For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வடகொரிய அதிபரின் சிற்றின்ப குழு 'Pleasure Squad'. உலக தலைவர்களை அதிர வைக்கும் சுகபோக வாழ்க்கை!

வடகொரிய அதிபரின் சிற்றின்ப குழு 'Pleasure Squad'. உலக தலைவர்களை அதிர வைக்கும் சுகபோக வாழ்க்கை!

By Staff
|

தென்கொரியா வடகொரியா இரண்டுமே இரு துருவங்கள் போல வெவ்வேறு தன்மை கொண்டவை. ஒன்று கிட்டத்தட்ட ஒரு பெரிய சைஸ் சிறைச்சாலை. மற்றொன்று அனைத்து வகையிலான சுகபோக வாழ்க்கைக்கு உடையது. இதில், வடகொரியா மக்களுக்கு மட்டுமே நரகம். ஆனால், அதன் அதிபருக்கு சொர்க்கம் என்பது சில செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

Kim Jong-uns Pleasure Squad

வேண்டுமென்றே அணு ஆயுத சோதனைகள் நடத்தி ஜப்பான், அமெரிக்காவை வம்பிழுக்கும் கிம் ஜாங் உன் இன்பமயமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இவரது தந்தையின் காலத்தில் இருந்து பருவ வயது பெண்களை குறிவைத்து இழுத்து வந்து Pleasure Squad என்ற பெயரில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களை வேறுவிதமாக பயன்படுத்தி கொள்(ல்)கிறது கிம் இராணுவ அரசு என்று புகார்கள் எழுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராணுவ வீரர்கள்!

இராணுவ வீரர்கள்!

Pleasure Squadல் பெண்களை இராணுவ வீரர்களே சென்று ஒவ்வொருவராக தேர்வு செய்கிறார்கள். சில சமயம் கிராமங்களில் இருந்தும், சில சமயம் பள்ளிகளில் இருந்தும் குறி வைத்து பருவ வயது நிரம்பிய பெண்களை இராணுவத்தில் பணியாற்ற வலுக்கட்டாயமாக இழுத்து வருகிறார்கள். இவர்களை இராணுவத்தில் தனி பிரிவில் சேர்க்கிறார்கள். இதற்கு Gippeumjo அல்லது Pleasure Squad என்று பெயர்.

பரிசோதனை!

பரிசோதனை!

இந்த Pleasure Squadல் சேர்க்கப்படும் பெண்களுக்கு சீரான இடைவேளையில் பரிசோதனைகள் செய்யப்படும். இவர்களது மருத்துவ பரிசோதனையை தகவல்களை மிக பத்திரமாக காத்து வருகிறார்கள். அவர்கள் கன்னித்தன்மையுடன் இருக்கிறார்களா? ஏதேனும் செக்ஸ் சமாசாரம் நடந்துள்ளதா என்றும் கூர்ந்து கவனிக்கிறார்கள். இந்த கொடுங்கோல் ஆட்சியின் Pleasure Squad குழுவில் அடைக்கப்பட்டிருந்த பெண்களில் சிலர் இங்கிருந்து தப்பித்தும் சென்றிருக்கிறார்கள்.

மேரி கிளாரி!

மேரி கிளாரி!

கடந்த 2010ம் ஆண்டு மேரி கிளாரி என்ற பெண், Pleasure Squadல் இருந்து தப்பித்து தென்கொரியாவிற்கு சென்றுவிட்டார். தான் 15 வயதில் இருந்த போதே இந்த Pleasure Squadல் சேர்க்கப்பட்டதாகவும், எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இன்றி, தன்னை வகுப்பறையில் இருந்து அழைத்து சென்றதாகவும் மேரி கூறியுள்ளார்.

மேலும், அழைத்து சென்ற போது, இதற்கு முன் வகுப்பு மாணவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அனுபவம் இருக்கிறதா? என்று கேள்வியும் கேட்டிருக்கிறார்கள்.

செக்ஸ்!

செக்ஸ்!

கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் அதிபராக இருந்த போது, பத்தாண்டு காலம் Pleasure Squadல் இருந்ததாக மேரி கூறியுள்ளார். தான் ஒருபோதும் செக்ஸ் விஷயத்திற்காக அழைக்கப்பட்டதில்லை என்றும், ஆனால், இன்னும் ஒருசில ஆண்டுகள் இருந்திருந்தால் அவர்கள் என்னை அதற்கும் பயன்படுத்தி இருப்பார்கள் என்றும் மேரி கூறியுள்ளார்.

