For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட்டைப் படங்களில் கவர்ச்சி போஸ் அளிக்கும் பெண்கள் கூறும் உண்மைகள் - # Secret Confession

அட்டைப் படங்களில் கவர்ச்சி போஸ் அளிக்கும் பெண்கள் கூறும் உண்மைகள் - # Secret Confession

By Staff
|

மாடலிங் என்றால் ப்ளேபாய் நாளேடுகளில் கவர்ச்சியாக தோன்றுவதோ... ரேம்ப்வாக் செய்வதோ மட்டுமல்ல... நாம் சாதாரணமாக டிவிகளில் காணும் நைட்டி விளம்பரத்தில் இருந்து நகை, மிளாகாய், மசாலா தூள் விளம்பரங்கள், வார இதழ், மாத இதழ், புத்தகங்கள், நாவல்களின் அட்டைப்படங்களில் போஸ் கொடுப்பது வரை அனைத்துமே மாடலிங் தான்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற, தங்களுக்கு போதுமான மாடலிங் செக்டார்களில் தங்களை ஒரு வட்டமிட்டு அதற்குள் பொருத்திக் கொள்கிறார்கள். நீங்கள் ஒருவேளை நிறைய ஆங்கில கதை / நாவல் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருப்பவராக இருந்தால், அந்த புத்தகங்களின் அட்டைப் படங்களில் தோன்றும் ஆண், பெண் மாடல்களை கொஞ்சம் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

டோன்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர் (don't judge a book by its cover) என்பார்கள். ஆனால், புத்தகங்கள் மீதான முதல் ஈர்ப்பை ஏற்படுத்துவதே அந்த புகைப்படமும், அதன் பெயரும் தான். அப்படியான ஆங்கில காதல் நாவல்களின் அட்டைப்படதிற்கு மாடலாக போஸ் கொடுக்கும் பெண்கள் தங்கள் அனுபவம் மற்றும் துறை சார்ந்தவற்றை குறித்து பகிர்ந்துள்ள உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடன் பணிப்புரியும் ஆண்கள்!

உடன் பணிப்புரியும் ஆண்கள்!

ஆங்கில காதல் நாவல்களின் அட்டைப்படங்களில் போஸ் கொடுக்கும் ஆண்கள் மிகவும் ஹாட்டான்வர்கள். சிக்ஸ் பேக் பாடி, சில்கி ஹேர், சிரித்தால் கண்ணத்தில் குழி விழுகும் அழகு என்று ஹேண்ட்ஸ்மாக இருப்பார்கள்.

ஆனால், அதே சமயத்தில் அவர்கள் துறை சார்ந்த மதிப்பும், உடன் பணிபுரியும் பெண்கள் மீது தக்க மரியாதையும் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் பணிபுரிவது ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது.

மகிழ்ச்சியாக என் வேலையை செய்து வருகிறேன். வேலையை தாண்டி, நான் இதுவரை உடன் பணிபுரியும் ஒரு ஆணுடன் கூட டேட் சென்றதில்லை.

அலங்கோலம்!

அலங்கோலம்!

கால் சீட் பிரச்சனை, புரொடக்ஷன் பிரச்சனை இல்லை என்றாலும்... உடல் நிலை என ஒன்றிருக்கிறது. இது தான் பெரும் பிரச்சனை. சில சமயத்தில் போட்டோஷூட் செல்லும் போது, நமக்கோ அல்லது நம்முடன் பணிபுரியும் ஆண் மாடலுக்கோ சளி பிரச்சனை இருந்துவிட்டது என்றால்... அந்த சமயத்தில் ரொமாண்டிக் போஸ் கொடுப்பது என்பது மிகவும் கவலைக்கிடமான விஷயம்.

என்ன தான் கண்ட்ரோல் செய்துக் கொண்டாலும், ஒருவரை ஒருவர் முகத்திற்கு நேராக நெருங்கும் போது ஒரு அசௌகரியம் உண்டாகுமே, அதை தவிர்க்கவே முடியாது.

நுணுக்கங்கள்!

நுணுக்கங்கள்!

ஆங்கில காதல் நாவல்களுக்கு மாடலாக போஸ் கொடுப்பது எளிதென கருதுகிறார்கள். ஏதோ சென்றோம், மேக்கப், ட்ரெஸ் செய்தோம், போஸ் கொடுத்தோம் என்பதல்ல அந்த காரியம். உடை எப்படி இருக்க வேண்டும், லைட்டிங், ஆண், பெண் எப்படியான போஸில் நிற்க வேண்டும், கை எங்கே இருக்க வேண்டும், கண்களில் வெளிப்படும் அந்த உணர்ச்சி என பெரும்பாலான விஷயங்கள் நுணுக்கமாக காணப்படும்.

பர்பெக்டான ஷாட் வரும் வரை அதே போசை கச்சிதமான உணர்ச்சி வெளிப்படும் வரை எடுத்து கொண்டே தான் இருப்பார்கள்.

கெமிஸ்ட்ரி!

கெமிஸ்ட்ரி!

