For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போர்களத்தில் ராணுவ வீரர்களின் துணிச்சலான செயல்!

இந்திய ராணுவ வீரர்கள் போர்களத்தில் அசாத்தியமாக செயல்பட்டு நாட்டிற்காக எப்படியெல்லாம் உழைத்திருக்கிறார்கள் என்பதை சொல்லும் கட்டுரை

|

நாட்டிற்காக, நாட்டின் பாதுகாப்பிற்காக போரிடுபவர்களைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு அபிப்ராயம் வைத்திருக்கிறார்கள். வாழ்ந்த இடத்தையும் சுற்றியிருந்த நட்பு, குடும்பம் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து தன்னுடைய தாய்நாட்டிற்காக எல்லையில் நின்று தன் உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ராணுவ வீரர்கள் எல்லாருமே கிரேட் தான்.

இந்திய ராணுவத்தில் இருந்து கொண்டு பல முக்கியமான நேரங்களில் துரிதமாக செயல்பட்டு உயிர்த்தியாகம் செய்த சில ராணுவ வீரர்களது கதைகளை கேட்போம். ஒரு ராணுவ வீரனை தயார்படுத்துவது என்பது சாதரண விஷயமல்ல எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையும் எதிரியை எதிர்த்து போரிட வலிமை கொண்டவனாக இருக்க வேண்டும். நினைக்கும் போதே ஆச்சரியப்படுத்தும் சிலிர்க்கச் செய்திடும் சில ரியல் ஹீரோக்களின் கதைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேப்டன் விக்ரம் பத்ரா :

கேப்டன் விக்ரம் பத்ரா :

கார்கில் போரின் ஹீரோ என்று வர்ணிக்கப்படுகிறார். காஷ்மீரில் நடைப்பெற்ற மிக கடினமான போர் ஒன்றில் பங்கேற்று போரிட்டார். 17000 அடி உயரத்திற்கு சென்று இவர் போரிட வேண்டியிருந்தது. அதற்கு முன்பே இவர் பலமாக காயமடைந்திருந்தார். பீக் 5140 மிகவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்திருந்தார் அதன் பிறகு அதை விட கடினமான பீக் 4875 செல்ல வேண்டியிருந்தது.

இந்திய ராணுவம் மேற்கொண்ட போரில் இது தான் மிக கடுமையானது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 16000 அடி உயரத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தியிருந்தார்கள்.மலையேறி சென்று கொண்டிருந்த போது பனிப்பாறை சரிந்தும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தார்கள். எல்லா இன்னல்களையும் கடந்து முன்னேறிக் கொண்டிருந்தார் பத்ரா ஒரு கட்டத்தில் பத்ரா தடுமாறி விழ அவரை இன்னொரு வீரர் தூக்கி விடுகிறார் அதற்குள் பாகிஸ்தான் படையினரின் தாக்குதல் துவங்கிவிட்டது. இந்த தாக்குதலில் பத்ரா கொல்லப்பட்டார்.

Image Courtesy

திரும்ப வருவேன் :

திரும்ப வருவேன் :

கடினமான போர்களத்திற்கு செல்லும் முன்பே இது வாழ்வா சாவா என்ற போராட்டம் திரும்ப வர மிக குறைந்த அளவிலான வாய்ப்பே இருக்கிறது என்பதை அறிந்திருந்த பத்ரா அங்கிருந்து தந்தையிடம் பேசுகிறார். அப்போது, நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் நான் நிச்சயமாக திரும்ப வருவேன். ஒன்று நம் மூவர்ண கொடியை அங்கே நட்டு வெற்றியுடன் திரும்புவேன் இல்லையென்றால் மூவர்ண கொடி என் மேல் போர்த்தப்பட்டு திரும்ப உங்களிடமே வருவேன். எப்படியும் நான் வந்துவிடுவேன் என்றாராம்.

2003 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி மொழி திரைப்படமான எல் ஓ சி கார்கில் திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் கேப்டன் பத்ரா கேரக்டரில் நடித்திருந்தார்.

மேஜர் ஜெனரல் ஐயன் கர்டோசோ :

மேஜர் ஜெனரல் ஐயன் கர்டோசோ :

1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பாகிஸ்தானுடனான போரில் பல சாதனைகளை படைத்திருக்கிறார் இவர். அப்போது இவர் மிக இள வயது ராணுவ வீரராக இருந்தார். போரின் போது எதிர்பாராத விதமாக கன்னிவெடியில் காலை வைத்து அழுத்தி விடுகிறார். அது அழுத்தம் ஏற்பட்ட பிறகு தான் ஐயனுக்கே தான் இப்போது கன்னி வெடியில் கால் வைத்திருப்பது தெரியவருகிறது. உடனடியாக சுதாரித்த ஐயன் சுற்றி வந்து கொண்டிருந்த வீரர்களை எச்சரிக்கிறார். எல்லாரும் விலகிச் செல்லுங்கள் கன்னி வெடியை மிதித்து விட்டேன் என்று கத்துகிறார். உடனடியாக முகாமுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கிருந்து மருத்துவக்குழு மற்றும் நிபுணர்கள் வருகிறார்கள்.

