For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள் இவைதான்... இத சொன்னா எல்லாமே கிடைக்கும்...

மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். ஒரு மனிதரின் ஆழ் மனது வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி சிவ மந்திரத்திற்கு உண்டு.

|

இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் சிவபெருமான். அவர் இரக்கத்தின் சின்னமாக விளங்குகிறார். படைத்தல் காத்தல் அழித்தல் என்பதில் அழித்தல் தொழிலை ஏற்று இருப்பவர், சிவபெருமான்.

benefits of telling shiva mantras in tamil

ஆனால் இவரை எளிதில் மகிழ்விக்க முடியும். பயத்தைப் போக்க சிவ மந்திரங்களை படிக்கலாம். சிவ மந்திரத்தை உச்சரிப்பதால் நோய்களில் இருந்து விடுபட முடியும். பயம் மற்றும் கவலைகள் பறந்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவ மந்திரங்கள்

சிவ மந்திரங்கள்

இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். ஒரு மனிதரின் ஆழ் மனது வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி சிவ மந்திரத்திற்கு உண்டு. உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு. மனித வாழிவில் அன்றாடம் கடந்து வரும், மன அழுத்தம், சோர்வு, தோல்வி, புறக்கணிப்பு, மற்றும் இதர எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றைப் போக்க இந்த மத்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு தனி நபர், உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வாக விரக்தியாக ஆற்றல் இழந்து இருக்கும்போது சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். பிறந்த ஜாதகத்தி;ல் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி சிவ மந்திர ஜெபத்திற்கு உண்டு. சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தனி நன்மைகள் உண்டு. அவற்றைப் பற்றி இந்த பதவில் காணலாம்.

பஞ்சாக்ஷர சிவ ந்திரம்:

பஞ்சாக்ஷர சிவ ந்திரம்:

ஓம் நமசிவாய

சிவபெருமானை போற்றிவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப் பட்டது. "நான் சிவபெருமை வழிபடுகிறேன்" என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

ருத்ர மந்திரம் :

ருத்ர மந்திரம் :

ஓம் நமோ பகவதே ருத்ரே

இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது ஒரு விருப்பத்தின் நிறைவேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

சிவ காயத்ரி மந்திரம் :

சிவ காயத்ரி மந்திரம் :

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி

தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

இந்து மதத்தில், காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.

சிவா தியான மந்திரம்:

சிவா தியான மந்திரம்:

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா

ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்

விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ

ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.

மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:

மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கும்.

ஏகதசா ருத்ர மந்திரம்

ஏகதசா ருத்ர மந்திரம்

இது 11 மந்திரங்கள் அடங்கிய ஒரு ஜெபம் ஆகும். இறைவன் சிவ பெருமானை வெவ்வேறு வடிவங்களில் வழிபட இந்த மத்திரங்கள் பயன்படுகிறது. வருடத்தில் உள்ள மாதங்களைக் குறிக்கும் ஒரு மந்திரமாக இது விளங்குகிறது. நீங்கள் பிறந்த மாதத்திற்கான மந்திரத்தை நீங்கள் உச்சரிப்பதால் நல்ல பலனை பெறுவீர்கள். ஆனால் எல்லா 11 மந்திரங்களையும் சேர்த்தும் சொல்லலாம். சிவராத்திரி அன்று மகா ருத்ர யக்னம் நடைபெறும்போது இந்த பதினோரு மந்திரங்களையும் உச்சரிப்பது மிகுந்த பலனைத் தரும்.

கபாலி:

ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்

Kapali

"Om HumHum Satrustambhanaya Hum Hum Om Phat"

பிங்களா

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சர்வ மங்கலாய பின்கலாய ஓம் நமஹா

Pingala

"Om Shrim Hrim Shrim Sarva Mangalaya Pingalaya Om Namah"

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Powerful Shiva Mantra: Get success, job, wealth

hiva mantra is Sanskrit hymn showing glory of Lord Shiva and give invocation to them.
Story first published: Saturday, July 21, 2018, 17:01 [IST]
Desktop Bottom Promotion