For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மறக்க முடியுமா? இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story

மறக்க முடியுமா? இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story

By Staff
|

இப்போ சமீப காலமா 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் மத்தியில ஒரு சின்ன மீம் போர் இருக்கு. நாங்க கெத்தா.. நீங்க கெத்தான்னு.. கொஞ்சம் கேலியான, நகைச்சுவையான போக்கு காணப்படுது. இதுல கெத்து ரெண்டு பேருமே தான். ஆனா, 90ஸ் கிட்ஸ் கெத்து வேற மாதிரியானது... அவங்க எதிர்பார்ப்பு, அவங்க வளர்ந்த விதம், அவங்க அனுபவிச்ச விஷயங்கள் எல்லாம் வேற மாதிரியானது.

தமிழ் ராக்கர்ஸ் இல்ல, ப்ளூ சட்டையோட மோசமான ரிவியூ இல்ல, யூடியூப் இல்ல, ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் இல்ல... ஸ்மார்ட் போன் இல்ல.. ப்ளே ஸ்டேஷன் கூட இவ்வளவு அற்புதமா இல்ல... ஆனா, மனசு முழுக்க நிம்மதி, மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்துச்சு.. நாள் முழுக்க வீட்டுக்கு வராம ஃபிரெண்ட்ஸ் கூட விளையாடுற பழக்கம் இருந்துச்சு.. யாரு மேலையும் பகமை இல்லாத நப்பு இருந்துச்சு.

இது 90ஸ் கிட்ஸ்க்கு ஒரு டைம் டிராவல் மாதிரியா இருக்கும்... 2K கிட்ஸ்ல சிலருக்கு இப்படி எல்லாமா சிலது இருந்துச்சுன்னு சந்தேகம் வரும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்புட்டு!

எம்புட்டு!

தமிழ் ராக்கர்ஸ் 250 எம்பில எல்லாம் படம் ரிலீஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, அப்போ 700 எம்பியில பார்ட் 1, 2,3ன்னு ஒரே படத்த பிரிச்சு வெச்சிருப்போம். ஒருவழியா டிவிடி வந்ததே பெரிய கண்டுபிடிப்பா இருந்துச்சு. அப்பறம் ஒரே டிஸ்க்ல ஐஞ்சாறு படம், இருபது பட பாட்டுன்னு போட்டு.. அதுக்கு மேல மார்க்கர்ல மறக்காம இருக்க பெயரு எழுதி வெச்சிடுவோம். அதெல்லாம் அற்புதமான காலம், பென் டிரைவ், ஓ.டி.ஜி யூஸ் பேன்ற இந்த காலத்து பசங்களுக்கு என்ன தெரியும். இதுல, டிஸ்க் ஸ்க்ராட்ச் ஆகமா இருக்க பஞ்சு வெச்ச சிடி கவர் வேற ரெண்டு ரூபா, அஞ்சு ரூபா போட்டு வாங்கணும்.

© whiskeyriff / instagram

நெட்பிளிக்ஸ்!

நெட்பிளிக்ஸ்!

இப்ப நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட், யுடியூப், ஹாட்ஸ்டார்ன்னு ஒரு மொபைல் செயலியல பல படங்கள், வீடியோஸ் பாக்குறாங்க. உங்களுக்கு இது தான் கெத்து... ஆனா, 90ஸ் கிட்ஸ்களுக்கு எல்லாம் இதுதான் கெத்து. ஒரு டிராவ் முழுக்க, இல்ல ட்ரே முழுக்க கேசட் மட்டுமே போட்டு வெச்சிருப்போம். சம்மர் ஹாலிடேஸ் எல்லாம் வந்துட்டா, கேசட் தேயிற வரைக்கும் போட்டு, போட்டு பார்ப்போம்...

© 90smadness / instagram

ஞாபகம் இருக்கிறதா?

ஞாபகம் இருக்கிறதா?

சில ஸ்கூல்ல, ஸ்கூல் ஹாஸ்டல்ல... டிவி டேன்னு ஒன்னு இருக்கும். அந்த நாள்ல மட்டும் எதாச்சும் படம் போடுவாங்க. பல சமயம் ஏதாவது டாக்குமென்ட்ரி போட்டு அழவிட்டுடுவாங்க. ஏதோ லைப்ரரி மாஸ்டர் நல்லவரா இருந்தா கார்டூன் இல்ல இங்க்லீஷ் படம் பார்க்குற வாய்ப்பு கிடைக்கும் சில ஸ்ட்ரிக்ட் ஸ்கூல் எல்லாம் டிவில கூட பாடம் தான் எடுப்பாங்க. என்ன இருந்தாலும். கிளாஸ் எடுக்காம நீங்க என்ன வேணாலும் போடுங்க.. ஒரு மணிநேரம் நாங்க நிம்மதியா இருக்கோம்ன்னு அரட்டை அடிக்க அது செம்ம ஜாலி டைம்.

