For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாற்றில் வெவ்வேறு காலக்கட்டத்தில் இரண்டு முறை நடந்த ஒரே மாதிரியா நிகழ்வுகளின் தொகுப்பு!

வரலாற்றில் வெவ்வேறு காலக்கட்டத்தில் இரண்டு முறை நடந்த ஒரே மாதிரியா நிகழ்வுகளின் தொகுப்பு!

|

வாழ்க்கையில் சுவாரஸ்யமே இல்லை என்று கூறி சிலர் புலம்புவார்கள்... ஆனால், உண்மையில் அவர்களை சுற்றிலும் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்திருக்கும் / நடந்துக் கொண்டே இருக்கும். ஆனால், அவர்கள் அதுகுறித்து எதுவும் அறிந்திருக்க மாட்டார்கள் அல்லது துளியும் யோசித்திருக்க மாட்டார்கள்.

நாம் இங்கே இந்த தொகுப்பில் காணவிருக்கும் நிகழ்வுகளும் அப்படி தான். வரலாற்றில் ஆங்காங்கே தனித்தனியாக நாம் இவற்றில் சிலவனவற்றை படித்திருப்போம். ஆனால், இந்த இரண்டையும் தொடர்புப்படுத்தி பார்த்து யோசித்திருக்க மாட்டோம்.

இதோ! வரலாற்றில் வெவ்வேறு காலக்கட்டத்தில் இரண்டு முறை நடந்த ஒரே மாதிரியான சுவாரஸ்யமான நிகழ்வுகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விக்டோரியா - எலிசபெத்!

விக்டோரியா - எலிசபெத்!

விக்டோரியா மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணி, இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மறக்க முடியாத, அழிக்க முடியாத தடத்தை பதித்திருப்பவர்கள். இவர்கள் இருவர் மத்தியில் நிறைய விஷயங்கள் ஒரே மாதிரி ஒத்துப் போகின்றன. இவர்கள் இருவருமே நீண்ட ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் (எலிசபெத் இன்றும் பிரிட்டிஷ் அரசியாக இருந்து வருகிறார்) கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விக்டோரியா மகாராணியின் நீண்ட காலம் அரசியாக பதவி வகித்த சாதனையை முறியடித்தார் இரண்டாம் எலிசபெத் ராணி.

இவர்கள் இருவருமே மாடர்ன் டெக்னாலஜி மீது பேரார்வம் கொண்டிருந்தனர். மேலும், இளம் வயதிலேயே அரசியாக பொறுப்பேற்றும் இருந்தனர். விக்டோரியா அரசியாக பொறுப்பேற்கும் போது அவரது வயது 18. இரண்டாம் எலிசபெத் ராணியாக பொறுப்பேற்கும் போது அவரது வயது 25. இவர்கள் இருவரும் மகிழ்ச்சியான இல்லற உறவில் நீடித்து இருந்தவர்கள். இருவருமே ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை செல்வங்கள் பெற்றிருந்தனர்.

விக்டோரியா, இரண்டாம் எலிசபெத், இருவரையுமே துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன அதுவும், சரியாக பக்கிங்காம் அரண்மனை அருகே இவர்கள் உலா வந்துக் கொண்டிருந்த சமயத்தில். மேலும், இவர்கள் இருவர் மீதுமே நாடும், நட்டு மக்களும் மதிப்பும், பேரன்பும் கொண்டிருந்தனர்.

ஸ்டாலின் - ஜெங்கிஸ் கான்!

ஸ்டாலின் - ஜெங்கிஸ் கான்!

ஜோசப் ஸ்டாலின் மற்றும் செங்கிஸ்கான், இருவருமே இருபெரும் ஆட்சியாளர்கள். மிக நீண்ட பெரிய நிலபரப்பை இவர்கள் ஆட்சி செய்து வந்தனர். ஒருபுறம் கொடுங்கோல் ஆட்சி என்ற கருத்துகள் நிலவினாலும், மறுபுறம் தங்கள் ஆட்சி காலத்தில் நாட்டில் பல சீர்திருத்தங்கள் ஏற்படுத்தி இருந்தனர்.