மருத்துவர்கள் வருவதற்குள்ளாக சுமார் மூன்று மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அவ்வளவு நேரமும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அதே அழுத்தத்தை கொடுத்தபடி நின்றிருந்தார். நிபுணர்களும் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். டாக்டர் என் கால எடுத்துடுங்க என்கிறார் ஐயன்.

Image Courtesy

ஃபிட்னஸ் :

ஃபிட்னஸ் :

எல்லாரும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றனர். என்ன பேசுகிறோம் என்று தெரிந்து தான் பேசுகிறாயா? நன்றாக இருக்கிற காலை இந்த காரணத்திற்காக அகற்ற முடியாது என்று சொல்லிவிட்டார் மருத்துவர். யோசித்துக் கொண்டேயிருந்தார்கள்.... ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஐயன் தன் சக வீரரிடம் ஒரு கத்தியை கொடு என்கிறார். அந்த கத்தியால் தன்னுடைய காலை வெட்ட ஆரம்பிக்கிறார். எல்லாரும் இங்கேயே நின்றிருந்தால் எப்படி இன்னும் வெகுதூரம் நாம் கடக்க வேண்டும் என்றதோடு பிற வீரர்கள் துணையுடன் ஒரு காலை மட்டும் இழந்த படி காப்பாற்றப்படுகிறார் ஐயன்.

ஒரு காலை இழந்த போதும் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றினார். இந்திய ராணுவத்தின் முதல் மாற்றுத்திறனாளி அதிகாரியாக ஐயன் நியமிக்கப்பட்டார். மற்ற சாதரண அதிகாரிகளை விட மாற்றுத்திறனாளியாக இருந்த ஐயன் தொடர்ந்து பல்வேறு ஃபிட்னஸ் தேர்வுகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றார்.

Image Courtesy

ப்ரிகேடியர் முகமது உஸ்மான் :

ப்ரிகேடியர் முகமது உஸ்மான் :

உத்திரபிரதேச மாநிலம் பிபிபூரை சேர்ந்த இவர் 1934 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 1947,48களில் இந்தியா பாகிஸ்தான் போர் நடைப்பெற்ற போது ப்ரிகேடியர் உஸ்மான் ஜம்மு மற்று காஷ்மீர் பகுதியில் நவுஷேரா மற்றும் ஜஹன்கர் ஆகிய பகுதியில் போரிட உஸ்மான் சென்றார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை பொறுப்பும் ஏராளமான சலுகைகளும் வழங்கப்படும் நீ பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து விடு என்று சொல்லப்பட்ட போது அவற்றை மறுத்துவிட்டு இந்திய ராணுவத்திலேயே இருந்தார். போர் ஓய்ந்த பின்பும் உஸ்மான் சிறந்த மனிதராகவே விளங்கினார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வந்தார். இவருக்கு மஹா வீர் சக்ரா என்ற விருது வழங்கப்பட்டது.

Image Courtesy

சுபேதார் யோகேந்திரா சிங் யாதவ் :

சுபேதார் யோகேந்திரா சிங் யாதவ் :

பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களில் மிகவும் இளவயது கொண்டவர் இவர் தான். இந்த விருது பெறும்போது யோகேந்திராவின் வயது 19. 1999 ஆம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி நடைப்பெற்ற கார்கில் போரில் இவர் செயல்பட்ட விதத்தை போற்றும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

போரின் போது பனி சூழ்ந்த செங்குத்துப் பாறைகளில் 16500 மீட்டர் உயரம் வரை ஏறிச் சென்று பின்னால் வரும் வீரர்களுக்கு வழியமைத்து கொடுத்தார். உறையவைக்கும் பனியில் செங்குத்து பாறையில் ஏறுவதை விட இன்னொரு சவாலான விஷயம் அங்கே இருந்தது. எதிரி படையினரிடன் தாக்குதல்களிலிருந்து சாமர்த்தியமாக தப்பிக்க வேண்டும் அதே நேரத்தில் எதிர் தாக்குதலும் நடத்த வேண்டும்.