© theratchetvine / twitter

ஐ-டியூன்ஸ்!

ஐ-டியூன்ஸ்!

இன்னிக்கி ஐ-டியூன்ஸ், லொட்டு, லொசுக்குன்னு பாட்டு கேட்க மொபைல் ஏப் வெச்சுக்கிட்டு ஆட்டம் போடுறாங்க. தம்பி எஅதெல்லாம் நெட்வர்க் கிடைக்காட்டி ஒன்னும் பண்ண முடியாது.. ஆனா நாங்க அப்படி இல்ல... இஷ்டத்துக்கு தேஞ்சு போகுற அளவுக்கு ரிப்பீட் போடுல பாட்டு கேட்டுட்டே இருப்போம். கரண்ட் கட்டான மட்டும் தான் எங்கள நிறுத்த முடியும்.

© The World Famous KROQ / facebook

எங்க போட்டோஷாப்!

எங்க போட்டோஷாப்!

சிலருக்கு எல்லாம் இந்த வேர்ட் ஆர்ட் கூட பண்ண தெரியாது. ஏதாவது பிரசண்டேஷன்ல செம்மையா இந்த வேர்ட் ஆர்ட் எல்லாம் போட்டு கொண்டு வந்தா... டேய் மச்சான்.. என்னதுலயும் பண்ணி கொடுடான்னு கெஞ்சரதுக்கு ஒரு கூட்டம் இருக்கும். உங்களுக்கு போட்டோஷாப்னா... எங்களுக்கு இந்த வேர்ட் ஆர்ட்டும், மூவி மேக்கர் தான் கெத்து.

© TodayKidsWont / twitter

முடியுமா?

முடியுமா?

இன்னிக்கி ஏதேதோ விளையாட்டு எடுத்துட்டு வந்து, இது செம்ம ரிஸ்க் தெரியுமா? அடுத்த லெவலே போக முடியாதுன்னு கூவுற கூட்டம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மிட்டாய வெச்சு உருட்டி விளையாடுற கூட்டம் ஒரு பக்கம். இந்த விளையாட்டு எல்லாம் பார்த்தா இந்த காலத்து பசங்க என்ன பண்ணுவாங்க.. தி மோஸ்ட் மோசமான விளையாட்டாக்கும். எங்க குண்டு இருக்கும்னே தெரியாது.

© TodayKidsWont / twitter

மாஸ்!

மாஸ்!

இந்த பென்சில் எல்லாம் கிளாஸ் வெச்சிருந்தா... அந்த பையனுக்கு கிளாஸ்ல தன் கெத்து இருக்கும். ஒரே ஒரு தடவை கொடுடா எழுதி பார்த்துட்டு தரேன்னு சொல்ற பசங்களும் இருந்தாங்க. ஒரு ரூபாய், ஐம்பது காசுக்கு மர பென்ஸில். ஐஞ்சு ரூபா கொடுத்த இந்த பென்சில். வாழ்க்கையில ஒரு முறை இந்த பென்ஸில், இல்ல ஹீரோ பேனா யூஸ் பண்ணிட மாட்டோமான்னு ஏக்கமா இருந்த பசங்களும் இருக்காங்க. இப்ப என்னடான்னா ஐ-போன் வேணும்ன்னு அடம் பிடிக்கிறாங்க. எதிர்பார்ப்புகள் பெரிசானதும், திருப்தி கம்மி ஆயிடுச்சு.

© TodayKidsWont / twitter

ரொம்ப கஷ்டம்!

ரொம்ப கஷ்டம்!

இப்போ தமிழ் ராக்கர்ஸ்ல தினமும் ஒரு படம் டவுன்லோட் பண்ணி பார்த்திடுறாங்க. என்ன பண்றது அம்புட்டு படம் வாராவாரம் ரிலீஸ் ஆகுது. அப்ப எல்லாம் கேசட்டு தான். அதுவும் வாடகைக்கு, சொந்தமா எல்லாம் வாங்க முடியாது.

ஒரு நாளுக்கு பத்து ரூபா, மூணு நாளுக்கு 25 ரூபானு வாடகைக்கு கொடுப்பாங்க. ஒரு வீட்டுல வாங்குனா அத அக்கம் பக்கத்து வீட்டுல இருக்க எல்லாம் சேர்ந்து பார்ப்பாங்க. வாடகைக்கு வாங்குனத ஓசி கேட்டு பார்க்குறவங்களும் இருந்தாங்க.

© daleord / twitter

முடியுமா?

முடியுமா?

