For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏதோ எடுக்க போய், ஏதோ பதிவான எடக்குமடக்கான புகைப்படங்கள் - தொகுப்பு!

By John
|

போட்டோகிராஃபில பல பிரிவுகள் இருக்க மாதிரியே, போட்டோ எடுக்குறதுலயும் பல வகை இருக்கு. முதல் போர்ட்ரெயிட், லேண்ட்ஸ்கேப் என இரண்டு வகை தான் பொதுவாக அனைவரும் அறிந்திருந்தனர். பிறகு, தொளில்நுப்டம் வளர, வளர நிறைய புதிய வகைகள் அறிமுகமாகின. நிறைய வகை லென்ஸ்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அப்படியே போட்டோ எடுப்பதில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டன. அதில், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சென்றால் நம்மை அறியாமல் உடனே நாம் எடுக்கும் புகைப்பட வகை தான் பேனாராமிக் (panoramic). இது மிகவும் அழகான தோற்றத்தை அளிக்கவல்லது என்றாலும், ஒரே தடவையில் நாம் எதிர்பார்ப்பது போல கச்சிதமாக படத்தை எடுப்பது கொஞ்சம் கடினம் தான்.

இதோ! அப்படி பேனாராமிக் வகையிலான படம் எடுக்கிறேன் என சிலர் ஏதோ செய்து சொதப்பலான அவுட்புட் உடன் திக்குமுக்காடிப் போன சில புகைப்படங்களை இந்த தொகுப்பில் காணலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source and Courtesy: Snap Viral

இவங்கள பார்த்ததும் ஏதோ விசித்திரமான ட்வின்ஸ்னு கூட நினைக்க தோணலாம். ஆனா, சாரி! அந்த சீன் எல்லாம் இங்க இல்ல. பேனாராமிக் போட்டோ எடுக்க போனப்ப நடந்த ஒரு குழப்பம் தான் இது.

#2

#2

Image Source and Courtesy: Snap Viral

நம்மள ஃபிரெண்ட் கேண்டிட் ஷாட் எடுத்ததுமே நாம கேட்கிற மாதிரி, இந்த நாய் மட்டும் எங்க எடுத்த படத்த காமினு கேட்டுச்சுன்னு வெச்சுக்குங்களே.. மெர்சல் படத்துல வெற்றிமாறன் அப்பா விஜய் ஹாஸ்பிட்டல சொல்ற மாதிரி, 'என்னடா பண்ணி வெச்சிருக்க...'ன்னு கண்ணீர் விட்டு கதறுனாலும் ஆச்சரியம் இல்ல.

#3

#3

Image Source and Courtesy: Snap Viral

டக்குன்னு பார்த்ததும் என்னடா ஆர்டிகல் 377 வந்ததும் வராம.. இப்படி கூட்டா ஏதோ பண்றீங்கன்னு சிலர் ஷாக் ஆகலாம். சாரி! இது நாலஞ்சு பேரெல்லாம் இல்ல. ஒரே ஒரு ஆல் தான் பாத் டப்ல ஏதோ ஜிம்னாஸ்டிக் பண்ணிட்டு இருந்தப்ப பேனாராமிக் போட்டோ எடுத்துட்டாரு அவரோட நண்பன் / நண்பி.

#4

#4

Image Source and Courtesy: Snap Viral

தட் ஃபிரெண்ட் நாம என்ன அசத்தலா போட்டோ எடுத்துக் கொடுத்தாலும், நம்மள எப்பவும் மொக்கையாவே போட்டோ எடுப்பானே.. அவன இப்படி தான் மொகரயிலையே குத்தனும்.

#5

#5

Image Source and Courtesy: Snap Viral

இது என்ன ஒட்டகதிரையா இல்ல, குதிரச்சிவிங்கியா?

#6

#6

Image Source and Courtesy: Snap Viral

ஏதோ நார்னியா படம் பாக்குற மாதிரியே இருக்கு...?

