For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

11:11 எண்ணை பார்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உலகில் நல்லது என்று ஒன்று இருந்தால் கெட்டதும் இருக்கத்தானே செய்கிறது. அதுபோலத்தான் சாத்தானுக்கு 666 என்ற எண் இருப்பதை போல கடவுளுக்கு 11 11 என்ற எண் இருக்கிறது. இதனை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்

|

இந்த உலகில் நன்மை - தீமை, கடவுள் - பேய், இரவு - பகல் என அனைத்திற்குமே எதிர்மறையாக ஒன்று உள்ளது. அதன்படி 666 என்பது சாத்தானுடைய எண்ணாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது. சாத்தானின் எண்ணாக ஒரு எண் இருந்தால் கடவுளின் எண்ணாக ஒரு எண் நிச்சயம் இருக்கவேண்டுமல்லவா? அப்படி கடவுளின் எண்ணாக கருதப்படும் எண்தான் 1111.

Meaning and effects of angel number

Image source : c.e.b/ Flickr

இந்த உலகத்தில் நிகழும் அனைத்துமே எண்களின் அடிப்படையில்தான் என்று ஆன்மீகமும் சொல்கிறது, அறிவியலும் சொல்கிறது. நீங்கள் இதை கவனிக்காமல் இருந்திருக்கலாம் உங்கள் கடிகாரத்திலோ அல்லது ஏதாவது வாகனத்திலோ வேறு எங்காவதோ இந்த எண்ணை பார்த்தால் உங்களுக்குள் நேர்மறை சக்திகள் அதிகரித்திருக்கும். நீங்கள் அதனை எதேர்ச்சையாக நடப்பது என்று நினைக்கலாம் ஆனால் அனைத்திற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது, அது இந்த கடவுளின் எண்ணாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
11 11 அர்த்தம்

11 11 அர்த்தம்

கடிகாரம், வீட்டு எண், வண்டி எண் ஏன் உங்கள் முகப்புத்தகத்தின் விருப்பங்கள் இவற்றில் எது 11 11 என இருந்தாலும் அது உங்களுக்கு கடவுளிடம் இருந்து கிடைக்கும் செய்தி ஆகும். இது ஆரம்பித்தது கிரேக்கத்தில்தான், கிரேக்க தத்துவ ஆசிரியர் பித்தாகரஸ்தான் முதன் முதலில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அதிர்வு பண்பு இருக்கும் என கூறினார். நவீன அறிவியலும் உலகம் எண்களின் அடிப்படையில்தான் இயங்குகிறது என கூறுகிறது, இந்த எண்கள் மனிதர்கள் மீதும் விலங்குகள் மீதும் மாற்றங்களை உண்டாக்க கூடியது. எண்கணிதத்தின் படி 11 என்பது முதன்மை எண் என கருதப்படுகிறது. 11 அறிவு, ஆற்றல், மற்றும் சக்தியை குறிப்பதாக நம்பப்படுகிறது. இதனுடன் மற்றொரு 11 இணையும்போது அது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த எண்ணை நீங்கள் பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சரியான பாதையில்தான் செல்கிறீர்கள் என கடவுள் உங்களுக்கு உணர்த்துவதாக கூறப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 11 11 ஒரு நல்ல சகுனம். இது உங்களை வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்லும்.

எண்கணிதத்தில் 11 11

எண்கணிதத்தில் 11 11

1 என்பது எப்பொழுதும் தலைமை பண்பின் எண்ணாக அறியப்படுகிறது. அப்படி இருக்கையில் 11 11 என்பது ஆற்றலின் மொத்த எண்ணாகும். எண்கணிதத்தில் இது வாய்ப்புகள் கிடைக்க போவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. எண்கணிதத்தில் 11 மிகவும் சக்திவாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது. இது நம்பிக்கை, உள்ளுணர்வு, விழிப்புணர்வு போன்றவற்றின் எண்ணாகும். இது அனைத்து உணர்வுகளையும் பெருக்கக்கூடியது.

வேண்டியது கிடைக்கும்

வேண்டியது கிடைக்கும்

11 11 ஐ பார்த்தால் உடனடியாக நீங்கள் விரும்புவதை வேண்டிக்கொள்ளுங்கள். ஆம் இந்த எண்ணில் ஒரு சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. உண்மையில், உங்கள் எண்ணங்களை நீங்கள் விரும்புவதை நோக்கி நேர்மறையாக கவனம் செலுத்துவது இது சக்தியை கொடுக்கும். இந்த எண்ணை நீங்கள் பார்க்கும்போதெல்லாம் அது நீங்கள் விரும்புவதை உங்களுக்கு நியாபகப்படுத்தும். மற்ற சக்திகள் உங்களை உற்சாகமூட்டினாலும் இந்த எண் உங்களை அவற்றை விட அதிகமாக உற்சாகமூட்டும்.

11 11 பார்த்தபின் என்ன செய்ய வேண்டும்?

11 11 பார்த்தபின் என்ன செய்ய வேண்டும்?