எப்ப எல்லாம் ஷேர்-இட்ல பத்து ஜிபி ஃபைல் அஞ்சு நிமிஷத்துக்குள்ள டிரான்ஸ்பர் ஆயிடுது. ஆனா, விண்டோஸ் எக்ஸ்-பியில நூறு எம்பி டிரான்ச்பர் ஆகவே 39 வருஷம், 40 வருஷம்ன்னு டைம் காமிக்கும்.

இதுல ஒன்னொரு விளையாட்டு என்னன்னா... ஹேங் ஆயிடுச்சுன்னா.. இத டிராக் பண்ணி ஸ்க்ரீன்ல கசகசன்னு டிசைன் பண்ணி விளையாடலாம்.

© shubham231194 / imgur

ஸ்க்ரீன் சேவர்!

ஸ்க்ரீன் சேவர்!

இப்போ எல்லாம் யாரு ஸ்க்ரீன் சேவர் யூஸ் பண்றாங்கன்னு தெரியல. ஆனா, அப்போ வெச்சே ஆகணும். அதுல அண்ணன் - தம்பி வீட்டுல இருந்தா.. யாருக்கு பிடிச்சது வைக்கிறதுன்னு ஒரு சண்டை வரும். இப்போ மொக்கை 3டியா தெரிஞ்சாலும்.. அப்ப இதுதான் எங்களுக்கு அவதார்!

© canismajorrr / imgur

யூடியூப்?

யூடியூப்?

என்னடா இதுக்கு எல்லாம கேசட்டா... ரொம்ப மக்கா இருக்கீங்களேன்னு இந்த காலத்து பசங்க கேட்கலாம். தம்பி அப்போ எல்லாம் யூடியூப்ன்னு ஒன்னு இல்லவே இல்ல. ஏதோ சில சைட்ல தான் வீடியோ ப்ளே ஆகுற வசதியே இருக்கும். அது என்னென்னு இங்க சொல்ல முடியாது.

© canismajorrr / imgur

மேஜிக் பென்ஸில்!

மேஜிக் பென்ஸில்!

அப்போ மேஜிக் பென்ஸில்ன்னு ஒரு நாடகம் வந்தாலும் வந்துச்சு.. இந்த பென்ஸில்க்கு மவசு கூடி போச்சு. இதுல வரைஞ்சா நிஜமலே பொருள் வரும்டா.. இத எங்க சித்தப்பா சிங்கப்பூர்ல இருந்து வாங்கிட்டு வந்தார்ன்னு காதுல கிலோமீட்டர் கணக்குல பூ சுத்துவாங்க. அத நம்பி ஏமார்ந்த கூட்டம் இருந்தது வேற கதை.

© canismajorrr / imgur

அட!

அட!

இது இன்னும் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கோ தெரியல... பலர் மறந்திருக்கலாம். இத பார்த்துட்டு டக்குன்னு யூடியூப் பக்கமா போய், இத எப்படி பண்றதுன்னு தேடி பார்த்தீங்கன்னா.. வாங்க தோழரே.. நீங்களும் என் இனமே.. நானும் இப்படி தேடினேன். இது போல ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு வேற ஒன்னு இருக்குமா?

© canismajorrr / imgur

சறுக்கு!

சறுக்கு!

இன்னும் சறுக்கு விளையாட்டு எல்லாம் இருக்கு தான். ஆனாலும், அப்ப இருந்தது போல இப்ப இருக்க குழந்தைங்கிட்ட ஆர்வம் இல்லைங்கிறது தான் உண்மை. வெயில்ல விளையாண்டா பட்டக்ஸ் பழுத்திடும். இந்த மாதிரி உசரத்துல இருந்து சறுக்கி வந்து கீழ விழுந்ததும் வாந்தி எடுத்தவங்க எல்லாம் இருக்காங்க. மறக்க முடியுமா அந்த நினைவுகள்.

© throwbackmachine / instagram

பிளாக்!

பிளாக்!

இப்ப இருக்கவங்க எல்லாம் ப்ரேக்-அப் பண்ணா ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், மொபைல், மெசேஜ்ன்னு பல இதுல பிளாக் பண்ணும். எங்களுக்கு அந்த கவலையே இல்லையே.. ரிசீவர தூக்கு அந்தாண்ட வெச்சுட்டா போதும் மொத்தமா பிளாக் பண்ணிட்டு நிம்மதியா உட்கார்ந்துக்கலாம்.

© djfokusmwe / instagram

ஸ்மார்ட் வாட்ச்!

ஸ்மார்ட் வாட்ச்!

சில பேர் எக்ஸாம்ல பிட் அடிக்க இந்த வாட்ச் கட்டிட்டு வருவாங்க. இத கண்டுப்பிடிச்சு கழற்றி எடுத்துட்டு போயிடுவாங்க மாஸ்டர். ஆனாலும் இதுவும் ஒரு கெத்து தான்.