ஸ்டாலின், செங்கிஸ்கான் இருவருமே குழந்தை பருவத்தில் ஏழ்மையில் வாடியவர்கள். தங்கள் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர்கள் இவர்கள். இவர்கள் இருவருக்குமே... தனிப்பட்ட குணநலன் சார்ந்த புனைப்பெயர் இருந்தது. ஸ்டாலினை மேன் ஆப் ஸ்டீல் என்றும் ஜெங்கிஸ் கானை தி கிரேட் ரூலர் என்றும் அழைத்து வந்தனர்.

இவர்கள் இருவருமே அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்கள். மேலும், பலமுறை திருமணம் செய்தவர்கள். முக்கியமாக இவர்கள் இருவரின் மரணத்தை சுற்றியும் நிறைய புரளிகள், மர்மங்கள் மற்றும் சதிவேலை நடந்ததாக கூற்றுகள் பல இருக்கின்றன.

நெப்போலியன் - சார்லஸ்!

நெப்போலியன் - சார்லஸ்!

இவர்கள் இருவருமே தங்கள் சுய திறமையின் மூலம் வளர்ந்து, உயர் பதவிகளை அடைந்தவர்கள். இருவருமே நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

அரச குடும்பம் அல்லது அரச இரத்த பந்தம் என்றில்லாது அரசின் உயர் பதவிகளை அடைந்தவர்கள் இருவரும்.நெப்போலியன் புரட்சிக்கு பின் பிரெஞ்சு பேரரசர் ஆனார். ஸ்வீடிஷ் அரசர் தத்தெடுத்துக் கொண்ட காரணத்தால் பெர்னடோட் சார்லஸ் XIV ஜான், கிங் ஆப் ஸ்வீடன் ஆனார்.

இவர்கள் இருவருமே முக்கியமான சீர்திருத்தங்களை கொண்டுவந்தனர். நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினர் மற்றும் புதிய ஆட்சியை நிலைநாட்டினர்.

© National Library of Norway / Wikimedia Commons

© Depositphotos.com

டைட்டானிக் - வாசா!

டைட்டானிக் - வாசா!

கடலில் மூழ்கிய கப்பல் என்றாலே உலக மக்கள் மனதில் எழும் முதல் பெயர், எண்ணம் டைட்டானிக் தான். இதுவே நீங்கள் ஸ்வீடனில் சென்று கேட்டால், வாசா என்று கூறுவார்கள். தி வாசா என்ற கப்பல் தனது முதல் பயணத்தில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

தி டைட்டானிக் மற்றும் தி வாசா இரண்டு கப்பலிலும் கட்டுமான கோளாறுகள் இருந்தன. இரண்டு கப்பலிலும் கோளாறுகளாக காணப்பட்டவை அவற்றில் இருந்த மாடர்ன் விஷயங்கள் மற்றும் மிகப்பெரிய சைஸ். இரண்டு கப்பல்களுமே நல்ல வெதர் கண்டீஷனில் தான் விபத்துக்குள்ளாகின. மேலும், பாதுகாப்பு படகுகள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான பயணிகள் உயிரிழக்க நேரிட்டது.

லிங்கன் - கென்னடி

லிங்கன் - கென்னடி

இந்த இரண்டு அமெரிக்க அதிபர்களும் கொலை செய்யப்பட்டு இறந்தனர். இருவேறு நூற்றாண்டில் இவர்கள் இறந்திருந்தாலும் இவர்கள் மரணத்தில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தனர். அதுவும் பொதுவெளியில். லிங்கனை தியேட்டரில் வைத்தும், கென்னடியை காரில் வைத்தும் சுட்டனர்.

இந்த இரண்டு துப்பாக்கி சூடும் வெள்ளிக்கிழமையில் நடந்தது. இருவருமே அவர்களது அரசியல் வாழ்க்கை காரணங்களால் சுடப்பட்டனர். இவர்கள் இருவரை சுட்ட இரண்டு நபர்களின் பெயரும் ஒன்று தான். இவர்கள் மரணத்தை சுற்றி இருக்கும் சதி காரியங்கள் மற்றும் மர்மங்கள் இன்று வரை வளர்ந்துக் கொண்டே தான் இருக்கின்றன. இதுநாள் வரை சரியான தீர்வு காணப்படவில்லை.

ஜோன் ஆப் ஆர் - எமிலியா ப்லேடர்!

ஜோன் ஆப் ஆர் - எமிலியா ப்லேடர்!

