Just In
- 2 hrs ago
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- 15 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 17 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 17 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
Don't Miss
- Movies
தபாங் 3... இவர் வாய்ஸில்தான் தமிழ் பேசுகிறார் சோனாக்ஷி
- News
உலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்
- Technology
காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா?
- Automobiles
இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- Finance
அமூல் பால் விலை ஏற்றம்..!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோபக்கார கடக ராசிக்காரர்களே இந்த மாதம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
யாராலும் கணிக்க முடியாத குணத்தை கொண்டுள்ள கடக ராசி அன்பர்களே!. இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், பாதுகாப்பற்றவர்களாகவும், சந்தேகமான மன நிலையுடன் காணப்படும் நபராகவும் இருப்பார்கள். இவர்கள் நெருக்கமான உறவுகளால் காயப்படுபவர்களாகவும், நிராகரிக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் இவர்கள் கற்பனை திறன் வாய்ந்தவர்களும் கூட.அதே நேரத்தில் சூழ்நிலையை சமாளிக்க வலுவான மன நிலையுடனும் உறுதியுடனும் செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
உங்களுக்கு இந்த மே மாதம் எந்த மாதிரியான அணுகூலன்களை கொடுக்கப் போகிறது என்பதை தொழில் ரீதியாக, உடல் நலம், பண வரவு மற்றும் குடும்ப நிலை, அதிர்ஷ்ட எண், தேதி மற்றும் நிறங்கள் இவற்றின் அடிப்படையில் உங்களுக்கு நாங்கள் கூறப் போகிறோம். இது உங்களுக்கு வரப் போகிற காலத்தை நன்கு புரிந்து கொண்டு வெற்றி காண உதவும்.
உடல் நலம்
இந்த மாதம் உங்கள் உணவுப் பழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உடம்பில் இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல தூக்கம் நல்ல உடல் நலத்துடன் இருக்க உதவும்.
தொழில்
இந்த மாதம் உங்கள் தொழில் சிறக்க ஏதுவான மாதமாகும். தொழில் சார்ந்த பயணங்கள் நன்மைகளை ஈட்டித் தரும். அதே நேரத்தில் அதிர்ஷ்டத்தின் வழியாக பெரிய வாய்ப்புகள் வந்து சேரும். எனவே இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்கள் கையில்.
பொருளாதாரம்
இந்த மாதத்தில் உங்கள் பொருளாதாரத்தை பொருத்த வரை எந்தவொரு பெரிதான மாற்றமும் நிகழப் போவதில்லை. போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பணக் கஷ்ட மாதமும் கூட. எனவே இந்த துறையில் இருப்பவர்கள் முன்னரே பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. எனவே உங்கள் பொருளாதாரத்தை சிக்கனமாக செலவழித்து சேமித்து செயல்படுவது பணத் தட்டுப்பாட்டை சமாளிக்க உதவும்.
காதல்
இந்த மாதம் உங்கள் துணையுடனான உறவு காதல் உணர்வை விட உணர்வுப் பூர்வமான ஒன்றாக இருக்கும். உங்கள் துணையிடமிருந்து நிதி சுதந்திரம், செலவு செய்ய உரிமை போன்றவற்றை பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நாட்களை அன்புடன் கொண்டாடுவீர்கள். கல்யாணமாகதவர்களுக்கு நட்பு வட்டாரத்தின் வழியாகவே ஒரு காதல் துணை அமைய வாய்ப்புள்ளது. இருப்பினும் பொருளாதார ரீதியான சில சங்கடங்களையும் காதல் உறவுகளில் சந்திக்க நேரிடும்.
இந்த மாத அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான எண்கள் :17,40,46,61மற்றும் 76
அதிர்ஷ்டமான தேதிகள் :6,7,8,17,18,25,26
அதிர்ஷ்டமான நிறங்கள் :சிவப்பு, ஆப்பிள் பச்சை, மற்றும் நீல வான நீறம்.