Just In
- 11 hrs ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 14 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 14 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 16 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News
நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு
- Automobiles
2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...
- Movies
இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்!
- Finance
எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..!
- Technology
ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க பிறந்த நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்...
பொதுவாக நாம் பிறந்த ராசியை வைத்து பலன்களைப் பார்ப்போம். ஆனால் ஜோதிடம் கணிப்பவர்களைப் பொருத்தவரையில், நாம் பிறந்த நட்சத்திரம் மற்றும் நேரத்தின் அடிப்படையில் தான் கணித்துச் சொல்வார்கள்.
ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் என்று சில குணாதிசயங்கள் உண்டு. அதன்படி தான் அந்த நட்சத்தில் இருப்பவர்களும் இருப்பார்கள் என்று சொல்வார்கள். அப்படி நீங்கள் பிற்நத நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களுடைய எதிர்கால வாழ்க்கைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வந்தராகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள். எந்த வகையான விவாதமாக இருந்தாலும் அதை மிகச்சிறப்பாக செய்து வெற்றி பெறுவார்கள். எப்போதும் ஆடம்பரத்தை விரும்புபவராக இருப்பார்கள். அதேசமயம் ஆன்மீகம், இறைவழிபாட்டிலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். கல்வியிலும் சிறந்து விளங்கி எப்போதும் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் இடத்தில் இருப்பீர்கள்.
MOST READ: இந்த ராசிக்காரர் இன்னைக்கு கேட்கிற இடமெல்லாம் பணம் கிடைக்குமாம்... கேட்டு பாருங்களேன்

பரணி
எப்போதும் எல்லோரிடமும் நன்றியோடு நடந்து கொள்பவராக இருப்பார்கள். திறமைசாலியாக இருப்பார்கள். தர்மம் செய்வதை பெருமையாக நினைத்து செய்து கொண்டிருப்பவர்கள். எதிரிகளை எப்போதும் வெல்லக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பவராக இருப்பார்கள். பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அது நிச்சயம் உண்மை தான். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். கொஞ்சம் வசதி, வாய்ப்புடன் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.

கார்த்திகை
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களை விடவும் பக்திமானாகவும் மென்மையானவராகவும் இருப்பார்கள். எவ்வளவு செல்வந்தராக இருப்பாரோ அந்த அளவுக்கு கல்வியில் உயர்வு இல்லை. கல்வியில் கொஞ்சம் சுமார் ரகம் தான். எல்லோரிடமும் கொஞ்சம் குணமாகப் பழகும் பண்பாளராகத் திகழ்வார்கள். வாழ்க்கையையும் அதன் போக்கையும் புரிந்து கொண்டு நடப்பவர்களாக இருப்பார்கள்.

ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் கம்பீரமானவராக இருப்பார்கள். மிகப்பெரிய கலாரசிகராக இருக்கும் இவர்கள் எப்போதும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்க விரும்புவார்கள். இவர்கள் வசீகரம் மிக்கவர்களாக இருப்பதால் எப்போதும் மற்றவர்களிடம் பெரும் செல்வாக்கு உடையவர்களாகவே இருப்பார்கள்.
MOST READ: இந்த ராசிக்காரருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்... கவனமாக இருக்க வேண்டிய ராசி எது?

மிருக சிரீசம்
மிருக சிரீட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் தைரியசாலிகளாக இருப்பார்கள். கொஞ்சம் முன்கோபம் அதிகமாக இருக்கும். ஆனாலும் எல்லோருக்கும் உதவக் கூடிய மனம் படைத்தவராக இருப்பார்கள். புத்திசாலித்தனமும் திறமையும் ஒருங்கே கொண்டவராக இருப்பவர்கள் தான் மிருக சிரீட நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். செல்வத்தைத் தேடித் தேடித் சேர்ப்பதில் திறமை மிக்கவராக இருப்பார்கள்.

திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளவர்கள் மிகவும் எளிமையானவராக இருப்பார்கள். எதையும் திறம்பட நிர்வகிக்கும் சாமர்த்தியசாலியாக இருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும் அதை முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்தக் கூடியவராக இருப்பார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்கின்ற அளவிற்கு அறிவுத் தெளிவும் மற்றவர்களுடைய நம்பிக்கையையும் பெறுபவர்களாக இருப்பார்கள்.

