For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40s கடந்தும் சிங்கிளாக வாழ்ந்தும் வரும் நடிகர், நடிகைகள்! #List25

|

25 வயதை தாண்டினாலே என்னம்மா இன்னுமா கல்யாணம் பண்ணல என்று பெண்களை பார்த்து கேள்விக் கேட்க ஆர்மபித்துவிடுவார். இதுவே ஆண்களுக்கு என்றால் 29, 30 வரை இந்த சமூகம் வயதை நீடித்துக் கொள்ளும். 30 வயதை தாண்டியும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றால் ஏதாவது தோஷமா, கோளாறு என்று அவர்களே கதைக்கட்ட ஆரம்பித்துவிடுவார்.

சாமானிய மக்களுக்கே இத்தனை பிரச்சனை என்றால், ஒரு பிரபலமாக இருந்துக் கொண்டு கல்யாணத்தை தட்டிக் கழித்து கொண்டே வந்தால் எத்தனை கேள்விகள், மனவுளைச்சல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அப்படி பார்த்தால்... இன்றைய காலக்கட்டத்தில் இந்திய சினிமாவில் அதிக மனவுளைச்சல் கொண்டிருக்கும் நடிகர், நடிகைகள் இவர்களாக தான் இருக்க வேண்டும்.

ஆம்! நாற்பதுகளை சுற்றி இன்றும் சிங்கிளாக வாழ்ந்து வரும் நடிகர் நடிகர்கள் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விஷால் 41

விஷால் 41

ஆரம்பத்தில் இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர். செல்லமே திரைப்படத்தில் நடிகராக வாய்ப்பு கிடைத்து அப்படியே ஆக்ஷன் ஹீரோ அவதாரம் ஏற்றுக் கொண்டார். நடுவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பொறுப்புகள் சேர. பின் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சபதம் ஏற்றார். இடையே இவர் லட்சுமி மேனனை காதலிக்கிறார், சரத்குமார் மகள் வர லட்சுமியை காதலிக்கிறார் என்று தகவல் / கிசுகிசுக்கள் வெளியானாலும். 40தை கடந்தும் விஷால் இன்னமும் சிங்கிளாக தான் இருக்கிறார்.

ஆர்யா 38

ஆர்யா 38

விஷாலின் நெருங்கிய தோழரான ஆர்யா நண்பன் விஷால் திருமணம் செய்துக் கொண்ட பிறகு தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சபதம் ஏற்றிருக்கிறாரா என்பதெல்லாம் அவருக்கு மட்டும் தான் தெரியும். நடுவே சின்னத்திரையில் பெண் பார்க்கும் படலத்தை துவக்கி.., அதிலும் கிரேட் எஸ்கேப்பாகி விட்டார் இந்த ட்விட்டர் டார்லிங்.

கௌசல்யா 38

கௌசல்யா 38

கௌசல்யா 1990களில் நடிக்க வந்தவர். இவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. வெள்ளித்திரையைத் தொடர்ந்து சின்னத் திரையிலும் முகம் காட்டினார். பிறகு, மீண்டும் வெள்ளித்திரையில் அக்கா வேடங்கள் ஏற்று நடித்தார். 38 வயதான கௌசல்யா இப்போது வரையிலும் சிங்கிளாக தான் இருக்கிறார்.

MOST READ: எகிப்திய மர்மங்களை உடைத்தெறியும் ஒரு பொருள் இது தானோ..!?

சுஷ்மிதா சென் 43

சுஷ்மிதா சென் 43

சுஷ்மிதா சென் ஆரம்பம் முதலே தான் சிங்கிளாக தான் இருக்க போகிறேன் என்று கூறியவர். அதை போலவே இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து தனி ஆளாக அவர்களை வளர்த்து வருகிறார். ஆனால், சமீபத்தில் இவருக்கும் ஒரு ஆண் மாடலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும். இருவரும் வருமாண்டு (2019) இறுதியில் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இருப்பினும் இன்று வரை சுஷ்மிதா சென் சிங்கிள் தான்.

தபு 47

தபு 47

தபு ஒரு நடிப்பு சூறாவளி. கதையின் நாயகியாக இருந்த போதிலும் சரி, குணச்சித்திர வேதங்கள், துணை வேதங்கள் ஏற்ற போதிலும் சரி தபு துளியளவு கூட தன் நடிப்பில் காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டதில்லை. அதற்கு அவரது சமீபத்திய வெளியீடான அந்ததுன் (andhadhun) சாட்சி.

தனிஷா முகர்ஜி 40

தனிஷா முகர்ஜி 40

தனிஷா முகர்ஜியை சிலர் மறந்திருக்கலாம். காரணம் அவர் தமிழில் நடித்தது ஒரே ஒரு திரைப்படம் தான். உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் கியூட்டாக துறுதுறுவென்று வினயை விரட்டி, விரட்டி காதலித்த அதே பெண் தான் தனிஷா முகர்ஜி. இவர் நடிகை காஜோலின் சகோதரி ஆவார். இவரும் இன்னும் ஹேப்பிலி சிங்கிள் தான்.

