For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா? - புகைப்படங்கள்!

மின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா? - புகைப்படங்கள்!

|

இந்த புகைப்படத் தொகுப்பில் காணப்படும் நபர்கள் மற்றும் அவர்களது விபரங்கள் யாவும் அறியப்படவில்லை.

ராயல் வானிலை ஆராய்ச்சி சமூகம் (RMets) கூற்றின்படி, மின்னலி வெளிப்படும் போது உருவாகும் எலக்ட்ரான்ஸ்களின் தாக்கத்தால் மேல் தோலில் இத்தகைய வடிவங்கள் உருவாகின்றன என்று கூறப்படுகிறது. பி.எம்.ஜி. ஆய்வின் படி ஒரு கோடி பேரில் ஒருவர் மின்னலின் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்று கூறப்படுள்ளது.

மின்னல் தாக்கத்தின் வேகமானது 2,70,000 mph என்று கூறப்படுகிறது. இதன் வெப்பமானது 30,000 டிகிரி செல்சியஸ் வரை இருக்குமாம். இது சூரியனின் மேற்புற வெப்பத்தை கட்டிலும் ஐந்து மடங்கு அதிகம் என்று அறியப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மின்னல் தாக்கத்திற்கு ஆளான இந்த பெண்ணின் உடலில் Fern எனப்படும் மலரற்ற தாவரத்தின் வடிவத்திலான காயங்கள் ஏற்பட்டிருப்பதை நாம் காண முடிகிறது. இதை Lichtenberg வடிவம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவரது சருமத்தில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட விளைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி மின்னல் தாக்கத்தால் சருமத்தில் விசித்திரமான பாதிப்பு கொண்ட பலரின் புகைப்படங்கள் Boredpanda இணையத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

#2

#2

இந்நபரின் கழுத்து பகுதியில் இருந்து முதுகு வரை Lichtenberg வடிவத்திலான மார்க் உருவாகி இருப்பதை நாம் காண இயல்கிறது. தோள்பட்டை, இடுப்பு வரை இது அகன்று விரிந்து காணப்படுகிறது. வருடத்திற்கு ஒரு கோடியில் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்று பிரிட்டிஷ் மெடிக்கல் பத்திரகை வெளியிட்ட தகவல் மூலம் அறியப்படுகிறது.

#3

#3

இவர் மற்றுமொரு நபர்.. இவரது கழுத்தில் இருந்து நெஞ்சு பகுதி வரை Fern செடியை போல வடிவம் பரவி இருக்கிறது. மின்னலின் தாக்கம் மற்றும், எந்தளவு உடலில் அந்த தாக்கம் பரவி இருக்கிறது என்பதை சார்ந்து உடலில் உருவாகும் காயங்கள் / வடிவ அமைப்பு வேறுப்பட்டு காணப்படுகிறது.

#4

#4

பெயர் அறியப்படாத மற்றுமொரு நபரின் கையில், சிவப்பு நிறத்திலான குறி பரவி இருப்பதை காண முடிகிறது. இது இவரது தோளில் இருந்து கையின் கீழ் பகுதி வரை நீண்டு செல்கிறது. ஒரு மின்னல் வரியில் நூறு மில்லியன் வோல்ட்ஸ் மின்சாரம் வரை இருக்க கூடுமாம். இதனால், நீண்டகால அபாயகரமான பாதிப்புகள் ஏற்படலாம்.

#5

#5

மின்னலின் தாக்கத்திற்கு ஆளான நபர் தனது சட்டையை கழற்றி தன் முதுகில் மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட தாக்கத்தை வெளிக்காட்டுகிறார். இவரது உடலில் Lichtenberg வடிவத்திலான குறிகள் உருவாகி இருப்பதை காண இயல்கிறது. முதுகில் கழுத்தில் இருந்து இடுப்பு பகுதி வரை அந்த குறி நீண்டு இருப்பதை நீங்கள் காணலாம்.

#6

#6

மற்றுமொரு பெயர் அறியப்படாத மின்னல் தாகக்கதிற்கு ஆளான இவரது உடலில் கழுத்துக்கு கீழே நெஞ்சு பகுதியில் Lichtenberg வடிவிலான குறி பரவி இருப்பதை காணலாம். மின்னலில் வெளிப்படும் போது உருவாகும் எலக்ட்ரான்ஸ் மேல் தோலில் ஏற்படுத்தும் தாக்கத்தினால் தான் இத்தகைய குறிகள் ஏற்படுவதாக அறியப்படுகிறது.

#7

#7

பார்ப்பதற்கு ஏதோ மேல் தோலில் மட்டும் தாக்கம் ஏற்பட்டிருப்பது போல காட்சி அளித்தாலும். சிலருக்கு மின்னலால் ஏற்பட்ட இந்த சரும தாக்கமானது உடலின் உட்பகுதி வரை ஏற்பட்டிருக்க கூடும் என்கிறார்கள். இதனால், அவர்களுக்கு நீண்ட கால அபாயமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

#8

#8

சமீபத்தில் Boredpanda எனும் புகைப்பட பகிர்வு இணையத்தில் வெளியான புகைப்பட தொகுப்பில்.. மின்னல் தாக்கத்தால் சருமத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விசித்திரமான குறிகள் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த தொகுப்பில் காணப்படும் நபர்கள் குறித்த பெயரோ, வேறு தகவல்களோ அறியப்படவில்லை.

#9

#9

மற்றுமொரு பெயர் அறியப்படாத மின்னல் தாக்கத்திற்கு ஆளான நபருக்கு வயிற்றின் தொப்புள் பகுதி முதல் கீழ் இடுப்பு பகுதி வரை Lichtenberg வடிவத்திலான குறி பரவி இருப்பதை இந்த படத்தில் காண இயல்கிறது.

#10

#10

இந்த நபருக்கு மின்னலின் தாக்கம் கொஞ்சம் கூடுதலாக ஏற்பட்டிருக்கலாமோ என சந்தேகிக்க கூடுகிறது. மற்றவருடன் ஒப்பிடுகையில் இவரது உடலில் பிங்க் நிறமாக இன்றி, பர்பிள் நிறத்தில் குறிகள் ஆழமாக காணப்படுகிறது. மேலும், இவரது உடலின் பெரும்பாலான இடங்களில் அந்த தாக்கத்தினால் உண்டான காயங்கள் பரவி இருக்கிறது.

All Image Source: Boredpanda

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unbelievable Photos: Look at the Lightning Strike Survivors Skin Scars.

Unbelievable Photos: Look at the Lightning Strike Survivors Skin Scars.
Story first published: Tuesday, August 14, 2018, 11:32 [IST]
Desktop Bottom Promotion