புனர்பூசம்
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும் கல்விமானாக இருப்பார்கள். சாதுர்யமாகப் பேசும் திறமை கொண்டவராக இருப்பார்கள். ஊர் சுற்றுவதில் இவர்களுக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். நன்றி குணங்கள் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

பூச நட்சத்திரம்
அடுத்தவர்களை மதிக்கக்கூடிய குணம் கொண்டவராக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதையும் தன் போக்கில் செய்து சிறந்த பெயர் எடுக்க வேண்டுமென்ற வைராக்கியம் இவருக்கு நிறைய உண்டு. நட்பை மதித்து நண்பர்களை நேசிக்கக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு புகழ் பெருகிக் கொண்டே போகும். எதையும் மென்மையாகக் கையாளக்கூடியவர்களாக இருப்பார்கள்.

ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும் செல்வந்தராக ஆவதற்கான வாய்ப்புகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தர்மம் செய்வதில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பதால் பெரிய செலவாளியாகவும் இருப்பார்கள். ஆடம்பரத்தை விரும்பக்கூடியவராகவும் அதே சமயம் நேர்மையான சத்தியம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

மகம் நட்சத்திரம்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையுமே ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வியில் புதிதாக கற்றுக் கொள்ளும் தாகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு தர்மம் செய்வார்கள். பழகுவதில் இனிமையும் எதிலும் நேர்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பூரம் நட்சத்திரம்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். புத்திசாலிகளாக இருக்கும் இவர்கள் விவசாயம் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய உண்மைத் தன்மையால் செல்கின்ற இடமெல்லாம் செல்வாக்கு நிறைந்தவர்களாகவும் பேச்சுத் திநமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

உத்திரம் நட்சத்திரம்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் நணயமானவர்களாக இருப்பார்கள். பக்திமானாக இருக்கும் இவர்கள் எல்லோரிடமும் நட்புடன் பழகக்கூடியவர்களாக இருப்பார்கள். நன்றியை மறக்காத இவர்கள் சுகபோகியாகவும் இருப்பார்கள். உறவினர்களை நேசிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
MOST READ: உங்க மூக்கு புடைப்பா இருக்கா? சிக்குனு கூர்மையாக்க டூத்பேஸ்ட் மட்டுமே போதும்...

அஸ்த நட்சத்திரம்
ஆடை, ஆபரணங்கள் விதவிதமாக அணிவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வியிலும் கலைத்துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதையும் ரசனையோடு பார்க்கக்கூடியவர்களாக இருப்பார்கள். நகைச்சுவை ஆற்றல் மிக்கவர்களான இவர்கள் பெற்றோர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பழகுவதற்கு மிகவும் இனிமையானவராக இருப்பார்கள்.

சித்திரை நட்சத்திரம்
ஊர் சுற்றுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள். கல்விமானாக இருக்கும் இவர்கள் மிகவும் தைரியசாலியாகவும் இருப்பார்கள். எதிரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது கருணையைப் பொழியக்கூடியவராக இருப்பார்கள். தன்னுடைய செயல்கள் அனைத்தையும் சாதனையாக மாற்றக் கூடியவர்களாகவும் பரந்த உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

சுவாதி நட்சத்திரம்
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மையாக இருப்பார்கள். எந்த காரியமாக இருந்தாலும் அதில் யோசித்து செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். சுகபோகியான இவர்கள் பழகுவதற்கு இனிமையானவராக இருப்பார்கள். நம்பகத் தன்மை மிக்கவரான இருப்பவர்களான இவர்கள், தான் கை வைக்கும் எல்லா காரியங்களிலும் யோகம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

விசாக நட்சத்திரம்
வியாபாரங்களில் ஆர்வமும் சாமர்த்தியமும் மிக்கவர்களாக இருப்பார்கள். கலையை ரசிக்கக் கூடியவர்களாகவும் தர்மம செய்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சுறுசுறுப்பானவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தற்பெருமை பேசக் கூடியவர்களாக இருப்பார்கள்.
MOST READ: வித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்... யார் யார்னு தெரியுமா?