வினய் ராய் 39

வினய் ராய் 39

உன்னாலே, உன்னாலே தனிஷா முகர்ஜி மட்டுமல்ல... அதே படத்தில் அறிமுகமான நடிகர் வினயும் இன்றும் சிங்கிள் தான். இடையே சின்ன கேப் எடுத்துக் கொண்டு அரண்மனை, துப்பறிவாளன் படங்களில் நடித்த வினய் இப்போது இரண்டு தம்மில் படங்களில் நடித்து வருகிறார்.

திவ்யா தத்தா 41

திவ்யா தத்தா 41

திவ்யா தத்தா நவரச நாயகன் கார்த்திக்குடன் 2002ம் ஆண்டு வெளியான் கேம் என்ற திரைப்படத்தில் நடித்தவர். இவர் நிறைய இந்தி, பஞ்சாபி மொழி பட்னக்லியால் நடித்திருக்கிறார். இவர் ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு வெளியான Irada என்ற திரைப்படத்திற்காக திவ்யா தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: இந்த விஷயங்களை பிறரிடம் கூறுவது உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை அழிக்கும் என்கிறார் சுக்ராசாரியார்

ஆஷா பரேக் 76

ஆஷா பரேக் 76

பழம்பெரும் நடிகை ஆஷா பரேக் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. இவர் பலமுறை ஃபிலிம்பேர் விருதுகள் வென்றவர். இவர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதினை வென்றுள்ளார்.

சல்மான் கான் 52

சல்மான் கான் 52

சல்மான் கான் 1980களில் இருந்து எடுத்துக் கொண்டால் இதுவரை எத்தனை நடிகைகளுடன் நடித்துள்ளார் என்பதை போலவே, எத்தனை பேரை காதலித்துள்ளார் என்றும் ஒரு பட்டியலிட வேண்டும். ஆனால், ஐம்பதை கடந்தும் சல்மான் கான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இதை கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒருமுறை பேட்டியில் தான் இன்னும் விர்ஜின் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பாலிவுட் பாய்.

கரன் ஜோஹர் 46

கரன் ஜோஹர் 46

பல சில்வர் ஜூப்ளி காதல் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இயக்குனருக்கு ஒரு தனி கூட்டம் சேர்த்தவர் கரன் ஜோஹர். பலரை காதலிக்க வைத்த கரன் ஜோஹர் இன்னும் சிங்கிள் தான்.

மனீஷ் மல்ஹோத்ரா 52

மனீஷ் மல்ஹோத்ரா 52

இந்திய திரையுலகின் தலைசிறந்த ஃபேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா. இவரை இந்திய சினிமாவின் கிளாமர் பேக்போன் என்றும் செல்லமாக அழைக்கின்றனர். ஃபேஷனில் தனித்திறமை கொண்டிருப்பவர்.இயக்குனர் கரன் ஜோஹரின் நெருங்கிய நண்பர்.

சஞ்சய் லீலா பன்சாலி 54

சஞ்சய் லீலா பன்சாலி 54

வரலாற்று கதைகள், பீரியட் படங்கள் எடுப்பதில் வல்லவர் சஞ்சய் லீலா பன்சாலி. தேவதாஸ் படத்தை இயக்கிய இவர் தன் காதலை திரைப்படங்கள் மற்றும் தன் எழுத்தின் மீது மட்டுமே கொண்டுள்ளார். ஏனோ இவருக்கு சினிமாவை தாண்டிய தனி துணை எதுவும் தேவைப்படவே இல்லை.

ஏக்தா கபூர் 43

ஏக்தா கபூர் 43

பழம்பெரும் நடிகர் ஜித்தேந்திரா மற்றும் ஷோபா கபூரின் புதல்வி ஏக்தா கபூர். இவர் தன் தாயை போலவே நிறைய சின்னத்திரை நிகழ்சிகள், சீரியல்கள், வெப் சீரியல் மற்றும் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தயாரிப்பு என்று மட்டுமின்றி கிரியேட்டிவ் மற்றும் ஸ்கிர்ப்ட் வேலைகளிலும் இவர் நிறைய ஆர்வம் கொண்டிருக்கிறார்.

MOST READ: எப்ப காபி குடிச்சாலும் அதுல கொஞ்சம் உப்பு போட்டு குடிங்க... ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க...

துஷார் கபூர் 42

துஷார் கபூர் 42

ஏக்தா கபூரின் சகோதரர். இவர் 2001ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். கோல்மால் சீரீஸ் படங்கள் மற்றும் பல படங்களில் காமெடி வேடமேற்று நடித்துள்ளார். தனது சகோதரி போலவே இவரும் 40களை கடந்தும் திருமணத்தில் ஆர்வம் இன்றி இருக்கிறார்.

அமீஷா படேல் 42

அமீஷா படேல் 42

2000ம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் அறிமுகமான அமீஷா படேல். தமிழில் விஜயுடன் புதிய கீதை என்ற திரைப்படத்தில் நடித்தவர். 42 வயதான அமீஷா படேல் இன்றும் சிங்கிளாக தான் இருக்கிறார்.

