For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீச்சல் குளத்திலிருந்து மக்களை வெளியேற்ற ஆசிட் ஊற்றிய ஹோட்டல் மேனேஜர்!

வெள்ளையர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் கருப்பர்களும் குதித்ததால் அவர்களை வெளியேற்ற அந்த தண்ணீரில் ஆசிட் கொட்டப்பட்டது.

|

பிறப்பால் ஒருவரை உயர்ந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும் கூறுவது முறையாகாது. இந்த உண்மையை உணர வைக்க மக்களுக்கு இதை எடுத்துச் சொல்ல எண்ணற்ற தலைவர்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். சிலரோ இறுதி வரையிலும் ஓர் போரட்ட வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள்.

இன்றைக்கு அந்த உண்மைகளை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் மக்கள் பல காரணங்களைச் சொல்லி அடிமைபடுத்தப்பட்டார்கள். அவற்றில் ஆங்கிலேயர்களுக்கு நிறத்தால் ஆன வேற்றுமை மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜூன் 11,1964 :

ஜூன் 11,1964 :

வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் இடையிலான போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. மார்டின் லூதர் கிங் ஜூனியரும் அந்த போராட்டத்தில் பங்கெடுத்தார்.

அப்போது வெள்ளையர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்ட ஓர் ஹோட்டலுக்குள் போராட்டக்காரர்கள் நுழைகிறார்கள்.

Image Courtesy

 கைது :

கைது :

அத்து மீறி நுழைந்ததால் மார்ட்டினை போலீசார் கைது செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து போராட்டம் வெடிக்கிறது. இந்த போராட்டத்திற்கு வெள்ளையர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

Image Courtesy

திட்டம் :

திட்டம் :

கறுப்பினத்தவர்கள் நுழைய அனுமதியில்லை என்று சொல்லப்பட்ட அதே ஹோட்டலுக்குள் செல்ல கறுப்பினத்தவர்களின் போரட்டக்காரர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் ஏற்கனவே அத்து மீறி நுழைந்து மார்டின் லூதர் கிங் ஜூனியர் கைதாகியிருந்ததால் வேறு திட்டம் ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ந்தார்கள்.

Image Courtesy

வெள்ளையர்கள் :

வெள்ளையர்கள் :

அப்போது கறுப்பினத்தவர்களுக்கு சில வெள்ளையர்களும் ஆதரவளித்தார்கள். அதன் படி அந்த ஹோட்டலுக்கு வெள்ளையர்கள் சென்று தங்கினார்கள். அதே ஹோட்டலுக்கு கறுப்பினத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்களை தங்களது சிறுப்பு விருந்தினர் என்று உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

Image Courtesy

நீச்சல் குளம் :

நீச்சல் குளம் :

அந்த ஹோட்டலில் இருந்த நீச்சல் குளத்தின் அருகில் வெள்ளையர்களுக்கு மட்டும் என்று போர்டு ஒன்று மாட்டப்பட்டிருந்தது. இதை பார்த்து ஆவேசமடைந்த கறுப்பினத்தவர்கள் அந்த நீச்சல் குளத்தில் அப்படியே குதித்தார்கள்.

ஆனால் இதனை மார்டின் லூதர் கிங் மற்றும் அவருடைய இரண்டு சகாக்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

Image Courtesy

உடனேயே வெளியேறுங்கள் :

உடனேயே வெளியேறுங்கள் :

கறுப்பினத்தவர்கள் திடீரென்று கூட்டமாக வெள்ளையர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளத்தில் குதித்து விட்டார்கள் என்று பரபரப்பாக செய்தி பரவியது அந்த ஹோட்டலின் மேனேஜர் ஜேம்ஸ் ப்ரோக் விரைந்தார்.

நீச்சல் குளத்தை விட்டு உடனே வெளியேறுங்கள் என்றார் ஆனால் போராட்டக்காரர்கள் யாரும் கேட்பதாய் இல்லை.

நீச்சல் குளத்தில் ஆசிட் :

நீச்சல் குளத்தில் ஆசிட் :

எவ்வளவு சொல்லியும் நீச்சல் குளத்தில் இருந்த கறுப்பினத்தவர்கள் கேட்பதாய் இல்லை என்றதும் நேராக ஓடிச்சென்று அமிலம் நிரம்பிய பாட்டிலோடு வந்தார். அதே வேகத்தில் பாட்டிலைத் திறந்து அமிலத்தை கறுப்பினத்தவர்கள் இருந்த அந்த நீச்சல் குளத்தில் ஊற்றினார்.

Image Courtesy

பதட்டம் :

பதட்டம் :

போராட்டக்காரர்கள் கத்தி கூச்சலிட்டார்கள், ஜேம்ஸ் ஊற்றியது முரியாட்டிக் அமிலம். இந்த அமிலத்தை ஊற்றியதால் அதிலிருப்பவர்கள் பயந்து கொண்டு நீச்சல் குளத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்று நம்பினார்.

Image Courtesy

 அதை குடி :

அதை குடி :

அந்த நீச்சல் குளத்தில் இருந்த ஓர் நீச்சல் வீரருக்கு முரியாட்டிக் அமிலம் ஊற்றிய அளவும், இந்த நீச்சல் குளத்தில் இருக்கிற தண்ணீரின் அளவும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அமிலத்தின் வீரியம் குறைந்துவிடும் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை தெரிந்து கொண்டார்.

யாரும் பயப்பட வேண்டாம். அமிலம் நம்மை ஒன்றும் செய்யாது என்று கூச்சலிட்ட மக்களை சமாதானப்படுத்த முயன்றார் ஆனாலும் கூச்சல் குறையாததால் நீச்சல் குளத்தில் நீரை எடுத்து குடித்துக் காண்பித்தார். அதன் பிறகே சலசலப்பு அடங்கியது.

Image Courtesy

தந்திரம் :

தந்திரம் :

இந்த முரியாட்டிக் ஆசிட் என்பது ஹைட்ரோக்ளோரிக் ஆசிட்டின் ஒர் வகை. இது தரையை குறிப்பாக கற்கள் நிரம்பிய இடத்தை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும். இதனை நீச்சல் குளத்தை சுத்தப்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்திருக்கிறார்கள்.

அமிலம் வீரியம் குறைந்தது என்று தெரிந்துமே அமிலம் என்றதும் மக்கள் பயப்படுவார்கள், அவர்களின் பதட்டத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களின் கூட்டத்தை கலைத்து விடலாம் என்று திட்டமிட்டார் அந்த ஹோட்டல் மேனேஜர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Pouring Acid in Swimming Pool When Black People Were Swam

Pouring Acid in Swimming Pool When Black People Were Swam
Story first published: Monday, April 23, 2018, 12:29 [IST]
Desktop Bottom Promotion