For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மனதை குழப்பும் விஷயங்களும், சைக்கலாஜிக்கல் உண்மைகளும்!

உங்கள் மனதை குழப்பும் விஷயங்களும், சைக்கலாஜிக்கல் உண்மைகளும்!

|

நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களுக்கும், நமக்குள் ஏற்படும் தாக்கங்களும் வேறு ஒரு நபரால் நடப்பவை அல்ல. அவரவர் வாழ்வில் அவரவர் காணும் வெற்றி, தோல்வி; இன்பம், துன்பம்; சங்கடங்கள், சந்தோஷம் என அனைத்துக்கும் அவரவர் தான் காரணம்.

என்றோ, எங்கோ நாம் செய்த செயல், நமது எண்ணத்தின் வெளிபாடு, நாம் பயன்படுத்திய வார்த்தைகளின் தொடர்ச்சி தான் நாம் பிற்காலத்தில் காணும் வெற்றி, தோல்விக்கு காரணமாகிறது.

நிறைய வருடத்திற்கு நீங்கள் யாருக்கோ உதவி செய்திருக்கலாம்.. உங்களுக்கு கஷ்டம் என்று வரும் போது.. அவர் எங்கிருந்து நேரில் வந்தார் என்று தெரியாது... உங்களுக்கு உதவி செய்தி சென்றிருப்பார்.

நிச்சயம் நாம் இங்கே காணவிருக்கும் மனோத்தத்துவ உண்மைகள் அதன் தாக்கங்கள் நீங்கள் உங்கள் வாழ்விலும் அனுபவித்திருக்கலாம்... அட! ஆமால.. அன்னிக்கி அப்படி நடந்ததுக்கு இது கூட காரணமா இருக்குமோ என்று வியக்க வைக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒருவேளை ஒரு நபர் உங்களை வெறுக்கிறார்கள், ஒதுக்குகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அந்த நபரை நீங்கள் மிகவும் நேசித்து வருகிறீர்கள். அப்போது உங்களுக்குள் ஒரு வலி ஏற்படும். அந்த வலி ஏன் ஏற்படுகிறது என்று என்றாவது நீங்கள் உணர்ந்தது அல்லது யோசித்தது உண்டா? நமக்கு பிடித்தவர்கள் நம்மை வெறுக்கும் / ஒதுக்கும் போது நமது மூளையில் ஏற்படும் ஒரு தாக்கம் தான் அப்படியான வலி போன்ற உணர்வாக வெளிப்படுகிறது.

#2

#2

சில சமயங்களில் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதேனும் பிரச்சனை குறித்து, அதன் மீது அதிக கவனம் எழுத்து யோசித்துக் கொண்டிருக்கும் போது, பல பிரச்சனைகள் எழுவது போன்ற உணர்வு வெளிப்படும். அதுவே, நீங்கள் சாத்தியக் கூறுகள் சார்ந்து யோசித்து பாருங்களேன்... தீர்வு காண நிறைய வாய்ப்புள் கிடைக்கும். இவை யாவும் நமது பார்வை மற்றும் எண்ணத்தில் தான் அடங்கி இருக்கின்றன. இதன் வெளிப்பாடு தான் ஒருவரை வெற்றியாளர் / தோல்வியாளர் என்று வகை பிரிக்கிறது.

#3

#3

சிலரை மட்டும் நாம் அடிக்கடி சந்திப்பது போல அல்லது சிந்திப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்படும். இவை யாவும் சாதாரணமாக நடப்பவை அல்ல. ஒன்று, அவர்களால் உங்கள் வாழ்க்கை மாறப் போவதாக இருக்க வேண்டும். அல்லது உங்களால் அவர்கள் வாழ்க்கை மாறப் போவதாக இருக்க வேண்டும்.

#4

#4

நீங்கள் சிரித்துக் கொண்டு தான் இருப்பீர்கள்.. திடீரென ஏதேனும் எண்ணம் உங்கள் மனதில் எழும், அதனால் டக்கென சோகமாகிவிடுவீர்கள். அது உங்கள் அனுபவமாக, ஏதேனும் நபர் குறித்தோ இருக்கலாம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? நீங்கள் எப்போதாவது எதவையாக, யாரையாவது மிஸ் செய்வது போன்ற எண்ணினால்.. உங்கள் எமோஷன் யாவும் மகிழ்ச்சியல் இருந்து சோகமாக உடனடியாக அதாவது இன்ஸ்டண்டாக மாறிவிடுகிறது.