ஒரு ஸ்கூல்ல மொத்தமே ஐஞ்சாறு பேரு கிட்ட தான் இந்த வாட்ச் இருக்கும். அத வாங்கி ஒரு பீரியட், ரெண்டு பீரியட் கட்டி பார்த்துட்டு மனசே இல்லாம கழற்றி கொடுத்த அனுபவம் எல்லாம் வேற லெவல். லைட்டா கண்ணு சிலருக்கு வியர்க்கலாம்.

© DolphuRaymondWasAPimp / imgur

ஸ்டிக்கர்!

ஸ்டிக்கர்!

ஒரு சீட் ஸ்டிக்கர் சீட் பத்து ரூபாக்கு வாங்கிட்டு வந்து, கிளாஸ்ல ஒரு ஸ்டிக்கர் 25, 50 காசுக்கு வித்தவன் எல்லாம் இருக்கான். அப்பவே பிஸ்னஸ் மைண்ட்.

நோட்டுல ஹோம்வர்க் பண்ணி இருக்கோ இல்லையோ.. ஸ்டிக்கர் வர்க் செம்மையா இருக்கும். ஸ்டிக்கர்காகவே பழைய நோட்டு வீசாம வெச்சிருந்த நினைவுகள் எல்லாம் மறக்க முடியுமா...

© DolphuRaymondWasAPimp / imgur

பில்லா பேண்ட்!

பில்லா பேண்ட்!

80,90, 2000கள் ஆரம்பம் வரைக்கும் இந்த ஃபேஷன் இருந்துச்சு. அம்மாக்கு மட்டும் இந்த பேண்ட் பிடிக்காது... கண்டிப்பா கீழே முழுக்க கறை ஆகிடும். பேண்ட் தேஞ்சு போயிடும். அதுக்காகவே அம்மாக்கிட்ட திட்டு வாங்கணும். அப்படி அழுக்ககாம, கிழியாம இருக்க கீழ சிலர் ஜிப் வெச்சு தெச்சிடுவாங்க. ஸ்டைல் பாஸ்... வேற லெவல் ஸ்டைல் அதெல்லாம்.

© connivingly / imgur

மவுஸ்!

மவுஸ்!

கம்பியூட்டர் கிளாஸ் எல்லாம் போனா.. புரோக்ராம் போடுறாங்களோ இல்லையோ.. இந்த பந்த ஆட்டைய போட்டுடுவாங்க. சிலர் உருட்டி விளையாடிட்டு திரும்ப மாட்டி வெச்சுட்டு வந்திடுவாங்க. அழுக்கான கழற்றி கழுவி மாட்டனும். அப்பத்து ஆளுங்க அடிக்கடி மவுஸ் நல்லாவே வர்க் ஆனாலும், ஆட்டி பார்ப்பாங்க... பழக்க தோஷம் அதெல்லாம்.

© tkorkalainen / imgur

அச்சோ!

அச்சோ!

பொம்மைனு தெரியாம எத்தனை தடவ பயந்து, பயமுறுத்தி விளையடி இருப்போம். முக்கியமா பொண்ணுங்கள பயப்படுத்த, கரக்ட் பண்ண, இம்ப்ரஸ் பண்ண அந்த காலத்துல பயன்படுத்துன ஒரு கருவி இதுன்னு கூட சொல்லலாம்.

இப்ப இதெல்லாம் நெனச்சு பார்த்தா.. ச்சே... அப்படியே இருந்திருக்கலாம்ன்னு தோணுதுல.. ஃபேஸ்புக் இல்ல, வாட்ஸ்-அப் இல்ல... யூடியூப் இல்ல. ஃபேக் நியூஸ் இல்ல, மனசுல அவ்வளோ வஞ்சனை இல்ல.. நிம்மதி, சந்தோஷம் மட்டும் தான் மனசு முழுக்க இருந்துச்சு.

கிரிக்கெட் விளையாட பேட் இல்லாட்டியும், தென்னமர மட்டை போதும், பேப்பர் பந்து போதும்... நமக்கு விளையாடனும்.. எத வெச்சுன்னு எல்லாம் இல்ல. நமக்கான எதிர்பார்ப்பு ரொம்ப குறைவா இருந்துச்சு அப்போ எல்லாம்...

இதெல்லாம் நெனச்சு பார்த்து மனச தேத்திக்கலாம்... திரும்ப மாத்தவா முடியும்...

© unknown / imgur

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Photo Story: 90s Kids Memories

Photo Story: 90s Kids Memories - We decided to take you with us on a trip down memory lane and share with you all the unforgettable things we had before the 2000s.
Desktop Bottom Promotion