For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட நேரம் மழையில் காத்திருந்த போலீஸ் அருகில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி !

போலீஸ் அதிகாரி ஆமையை காப்பாற்றிய சுவாரஸ்யமான கதை

|

பார்க்கிற விஷயங்களை ஆராயாமல் ஓர் முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம் என்று தான் சொல்ல வேண்டும். இன்றைக்கு பெருகி விட்டிருக்கிற வாகனங்களால் மனிதர்களாலேயே தைரியமாக சாலையில் நடந்து சென்று வர முடிவதில்லை. இந்நிலையில் விலங்குகளின் பாட்டை என்றைக்காவது நினைத்திருக்கிறோமா?

காட்டை எல்லாம் அழித்து வீடு, நமக்கான வாழ்விடங்களை கட்டிக் கொண்டு விட்டோம் காட்டையே தன் வீடாய் கொண்டிருந்த விலங்குகள் எல்லாம் எங்கே செல்லும் ? கேள்விகள் தான் விடையைத் தேடி பயணிக்க வைக்கும். சரி இங்கே கதைக்கு வருவோம் நான் சௌரியமாக இருக்கிறேனா? எல்லாம் எனக்கு வசதியாக கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வாழ்பவர்களுக்கு மத்தியில் ஓரறிவு உயிரினத்திற்காக இந்த போலீஸ் செய்த செயல் தான் இணையத்தில் வைரலாக்கியிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ரோடு போடும் வேலை நடந்திருக்கிறது. அப்போது அந்த தெருவில் ஒரு நாய் படுத்திருப்பதைக்கூட சட்டை செய்யாமல் அப்படியே தாரை கொட்டிக் கொண்டே சென்று தங்களது கடமையை முடித்து விட்டிருக்கிறார்கள். நாயின் பாதி உடல் தாரில் புதைந்து கிடக்கிறது. அந்த புகைப்படம் இணையத்தில் பரவி பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது.

Image Courtesy

#2

#2

இதே நேரத்தில் வெளிநாட்டில் நடந்த ஓர் சம்பவத்தை பாருங்கள். மேரீலேண்ட் அருகில் உள்ள க்ரீன்பெல்ட் என்ற இடத்தில் கரோலின் மற்றும் ஹாமெட் என்ற தம்பதிகளின் வீடு அமைந்திருக்கிறது. ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருக்கும் போது தான் அந்த சம்பவத்தை கவனித்தார்கள்.

காலை வேலை தான் ஆனால் மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது.

MOST READ: தினமும் முட்டை சாப்பிடலாமா?... சாப்பிட்டா என்ன ஆகும்?

#3

#3

சாலையின் நடுவில் ஒரு போலீஸ் நின்று கொண்டிருந்தார். முதலில் சாலையை கடக்கத்தான் நிற்கிறார் என்று நினைத்துக் கொண்டார்கள். வீட்டிற்குள்ளே காரை பார்க் செய்துவிட்டு கேட் மூடும் போதும் அந்த போலீஸ் அதேயிடத்தில் நின்று கொண்டிருந்தார்.

ஏதேனும் முக்கியமான ஒரு பொருளை தொலைத்துவிட்டாரா அதைத்தான் நீண்ட நேரமாக தேடிக் கொண்டிருக்கிறா என்று இருவரும் யோசிக்கிறார்கள்.

Image Courtesy

#4

#4

ஹாமெட் ஏதேனும் உதவி வேண்டும் என்று குரல் கொடுக்கிறார் பின்னால் திரும்பி பார்த்த அந்த போலீஸ் வேண்டாம் என்பது போல கையசைக்கிறார். எதற்கும் நீங்கள் அங்கே சென்று பாருங்கள் என்று கரோலின் சொல்ல குடையை எடுத்துக் கொண்டு ஹாமெட் கிளம்பி விட்டார்.

நீண்ட நேரமாக இங்கேயே நிற்கிறீர்கள் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று போலீஸ் அதிகாரி அருகில் சென்று மீண்டும் கேட்டார்.

Image Courtesy

#5

#5

முழுதாக தொப்பலாய் நனைந்திருந்த அந்த போலீஸ் அதிகாரி இல்லை என சொல்லி கீழே குனிந்தார். அப்போது தான் ஹாமெட் அதை கவனிக்கிறார். ஒரு கணம் அவருக்கு திக்கென்றது.

அவருக்கு வார்த்தைகளை வரவில்லை இதற்காகவா? என்பது போல ஹாமெட் அந்த போலீசை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்தார்.

Image Courtesy

#6

#6

கீழே அந்த போலீசின் கால்களுக்கு இடையில் ஒரு ஆமை இருந்தது. இந்த மழையில் வழி தவறி சாலைக்கு வந்துவிட்டது. இந்த தார் சாலையில் தண்ணீர் வேறு இருப்பதால் அதனால் நகர முடியவில்லை. ஆமை என்றாலே அது மெதுவாக பயணிக்கக்கூடியது என்பதை குழந்தைப் பருவத்திலேயே கதைகளின் வழியே கேட்டிருப்போம் ஆனால் இந்த வகை ஆமை நகரவே நகராதாம்.

ஒரு அடிக்கும் அடுத்த அடிக்கும் நீண்ட நேர ஓய்வு எடுத்துக் கொள்கிறது.

MOST READ: அடிக்கடி ஓவரா டென்ஷன் ஆவீங்களா? இதுல ஒன்னு குடிங்க டக்குனு டென்ஷன் குறைஞ்சிடும்...

 #7

#7

அதான் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் எதுவும் அதன் மீது ஏற்றிச் சென்றுவிடாமல் இருக்க இங்கேயே நின்று விட்டேன் என்றிருக்கிறர. ஒரு நிமிடம் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு ஓடியவர் மனைவியிடம் விஷயத்தை சொல்லி இரண்டு டவல்களை கொண்டு வருகிறார்.

அந்த ஆமையை டவலில் வைத்து புல்தரையில் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆமை மெல்ல நகர ஆரம்பித்ததும் இருவரும் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.

#8

#8

இந்த விஷயத்தை கரோலின் தன் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர அந்த போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த அதிகாரியின் பெயர் ஷர்னைஸ் ஹாக்கின்ஸ் க்ரகம். இவருக்கு இந்த செயலைப் பாராட்டி பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Police Cop Saved Turtle In Unique Way

Police Cop Saved Turtle In Unique Way
Desktop Bottom Promotion