For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்ணைப் பற்றி கீழ்த்தரமாக கமெண்ட் அடித்த நபருக்கு கிடைத்த பதிலடியை பாருங்க!

விமானத்தில் தனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பற்றி மோசமாக கமெண்ட் செய்த நபருக்கு என்ன நடந்தது

|

ஒருவரது உருவத்தைப் பார்த்தோ அல்லது உடலமைப்பார்த்தோ கிண்டல் செய்வது எவ்வளவு மோசமான ஒரு செயல் என்பதை இந்த உண்மை சம்பவம் உணர்த்துகிறது. பிறரைப் பற்றி பேசும் போது அந்த வார்த்தைகள் அந்த நபர் கேட்டால் எவ்வளவு காயப்படுத்தும் என்று யாருமே நினைப்பதில்லை. அப்படி ஒரு நொடி யோசித்தாலும் அது போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை யாரும் பேச மாட்டார்கள்.

சவனாஹ் பிலிப்ஸ் என்ற பெண்மணி விமான பயணத்தின் போது தான் சந்தித்த மிக மோசமான கமெண்ட்டும் அதன் பிறகு நடந்த விஷயங்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சவனாஹ் செய்த செயலை பாராட்டி ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது சுவனாஹிற்கு. புயல் காரணமாக மாலையில் கிளம்ப வேண்டிய விமானம் மறுநாள் காலை ஒத்தி வைக்கப்பட்டது. எப்போதும் இப்படி தாமதமாக நேரம் மாற்றி கிளம்பினால் எங்களுக்கான சீட் எடுத்துக் கொள்வதில் சிக்கல் இருக்கும்.

அவர்கள் ஒதுக்குகிற சீட்டில் தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

#2

#2

மறுநாள் காலை விமானம் ஏறிவிட்டேன். பின்னால் வருபவர்கள் என்னைக் கடந்து சென்று உட்கார சிரமப்படுவார்கள் என்பதால் உள்பக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டேன் எனக்கு அடுத்து ஒரு சீட் காலியாக இருந்தது.

நான் இரண்டு குழந்தைகளின் தாய் அதீத குண்டும் கிடையாது அதே போல ஒல்லியும் இல்லை குழந்தைகள் பிறந்த பிறகு வழக்கம் போல சற்றே எடை கூடியிருந்தேன்.

#3

#3

எனக்கு அடுத்த சீட்டில் ஒரு வயதான நபர் வந்து உட்கார்ந்தார் அவருக்கு வயது அறுபதுகளில் இருக்கலாம். சன்கிளாஸ் எல்லாம் போட்டுக் கொண்டு துருதுருவென்று இருந்தார்.

சிறிது நேரம் அவரை கவனித்து விட்டு ஃப்ளைட் எப்போது கிளம்பும் எப்போது சிக்காகோ செல்வோம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

#4

#4

கிளம்புவதற்கு ஆயுத்தமான சேஃப்டி ஸ்பீச் துவங்கியது. அந்த நேரத்தில் பரபரப்பாக என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த நபர் தன் போனை எடுத்தார். கிட்டத்தட்ட பன்னிரெண்டு இன்ச் ஸ்க்ரீன் ப்ரைட்டாகவும் இருந்ததினால் என்னால் எளிதாக பார்க்க முடிந்தது.

அதில் யாரோக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார் என்னைப் பற்றி.

#5

#5

ஆம், ஃப்ளைட் ஏறிவிட்டேன். என்னருக்கில் நாற்றம் பிடித்த ஒரு குண்டுப் பெண் உட்கார்ந்திருக்கிறாள் என்று மெசேஜ் டைப் செய்து அனுப்பிவிட்டார். எழுத்தின் ஃபான்ட்டும் பெரிதாக இருந்ததினால் என்னால் தெளிவாக படிக்கவும் முடிந்தது. அந்த வார்த்தைகளை பார்த்த பிறகு சுருக்கென்று ஆகிவிட்டது.

எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட தெரியவில்லை.

Image Courtesy

#6

#6

அதன் பிறகு அவன் என்ன அனுப்பினான் என்ன செய்தான் எதுவும் தெரியாது அவன் பக்கமே திரும்பவில்லை. ஒரு பக்கம் ஆத்திரமாகவும் இன்னொரு பக்கம் இயலாமையும் சேர்ந்து அழுகையாய் வந்தது.