11 11 எண்ணை நீங்கள் அதிகம் பிறக்க நேர்ந்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் வெற்றிப்பாதையில் சரியாய் செல்வதாக உங்கள் ஆன்மா கூறுகிறது. ஒருவேளை ஒரே நாளில் 11 11 ஐ நான்கு அல்லது ஐந்து இடங்களில் பார்க்க நேர்ந்தால் உங்களுக்குள் இருக்கும் நேர்மறை சக்தி அதிகரிக்கும். இது பலருக்கும் நேர்ந்த உண்மை அனுபவமாகும். இந்த காலகட்டத்தில் அன்பாகவும், பொறுமையாகவும் நீங்கள் கடவுளால் வழிநடத்தப்படுவீர்கள். புரிந்துகொள்ளுங்கள் நமக்கும் மேலென ஒரு சக்தி நிச்சயம் உள்ளது.

11 11 அர்த்தம் மற்றும் உங்கள் வாழ்க்கை

11 11 அர்த்தம் மற்றும் உங்கள் வாழ்க்கை

உங்களுக்குள்ளே கேட்டுப்பாருங்கள் " 11 11 எனக்குள் என்ன மாற்றத்தையும் ஏற்படுத்தும்? ". இந்த எண்ணை பார்க்கும்போது உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கிறது? எந்தவகையான எண்ணங்கள் தோன்றுகிறது? என்பதை உணருங்கள். இந்த எண்ணை நீங்கள் பார்க்கும் நேரம் ஒவ்வொரு முறையும் மாறுபடும். நீங்கள் பார்க்கும் நேரத்தை பொருத்து " கவனமாய் இருங்கள்" அல்லது " நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் " என பொருள் மாறுபடும்.

ஏற்றுக்கொள்ள தயாராய் இருங்கள்

ஏற்றுக்கொள்ள தயாராய் இருங்கள்

வளர்ச்சிக்காக புதிய வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள தயாராய் இருங்கள். 11 11 குறியீடு உணர்த்துவது என்னவென்றால் மாற்றம் உங்களுக்குள் இருந்துதான் தொடங்குகிறது. நீங்கள் கடந்துவரும் உணர்வுகள், வாய்ப்புகள், மனிதர்கள் என அனைத்தும் உங்கள் ஆன்மாவால் உந்தப்பட்டதுதான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பொறுமையாய் இருங்கள்

பொறுமையாய் இருங்கள்

நாம் வாழ்ந்துவரும் சூழ்நிலை நம்முடைய மனஅழுத்தத்தை அதிகரித்து நம்மை பதட்டமாகவே வைத்திருக்கிறது. அதுபோன்ற எழுச்சியுறும் தருணங்களில் பொறுமையாகவும், எளிமையாகவும் இருங்கள். கவனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்ய பழகிக்கொள்ளுங்கள், நீங்கள் எவ்வளவு பொறுமையாய், பொறுப்புடன் செயல்படுகிறீர்களோ அவ்வளவு வளர்ச்சியை அடைவீர்கள்.

நன்றியுணர்ச்சி

நன்றியுணர்ச்சி

வாழ்க்கை நன்றியுணர்ச்சியை அடிப்படையாக கொண்டது. சிறிய வழிகாட்டுதலாய் இருந்தாலும் அதற்கு நன்றி கூறும் பழக்கம் உங்கள் ஆன்மாவை எளிதில் விழிப்படைய செய்யும். நன்றியுணர்வு உங்கள் இதயத்தை திறக்கும், உங்கள் இதயம் திறந்திருக்கும்போது உங்கள் எண்ணங்கள் விரிவடைய வாய்ப்புகள் அதிகம். சில இன மக்கள் இன்றும் பூமிக்கு நன்றி சொல்வதை ஒரு சடங்காக வைத்திருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது உங்களால் ஏன் அவர்களில் ஒருவராக இருக்கமுடியாது.

தேவைப்படும்போது வழிகாட்டுதலை கேளுங்கள்

தேவைப்படும்போது வழிகாட்டுதலை கேளுங்கள்

நம் அனைவருக்குமே நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நிச்சயம் ஒருவருடைய வழிகாட்டுதல் தேவைப்படும். உங்களுக்கு அறிவுரையோ அல்லது உதவியோ தேவைப்படும்போது நீங்கள் நம்பும் ஒருவரிடம் செல்லுங்கள். உங்கள் நெருங்கிய நண்பரிடமோ, உறவினர்களுடனோ அல்லது ஆன்மீக வழிகாட்டியுடனோ மனம்விட்டு பேசுங்கள், இல்லையனில் உங்கள் மனசாட்சியுடன் பேசுங்கள் அதுதான் மிகச்சிறந்தது. எளிய முறையில் சிறந்த அறிவுரை கிடைக்க ஒரேவழி இறைவழிபாடுதான். அது அல்லாவோ, இயேசுவோ அல்லது ராமரோ நீங்கள் நம்பும் கடவுளை வழிபடுங்கள், சரியான கதவு திறக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Meaning and effects of angel number

According to numerology, the number 11 is a “master number” which signifies intuition, insight, and enlightenment. How 666 thinks as a sign of Evil in a same way 11 11 thinks as a sign of angel. This number always increase the positive enery around you.
Desktop Bottom Promotion