#7

#7

Image Source and Courtesy: Snap Viral

சொல்ல முடியாது இந்த படத்த கூட, ஃபேஸ்புக்ல யாராச்சும், தன் குழந்தையை தண்ணீரில் விழாமல் காத்த இறந்த அன்னையின்கைனு ஷேர் பண்ணலாம். ஆனா, இது பேனாராமிக்னு ஃபெயிலியர்னு நாம தெரிஞ்சுக்கணும்.

#8

#8

Image Source and Courtesy: Snap Viral

அடேய்! என்னடா ரெண்டு கால் தான் இருக்கு...?

#9

#9

Image Source and Courtesy: Snap Viral

அண்ணன் பாக்குறதுக்கு பிரக்னன்ட் ஆன கங்காரு மாதிரியே இருக்காருல...

#10

#10

Image Source and Courtesy: Snap Viral

சுற்றுலா விரும்பிகள் எல்லாம் சில நேரம் ட்ராவல்ல தொலைஞ்சு போனேன்னு எல்லாம் ஸ்டேடஸ் போடுவாங்க.

அதுக்குன்னு தலை மறைஞ்சு போற மாதிரி எல்லாம் தொலைஞ்சு போறது சரி இல்ல ஆமா...

#11

#11

Image Source and Courtesy: Snap Viral

பாவம் மனநிலை பாதிக்கப்பட்டவர்னு நெனச்சுடாதிங்க. இவரு வயிறு குலுங்க சிரிக்கும் போது யாரோ பேனாராமிக் போட்டோ எடுத்துட்டாங்க. அம்புட்டு தான் சங்கதி.

#12

#12

Image Source and Courtesy: Snap Viral

இப்படி ஒரு கை இருந்தா செல்ஃபீ ஸ்டிக் வாங்க வேண்டிய அவசியமே இருக்காதுல....

#13

#13

Image Source and Courtesy: Snap Viral

முக்கியமான பொருள் எதையோ தொலைச்சுட்டார் போல, அதான் தலை கீழ விழுறது கூட தெரியாம சீரீயஸா தேடிட்டு இருக்காரு..

#14

#14

Image Source and Courtesy: Snap Viral

வாயில ஏதோ கவ்விட்டு இருக்கிறதுனால தான் நாய்னே தெரியிது இல்லாட்டி வேறோ ஏதோ மாதிரி ஆயிருக்கும்...

#15

#15

Image Source and Courtesy: Snap Viral

பேனாராமிக் போட்டோ எடுக்க, எடுக்க எவனோ லைட்ட மாத்திட்டான் போல... ஏம்பா எம்புட்டு நேரமாவா போட்டோ எடுத்துக்கிட்டு இருந்த?

#16

#16

Image Source and Courtesy: Snap Viral

இந்த பொண்ணு அவன் இவன் விஷாலுக்கே பெரிய சவால் விடும் போல... என்ன ஒரு லுக்கு... கண்ணே சுளுக்கிக்கும் போல...

#17

#17

Image Source and Courtesy: Snap Viral

தலைவலி தாங்க முடியாம பேபி, தலைய கழற்றி வெச்சிடுச்சு போல... அம்புட்டு மொக்கையாவா இருக்கு அந்த படம்...

#18

#18

Image Source and Courtesy: Snap Viral

1970, 80ஸ்ல வந்த சாமி படம் பார்த்திருந்தீங்கன்னா இதெல்லாம் ஜூஜூபின்னு சொல்லிடுவீங்க. உதாரணமா சொல்லனும்னா ராகவேந்திரா படத்துல டெல்லி கணேஷ் ரஜினிய பார்க்க ஓடோடி வரும் போது நடுவால நீர்நிலை ஒன்னு வழி மறைச்சு இருக்கும். உடனே கும்பிடு போட்டு பாட்டு பாடுவாரு. உடனே, தண்ணி அவருக்கு வழிவிட்டு ஒதுங்கிடும். அந்த சீன் இப்படி தான் இருக்கும். இந்த மாதிரி பல சீன் தமிழ் சாமி படத்துல நாம பார்த்திருக்கோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Panoramic Photo Fails Collection

Here we have listed some funny fails of panoramic photos. Take a look on this collection.
Story first published: Thursday, October 11, 2018, 11:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more