Latest Updates
-
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா?
டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் ஆடம்பரமான பொருட்கள் - டாப் 10!
டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் ஆடம்பரமான பொருட்கள் - டாப் 10!
டொனால்ட் டிரம்ப் ஒரு தொழிலதிபர், அமெரிக்க அதிபர் என்ற பலரும் அறிவார்கள். அவர் ஒரு பெரும் பணக்காரர் என்று அறிந்தவர்களில் பலருக்கு கூட அவர் எந்த அளவிற்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் பயன்படுத்தும் வீட்டில் இருந்து, விமானம், கழிவறை முதற்கொண்டு என்னென்ன வசதிகள் கொண்டிருக்கின்றன என்று அறிந்தால். நிஜமாகவே ஒரு நிமிடம் தலை சுற்றி தான் போகும்.
இதோ! அமெரிக்க அதிபரும், பெரும் செல்வந்தருமான டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான டாப் டென் ஆடம்பரமான பொருட்கள், சொத்துக்கள்...

மெர்சிடிஸ் பென்ஸ் SLR மெக்லாரன்
டிரம்ப் வைத்திருக்கும் ஆடம்பரமான பொருட்களில் ஒன்று மெர்சிடிஸ் கார். இதை 2003 ம் ஆண்டில் வாங்கினார் டிரம்ப். இதன் மதிப்பு 4.45 இலட்சம் டாலர்கள் ஆகும். டிரம்ப்புக்கு சொந்தமான இந்த ஆடம்பர பொருளை இவர் எப்போதாவது தான் ஓட்டி மகிழ்கிறார். பெரும்பாலும் இந்த காரை இவரது ஓட்டுனர் தான் ஓட்டுகிறார்.

ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம்
ஐந்து இலட்சம் டாலர்கள் மதிப்புக் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம். இந்த காரை தனக்கு பிடித்த மாதிரி கஷ்டமைஸ் செய்து வைத்திருக்கிறார் டிரம்ப். தனக்கு பிடித்த தங்க கலரில் இதை அலங்கரித்து வைத்துள்ளார் டிரம்ப். இந்த காரை மிக அரிதாக தான் சாலைக்கு எடுத்து வருவாராம் டிரம்ப்.

தி சீர்கோர்ஸ்கி எஸ் -76
டொனால்ட் டிரம்புக்கு பிடித்தமான மற்றுமொரு வாகனம் அவரது சீர்கோர்ஸ்கி எஸ் -76 ரக ஹெலிகாப்டர். தனி டிசைனர் கொண்டு டிரம்புக்கு பிடித்த வகையில் இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டிரம்ப் என்ற பெயர் கொட்டை எழுத்தில் பதியப்பட்டுள்ளது. இதை 7 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கிய டிரம்ப், டிசைன் செய்வதற்கு மட்டும் கூடுதலாக ஏழரை இலட்சம் டாலர்களை செலவு செய்திருக்கிறார்.

ஏர் ஃப்ளீட்
போயிங் 757 ரக விமானம் ஒன்றும் சொந்தமாக வைத்திருக்கிறார் டிரம்ப். இதில் மல்டிப்பில்படுக்கை அறை வசதிகள் இருக்கின்றன. இதில் ஒரு மாஸ்டர் பெட்ரூம், அதில் 24 காரட் தங்கத்திலான குளியல் தொட்டி, உணவறை, ஒரு கேசட் ரூம் போன்ற வசத்தில் கொண்டுள்ளது. சீட் பெல்ட் கூட தங்கத்தில் செய்து வைத்துள்ளார் டிரம்ப். இந்த விமானத்திலும் டிரம்ப் என்ற பெயர் பெரிய அளவில் பொறிக்கப்பட்டுள்ளது.

பென்ட்ஹவுஸ்
டிரம்ப் எவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறார் என்பதற்கு உண்மையான உதாரணம் இந்த வீடு தான். இந்த வீட்டில் இருந்து செண்ட்ரல் பூங்காவை முழு தோற்றத்தை காண இயலும். இந்த வீட்டின் சீல்லிங்க்ல் கிரேக்க கடவுகளின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வீட்டில் டிரம்ப் சாப்பிட பயன்படுத்தும் அனைத்து சாமானங்களும் தங்கத்தில் ஆனவை. டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு செல்லவிருந்த போது, இவரது மனைவி, மகன் இந்த வீட்டைவிட்டு வெளியேற மனதே இல்லாமல் வெளியேறி உள்ளனர். இதன் மொத்த மதிப்பு 90 மில்லியன் டாலர்கள்.

தங்க கழிவறை
டிரம்ப் பயன்படுத்தும் கழிவறையும் கூட தங்கத்தில் ஆனது என்று கூறுகிறார்கள். சின்க், குளியல் தொட்டி என பலவன தங்கத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கே யாரும் செல்ல அனுமதி இல்லை.

மார்-எ-லகோ வெகேஷன் கிளப் & ரிசார்ட்
வெகேஷன் காலத்தில் ஏதாவது நல்ல ரிசார்ட் புக் செய்து மக்கள் நேரத்தை செலவழிப்பார்கள். ஆனால், டிரம்ப் அதற்கென தனி ரிசார்டே வைத்துள்ளார். அதன் மதிப்பு மட்டுமே 150 மில்லியன் டாலர்கள். இங்கே இருக்கும் கிளப் மட்டுமே 110,000 சதுரடி கொண்டுள்ளது. இங்கே 58 படுக்கையறை, 33 குளியலறை, 126 கேசட் ரூம் வசத்தில் இருக்கின்றன. இந்த சொத்தை 5 மில்லியன் டாலர்களுக்கு வாங்கி, அதனுள் பல வேலைபாடுகள் செய்துள்ளார் டிரம்ப்.

10 கோல்ஃப் மைதானங்கள்
டிரம்புக்கு பிடித்த விளையாட்டு கோல்ப். அமெரிக்காவின் ஆறு மாகாணங்களில் தனக்கென தனியாக பத்து கோல்ப் மைதானங்கள் சொந்தமாக வைத்துள்ளார். இவற்றின் சொத்து மதிப்பு மட்டுமே 206 மில்லியன் டாலர்கள் ஆகும். இதற்கு இன்வெஸ்ட்டர்கள் என யாரும் இல்லை. இவை நூறு சதவிதம் டிரம்புக்கு மட்டுமே சொந்தம்.

டிரம்ப் கட்டிடம் வால் ஸ்ட்ரீட்
வால் ஸ்ட்ரீட்டில் இருக்கிறது டிரம்புக்கு சொந்தமான இந்த கட்டிடம். இது மொத்தம் 71 அடுக்குகள் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 501 மில்லியன் டாலர்கள் ஆகும். இரட்டை கோபுரம் விபத்துக்குள்ளான பிறகு, அந்த சுற்றுவட்டார பகுதியில் உயர்ந்த கட்டிடமாக திகழ்கிறது இந்த டிரம்ப் கட்டிடம்.

டிரம்ப் டவர்ஸ்
இந்த டிரம்ப் டவர்ஸின் மதிப்பு 371 மில்லியன் டாலர்கள். இங்கே நிறைய கடைகள் மற்றும் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கே நிறைய ஆடம்பர அப்பார்ட்மெண்ட்களும் இருக்கின்றன. இங்கே மைக்கல் ஜாக்சன் மற்றும் கிறிஸ்டினோ ரொனால்டோ போன்றவர்கள் கூட தங்கி இருந்தனர். தி டார்க் நைட்ஸ் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.



Click it and Unblock the Notifications