Just In
- 11 hrs ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 14 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 14 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 16 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News
நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு
- Automobiles
2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...
- Movies
இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்!
- Finance
எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..!
- Technology
ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தொழில் சுமாராகவே போகும் மகர ராசிக்காரர்கள்… இந்த மாதம் எப்படி நடந்துக்கணும்?
மிகவும் பொறுப்பாக செயல்படும் மகர ராசி அன்பர்களே!.பாரம்பரிய மரபுகளை மதிக்கும் நீங்கள் இயற்கையை ரசிக்கும் ரசிகர்கள் நீங்கள். இயற்கையாகவே தனித்துவத்துடன் செயல்படுவீர்கள்.
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் முன்னேற்றம் காண்பவர்கள். சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு மற்றவர்களை நிர்வகிக்கும் திறமை பெற்றவர்கள் நீங்கள். இந்த ராசிக்காரர்கள் திடமான திட்டத்தை உருவாக்கி அவர்களின் அனுபவத்தின் மூலமாகவே நிபுணத்துவம் பெற்று உயர் மட்டத்திற்கு முன்னேறுவார்கள்.
இப்படிப்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் எந்த மாதிரியான அணுகூலன்களை கொடுக்கப் போகிறது என்பதை இந்த மே 2018 ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்வோம்.உங்கள் தொழில், பொருளாதாரம், உடல் நலம், காதல் வாழ்க்கை இவற்றை பற்றிய ஒரு எதிர்கால அலசல்களை இப்பொழுது காணலாம்.
உடல் நலம்
கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆயுள் காலம் நீடிக்கும். அதே நேரத்தில் நச்சுக்களை உடலிருந்து வெளியேற்றுதல், மசாஜ் போன்றவை நல்ல பலனை அளிக்கும். நல்ல உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது முக்கியம்.
தொழில்
இந்த மாதம் தொழிலை பொருத்த வரை கடினமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். எந்த ஒரு வேலையையும் முடிக்க கூடுதல் முயற்சியை விதைக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் சிக்கலை சமாளிக்க உடனடி தீர்வும் எடுக்க தயாராக இருப்பீர்கள். உங்கள் சொந்த திறமை மற்றும் முயற்சியே கொண்டே இந்த மாதம் முழுவதும் ஓடிக் கொண்டு இருப்பீர்கள்.
பொருளாதாரம்
இந்த மாதம் பொருளாதார ரீதியாக சாதகமான நிலை உருவாகவில்லை. அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர்கள் கடுமையான நேரத்தை சந்திப்பதோடு இழப்புகளையும் பெறுவார்கள். எனவே முன்னரே பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
காதல்
உங்கள் காதல் வாழ்க்கை சிறக்க இது சரியான மாதமாகும். இந்த மாதத்தின் முதல் வாரத்தில் சின்ன சின்ன காதல் விஷயங்கள் மூலம் உங்கள் துணையை ஸ்பெஷலாக உணர வைப்பீர்கள். வேலை விஷயமாக பயணம் மேற்கொண்டாலும் துணையுடனும் போதிய நேரத்தை செலவிடுவது நல்லது. மே 21 ஆம் தேதி வரை காதல் உரையாடல்கள் , கொண்டாட்டம், சந்தோஷம் மற்றும் வதந்திகள் என்று ஓரே குதூகலமாக செல்லும்.
இந்த மாத அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான எண்கள் :3,21,66,83 மற்றும் 84
அதிர்ஷ்டமான தேதிகள் :4,5,6 14,15,23,24, 31.
அதிர்ஷ்டமான நிறங்கள் :நீல நிறம், பைன் மற்றும் பச்சை.