For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைக்கேறிய போதையில், மன்னிக்க முடியாத தவறுகளை செய்த நபர்கள்!

By Staff
|

ஸ்மோகிங் கில்ஸ், டிரிங்கிங் இஸ் இன்ஜியூரியஸ் டூ ஹெல்த்.... இத எத்தன தடவ படத்துல போட்டாலும், ரஜினி, விஜய், அஜித், விக்ரம்ன்னு யாரு வந்து சொன்னாலும் இங்க யாரும் கேட்க போறது இல்ல. எல்லாம் அவங்களுக்கே புரிஞ்சு, அடிப்பட்டு விட்டா தான் உண்டு.

புகைக்கிறவங்க குடி தான் கெட்டதுன்னு சொல்வாங்க... குடிக்கிறவங்க ஸ்மோகிங் தான் கெடுதல்ன்னு சொல்லுவாங்க. ஒட்டு மொத்தமா ரெண்டுமே கெட்டது தான். ஆனால், ஸ்மோக் பண்ணா கூட வாய் துர்நாற்றத்தோடா முடிஞ்சிடும்.

Secret Confession: Regrettable Things People Did While Blackout Drunk

ஆனா, குடிச்சுட்ட நம்ம வாயி சும்மா இருக்காது. கண்டத பேசி, வம்பிழுக்கும், சண்டை போடும், தேவையே இல்லாதத எல்லாம் பேசும்.

அப்படி தலைக்கேறிய போதையில வேண்டாதத செஞ்சு செம்மையா மாட்டுன சிலரோட ஒப்புதல் வாக்கு மூலங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அன்னிக்கி ஒரு ஹவுஸ் பார்ட்டி... எல்லாரும் குடிச்சுட்டு இருந்தோம்... சிலர் மட்டும் கிளம்பிட்டாங்க.. தூரமா போக வேண்டிய ஃபிரெண்ட்ஸ் மட்டும் அங்கங்க படுத்துட்டாங்க. எத்தனை மணிக்கி நாங்க குடிச்சு முடிச்சோம்.. எப்போ எங்களுக்கு போதையாச்சுன்னு யாருக்குமே தெரியாது. நான் கொஞ்சம் தெளிவா இருந்ததா தான் நெனச்சேன். பாத்ரூம் போயிட்டு யூரின் பாஸ் பண்ணிட்டு, பெட்ரூம்ல போய் படுத்துட்டேன். மறுநாள் மதியம் தன் தெரிஞ்சுது.. நான் யூரின் பாஸ் பண்ணது பெட்ரூம்ல, படுத்து தூங்குவனது பாத்ரூம்லன்னு.

#2

#2

என்னால மறக்க முடியாத பார்ட்டி அது. ஒரு நிமிஷம் லேட்டாயிருந்தாலும்... எனக்கு பிடிக்காத விஷயம் ஒன்னு வாழ்க்கையில நடந்திருக்கும்.

எனக்கு டாட்டூனா சுத்தமா பிடிக்காது. ஆனா, அன்னைக்கி போதையில குடிச்சுட்டு ஒரு டாட்டூ கடையில போய் உட்கார்ந்து ரகளை பண்ணி டாட்டூ போடா சொல்லிருக்கேன்.

நல்ல வேலையா நான் போதையில இருந்தனால அவங்க டாட்டூ போடல. இல்லன்னா அவ்வளவு தான்.

#3

#3

எவ்வளோ போதையா இருந்தாலும், நான் சரியா போய் பெட்ல படுத்துட்டேன். அதுல எந்த தப்பும் பண்ணல. ஆனா, தூங்கி எழுந்த போது தான் பெட்லையே போகக் கூடாதத போயிட்டேன்னு கண்டுபிடிச்சேன். பின்ன பெட்ஷீட் எடுத்துட்டு போய் வாஷிங் மெஷின்ல போட்டுட்டு திரும்ப படுத்துட்டேன். அதுக்கப்பறம் தான் இன்னொன்னும் கண்டுபிடிச்சேன். நான் முதல்ல தூங்கி எழுந்தப்ப போதையே தெளியலன்னு. ஆமா! வாஷிங் மெஷின்ல துவைக்க போடுறதாநெனச்சு.. டாய்லெட்ல போய் பெட்ஷீட்ட போட்டுட்டு வந்துட்டேன்.

#4

#4

எல்லாருக்கும் நல்ல ஹைக் கெடச்சதுக்கான பார்ட்டி அது. எல்லாருமே ஈவன் ஷேர் போட்டு தான் பார்ட்டி ரெடி பண்ணோம். எல்லாரும் குடிச்சுட்டு கிளம்பிட்டாங்க. நான் மட்டும் குளிச்சுட்டு போய் படுக்கலாம்ன்னு நெனச்சு... குளிக்க போனேன். பாத்டப்ல படுத்தவன் அப்படியே படுத்து தூங்கிட்டேன். எழுந்து பார்த்தா சரியா மூக்கு வரைக்கும் தண்ணி. கொஞ்சம் விட்டிருந்தாலும் பரலோகம் தான்.

#5

#5

ரொம்ப நாளா எனக்கு ஒரு பொண்ணு மேல க்ரஷ் இருந்துச்சு. ஆனா, அவக்கிட்ட எப்படி அத சொல்றதுன்னு தெரியல. அன்னிக்கி பார்ட்டி முடிஞ்சு செம்ம போதையில இருந்த நான்... ஏதோ நியாபகத்துல அவளுக்கு மெசேஜ் பண்ணியிருந்தேன். அது எனக்கு மறுநாள் காலையில எழுந்து மெசேஜ் பார்த்தப்ப தான் தெரிஞ்சுது. எப்படியோ... பேசினதுல அந்த பொண்ணு டேட் பண்ணி பார்க்கலாம்ன்னு ஒத்துக்கிட்டா... அது வரைக்கும் ஹேப்பி!

