Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
எம்ப்ளாயி அளித்த மட்டமான புகார்கள் குறித்து எச்.ஆர்-கள் கூறும் உண்மைகள்!
எம்ப்ளாயி அளித்த மட்டமான புகார்கள் குறித்து எச்.ஆர்-கள் கூறும் உண்மைகள்!
ஆபீஸ்ல... நாம எச்.ஆர மீட் பண்ணாலோ, இல்ல நம்மள எச்.ஆர் மீட் பண்ணாலோ அதுக்கு ரெண்டே ரெண்டு காரணம் தான் இருக்க முடியும்.. ஒன்னு கம்ப்ளைன்ட்டா இருக்கனும், இல்ல காம்ப்ளிமெண்டா இருக்கணும். இல்லாங்காட்டி அவங்க கூட நமக்கு என்ன பேச்சு வார்த்தை இருக்கு.
எச்.ஆர் நமக்கு க்ளோஸ் பிரெண்டா இருந்தா... அதவிட அந்த ஆபீஸ்ல வேற கொடுத்து வெச்ச விஷயம் ஏதும் இருக்க முடியாது. லீவ் அப்ளை பண்றதுல இருந்து ஐ.டி ஃபைல் பண்ற வரைக்கும் டெட்லைன் கடந்து போனாலும்... நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

என்ன தான் நாலஞ்சு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்க எம்ப்ளாயியா இருந்தாலும்.. சிலர் ஸ்கூல் பசங்க மாதிரி தான் பிஹேவ் பண்ணுவாங்க. சும்மா, சும்மா தொட்டது தொண்ணூறுக்கும் ஹெட் மாஸ்டர் / கிளாஸ் டீச்சர் கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்றது மாதிரி இவங்க.. எச்.ஆர்க்கு மெயில் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.
இதுல... தங்களாலேயே பொறுத்துக்க முடியாத சில மட்டரகமான புகார்கள் சிலவற்றை இணையங்களில் அள்ளி தெளித்துள்ளனர் எச்.ஆர் நிர்வாகிகள்.. அதில் சல்லித்து எடுத்த சிலவன குறித்து இங்கே காணலாம்... வாங்க...

நிஜமாவா?
#1 ஜூலியன் ரொம்ப ஹார்ட் வர்க் பண்றாங்க...
#2 என் வேலைய ஜெப், என்னைவிட நல்லா பண்றான்... இது எனக்கு சுத்தமா பிடிக்கல, அவன அவன் வேலைய பார்க்க சொல்லுங்க..
#3 ஆண் சைட் கிளைன்ட் என்ன லவ் பண்றாங்கன்னு நினைக்கிறேன், என்ன பண்றது...

சாப்பாட்டு பிரச்சனை!
#4 நான் வாங்கிட்டு வந்த ஹோம் மேட் குக்கீஸ என்கிட்டே கேட்காமலேயே எடுத்து சாப்பிட்டுட்டாங்க...
#5 என் டெஸ்க்ல வெச்சிருந்த மீல்ஸ் காணோம்.. யார் எடுத்தாங்கன்னு கண்டுபிடிச்சே ஆகணும்... மொதல்ல சிசிடிவி பார்த்து, அது யாருன்னு கண்டிபிடிச்சு சொல்லுங்க...
#6 எனக்கு என்னமோ... அவன் எனக்கு விஷம் வெச்சு கொன்றுவானோன்னு பயமா இருக்கு...

டீம்!
#7 என்னால அவன் பக்கத்துல உட்கார்ந்து வேலை பார்க்க முடியாது.. அவன் மேல எப்பவுமே கவுச்சி வாசம் அடிக்குது...
#8 அவன் என் ஃபிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் கூட அக்ஸப்ட் பண்ண மாட்டேங்குறான்... அவன் கூட எல்லாம் ஒரே டீம்ல வர்க் பண்ண முடியாது...
#9 என் வாழ்க்கையிலேயே நான் பார்த்த ரொம்ப போரடிக்கிற, சோம்பேறியான கேரக்டர் அவ தான்... அவ கூட எல்லாம் ஒரே டீம்ல இருக்க முடியாது... இது என்னோட டெய்லி வர்க் மூட கெடுக்குது...

வினோதம்!
#10 எனக்கு என்னமோ அவன பார்த்தா... தப்பான தொழில் பண்றவன் மாதிரி தோணுது...
#11 அந்த பெண்ணோட எண்ணங்கள், கருத்துக்கள் சரி இல்லை
#12 அவன் தேவை இல்லாமா... சும்மா.. சும்மா.. டெக்ஸ்ல ஸ்க்ராட்ச் சவுண்ட் உண்டாக்கிட்டே இருக்கான்.. இது அசௌகரியமா இருக்கு..
#13 அவன் என் பக்கத்துல இருக்குறதுனால தான், என்னால பிரோடக்டிவா வர்க் பண்ண முடியல...
#14 அந்த பொண்ணு எப்ப பார்த்தாலும் பூனைகள பத்தியே பேசிட்டு இருக்கு.. ஆபீஸ் பில்டிங் சுத்தி இருக்க பூனை எல்லாம் தூக்கி வெச்சு கொஞ்சிட்டு... அப்படியே உள்ள அவர.. இது அருவருப்பா இருக்கு...

சுத்தபத்தம்!
#15 அவனோட ஸ்கின் ரொம்ப Tan-னாகி இருக்கு...
#16 அவன் பக்கத்துலயே போக முடியல.. ரொம்ப நாத்தம் அடிக்குது...
#17 ரொம்ப சத்தமா மூச்சு விடுறான்... இது ரொம்ப டிஸ்டர்ப்பிங்கா இருக்கு...
#18 அந்த பொண்ணு சும்மா... சும்மா தலைய சொறிஞ்சுகிட்டே இருக்கு... என் டெஸ்க் முழுக்க அவ முடியா தான் இருக்கு...



Click it and Unblock the Notifications
