For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இப்படியெல்லாமா பிரச்சனை வரும்?

தென்னாப்ரிகாவின் கேப் டவுன் நகர் தான் உலகிலேயே தண்ணீர் பயன்படுத்தாத முதல் நகரம் என்ற பெயரை பெறப்போகிறது. ஏப்ரல் மாதத்திலிருந்து அங்கு சுத்தமாக தண்ணீர் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

|

இன்று உலக தண்ணீர் தினம். எதற்காக இந்த தினம் இதற்கெல்லாம் ஒரு தினமா? இந்த தினத்தை எப்படி அனுசரிப்பது அல்லது எப்படி கொண்டாவது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் பொது ஜனங்கள் படிக்க வேண்டிய முக்கியமான கட்டுரை.

அடுத்த மாதத்திலிருந்து தண்ணீர் பயன்படுத்த தடை, ஏனென்றால் நாட்டில் சுத்தமாக தண்ணீர் இருப்பு இல்லை, மழை இல்லாத காரணத்தினால் நீர் ஆதாரங்கள் எல்லாமே வரண்டு கிடக்கிறது. அதனால் தான் இந்த அறிவிப்பு என்கிறார்கள்.

என்றைக்காவது இந்த நிலையை யோசித்திருக்கிறோமா? போர்ல தண்ணீ வர்லையா லாரி தண்ணீ யூஸ் பண்லாம்.குடிக்கிறது கார்ப்பரேஷன் வாட்டர் வர்லயா? கேன் வாட்டர் வாங்கிக்கலாம் ப்யூரிஃபையர் யூஸ் பண்லாம் என்று மாற்று வழிகளை நாம் வைத்திருப்போம். ஆனால் அப்படி எந்த மாற்று வழிக்கும் வழியில்லை என்றால் என்ன செய்வது? தண்ணீருக்கு எங்கே போவது.....

இப்படியொரு நிலைமை எல்லாம் நமக்கு வராது. என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? கேப் டவுன் நகரின் கதையை தெரிந்து கொள்ளுங்கள். ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து அங்கே தண்ணீர் முற்றிலுமாக பயன்படுத்த தடை. உலகளவில் தண்ணீர் இல்லாத நகரம் என்ற பெரும் பெயரை வாங்கியிருக்கிறது கேப் டவுன். அங்கு வாழக்கூடிய சுமார் நான்கு கோடி மக்களும் வேறு இடத்தை நோக்கி குடிபெயர துவங்கியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Methods Followed By Cape Town To Avoid Water Scarcity

Methods Followed By Cape Town To Avoid Water Scarcity
Story first published: Thursday, March 22, 2018, 17:00 [IST]
Desktop Bottom Promotion