For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிருப்பவர்கள் மூலமாகவே கருத்தரிக்க வேண்டும்! வெளிநாட்டினரை ஈர்த்த இந்திய கிராமம்!!

பல வெளிநாடுகளிலிருந்தும் பெண்கள் இந்தியாவிலிருக்கிற ஒரு கிராமத்திற்கு கர்ப்பமடைவதற்கென்றே வருகிறார்கள்.

|

மருத்துவச் சுற்றுலாவாக இந்தியாவிற்கு வெளிநாட்டினர் வருவது தொடர்ந்து அதிகரித்து வருவது போல இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்திற்கு கருத்தரிப்பதற்கு என்றே பெண்கள் உலகின் பல மூலைகளிலிருந்து வருகிறார்கள். செயற்கை மருத்துவமுறையில் அல்லாது. இந்த கிராமத்தில் வசிக்கிற ஆண்களின் ஜீன் தங்களுக்கு வேண்டும் என்று விரும்பி கேட்கிறார்கள் பெண்கள்!

காஷ்மீரின் ஹிமாலயா மலைப் பிரதேசங்களில் அமைந்திருக்கக்கூடிய லடாக் அருகில் அமைந்திருக்கும் ஒரு குக்கிராமம் தான் தஹானு. இங்கே ப்ரோக்பா என்ற ஒரு பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்களின் ஜீன் வேண்டியே பெண்கள் பல மூலைகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களிடத்தில் அப்படியென்ன சிறப்பம்சம் இருக்கிறது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆர்யர்கள் :

ஆர்யர்கள் :

இந்தியாவிற்கு வருகை தந்த ஆர்யர்களின் வழி வந்தவர்கள் தான் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார்கள். வழி வழியாக அந்த மூதாதையர்களின் ஜீன் அவர்களின் உடலில் இருக்கிறது. அவர்கள் அறிவிலும் வீரத்திலும் எப்போதும் முதன்மையானவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் சந்ததியினரான இந்த மக்கள் லடாக்கில் இருக்ககூடிய டாஹ்,ஹனோ,டார்சிக் மற்றும் கர்கோன் ஆகிய கிராமங்களில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

நீலக் கண்கள் :

நீலக் கண்கள் :

இவர்களுக்கு நீலக் நிற கண்கள் இருக்கும். வெள்ளை நிறத் தோலுடனும் பிறரை விட அதிக உயரமாய் இருப்பார்கள். அதைவிட இவர்கள் அலெக்சாண்டர் படையிலிருர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த ப்ரோக்பா இன மக்கள் மிகவும் பாரம்பரியமான முறையில் தனித்தன்மையுடன் அவர்களது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

பாகிஸ்தானிலிருந்து :

பாகிஸ்தானிலிருந்து :

இந்த கிராமத்தில் இருக்கக்கூடியவர்களின் மூதாதையர்கள், தாங்கள் பாகீஸ்தானில் இருக்கும் கில்ஜிட் என்ற பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்ததாக சொல்வார்களாம். இதன் மூலம் அவர்கள் அலெக்ஸாண்டர் படையிலிருந்திருப்பார்கள் என்பது நம்பப்படுகிறது.

Image Courtesy

மூன்று தலைமுறை :

மூன்று தலைமுறை :

இவர்களது மிக அரிதான ஜீன் தொடர வேண்டும் என்பதற்காக இந்த இனத்தைத் தவிர வேறு யாரையுமே மணக்க அனுமதியில்லையாம். அதோடு திருமணம் அவர்களது குடும்பத்திற்குள்ளேயே தான் நடக்கிறது.

சில நேரங்களில் திருமணம் செய்து கொள்ள மூன்று தலைமுறை வரை காத்திருப்பார்கள். இவர்களில் தங்கை மகளை திருமணம் செய்து கொள்வதில்லை மாறாக தங்கையின் பேத்தியை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

Image Courtesy

கிராமத்தில் நுழையத் தடை :

கிராமத்தில் நுழையத் தடை :

இவர்களில் யாரேனும் வேறு கிராமத்தினரை அதாவது இவர்களது குடும்பத்தினரைத் தாண்டி வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால் அது யாராக இருந்தாலும் சரி மீண்டும் இந்த கிராமத்திற்குள் நுழையவே அனுமதியில்லையாம்.

1991 கணக்குப்படி இங்கே 1900 மக்கள் வசித்திருக்கிறார்கள். தங்களது குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்வதால் இவர்களது இனம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கியிருக்கிறது.

