TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
நடிகைகள் வெளிப்படையாக கூறிய, அவர்கள் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள்!
நடிகர், நடிகைகளின் வாழ்க்கை மிக ஆடம்பரமானது, புகழும், மகிழ்ச்சியும் நிறைந்தது என்று அறிந்தவர்கள் அனைவருக்கும் அதில் இருக்கும் மன அழுத்தம் என்ன, அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன என்று தெரியாது.
அதிலும், நடிகைகளுக்கு பர்சனல் வாழ்க்கை, பொது வாழ்க்கை என்று மட்டுமின்றி சில சமயங்களில் தங்கள் துறை சார்ந்துமே பிரச்சனைகள் எழும். அந்த வகையில் பர்சனல் வாழ்க்கை மற்றும் தொழில் சார்ந்து தாங்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்து இந்திய நடிகைகள் வெளிப்படையாக கூறியவை...
சுஷ்மிதா சென்!
சுஷ்மிதா சென் தனி ஆளாக இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் பெண் பிரபலம். இவரது வயது நாற்பதை கடந்துவிட்டது (வயதைக் குறிப்பிட காரணம் உண்டு.) சில மாதங்களுக்கு முன் தன் வாழ்வில் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் குறித்து இணையத்தில் வெளிப்படையாக கூறி இருந்தார் சுஷ்மிதா சென்.
15 வயது சிறுவன்!
சில மாதங்களுக்கு முன் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்ட போது, 15 வயது சிறுவன், தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டான் என்று கூறி இருந்தார் சுஷ்மிதா சென்.
ஆனால், அவனை திட்டு, அடித்து போலீஸில் பிடித்து கொடுப்பதற்கு மாறாக, அவன் கழுத்தில் கைப்போட்டு தனியாக அழைத்து சென்று, அவன் செய்த குற்றத்தை புரிய வைத்து.. மன்னிப்பு கேட்க வைத்தது மட்டுமின்றி, இனிமேல் இப்படியான காரியத்தை செய்ய கூடாது என்றும் சாத்தியம் வாங்கினார் சுஷ்மிதா சென்.
15 வயது சிறுவன் செய்த இந்த காரியம் தவறு என்பதை தாண்டி, இது ஒரு குற்றம் என்று யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை என்பது தான் மனவருத்தம் அளிக்கிறது என்று சுஷ்மிதா சென் மேலும் கூறி இருந்தார்.
தீபிகா படுகோனே!
தீபிகா படுகோனே ஒரு சிறந்த, திறமையான நடிகை என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அவர் டிப்ரஷன் எனப்படும் மன அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். நீண்ட காலமாக இந்த மன அழுத்த நோயில் இருந்து வெளிவர தீபிகா சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.
என்.ஜி.ஓ
தான் அனுபவித்த இந்த மன அழுத்த நோய் கொடுமையை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என்று தீபிகா கூறி இருக்கிறார். மேலும், தன் சொந்த அனுபவங்களை முன் வைத்து, தீபிகா ஒரு என்.ஜி.ஓ துவங்கி, அதில் மன நல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்து வருகிறார். இங்கே மன அழுத்தம் மற்றும் பிற மன நல பிரச்சனைகளில் இருந்து வெளிவர தீர்வு வழங்கப்பட்ட வருகிறது.
ஷாமா சிக்கந்தர்!
ஷாமா ஒரு பிரபல தொலைக்காட்சி நடிகை ஆவார். இவருக்கு பைப்போலார் டிசார்டர் இருக்கிறது. 3 படத்தில் தனுஷ் பாதிக்கப்பட்டதாய் காண்பிக்கப்பட்ட அதே கோளாறு தான். சில கடினமான சூழல்களில் ஷாமா தற்கொலை செய்துக் கொள்ளவும் முயற்சித்திருக்கிறாராம்.
கடினமான காலம்!
அந்த கடினமான காலக்கட்டத்தில் நான் எப்படியான சூழலை கடந்து வந்தேன், உதவி இன்றி, நம்பிக்கை இன்றி, எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற திட்டமின்றி நான் வாழ்ந்த அந்த காலம் என் வாழ்வின் மிகவும் கொடுமையானது என்று ஷாமா கூறி இருக்கிறார்.