உடன் பணிபுரியும் நடிகருடனான உடல் ரீதியான நெருக்கம் மிகவும் அவசியம். இந்த போட்டோஷூட்டில் பெரிதும் பக்கபலமாக இருக்க கூடியது அது தான். எழுத்தாளரின் கோணம், ஆர்ட் டைரக்டர், இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் போட்டோகிராபர் என பலரது வியூகங்கள் கலந்த, அவர்களுக்கு எல்லாம் ஒத்துப் போவது போல, ஓகே சொல்லும்படியாக ஒரு போஸ் அமைய வேண்டும் என்றால், இந்த கெமிஸ்ட்ரி மிகவும் அவசியம். இந்த கெமிஸ்ட்ரி சீர்குலையாமல் இருந்தால் பெரும்பாலும் சீக்கிரம் வேலையை முடித்துவிடலாம்.

ஒரு மணி நேரம்!

ஒரு மணி நேரம்!

ஒரு நாவலுக்கு.. அதன் கதை மற்றும் ஆசிரியர் விரும்புவது போன்ற செட் அமைப்பதற்கு ஒருசில நாட்கள் ஆகும். இப்போதெல்லாம் அதை கிராபிக்ஸில் கூட அமைத்துக் கொள்கிறார்கள். அதற்கான பிரத்தியேக ஆடை ஃபேஷன் டிசைனர் தயார்ப்படுத்திக் கொடுக்க சில காலம் எடுத்துக் கொள்வார்.

எங்களுக்கான மேக்கப் மற்றும் உடை அலங்காரம் செய்ய கூட ஒருசில மணி நேரம் ஆகும். புகைப்படம் எடுக்க பெரும்பாலும் ஒரு மணி நேரம் தான் ஆகும். ஆனால், நான் பங்குபெற்ற பெரும்பாலான இந்த கவர் போட்டோ போட்டோஷூட்கள் பாதி நாளுக்கும் மேலான நேரத்தை பிடித்துள்ளது.

உண்மையான உணர்வு!

உண்மையான உணர்வு!

ஒரு நாவலின் கவர் போட்டோ என்பது அந்த கதையின் வெளிபாடு என்பதை தாண்டி, அதன் வர்த்தகத்தையும் சார்ந்திருக்கிறது. இதுவே ஒரு திரைப்படமாக இருந்தால், இந்த படம் சரியாக இல்லை என்றால், வேறு புகைப்படம் வைத்து ப்ரோமோஷன் செய்துக் கொள்ளலாம்.

ஆனால், நாவல்களின் அட்டைப்படம் என்பது வாழ்நாள் முழுக்க அது ஒன்று தான். பிரமோஷன், புத்தகம், வாசகர்கள் கையிலும், வீட்டிலும் என எங்கே இருந்தாலும் அந்த ஒற்றப்படம் தான் அந்த புத்தகத்தை பற்றி பேச போகிறது. எனவே, அந்த நாவலுக்கு ஏற்ற சரியான, உண்மையான உணர்வு அந்த கவர் போட்டோவில் வெளிப்பட வேண்டும்.

எழுத்தாளர்கள்!

எழுத்தாளர்கள்!

எழுத்தாளர்கள் தான் தங்கள் நாவலுக்கான அட்டைப்படத்தை கடைசியாக தேர்வு செய்ய போகிறார்கள். ஆர்ட் டைரக்டர், போட்டோகிராபர் என எல்லாரிடமும் ஒரு ஐடியா வெளிப்பட்டாலும், அதை எடுத்துக் கொள்ளலாமா, விட்டுவிடலாமா என்பது எழுத்தாளரின் முடிவில் தான் இருக்கிறது.

அதே போல, இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் மாடல்களுடன் எழுத்தாளர் நிறைய உரையாடுவார். அந்த கதாப்பாத்திரம் எப்படியானது, அதன் கண் எப்படி இருக்கும், உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நிறைய இன்புட் தருவார்கள். அதெல்லாம் கேமரா முன்பு வெளிப்பட வேண்டும்.

பர்ஃபெக்ட் பிக்சர்!

பர்ஃபெக்ட் பிக்சர்!

நான் இதுநாள் வரை பணியாற்றிய புகைப்படக் கலைஞர்கள் எல்லாம் மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் சில யோசனைகள் மட்டும் கூறிவிட்டு, எப்படியான போஸ் அளிக்க வேண்டும் என்பதை கூறி நகர்ந்துவிடுவார்கள்.

இதில் எனக்கு சுதந்திரம் கிடைக்கும். அந்த நாவலுக்கான உணர்ச்சியை நானாக வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். புகைப்பட கலைஞர்களிடம் இருந்து முகத்தின் தோற்றம், நிலை, கால்களை எவ்வளவு உயர்த்த வேண்டும், எந்த கோணத்தில் பார்க்க வேண்டும் என்ற குறிப்புகள் மட்டுமே வழங்கப்படும்.

அந்த பர்பெக்ட் பிக்சர் சில முறை முதலாவதாக எடுத்த படத்திலேயே கிடைத்துவிடலாம். ஆயினும், பல கோணங்களில் எடுத்து.. கலந்தாய்வு செய்த பிறகே... எது பர்பெக்ட் என்று தேர்வு செய்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confession: Romance Novel Cover Girl Talks About Her Work!

Modeling has so many different categories. In that, posing for romantic novels is one among them. Here, models who working in romantic novel cover photo's confesses some unknown things about their field.
Story first published: Monday, July 23, 2018, 14:59 [IST]
Desktop Bottom Promotion