For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 வயது குழந்தைக்குள் அடைப்பட்டிருக்கும் 23 வயது ஆண் #RealLifeStory

2 வயது குழந்தைக்குள் அடைப்பட்டிருக்கும் 23 வயது ஆண் #RealLifeStory

By Staff
|

இது ஒரு குட்டி மனிதனின் கதை... இவரது பெயர் மன்ப்ரீத் சிங். இவரது உடல் எடை ஐந்து கிலோ. உயரம் அறுபது சென்டிமீட்டர் தான். இவரது உண்மையான புன்னகை எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுகிறது. சில சமயங்களில் இவர் செய்யும் கேலியான ட்ரிக்ஸ் இவர் குட்டி மனிதன் அல்ல சுட்டி மனிதன் என்பதை உணர செய்யும்.

Real-life Story Of The Man Who Was Trapped In A Child’s Body

குட்டி மனிதன், குட்டி மனிதன் என்கிறீர்களே... அப்படி என்ன இவருக்கு வயது...? என்று நீங்கள் கேட்கலாம். மன்ப்ரீத் சிங்கின் வயது 23. ஆனால், பார்ப்பதற்கு இரண்டு வயது குழந்தை தோற்றத்தில் இருக்கிறார். இந்தியாவின் சிறிய கிராமம் ஒன்றில் பிறந்த மன்ப்ரீத் சிங்கிற்கு ஏதோ மரபணு கோளாறு. அவரது வளர்ச்சி இரண்டு ஆண்டுகளுக்குள் நின்றுவிட்டது.

அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் செல்லம் மன்ப்ரீத் சிங். சிலர் மன்ப்ரீத் சிங்கை கடவுளின் அவதாரமாகவும் காண்கிறார்கள்.

எந்த ஊர்?

இந்தியாவின் வடமேற்கு மாநிலமான பஞ்சாபில் உள்ள மானசா என்ற பகுதியில் பிறந்தவர் மன்ப்ரீத் சிங். இவரது உடல் எடை 5 கிலோ தான். உயரம் 60 செ.மீ மட்டுமே. வளர்ச்சி குன்றி போனதன் காரணத்தால் இவரால் நடக்க இயலாது. இவரால் வெகு சில வார்த்தைகள் மட்டுமே பேச இயலும். மா, மாமா போன்ற வார்த்தை மட்டுமே இவர் பேசுகிறார். நடக்க முடியாத நிலையினால், எங்கு செல்ல வேண்டுமானாலும் மன்ப்ரீத் சிங்கை யாரேனும் தூக்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

எப்போதிருந்து?

பிறக்கும் போது பிற குழந்தைகளை போல மன்ப்ரீத் சிங்கும் ஆரோக்கியமாக தான் இருந்துள்ளார். ஆனால், பேசி, நடந்து பழகும் முன்பே... ஏறத்தாழ ஒன்றில் இருந்து இரண்டு வருடத்திற்குள்ளேயே மன்ப்ரீத் சிங்கின் வளர்ச்சி தடைப்பட்டு போனது. இன்றும் மன்ப்ரீத் சிங் காண்பதற்கு ஒரு கைக்குழந்தை போல தான் இருக்கிறார். இவரை முழுவதும் அரவணைத்து வளர்த்து வருவது இவரது மாமாவும், அத்தையும் தான்.

வினோதங்கள்...

மன்ப்ரீத் சிங்கின் பாதங்கள் மட்டும் கொஞ்சம் வீங்கி காணப்படுகிறது. உடலை விட முகம் கொஞ்சம் பெரியதாக இருக்கிறது. தோல் கொஞ்சம் தொங்கிய நிலையில் இருக்கும். இவரது மாமா தான் மன்ப்ரீத் சிங்கால் சில வார்த்தைகள் மட்டுமே பேச முடியும். பெரும்பாலும் தனது செய்கை மூலமாகவே மன்ப்ரீத் தொடர்பு கொள்வார் என்று கூறுகிறார்கள். மன்ப்ரீத் சிங்கால் சிரிக்க முடியும், கத்த முடியும், அழ முடியும். ஆனால், சரியாக பேசவோ, உரையாடவோ முடியாது.

சகோதரர்கள்...

மன்ப்ரீத் சிங்கிற்கு ஒரு சதோதரி இருக்கிறார். அவருக்கு வயது 17. இவருக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். அவர்கள் இருவரும் பிற குழந்தைகளை போல இயல்பான வளர்ச்சி, குணாதியங்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்களது மன, உடல் வளர்ச்சி சாதாரணமாக தான் இருக்கிறது. மன்ப்ரீத் சிங் மட்டும் தனது மாமா, அத்தையுடன் வாழ்ந்து வருகிறார். பிறரை காட்டிலும், இவர்களோட மன்ப்ரீத் சிங் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்கள்.

பாசம்...

ஒருசில முறை மன்ப்ரீத் சிங்கை அவர்களை வீட்டில் விட்டு வந்துள்ளனர். ஆனால், அந்த சமயத்தில் அவர் சாப்பிடாமல் அடம் பிடித்துள்ளார். மன்ப்ரீத் சிங்கின் மனநிலை மாமா, அத்தையுடன் இருக்கும் போதுதான் மகிழ்சியாக இருக்கிறது. இந்த காரணத்தால் மன்ப்ரீத் சிங்கை அவர்களே தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

மன்ப்ரீத் சிங் வாழ்ந்து வரும் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் சிலர் இவரை கடவுளின் அவதாரமாக பார்க்கிறார்கள். அருகாமையில் அமைந்திருக்கும் வேறுசில கிராமங்களை சேர்ந்த மக்களும் மன்ப்ரீத் சிங்கை காண்பதற்காகவே வந்து செல்கிறார்கள். இவரிடம் ஆசீர்வாதம் எல்லாம் வாங்கி செல்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

சமூக வலைத்தளங்களில் மன்ப்ரீத் சிங்கின் கால்களில் விழுந்து வணங்குவது போன்ற வீடியோக்களும் பரவி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பாதிப்பு இது?

மருத்துவர்கள் மன்ப்ரீத் சிங் Laron Syndrome எனும் அரிய வகை மரபணு கோளாறு கொண்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஏழை குடும்பத்தை சேர்ந்ததால்.. இவருக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கை எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

இந்த Laron Syndrome ஏற்பட காரணமாக இருப்பது இன்சுலின் ஃபாக்டர் 1, ஐ.ஜி.எப் - 1 போன்ற ஹார்மோன் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் தான் செல் வளர்சிகளை ஊக்குவித்து, புதிய செல்களாக பிரிந்து உருவாக செய்கிறதாம்.

மன்ப்ரீத் சிங்கின் எதிர்காலத்தை கண்டு இவரது குடும்பத்தார் அச்சம் கொண்டுள்ளனர். பல்வேறு மருத்துவர்களிடம் இவரை அழைத்து சென்றாலும். அதன் பிறகு அவர்கள் கூறும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்ய பணம் இல்லாத காரணத்தால் வருந்தி வருகிறார்கள்

English summary

Real-life Story Of The Man Who Was Trapped In A Child’s Body

"This young man was trapped in a child’s body due to a mysterious condition and seems like he has become the latest sensation on the internet with his innocent smile that is grabbing all the attention in the world
Story first published: Monday, May 7, 2018, 17:39 [IST]
Desktop Bottom Promotion