ஸ்ரீ ரெட்டி!
இந்த வருடம் இந்திய திரை உலகில் பெரும் புயல் வீசியவர் ஸ்ரீ ரெட்டி. அரைநிர்வாண போராட்டத்தில் துவங்கி, பெரும் நடிகர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சுமத்தினர் ஸ்ரீ ரெட்டி. காஸ்ட் கவுச்சிங் மூலம் நடிகைகள் எப்படி எல்லாம் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று தெரிவித்தார் ஸ்ரீ ரெட்டி.
ஆதாரங்கள்!
கதாப்பாத்திரம் அளிக்கிறேன் என்று கூறி தன்னை யாரெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று தெலுங்கு திரை உலகம் முதல் தமிழ் திரை உலகம் வரை பலரை இவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஆனால், இதுவரை இவர் வலுவான ஆதாரம் எதுவும் வெளியிடவில்லை.
சமீபத்தில் இவர் திரையுலகில் நடிகைகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய அனைவரின் தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் நான் திரட்டி வைத்துள்ளேன். கூடிய விரைவில் அதை வெளியிடுவேன் என்றும் கூறி இருந்தார்.
கல்கி!
நடிகை கல்கி, 9 வயதிலேயே பாலியல் வன்முறைக்கு ஆளானதாக கூறி இருந்தார். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செக்ஸ் மற்றும் அந்தரங்க பாகங்கள் தீண்டுதல் குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
தைரியம் இல்லை!
தன் வாழ்வில், தானே அந்த பாலியல் வன்முறையை அனுமதித்ததாகவும், அது ஒரு பாலியல் வன்முறை செயல் என்றே தெரியாமல் நான் அந்த நிகழ்வில் சிக்கினேன் என்றும். அதுக்குறித்து அப்போது அந்த வயதில் பெற்றோரிடம் பேச எனக்கு தைரியம் இருக்கவில்லை என்றும் கல்கி மேலும் தெரிவித்திருந்தார்.
ரிச்சா!
கேங்க்ஸ் ஆப் வய்யஸ்புரில் நடித்த ரிச்சா தனக்கு bulimia எனும் பெரும் பசி உண்டாகும் கோளாறு இருந்ததாக கூறி இருந்தார். இதனால், உடல் எடை அதிகரித்தது. இதில் இருந்து வெளிவர முதலில் உடல் எடை அதிகரிக்கட்டும். பிறகு குறைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.
உடல் தோற்றம்!
ஆனால், இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் மிகுதியானது. என்னை நானே வெறுத்தேன். என் தோற்றம் எனக்கு பிடிக்கவில்லை. சிலமுறை வாந்தி எடுத்துள்ளேன். உணவுகளை வீசி உள்ளேன். உடல் ஆரோக்கியமற்று இருந்தது, ஊட்டச்சத்து குறைப்பாடு, தூக்கமின்மை என பல பிரச்சனைகள் ஏற்பட்டது என்று ரிச்சா கூறி இருக்கிறார்.
சித்ராங்தா சிங்!
சித்ராங்தா சுதிர் மிஸ்ரா இயக்கத்தில் Inkaar எனும் திரைப்படத்தில் நடிக்கும் போது, தன் சிந்த வாழ்வில் தான் கடந்து வந்த பாலியல் வன்முறை நிகழ்வுகளை ரீகால் செய்து, நடிக்க தயார் ஆனதாக குறிப்பிட்டிருந்தார்.
மோசமானவை...
தான் வளர்ந்து வந்த போது டெல்லி மற்றும் மீருட்டில் அதிக ஆண்டுகள் வசித்ததாகவும். அப்போது பாலியல் வன்முறை சார்ந்த நிகழ்வுகள் நிறைய நான் கடந்து வந்தேன், அதில் ஒருசில நிகழ்வுகள் மிகவும் மோசமானவை என்று சித்ராங்தா தெரிவித்திருந்தார்.