மிருகத்தனமாக!

மிருகத்தனமாக!

வேறு சில தகவல்கள் மூலம் அறியப்படுவது என்னவெனில், இந்த Pleasure Squadல் இருக்கும் பெண்களை மிருகத்தனமாக செக்ஸ் விஷயத்திற்கு பயன்படுத்துவதாகவும், இந்த குழுவில் இருக்கும் ஆண்கள் தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்பதும், பெண்கள் அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்துக் கொள்ள வேண்டும் என்பதும் கட்டாயமாக இருந்திருக்கிறது என்றும் அறியப்படுகிறது.

கலைக்கப்பட்டதா?

கலைக்கப்பட்டதா?

கிம் ஜாங் உன் வந்த பிறகு 2011ல் இருந்து இந்த Pleasure Squad கலைக்கப்பட்டு விட்டது என்று அறியப்படுகிறது. ஆனால், சிலர் திருமணமாகி பெண் குழந்தை பெற்றிருக்கும் கிம் ஜாங் உன், Pleasure Squad குழு மற்றும் அதனை கட்டமைத்த அதிகாரிகள் அனைவரையும் மாற்றி, புதியதாக உயரமான, அழகான பெண்களை தேர்வு செய்ய கூறி இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை என அறியப்படவில்லை.

ஆடம்பரம்!

ஆடம்பரம்!

கிம் குடும்பத்தாருக்கு ஆடம்பரமான பங்களாக்கள், அரண்மனைகள், ஹோட்டல்கள் சொந்தமாக இருக்கின்றன. இவை அனைத்தும் பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கிறது, இந்த இடங்களில் பதுங்கு குழிகள் இருக்கின்றன என்றும் அறியப்படுகிறது.

இவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்றும் அழகிய பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. கிம் குடும்பத்தார் ஒரு ப்ளே பாய் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.

தப்பித்த பெண்மணி

தப்பித்த பெண்மணி

2016ல் இங்கிருந்து தப்பித்து வந்த ஜி ஹைன் எனும் பெண் ஒருவர், தங்களை வெறும் கைகளால் கழிவறைகளை கழுவ சொல்லி துன்புறுத்துகிறார்கள் என்று புகார் கூறி இருந்தார். மேலும், அங்கே தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள சிலர் எலிகளை உண்டு வாழ்ந்து வருவதாகும் கூறினார்.

ஒட்டு மொத்தமாக வடகொரியா நாடே ஒரு பெரிய சிறைச்சாலை தான் என்றும் அங்கிருந்து தப்பித்து வந்த ஜி ஹைன் எனும் பெண்மணி தெரிவித்திருந்தார்.

அவலம்!

அவலம்!

ஜி ஹைன் எனும் இந்த பெண்மணி வடகொரியாவின் மோசமான முகாமில் ஓராண்டு காலம் இருந்தவர். இவர் இங்கிருந்து தப்பித்து சீனாவிற்கு வந்துவிட்டார். முகாமில் இருந்த போது கிட்டத்தட்ட மரணத்துடன் போராடி வந்ததாகவும். பசி கொடுமையில் இருந்ததாகவும் அப்பெண்மணி தெரிவித்துள்ளார்.

என்ன தான் நடக்கிறது?

என்ன தான் நடக்கிறது?

இவர் அம்னெஸ்டி அமைப்புடன் ஒருமுறை பேசிய போது, சொல்லில் அடங்காத வண்ணம் வடகொரிய முகாம்கள் முற்றிலும் மோசமானவை என்று தெரிவித்திருந்தார். அங்குள்ள மக்கள் பசிக்காக எலிகளை உண்டு வருகிறார்கள். இப்போது, பாம்புகள், சற்று கடுமையான தாவரங்களையும் அவர்கள் பசிக்காக உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று ஜி ஹைன் எனும் அந்த பெண்மணி கூறியுள்ளார்.

1990களில் மட்டுமே இந்த முகாமில் நாற்பது இலட்சம் பேர் இறந்திருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில் வடகொரியா நாடும், நாட்டு மக்களும் எந்த கதியில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே நடப்பது என்ன? ஒருவேளை இவை எல்லாம் கட்டுக்கதைகளாக பரப்பிவிட படுகின்றனவா? என பல கேள்விகள் எழுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kim Jong-un's Pleasure Squad

Kim Jong-un's secret "Pleasure Squad" includes schoolgirls as young as 13, it has been claimed.
Story first published: Tuesday, June 12, 2018, 10:02 [IST]
Desktop Bottom Promotion