For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?

2018 ஜூன் மாதத்திற்கான ராசி பலன்களை எங்கள் ஜோதிட வல்லுநர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். கன்னி ராசிக்குரிய மாதப் பலன்களை இங்கே விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெற்றி குவியும் கன்னி ராசியே!

வெற்றி குவியும் கன்னி ராசியே!

பொறுமையுடன் கஷ்டங்களை கடந்து சென்று வெற்றி காணும் கன்னி ராசி அன்பர்களே

இந்த மாதம் உங்களுக்கு உயர்வு தாழ்வு இரண்டும் இணைந்து காணப்படும். உங்கள் நம்பிக்கை அளவு குறைவாக இருந்தாலும் உங்கள் ராசி பலன் கஷ்டமான சூழ்நிலையை துச்சமாக தூக்கி போட உதவி செய்யும். வேலையில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

உங்கள் கவனத்தை சரியான வழியில் செலுத்தினாலே போதும் எளிதாக வெற்றியை அடைந்து விடுவீர்கள். எப்பொழுதும் உங்களுக்கு இரண்டு விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே உங்கள் முடிவெடுக்கும் திறனை சரியாக பயன்படுத்துவது முக்கியம். எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களை தள்ளி வையுங்கள். இல்லையென்றால் உங்கள் தன்னம்பிக்கையை குறைத்து விடுவார்கள். நீங்கள் செய்த புண்ணியங்கள் பாவங்கள் அதன் வேலையை காட்டும். இந்த மாத இறுதியில் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

இதனால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். உங்கள் பொற்றோருக்கும் ஆன்மீக பயணத்தை தொடர உதவுவது நல்லது. இந்த மாதத்தின் முதல் பாதியில் சூரிய கிரகணம் வேலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே புதிதாக முயற்சி செய்ய தயங்க வேண்டாம். முன்னேறிச் செல்லுங்கள் கண்டிப்பாக வெகுமதி நிச்சயம். சரி வாங்க உங்கள் உடல் நலம், காதல் வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் தொழில் இவற்றை பற்றி உங்கள் ராசி பலன் என்ன சொல்லப் போகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

உடல் நலம்

உடல் நலம்

மன அழுத்தம் மற்றும் பயமே நிறைய உடல் உபாதைகள் வர காரணமாக அமையும். உங்கள் அவசர வேலை நாட்களில் கூட ஆரோக்கியமான முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள். இது உங்கள் உடல் நலனை காக்கும். வயிற்றில் பிரச்சினை ஏற்படும். நீங்களாகவே மருந்து எடுப்பதை தவிர்த்து மருத்துவரை நாடிச் செல்வது நல்லது. உங்கள் உடல் எடை குறியீட்டு எண்ணை கண் காணியுங்கள். அதன் படி உடல் எடையை பேணுவது நல்லது. இதய மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனப் பயணம் விபத்தை உண்டாக்கி நீண்ட நாள் ஓய்வெடுக்க வேண்டிய நிலை உருவாகலாம். பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் உடலுக்கு நல்லது. உங்கள் உடல் எடையையும் கவனமாக கண்காணித்து ஆரோக்கியமான உணவை எடுத்து வாருங்கள்.

தொழில்

தொழில்

இந்த மாதம் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. உங்களுக்கு நிறைய வேலைகள் இருந்தாலும் ஒன்றை தேர்ந்தெடுத்து கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் வாயை கட்டுப்படுத்த வில்லை என்றால் சக ஊழியர்களிடம் பிரச்சினை ஏற்படலாம். உங்கள் கடின உழைப்பு கண்டிப்பாக பாராட்டப்படும். உங்கள் பொறுமைகள் சோதிக்கப்படும். அதே நேரத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். சில இக்கட்டான சூழ்நிலையை உங்கள் மூளையை கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கும். உங்கள் சுய நம்பிக்கையை மேலோங்கி வையுங்கள். கூட்டு வேலை நல்ல லாபத்தையும் சரியான பங்களிப்பையும் ஈட்டித் தரும்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இந்த மாதம் சொத்து சம்பந்தமான விவகாரங்கள் முக்கியமாக இருக்கும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் சரியான தருணமாகும். சொத்துக்களை கையாள்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் உங்கள் துணை உங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவுவார். நல்ல லாபத்தை பெற உங்கள் வாய்ப்புகளை தொலைத்து விடாதீர்கள். போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல பலன் கிட்டும்.

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை

உங்கள் காதல் உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல சரியான சந்தர்ப்பம். இருவரும் ஒரே மாதிரியான காதலை அனுபவித்து வந்தால் சீக்கிரம் சோர்வடையலாம். எனவே உங்கள் துணையுடன் நேரத்தை செலவழித்து புதுவிதமான கொண்டாட்டத்தை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் எண்ணங்களை பகிரவும் உங்கள் துணை உங்களைப் பற்றி புரிந்து கொள்ளவும் உதவும். உணர்வுப் பூர்வமான பங்களிப்பு உங்கள் உறவை உயர்த்தும். திருமண உறவில் இருப்பவர்கள் உங்கள் துணையுடன் நேரத்தை செலவழிப்பது நல்லது. உங்களுக்கு ஒரு குடும்பம் மற்றும் துணை இருப்பதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். உங்கள் இதயத்தை முன்னெடுத்து செல்லுங்கள் உங்கள் காதல் வாழ்க்கை வசந்தமாகும்.

இந்த மாத அதிர்ஷ்டம்

இந்த மாத அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டமான நிறங்கள் :சிவப்பு மற்றும் மெரூன்

அதிர்ஷ்டமான எண்கள் :3 மற்றும் 7

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Monthly Predictions Of Virgo For June 2018

as a person, you are determined and also seem to have strong willpower, which are the positive aspects of your zodiac
Desktop Bottom Promotion