#6

#6

அப்போ நானும் என் ஃப்ரெண்ட்ஸ்ம் வெளிநாடு ட்ரிப் போயிருந்தோம். அது ஒரு செம்ம ஏரியா ஒரு ப்ரைவேட் பீச்... நைட் நடுவுல தீ பத்தவெச்சு குளிர் காஞ்சுட்டே நிறைய விஷயம் பேசிக்கிட்டு இருந்தோம்.

எங்க போனாலும் சேப்டிக்கு பாஸ்போர்ட், விசா எல்லாவுமே கூடவே பேக்ல எடுத்துட்டு போயிட்டு இருந்தோம். அன்னிக்கி போதையில எங்க ரிட்டர்ன் டிக்கெட்ட பிரெண்ட் கொளுத்திட்டான். நல்ல வெளியா பயபக்கி பாஸ்போர்ட்ட கொளுத்தல. இல்லன்னா எங்க கதி அதோகதி ஆகியிருக்கும்.

#7

#7

பப் போறது எனக்கு ஒன்னும் புதுசு இல்ல. ஆனா, அன்னிக்கி நான் நடந்துக்கிட்ட முறை ரொம்பவே அதிர்ச்சியா இருந்துச்சுன்னு ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்க. ஒரு கட்டத்துல பப் மூடுனதுக்கு அப்பறமும் கூட நான் ரோடு முழுக்க ஆடிக்கிட்டே வந்தேன், என்ன கட்டுப்படுத்தவே முடியலன்னு சொன்னாங்க... எக்சுவலா போதை தெளிஞ்ச பின்ன அடிச்சு தொவைச்சாங்க.

#8

#8

ஒரு ஃபிரெண்ட்டோட பார்ட்டி அது. வெளியூர்ல கல்யாணம். பார்ட்டி முடிஞ்சு ஹோட்டலுக்கு போயிட்டு காலையில கல்யாணத்துக்கு போறதுதான் பிளான். எல்லாருக்கும் முன்னாடி எனக்கு கொஞ்சம் போதையான மாதிரி இருக்கு. அதனால நான் இப்பவே ஹோட்டலுக்கு போறேன்னு கிளம்பிட்டேன்.

ஆனா, நான் போனது வேற ஒரு ஹோட்டல். மறுநாள் எழுந்து பார்த்தா பாக்கெட்டுல இருந்த பணம் எதுவுமே இல்ல. புண்ணியவான் நூறு ரூபா மட்டும் விட்டு வெச்சிருந்தாங்க. அப்பறம் ஃபிரெண்ட்ஸ்க்கு கால் பண்ணி வரவெச்சு கிளம்பி போனேன்.

#9

#9

நாங்க ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ். எந்த அளவுக்கு க்ளோஸ்னா எங்களுக்குள்ள எந்த ஒரு இரகசியமும் இதுவரைக்கும் நிலைச்சு இருந்ததே இல்ல. சொல்லாதீங்கன்னு சொன்னா தான் ஊரு முழுக்க சொல்லுவாங்க.

அன்னிக்கி ஆபீஸ் பிரெண்ட்ஸ் மட்டும் தான் தனியா பார்ட்டி வெச்சிருந்தோம். அதுல பொண்ணுகளும் கலந்துக்கிட்டாங்க. அதுல ஒரு பொண்ண நான் ரொம்ப நாளா ப்ரபோஸ் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தேன். மறுநாள் காலையில போதை தெளிஞ்சு எழுந்த போது... டேய்.. நீ நேத்து அந்த பொண்ண போதையில கிஸ் பண்ணிட்ட அவ உண்ண அறைஞ்சுட்டு கிளம்பி போயிட்டான்னு சொன்னானுங்க.

ஒரு பக்கம் இருக்காதுங்கிற நம்பிக்கை.. மறுபக்கம் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்ன்னு சந்தேகம். மத்த பொண்ணுகளுக்கு கால் பண்ணி கேட்டா.. எல்லாரும் அதே தான் சொன்னாங்க. அந்த குறிப்பிட்ட பொண்ணு நான் கால் பண்ணா எடுக்கவே இல்ல.

ரொம்ப பயந்து போயிருந்தேன். நைட்டு வரைக்கும் வெச்சு செஞ்சுட்டானுங்க. அதுக்கப்பறம் தான் எல்லாமே நாடகம்னு தெரிஞ்சுது.

#10

#10

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் போதையாச்சுன்னா எல்லாரும் கண்டத பேசுவாங்க... சிலர் அழுவாங்க.. சிலர் சண்டை போடுவாங்க. ஆனா, நான் சிரிப்பேன்.

அதுவும் அன்னிக்கி என் மேனேஜர் கொடுத்த பார்ட்டி அது... அவர பார்த்து, பார்த்து சிரிச்சு... அவரையே கேலி, கிண்டல் பண்ணி அவர நோகடிசுட்டேன்.

நான் நோகடிச்சத விட என் ஃபிரெண்ட்ஸ் அவரு எதிருல வரும் போதெல்லாம் அதை நியாபகப்படுத்து நோகடிக்கிறது தான் கொடுமையே. இவனுங்க சிரிச்சுட்டு போயிடுவானுங்க. ஹைக்ல அவரு கை வெச்சுட்டா என்ன பண்றது....?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confession: Regrettable Things People Did While Blackout Drunk

When you reach that level of drunkenness, your judgment gets affected along with your memory. So you may do things that are shockingly out of character, as these 19 people realized. Read on to learn their shocking stories about being blackout drunk.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more