#5

#5

அனைத்தையும் பர்சனலாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், அனைவரும் நீங்கள் நினைக்கும் அளவிற்கு உங்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இது உங்களுக்கும் பொருந்தும். உங்கள் நண்பரோ, கணவன் / மனைவியோ / உறவினரோ எதிர்பார்க்கும் அளவிற்கு நீங்கள் அவர்களை நினைத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஏனெனில், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவரவருக்கான தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனித்துவமான சூழல் இருக்கிறது. அதை தாண்டி மற்றவர் எதிர்பார்ப்பிற்காக (பூர்த்து செய்யும் அளவிற்கு) அவர்கள் வாழ முடியாது.

#6

#6

நீங்கள் அதிகமாக பேசும் பழக்கம் கொண்டிருக்கிறீர்களா? சிறிய விஷயத்தை கூட பெரிதாக பேசுவீர்களா? 2 மார்க் கேள்விக்கு 16 மார்க் அளவிற்கு விடை எழுதுவது போல பேசுவீர்களா? தயவு செய்து கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு குறையாவாக நீங்கள் பேசுகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிக மதிப்பு உங்கள் வார்த்தைகளுக்கு கிடைக்குமா? அதனால தான் மணிரத்னம் படம் மற்றும் கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்படுதோ! சைக்காலஜி படிச்சிருப்பாரு போல.

#7

#7

உங்கள் வேலையோ, உங்களுக்கு பிடித்தவர்கள் செயலோ, உங்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கலாம். அது தாள முடியாத வலியை கொடுத்திருக்கலாம். அதை எண்ணி, எண்ணி நீங்கள் பலநாள் வருந்தி இருக்கலாம். ஆனால், அந்த பெரும் வலி தான் கொஞ்ச காலம் கழித்து திரும்பி பார்க்கும் போது நீங்கள் சிறந்த / உயர்ந்த நிலையில் இருக்க காரணமாக இருக்கும். அது நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு ஊக்க சக்தியாக இருந்து உங்களை முன்னேற்ற பாதைக்கு நகர்த்தி இருக்கும்.

#8

#8

புதியதாக எதையேனும் முயற்சி செய்ய, புதிய வேலையில் ஈடுபட எப்போதும் அச்சம் கொள்ள வேண்டாம். ஏனெனில், ஒரே வேலை, ஒரே முயற்சியில் சுழற்சி முறையில் இயங்கி கொண்டே இருந்தீர்கள் எனில்., உங்கள் வாழ்க்கையும், மனதும் சோர்வடைந்துவிடும். மேலும், ஒரு எல்லையை தாண்டி உங்களால் எதையும் சிந்திக்க முடியாமல் போய்விடும். எனவே, புதிய விஷயங்களில் மனதை அலைபாய விடுங்கள், கட்டுப்பாட்டுடன்.

#9

#9

நீங்கள் மிகவும் விரும்பும் அல்லது உங்களுக்கு மிகவும் அவசியம் / தேவை என்று நினைக்கும் விஷயம் அல்லது நபரை, அது கடுமை என்று கருதி விட்டுவிடாதீர்கள். ஏனெனில், அந்த கடினத்தை காட்டிலும், அதை இழந்துவிட்டோமே என பின்னாளில் ஏற்படும் எண்ணம் மிகவும் கொடுமையானது.

#10

#10

ஒருவருக்கு வயதாக, வயதாக, அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை / சதவிகிதம் குறைய துவங்கிவிடும். ஒருவேளை இதனால் தான் ஆட்சியில் / கட்சியில் தலைவருக்கு வயதாகும் போது அவர் இனி சரிப்பட்டு வரமாட்டார் என்று கருதி, நம்பிக்கை இழந்து அவரது இடத்தைப் பிடிக்க மற்றவர்களுக்கு மத்தியில் சண்டை உருவாகிறதோ...

சரி! நமக்கு எதுக்கு அரசியல் எல்லாம். இவை எல்லாம் மனோதத்துவ ரீதியில் நம்முள், நமக்கு தெரியாமலே நடந்துக் கொண்டிருக்கும் விஷயங்கள். நிச்சயம் இதில் ஏதேனும் சிலவற்றின் மூலம் உங்கள் வாழ்விலும் ஏதேனும் தாக்கம் உண்டாகி இருக்கலாம். இப்போது அதற்கான தீர்வு கிடைத்துவிட்டது அல்லவா... எனவே.., மாற்றிக் கொள்ளுங்கள்... மாற்றம் காணுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Psychological Facts

Learning something new about yourself is always interesting and entertaining. And understanding the psychology behind the way we behave, treat others, and express ourselves can be even more appealing.
Desktop Bottom Promotion