அனுஷம்
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மையானவர்களாகவும் அந்தஸ்து மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அமைதியான இவர்கள் அரசாங்கத் தரப்பிடம் பாராட்டுக்களையும் ஆதரவையும் பெறுபவர்களாக இருப்பார்கள்.

கேட்டை நட்சத்திரம்
எதிலும் துணிச்சலாகச் செயல்படக் கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். குறும்பு செய்வதில் வல்லவரான இவர்கள் முன் கோபம் கொள்வதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். நண்பர்கள் இவர்களுக்கு உறுப்படியாகவே செட் ஆக மாட்டார்கள். சாமர்த்தியசாலியாக இருப்பார்கள். உடல் நலம், ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் அக்கறையுடன் இருந்து கொள்வது நல்லது.

மூல நட்சத்திரம்
மூல நட்சத்திரத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் சுறுசுறுப்பானவர்கள் தான். கல்வியாளர்களான இவர்கள் உடல் பலம் மிக்கவர்களாக இருப்பார்கள். நீதிக்குப் பேர் போன இவர்கள் அடக்கம் மிக்கவர்களாகவும் அதேசமயம் புகழை விரும்பக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

பூராடம்
சுக போகியாக வாழக்கூடிய கொடுப்பினை கொண்டவர்கள் தான் இந்த பூராட நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிகக்கவர்களாகவும் அதேசமயம் அதிக பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வாக்குவாதம் செய்வதில் வல்லவர்களாக இருக்கும் இவர்கள் கடமையைச் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உத்திராடம்
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியசாலிகளாகவும் கலையில் ஆர்வம் கொண்டவர்களாகவும் அதேசமயம் பொறுமைசாலியாகவும் இருப்பார்கள். நினைத்ததை சாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். சாதுர்யமாகப் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

திருவோணம்
பக்தி அதிகம் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். சொத்து, சுகம், ஆஸ்திகள் கொண்டு வாழ்பவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவுவதிலும் மற்றவர்களை மதிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவிட்டம்
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் கம்பீரமாக இருக்கக்கூடியவர்குளாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்கவர்களாகவும் தைரியசாலியாகவும் இருப்பார்கள். மூக்குக்கு மேல் முன்கோபம் பொத்துக் கொண்டு வரும் இவர்களுக்கு. தங்களுடைய துணையை சமமாக மதிக்கக்கூடியவர்கள். கடைமையில் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள்.

சதயம்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தோற்றத்தில் வசீகரமானவர்களாகவும் செல்வம் நிறைந்தவர்களாகவம் இருப்பார்கள். நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்பார்கள். பொறுமைசாலியான இவர்கள் முன்யோசனை கொண்டவர்களாக இருப்பார்கள். திறமையாகச் செயல்படக் கூடியவர்கள். ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

பூரட்டாதி
பூரட்டாதியில் பிறந்தவர்கள் மன திடம் மிக்கவர்களாகவும் பலசாலியாகவும் இருப்பார்கள். சுகபுாகியாகவும் அடுத்தவர்களுடன் பழகுவதற்கு இனிமையானவராகவும் இருப்பார்கள். தொழிலில் ஜெயிக்க வேண்டுமென்ற உத்வேகமும் ஆர்வமும் மிக்கவராக இருப்பார்கள். குடும்பத்தை நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
Most Read: வழுக்கை விழற மாதிரி இருக்கா? அப்போ இந்த எண்ணெய் தேய்ங்க...

உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிற்நத கல்வியாளர்களாக இருப்பார்கள். எதிலும் சாதுர்யமாகப் பேசும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆடை ஆபரணங்களை விரும்பிச் சேர்ப்பார்கள். பக்திமானாக திகழும் இவர்கள் கடமை தவறாதவர்களாக இருப்பார்கள்.

ரேவதி
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் தைரியசாலிகளாகவும் நேர்மையானவராகவும் இருப்பார்கள். எதிரியை வெல்லும் ஆற்றலை பிறப்பிலேயே கொண்டவர்கள். சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். தன்னை எப்போதும் யாராவது புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள்.