அந்த கேரக்டருக்கு இது மிகவும் பொருத்தமான ஒன்றாக எனக்கு தோன்றியது, காட்சிப்படி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அந்த பெண் தனக்கு செக்ஸ் வேண்டும் என்று நினைக்கிறாள். சிறிய அறை கொண்ட வீடு அங்கே உறவில் ஈடுபடுகிறாள், அந்த காட்சியை காட்ட நிர்வாணமாக நடித்தேன்.

நிர்வாணமாக நடிக்கமாட்டேன் என்று நீச்சல் உடை அணிந்தால் அந்த காட்சிக்கும், இடத்திற்கும், சூழலுக்கும் பொருத்தமாக இருக்குமா என்ன?

டகோடா ஜான்சன் :

டகோடா ஜான்சன் :

50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே எனும் திரைப்படத்தில் நிர்வாணக்காட்சியில் தோன்றியவர் இவர், கதைப்படி அவர் பல முறை நிர்வாணமாக தோன்ற வேண்டும். அதற்கு சம்மதித்து தான் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் நிர்வாணமாக நிற்பது நடிப்பது ஒன்றும் தனியறையில் அல்ல என்பதால் மிகவும் தயக்கம் காட்டினார். உடன் நடித்த நடிகர்களும் நிர்வாணமாக நடிக்க இவருக்கு கொஞ்சம் சகஜமாகியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets and Shocking Things Happened Behind the Love Making Scenes in Hollywood Movies and Web Series

Celebrities Reveals the Secrets and Shocking Things Happened Behind the Love Making Scenes in Hollywood Movies and Web Series
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more