ராகுல் கண்ணா 46

ராகுல் கண்ணா 46

தான் அறிமுகமான முதல் படத்திலேயே பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகர் விருது வென்றவர் ராகுல் கண்ணா. ஆனால், இவர் நடித்த மொத்த திரைப்படங்களே 8 தான். இவர் இந்தி நடிகர் மற்றும் அரசியல்வாதி வினோத் கண்ணாவின் மகன்.

அக்ஷை கண்ணா 43

அக்ஷை கண்ணா 43

ராகுல் கண்ணாவின் சகோதரர் தான் அக்ஷை கண்ணா. 1997ல் அறிமுகமாகி இன்று வரையிலும் பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அக்ஷை கண்ணா. ஹேண்ட்சம் ஹீரோவான அக்ஷை தனது சகோதரர் போலவே சிங்கிளாகவே இருக்கிறார்.

உதய் சோப்ரா 45

உதய் சோப்ரா 45

தூம் திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் பரிச்சயம் ஆனவர் உதய் சோப்ரா. யாஷ் சோப்ரா குடும்பத்தை சேர்ந்த இவர் தயாரிப்பு மட்டுமின்றி நடிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், இவரது சுமாரான தோற்றம் ஏனோ பாலிவுட்டில் பெரும் நடிகராக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

ரந்தீப் ஹூடா 42

ரந்தீப் ஹூடா 42

ரந்தீப் ஹூடா நடிகராவதற்கு முன்பே சுஷ்மிதா சென்னுடன் இருந்த காதல் காரணமாக கிசுகிசுக்களில் சிக்கி பிரபலமானவர். இவர் நடிகை நீது சந்திராவை திருமணம் செய்துக் கொண்டார் என்ற செய்திகள் கிசுகிசுக்களாக வந்தாலும், இவர் சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார்.

MOST READ: 'S' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத படிச்சு பாருங்க...

சஜித் கான் 48

சஜித் கான் 48

ஹவுஸ் புல் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சஜித் கான். சமீபத்தில் இவர் மீது MeToo புகார்கள் எழுந்தன. இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, இவரை இயக்குனர் பொறுப்பில் இருந்தும் விலக்கினர்.

சிம்பு 35

சிம்பு 35

சிம்புவின் முதல் காதல் ஒரு புரியாத புதிர். அது மன்மதன் ஐஸூ என்று மட்டும் தெரியும். ஆனால், அந்த ரியல் ஐஸூ யார் என்பதில் நிறைய கிசுகிசுக்கள் நிறைந்துள்ளன. பிறகு நயன்தாராவை காதலித்து பிரிந்த சிம்பு... கொஞ்ச காலம் கழித்து ஹன்ஷிகாவை காதலித்தார். அந்த காதலும் குறுகிய காலத்தில் ப்ரேக்-அப் ஆனது. தொடர் காதல் தோல்விக்கு பிறகு ஆன்மீக பயணத்தை மேற்கொண்ட சிம்பு எப்போது சிங்கிள் துறவி வாழ்க்கையை கைவிட்டு திருமண பந்தத்தில் இணைவார் என்பது டி.ஆர்க்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

திரிஷா 35

திரிஷா 35

நடிக்க வந்து 16 ஆண்டுகளை கடந்துவிட்டார் திரிஷா. சாமி காலத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இன்றும் இருக்கிறார் திரிஷா. அதிலும் 96 படத்திற்கு பிறகு த்ரிஷாவின் மவுசு இன்னும் கூடி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ப்ரேக்-அப் ஆனது. நடிகர் ராணாவுடன் காதல் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இன்று வரையிலும் ஸ்வீட் 16 திரிஷா சிங்கிளாகவே தான் இருக்கிறார்.

நயன்தாரா 34

நயன்தாரா 34

வயதாக, வயதாக நயந்தாரவுற்கு அழகு கூடிக் கொண்டே தான் போகிறது. சிம்பு, பிரபு தேவாவுடன் காதல் தோல்வி அடைந்து மன வருத்தத்துடன் இருந்த நயன்தாரா இடையே சின்ன இடைவெளிவிட்டு மீண்டும் நடிக்க வந்தார். கேப் எடுத்துக் கொண்டு வந்த பிறகும் தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மேலும், இப்போது லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்கிறார். விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா எப்போது திருமணத்தில் மிங்கிளாவார் என்பது பெரிய கேள்விக்குறி.

சதா 34

சதா 34

அது என்னவோ உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. தனிஷா முகர்ஜி, வினய் போலவே சதாவும் இன்று வரை சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். உன்னாலே உன்னாலே ஒரு நல்ல காதல் கதை. ஆனால், அதில் நடித்தவர்களுக்கு ஒரு நல்ல காதல் அமையவில்லை போல.

MOST READ: வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Celebrities Around 40 Years Old and Happily Unmarried

Here we have listed out some Indian Celebrities Around 40 Years Old and Happily Unmarried. Take a look on it.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more