அதே நேரத்தில் அப்போது ஒரு வேண்டுதலும் செய்தேன் என்ன தெரியுமா? அந்த நபர் என்னிடம் எதுவும் பேச்சு கொடுத்துவிடக்கூடாது என்பது தான். ஒரு வேலை அவன் பேச ஆரம்பித்து நான் கோபத்தில் ஏதாவது திட்டிவிட்டாள்??

#7

#7

அந்த நேரத்தில் வானிலை காரணமாக ஃப்ளைட் அரை மணிநேரம் தாமதமாக புறப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இடத்தை மாற்றலாமா? இன்னும் எவ்வளவு நேரம் இவனோடு உட்கார்ந்திருக்க வேண்டும் இந்த பயணம் முழுக்க என்னால் உட்கார முடியாது பல யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது எங்களது பின் சீட்டிலிருந்து ஒரு நபர் அவனின் தோள்பட்டையை தட்டி... உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றார்.

#8

#8

அப்போதும் நான் திரும்பவேயில்லை. கண்ணீர் வந்து கொண்டிருந்ததால் குனிந்து கண்ணீரை துடைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன். அவன் மாட்டியிருந்த ஹெட்போனை கழற்றி என்ன எனக் கேட்டான்.

நாம் சீட்டை மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டார். தாராளமாக ஆனால் எதற்கு என்று கேட்டான் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன்.

Image Courtesy

#9

#9

நீ யாரோ ஒருவருக்கு உன்னருகில் உட்கார்ந்திருப்பவரைப் பற்றி மிக மோசமான கமெண்ட் அடித்து குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாய் அதை நான் அனுமதிக்க முடியாது.

வா... இடத்தை மாற்றிக் கொள்ளலாம் என்றார். என்னருகில் உட்கார்ந்திருந்தவர் எந்த பேச்சும் பேசவில்லை அமைதியாக இடத்தை மாற்றிக் கொண்டார். எங்களது பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் இப்போது என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்.

Image Courtesy

#10

#10

நான் அழுவதைப் பார்த்து.... சற்றே அதிர்ச்சியுடன் அவன் அனுப்பியதை பார்த்தீர்களா? என்று கேட்டார் ஆமாம்.... என்றேன். இதற்கெல்லாம் அழலாமா? தைரியமாக இருங்கள் என்று சொன்னார்.

அதன் பிறகு எங்கே செல்கிறீர்கள், குடும்பம், குழந்தைகள், வேலை எல்லா விஷயங்களையும் பேசிக் கொண்டே வந்தோம்.

Image Courtesy

#11

#11

சிக்காகோவை நெருங்கும் போது எப்படி அவன் என்னைப் பற்றி கீழ்த்தரமான மெசேஜ் அனுப்பினான் என்று தெரியும் என்று கேட்டேன். மேலே லக்கேஜ் வைக்க நின்ற போது அவன் யாருக்கோ சாட் செய்து கொண்டிருந்தான் யதார்த்தமாக அந்த குறுஞ்செய்தியை படிக்க நேர்ந்தது.

அப்போது கூட நீங்கள் அதை படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதை சும்மா விடக்கூடாது எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. பேசாமல் ஃப்ளைட் அட்டெண்டரைக் கூப்பிட்டு புகார் அளிக்கலாமா என்று கூட தோன்றியது என்றார்.

இப்போது அந்த நபர் எங்கள் குடும்ப நண்பராகிவிட்டார்.

#12

#12

அவர் பெயர் இர்வின்... இது எழுதுவதற்கு காரணம் என்னைப் பற்றி பேசிய நபரை குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கமல்ல ஒரு பெண்ணுக்கு எதிரான ஒரு செயல் வெறும் குறுஞ்செய்தி தானே என்று இருக்காமல் உடனடியாக ரியாக்ட் செய்து அந்த சூழலிருந்து என்னை விடிவித்த சேஸைப்பற்றி தான் இதில் முக்கியத்துவம் தர வேண்டிய விஷயமாய் பார்க்கிறேன்.

அந்த கமெண்ட் அடித்த நபர் யார் எங்கே இருக்கிறார் போன்ற விபரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள விரும்பவில்லை ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் உங்கள் எதிரில் ஒரு தவறு நடக்கிறது என்றால் அதற்கு உடனடியாக ரியாக்ட் செய்திடுங்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse பெண் women
English summary

Man Cursing lady in Flight See What Happens

Man Cursing lady in Flight See What Happens
Story first published: Friday, June 15, 2018, 16:12 [IST]
Desktop Bottom Promotion