Image Courtesy

 சுற்றுலா பயணிகள் :

சுற்றுலா பயணிகள் :

பல ஆண்டுகளாக இந்த கிராமத்திற்குள் சுற்றுலா பயணிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மெல்ல மெல்ல தங்களின் வாழ்வாதாரத்திற்காக அனுமதிக்க ஆரம்பித்தனர். 2010 ஆம் ஆண்டில் தான் நான்கு கிராமங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை முழுவதுமாக அனுமதிக்கப்பட்டார்கள்.

Image Courtesy

பெண்கள் :

பெண்கள் :

அவர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் மட்டுமல்ல அந்த மக்களின் தோற்றதினாலும் பெரிதும் கவரப்பட்டார்கள். இந்த மக்கள் ஆர்யர்களின் பூர்வகுடிகள் என்ற செய்தி எங்கும் பரவத் துவங்கியதுமே பலரும் தங்களுக்கும் இதே ஜீனுடைய குழந்தை வேண்டும் என்று விரும்பி இங்கிருக்கும் ஆண்களிடமிருந்து விந்தணுவை விரும்பி ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

Image Courtesy

வெளிநாடு :

வெளிநாடு :

இது குறித்து ஒரு டாக்குமெண்ட்டிரியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் வெளிநாட்டுப் பெண்கள் கருத்தடைய வேண்டி இங்கே ப்ரெக்னன்ஸி டூரிஸம் வந்திருப்பதாக சொல்கிறார்கள். அதோடு இன்னும் பலரும் ஆர்யர்களின் ஜீன் தங்களுக்கு கிடைக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

எவரஸ்ட் மலைச் சிகரத்தை ஏறி சாதனைப் படைத்த முதல் இந்தியரான அஹ்லுவாலியா கிங்டம் லடாக் என்ற புத்தகத்தை எழுதுகிறார். அதில் வசதி படைத்த வெளிநாட்டுப் பெண்களை இங்கே ப்ரோக்பா திருவிழாவில் சந்தித்தேன் அவர்கள் ஆர்யர்களின் ஜீன் தேடி வந்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Image Courtesy

கட்டணம் :

கட்டணம் :

பல சுற்றுலா தளங்களில் உள்ளே நுழைய அனுமதிக்கு மட்டும் தானே காசு வாங்குவார்கள் ஆனால் இந்த கிராமத்தினர் கொஞ்சம் சிறப்பு என்பதால் சுற்றுலா பயணிகளுடன் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுக்க வேண்டுமென்றால், அவர்களின் பாரம்பரியமான பொருட்களுடன்,உடைகளுடன் போட்டோ எடுக்க வேண்டுமென்றால் என தனித்தனியாக வசூலிக்கிறார்கள். ஆரம்ப விலை ஐந்து டாலர்!

Image Courtesy

 கால மாற்றம் :

கால மாற்றம் :

இந்த கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் சுமார் 2,200 ஆண்டுகளாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் முட்டை என எதுவுமே பயன்படுத்தாமல் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் தற்போதைய கால சூழ்நிலை மாற்றம் காரணமாக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

Image Courtesy

பூச்சிகள் :

பூச்சிகள் :

பல வகை காய்களையும் கனிகளையும் விளைவிக்கிறோம். ஆனால் மகசூல் மிகவும் குறைந்துவிட்டது. முந்தைய காலத்தில் ஒன்று அல்லது இரண்டு வகை காய்களையோ கனிகளையோ பயிரிடுவோம். அதுவே எங்களுக்கு அதிக மகசூல் கொடுத்து போதுமான வருமானத்தை கொடுத்தது.

ஆனால் தற்போது அதிக லாபம் வேண்டியும் தட்பவெட்ப சூநிலை காரணமாகவும் நாங்கள் என்னென்னவோ பயிரிடுகிறோம். ஆனால் ஒன்று கூட பழைய மாதிரியான அதிக மகசூலை கொடுப்பதில்லை. மேலும் செடியை வளர்க்க மருந்துகள் ஊற்றப்படுகிறது. கூடவே நிறைய பூச்சிகளும் வருகின்றன.

Image Courtesy

அசைவ உணவுகள் :

அசைவ உணவுகள் :

இன்றைய காலத்தினர் பலரும் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். பல காலங்களாக எங்கள் மூதாதையர்கள் பின்பற்றி வந்தவற்றை இப்போது நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் சில முதியவர்கள் இன்றும் கடுமையாக அசைவ உணவுகளை தங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்வதேயில்லை.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse pregnancy
English summary

Indian Village Which Popular For Pregnancy Tourism

Indian Village Which Popular For Pregnancy Tourism
Story first published: Friday, April 6, 2018, 12:32 [IST]
Desktop Bottom Promotion