For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சச்சின் டெண்டுல்கர் கூறும் வெற்றிக்கான வழிகள்

|

இந்தியாவின் மிக முக்கியமான விளையாட்டு என்றால் அது " கிரிக்கெட்" தான். அதிலும் கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு பிரபலமாக இருக்க காரணம் அது டெண்டுல்கர்தான் என்று கூறினால் மிகையாகாது. சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்து விட்டு சென்ற காலமெல்லாம் இருந்தது. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் சச்சின் டெண்டுல்கர் பெயர் மிகவும் பரிட்சயம்.

Sachin Tendulkar

இந்திய இளைஞர்கள் மட்டுமின்றி உலக இளைஞர்கள் பலருக்கும் சச்சின் ஒரு ரோல்மாடலாக இருக்கிறார். இவ்வளவு புகழுக்கு சொந்தக்காரரான சச்சினின் படிப்பு தகுதி 10ஆம் வகுப்புதான். ஆனால் உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார். அதுமட்டுமின்றி தான் சம்பாதித்த பணத்தின் மூலம் பல கிராமங்களை தத்தெடுத்து சமூக சேவை செய்து வருகிறார். படிப்பு மட்டுமே ஒருவரின் வெற்றியை தீர்மானித்துவிடாது என்பதற்கு சச்சின் ஒரு ஆகச்சிறந்த உதாரணம். இப்படிப்பட்ட சச்சின் டெண்டுல்கர் தன் வெற்றியின் ரகசியங்களாக கூறியவற்றை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரகசியம் 1

ரகசியம் 1

" I have never tried to compare myself to anyone else "

" நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை "

சச்சினால் தோனியை போல ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க முடியாது, டிராவிட் போல பொறுமையாக விளையாட முடியாது, கங்குலி போல் சிறந்த கேப்டனாகவும் இருக்க முடியாது. ஆனால் அவர் சிறப்பாக ஆட கூடிய ஆட்டத்தை போல வேறு யாராலும் ஆட முடியாது. ஏனெனில் அதுதான் அவரின் தனித்துவம்.

ரகசியம் 2

ரகசியம் 2

" It doesn't always happen according to the way you have planned things out but if you have covered most of the aspects, it does help out there in the middle "

நீங்கள் திட்டமிட்டது போல எப்பொழுதும் காரியங்கள் நடக்காது, அதற்காக சோர்வடையாமல் திட்டங்களுக்கு தேவையான முயற்சிகளை செய்து கொண்டே இருங்கள், அந்த முயற்சிகள் உங்களை பாதுகாக்கும்.

ரகசியம் 3

ரகசியம் 3

" I feel it's the conscious mind that messes things up. The conscious mind is constantly telling you, this might happen or that might happen, even before it has happened "

நமது பிரச்சனைகளுக்கு காரணமே நமது குழப்பமான மனநிலைதான். உங்களுடைய குழம்பிய மனது எதுவும் நடக்கும் முன்பே, இது நடக்குமோ அல்லது அது நடக்குமோ ஏறி உங்களை உங்களை பயமுறுத்தி கொண்டே இருக்கும்.

ரகசியம் 4

ரகசியம் 4

" I never played with a runner in my entire life, even in my schools, because only I know where the ball is going and how hard, when I hit the ball, something my runner will never know about "

என் வாழ்நாள் முழுவதும் நான் எனக்காக ரன்னர் வைத்ததில்லை, என் பள்ளி வாழ்க்கையின்போது கூட வைத்ததில்லை. ஏனெனில் எனக்கு மட்டும்தான் தெரியும் பந்து எங்கே செல்கிறது, நான் எவ்வளவு வேகமாக பந்தை அடித்தேன் என்பதெல்லாம் எனக்கு மட்டுமே தெரியுமே தவிர ரன்னருக்கு தெரிய வாய்ப்பில்லை.

ரகசியம் 5

ரகசியம் 5

" I always had a dream to play for India but I never let it put pressure on me "

நான் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எப்போதும் இருந்தது, ஆனால் அது எப்பொழுதும் என் மீது அழுத்தத்தை செலுத்த நான் அனுமதித்ததில்லை.

ரகசியம் 6

ரகசியம் 6

" It's about not accepting every little challenge thrown at you. Sometimes you hold back and when it's needed you go for it "

உங்களை நோக்கி வரும் அனைத்து சிறிய சவால்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சிலசமயம் நீங்கள் பின்வாங்க வேண்டும் எப்பொழுது அது தேவைப்படுகிறதோ அப்போது அதை நோக்கி செல்லுங்கள்.

ரகசியம் 7

ரகசியம் 7

" I have never thought where I will go, or forced any targets on myself "

எனது இலக்கை நான் என்றுமே தீர்மானித்தில்லை, அதேபோல இலக்கை நோக்கி செல்ல வேண்டுமென்று என்னை நான் கட்டாயப்படுத்தி கொண்டதும் இல்லை.

ரகசியம் 8

ரகசியம் 8

" Don't stop chasing your dreams. because dreams do come true "

உங்கள் கனவுகளை துரத்துவதை நிறுத்தி விடாதீர்கள், ஏனெனில் உங்கள் கனவுகள் நிச்சயம் பலிக்கக்கூடும்.

ரகசியம் 9

ரகசியம் 9

" Whatever level you reach, getting better never stops "

நீங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும், அதைவிட முன்னேற முயற்சி செய்யுங்கள் தவிர முயற்சியை நிறுத்தி விடாதீர்கள்.

ரகசியம் 10

ரகசியம் 10

" The key to handling pressure situations like these is to keep yourself steady, follow your instincts and think clearly "

அழுத்தமான சூழ்நிலைகளை சமாளிக்க முக்கியமான வழி உறுதியாய் இருப்பது, உங்களின் உள்ளுணர்வுகளை பின்பற்றுங்கள் மற்றும் தெளிவாய் சிந்தியுங்கள்.

ரகசியம் 11

ரகசியம் 11

" I fail sometimes. I succeed sometimes, so that's fair enough. It's a package deal. It comes with that package: failure and success "

நான் சிலசமயம் வெற்றியடைந்திருக்கிறேன். சிலசமயம் தோல்வியடைந்திருக்கிறேன். இது ஒரு வாழ்க்கை தொகுப்பாகும். இந்த தொகுப்பு வெற்றி மற்றும் தோல்வி இரண்டும் கலந்ததாக உள்ளது.

ரகசியம் 12

ரகசியம் 12

" In any profession, there are always ups and downs "

அனைத்து துறையிலும் உயர்வும், தாழ்வும் இருக்கத்தான் செய்யும். எதுவாக இருப்பினும் முயற்சியை மட்டும் நிறுத்தக்கூடாது.

ரகசியம் 13

ரகசியம் 13

" As a parent, I would be happier hearing people say, " Sachin is a good human being " than " Sachin is a great cricketer " and day "

ஒரு அப்பாவாக, " சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரன் " என்று கேட்பதை விட " சச்சின் ஒரு சிறந்த மனிதன் " என்று கேட்பதே எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Inspirational quotes of Sachin Tendulkar

Master blaster Sachin Tendulkar, who has made India proud with his outstanding performances during his long cricket career, feels there is so much left to experience and learn from him even today. His life lesson inspires millions of youngsters all over the world.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more