Image Courtesy

ஹிருத்திக் ரோஷன்

ஹிருத்திக் ரோஷன்

தொடர்ந்து போரிட்டபடி முன்னேறிக் கொண்டிருந்த யோகேந்திராவின் இடுப்பு பகுதியிலும் தோல்பட்டை பகுதியிலும் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. அவற்றையும் பொருட்படுத்தாது உச்சியை அடைந்தார். உச்சியை அடைந்ததும் முதல் வேலையாக எதிரி படையினரின் முதல் பதுங்கு குழியில் குண்டு வீசினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பின்னால் வந்த இந்திய ராணுவத்தினர் உச்சியை அடைந்து விட்டிருந்தனர்.

தொடர்ந்து அங்கு நடந்த போரிலும் பங்கேற்று இரண்டாவது பதுங்கு குழியிலும் தாக்குதல் நடத்தினார். இதில் அவர்களின் ஆயுதங்கள், உணவுப்பொருள் எல்லாம் அழிந்ததில் இந்திய ராணுவத்தினரின் பலம் ஓங்கியது. கார்கில் போரின் போது டைகர் ஹில் கைப்பற்ற இந்த சம்பவம் மிக முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. அந்த போரில் குண்டுகள் யோகேந்திராவின் உடலை துளைத்தது சிலர் பதினாறு குண்டுகள் என்றும் சிலர் அதை விட குறைவு என்றும் சொல்கிறார்கள். இனி யோகேந்திரா அவ்வளவு தான் வீர மரணம் அடைந்துவிட்டான் ஒரு மாபெரும் வீரனை நாம் இழந்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே நம் எண்ணங்களை பொய்யாக்கி மீண்டு வந்தார்.

இவரைப் பற்றி லக்‌ஷயா என்ற திரைப்படம் வெளியானது இதில் ஹிருத்திக் ரோஷன் யோகேந்திரா கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார்.

சுபேதார் கரம் சிங் :

சுபேதார் கரம் சிங் :

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்குருர் மாவட்டத்தில் உள்ள செஹ்ன அஎன்ற கிராமத்தில் பிறந்தார் இவர் தான் முதன் முதலாக உயிருடன் இருக்கும் போது பரம் வீர் சக்ரா விருது பெற்ற முதல் வீரர் ஆவார். 1993 ஆம் ஆண்டு தன்னுடைய 77 வது வயதில் மரணமடைந்தார் கரம் சிங்.

இந்திய அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்ககளிடமிருந்து மிக உயரிய விருதுகளை பெற்ற ஒரே வீரர் இவர் தான். இவரின் வீரத்தை சொல்ல 1948 ஆம் ஆண்டு அக்டோபர் பதிமூன்றாம் தேதி நிகழ்ந்த போர் நிகழ்வை நினைவு கூறுகிறார்கள். காஷ்மீரின் ரிச்மர் கலி பகுதியை கைப்பற்றும் பொருட்டு பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தின் மீது தீடிரென்று தாக்குதல் நடத்த துவங்கியது. இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகள் எல்லாம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் முற்றிலும் அழிந்தது. கமாண்டரிடம் தகவல் கூட கொடுக்கமுடியவில்லை அதற்கான அவகாசம் கூட இல்லை.

Image Courtesy

இரண்டு வழிகள் :

இரண்டு வழிகள் :

இப்போது கரம் சிங் முன்னால் ஒரேயொரு வாய்ப்பு தான் இருந்தது. அங்கு இருக்கும் மிக சொற்ப அளவிலான வீரர்கள் அவர்களிடம் இருக்கிற ஆயுதங்களை கொண்டு எதிரி நாட்டினரை எதிர்ப்பது. முழு முயற்சியுடன் வீரர்களுக்கு கட்டளையிட்டுக் கொண்டே முன்னேறிக் கொண்டே சென்றார். கரம் சிங்கிடம் இருந்த வீரர்களை விட பன்மடங்கு வீரர்கள் இவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே எதிரில் வந்தனர்.

வீரர்கள் மற்றும் கரம் சிங் ஒரு பெரிய அகழியில் மறைவாக நின்று கொண்டனர்.

பின் வாங்கிவிடலாம் என்று பிறர் சொன்ன போதும் அதை மறுத்து விட்டார் கரம் சிங்

எதிரி நாட்டினர் மிக அருகில் வந்தவுடன் அந்த அகழியிலிருந்து குதித்து வெளியேறி இரண்டு வீரர்களை கொன்றார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Inspiring Stories About Indian Army Soldiers

Inspiring Stories About Indian Army Soldiers
Story first published: Monday, June 25, 2018, 16:25 [IST]
Desktop Bottom Promotion