தங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய வீர இளம் மங்கைகள் இவர்கள். ஜோன் ஆப் ஆர்க் பிரிட்டிஷ் படையை எதிர்த்து போராடிய பிரெஞ்சு பெண். எமிலியா ப்லேடர் ருஷ்ய பேரரசை எதிர்த்து போராடிய போலாந்து படையை சேர்ந்தவர்.

இவர்கள் இருவரையும் ஆரம்பத்தில் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ள அதிகாரிகள் மறுத்தனர். இராணுவத்தில் இடம்பெற இவர்கள் நிறையவே போராடினார்கள். இவர்கள் இருவருமே உலகளவில் வீரத்திற்கு பெயர்பெற்ற மங்கைகள். இவர்கள் இருவரும் ஆண்களுக்கான போர் உடைகளை அணிந்து சண்டையிட்டவர்கள்.

இவர்கள் இருவருமே தங்கள் படையில் ஊக்கவிக்கும் திறன் கொண்டிருந்த நபர்களாக காணப்பட்டனர். மேலும் இவர்களை கிளர்ச்சி எழுச்சியின் இலட்சினையாக கண்டனர். எதிர்பாராத விதமாக இவர்கள் இருவருமே இளம் வயதில் இறந்தனர். இன்றளவில் இவர்களது தாய்நாடும், நாட்டு மக்களும் இவர்களை நினைவு கூர்ந்து பெருமைப்பட்டு வருகிறார்கள்.

© Polona / Wikipedia© Depositphotos.com

சாப்லின் - மீம் டெம்ப்ளேட்!

சாப்லின் - மீம் டெம்ப்ளேட்!

நீங்கள் இந்த படத்தை நிறைய மீம்களில் கண்டிருக்கலாம். சமீபத்தில் கூட ஏற்கனவே வாங்கிய புத்தகங்கள், புதிய புத்தகங்கள் என்று குறிப்பிட்டு இந்த படத்தை வைத்து மீம் வைரலாக பரவி வந்தது. இந்த படத்தில், காதலியின் கைப்பிடித்து நடந்து செல்லும் ஆண், தன்னை கடந்து சென்ற அழகான பெண்ணை வியப்பாக பார்க்கும் படி இருக்கும்.

இதே போஸ், இதே மாதரியான சூழல் கொண்ட படம் சென்ற நூற்றாண்டிலும் இருந்தது. அது சார்லி சாப்ளின் நடித்த Pay Day என்ற படத்தில் இடம்பெறும் காட்சி ஆகும். இதில், கதையின் நாயகன் சார்லி சாப்ளின் அருகே தனது மனைவி அருகில் இருக்கும் போது, தன்னை கடந்து செல்லும் அழகான பெண்ணை ரசித்து பார்த்துக் கொண்டிருப்பார். பின்னாடி இருந்து அவரது மனைவி முறைத்து பார்த்துக் கொண்டிருப்பார்.

© Warnerbros.com© Depositphotos.com

ஆச்சரியங்கள்!

ஆச்சரியங்கள்!

வருடங்கள் உருண்டோடினாலும், இப்படி சில காட்சிகள் அச்சு போல அதே மாதிரி வரலாற்றில் நிகழ்வது ஆச்சரியத்தை அளிக்கிறது. விக்டோரியா - இரண்டாம் எலிசபெத்தில் துவங்கி, ஜோன் ஆப் ஆர்க் - எமிலியா வரை நாம் இங்கே பல உதாரணங்கள் கண்டோம். இவை நிச்சயம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும்.

இப்படியான நிகழ்வுகள் வரலாற்றில் தான் நடந்திருக்கின்றன என்றில்லை.. உங்கள் வாழ்வில், குடும்பத்திலும் கூட இப்படியான நிகழ்வுகள் நடந்திருக்கலாம். இதே போல நாம் பெரிதும் அறியாமல் இருந்திருப்போம். கொஞ்சம் யோசித்தால் போதும், நம்மை சுற்றி நடக்கும் பல ஆச்சரியங்களை நாம் அறிந்துக் கொள்ள இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Incredibly History Has Been Repeated Itself Several Times, And No One Realized it!

From Victoria - Elizabeth to Distracted boy friend - Charlie Chaplin, History has been repeated itself several times. But, never realized it.
Desktop Bottom Promotion