Latest Updates
-
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உங்களுடன் இருந்தால் உங்களை சுற்றி எப்பொழுதும் நேர்மறை சக்திகள் இருக்கும். இவர்களின் குணங்கள் எப்பொழுதும் மற்றவர்களை கவரக்கூடியவையாக இருக்கும்.
2020 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இருக்கிறோம். பொதுவாகவே டிசம்பர் மாதம் என்றால் தமிழகத்திற்கு நேரம் சரி இல்லாமல் போய்விடுகிறது என்பது பரவலாக நிலவும் ஒரு கருத்தாகும். ஒருவரின் குணநலனையும், ஆளுமையும் தீர்மானிப்பதில் அவர்கள் பிறந்த மாதம் மிகமுக்கியபங்கு வகிக்கிறது என நாம் அறிவோம். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் அவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் இருப்பவர்கள் கூட அதிர்ஷ்டசாலிகள்தான்.

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உங்களுடன் இருந்தால் உங்களை சுற்றி எப்பொழுதும் நேர்மறை சக்திகள் இருக்கும். இவர்களின் குணங்கள் எப்பொழுதும் மற்றவர்களை கவரக்கூடியவையாக இருக்கும். சொல்லப்போனால் இவர்கள் உடனிருப்பது ஒரு சிறந்த அறிவுரையாளர்கள் உங்களுடன் இருப்பது போன்ற உணர்வைத்தரும். இது மட்டுமின்றி டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் பல சிறந்த குணங்களை கொண்டிருப்பார்கள், அது என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நேர்மை
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் ஆகச்சிறந்த அடிப்படை குணம் என்னவெனில் அது நேர்மைதான். இவர்களை கண்ணைமூடி கொண்டு நம்பலாம். எப்பொழுதும் நேர்மையின் பக்கமும் உண்மையின் பக்கமும்தான் இவர்கள் நிற்பார்கள். தவறானவர்களை தன் பக்கம் இருக்க அனுமதிக்கமாட்டார்கள். இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படை குணம் இதுதான்.

திட்டமிடுதல்
இவர்கள் திட்டமிடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் அவசர அவசரமாக வேலை செய்வதை நீங்கள் பார்க்கவே இயலாது. தங்களின் சூழ்நிலைக்கேற்ப தன்னுடைய அனைத்து வேலைகளையும் இவர்கள் திட்டமிட்டு செய்யக்கூடியவர்கள். அவர்கள் எப்பொழுதும் தன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நினைப்பார்கள்.

ஆன்மீக வாழ்க்கை
இவர்கள் கடவுள் மீது அதிக நம்பிக்கையும், நாட்டமும் உள்ளவர்கள். பாவபுண்ணியங்களை நினைத்து இவர்கள் அதிகம் பயப்படுவார்கள். இது டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான குணமாகும். கடவுள் மீதான அவர்களின் நெருக்கம் இவர்களை தூய ஆத்மாவாக மாற்றும். இது அவர்களுக்கு வண்ணமயமான எதிர்காலத்தை உருவாக்கும்.

பணிவு
சிலர் தங்கள் வந்த பாதையை மறந்துவிடுவார்கள். ஆனால் இவர்கள் எவ்வளவு வெற்றியை பெற்றாலும் இவர்கள் எப்பொழுதும் பணிவாகவே இருப்பார்கள். இது அனைவரும் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகும். ஆண்டின் கடைசி மாதத்தில் பிறந்த இவர்களின் முதன்மையான குணம் ஆகும்.

புத்திகூர்மை மற்றும் உறுதி
இவர்களின் உறுதியை உடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. தனது இலட்சியத்தை அடைய அவர்கள் செய்யும் முயற்சிகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். இவர்களின் புத்திகூர்மை எந்தவொரு சூழ்நிலையும் நன்றாக புரிந்து கொள்ள உதவும். இது அவர்களின் முடிவில் சிறப்பாக பிரதிபலிக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் இவர்களை விட வல்லவர்கள் யாருமில்லை.

உதவும் குணம்
இன்று பலரும் சுயநலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள், ஆனால் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே உதவும் குணம் கொண்டவர்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு உதவும் இவர்களின் குணம் அனைவரையும் கவரும். இவர்கள் மற்றவர்களை தவறு செய்ய ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள், இதனால் இது மற்றவர்களுக்கு இவர்கள் மீது கோபத்தை உண்டாக்கலாம்.

புரிந்துணர்வு
மற்றவர்களை புரிந்து கொள்வது என்பது வரம் போன்றது. அப்படி இருக்கையில் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இந்த வரத்தை முழுமையாக பெற்றவர்கள். இதனால் மற்றவர்களிடம் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளை இது தீர்க்க உதவும். டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தை எப்பொழுதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முயலுவார்கள்.

அர்ப்பணிப்பு
இது இவர்களின் நேர்மறை குணமா அல்லது எதிற்மறை குணமா என்பதே சந்தேகத்திற்குரியது. ஏனெனில் இவர்களின் அர்ப்பணிப்பு அதீதமானதாக இருக்கும். ஏற்ற வேலையை முடிக்கும் வரையில் அவர்கள் வேறு எதுவும் மீது கவனம் செலுத்தமாட்டார்கள். இதனால் சிலசமயம் மற்றவர்களுடன் இருக்கும் நேரத்தையும், அவர்களின் அன்பையும் இழக்க நேரிடும்.

பிடிவாதம்
இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்றால் அது பிடிவாதம்தான். தான் கொண்ட கொள்கை மீதும், கருத்திலிருந்தும் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள். அது தவறானது என்று தெரிய வந்தாலும் அவர்கள் அதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இவர்களை பொறுத்தவரை இவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான்.



Click it and Unblock the Notifications











