ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சோக வரலாறு!

Posted By:
Subscribe to Boldsky
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சோக வரலாறு!- வீடியோ

ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி செய்தார்கள். பின்னர் காந்தி, நேரு போன்ற தலைவர்கள் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்கள். ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியர்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டார்கள். சுதந்திரப்போராட்டங்கள், புரட்சிகள் வெடித்தன இந்திய வரலாறு குறித்து ஜனவரி மாதமும் ஆகஸ்ட் மாதம் நெருங்கும் சமயங்களில் இந்த சாரம்சத்தில் பல்வேறு உண்மைக் கதைகளை கேட்டிருப்போம்.

ஆம், அவை அனைத்தும் உண்மை தான். இப்போதும் உங்களிடத்தில் ஓர் உண்மையைத் தான் சொல்லப்போகிறோம். உங்களை உறைய வைத்திடும் அந்த உண்மை. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. அப்படி பாகிஸ்தான் தனி நாடு என்று அறிவித்த பிறகு நடைப்பெற்ற ஓர் சம்பவம் தான் இப்போது உங்களுக்கு சொல்லப்போகிறோம்.

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் எண்ணற்ற கதைகளை கேட்டுவிட்டோம். இந்த ஒரு சம்பவத்தை ஏன் நாங்கள் கேட்க வேண்டும்? அப்படி என்ன அதில் உறைய வைத்திடும் சம்பவங்கள் இருக்கிறது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் :

காரணம் :

எனக்கு நீ அடிமை, உன்னை நான் வென்றுவிட்டேன். என்று பிறர் உணர வேண்டுமாயின் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? உங்கள் சொத்துக்களையோ, உங்களின் உடைமைகளையோ அல்லது உங்களையோ தாக்க மாட்டார்கள்.

உங்கள் வீட்டுப் பெண்களை அம்மா, மனைவி, அக்கா, தங்கை, மகள் இவர்களில் யாரையாவது வந்து நிர்வாணப்படுத்துவர், பாலியல் வன்புணர்வு செய்வர், கொடூரமாக உறுப்புகளை சிதைத்து கொலை செய்வர்.

ஆம், இதனை இல்லையென்று உங்களால் மறுக்கவே முடியாது. ஏனென்றால் வரலாற்றில் இந்த சம்பவங்கள் உண்மையாக நடந்திருக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அந்த சோக வரலாற்றைத் தான் இப்போது படிக்கப்போகிறீர்கள்.

Image Courtesy

பாகிஸ்தான் வேண்டும் :

பாகிஸ்தான் வேண்டும் :

இந்தியாவில் ஹிந்துக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் அங்கே முஸ்லீம்களால் வாழ முடியாது. ஆகவே முஸ்லீம்களுக்கு என்ற தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலில் வைத்தவர் முகமது இக்பால்.

கவிஞரும் அரசியல்வாதியுமான இவர் 1930 ஆம் ஆண்டு லாகூரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது தான் முதன் முதலில் முஸ்லீம்களுக்கு என்ற தனி நாடு கோரிக்கையை வைத்தார்.

Image Courtesy

அடுத்தடுத்த வேலைகள் :

அடுத்தடுத்த வேலைகள் :

இந்தியாவிற்கு சுயாட்சி வழங்குவதா அல்லது பிரிட்டன் அரசாங்கத்தின் கீழ் கட்டுப்பாட்டில் வைப்பதா என்ற விவாதம் போய்க் கொண்டிருந்தது. இங்கே முஸ்லீம்கள் தங்களின் தனி நாடு கோரிக்கையை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கான நகர்த்தல்கள் நடந்து கொண்டிருந்தன.

தனி நாடு கோரிக்கையை இக்பால் எழுப்ப அதற்கான வடிவத்தை கொடுத்திருந்தார் சவுத்ரி ரஜ்மத் அலி. இவர் தான் முஸ்லீம்களுக்கான நாட்டின் பெயர் பாகிஸ்தான் என்றும் அறிமுகப்படுத்தினார்.

Image Courtesy

பெயர் காரணம் :

பெயர் காரணம் :

பாகிஸ்தான் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா, பஞ்சாப், ஆப்கானிஸ்தான், காஷ்மீர்,சிந்து,பலுகிஸ்தான்,வங்காளம் இவற்றை எல்லாம் உள்ளடக்கிய நாடு என்று குறிக்கும் வகையில் இந்த மாகாணங்களின் ஆங்கிலப்பெயர்களை இணைத்து paks என்றும் பலுகிஸ்தானிலிருந்து tan சேர்த்து பாக்ஸ்தான் என்றானது. பின்னர் உச்சரிக்க ஏதுவாக பாக்கிஸ்தான் என்று உருவானது.

பிரிவிணை :

பிரிவிணை :

சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதில் முஸ்லீம் தலைவர்கள் உறுதியாக இருந்தனர். அதற்கான போராட்டங்களும் ஆங்காங்கே வெடித்தது. இதனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே இந்தியா பாகிஸ்தான் பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

Image Courtesy

இரண்டு பேர் :

இரண்டு பேர் :

ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அரசாங்க வழக்கறிஞர்களான சவுத்ரி முகமது அலி மற்றும் எச். எம்.படேல் ஆகிய இருவரையும் இந்தியா பாகிஸ்தான் பாகப்பிரிவிணை செய்ய பணிக்கப்பட்டார்கள்.

இந்தியா என்ற பெயர் முதற்கொண்டு அரசாங்கப் பணம்,அலுவலக மேஜைகள்,பேனா,பென்சில்,டேபிள், லைட்,ஃபேன்,கடிகாரம்,திரைச்சீலை,தட்டு,ஸ்பூன்,என்று ஒன்று விடாமல் எல்லாமே பிரிக்கப்பட்டது.

எங்களுக்கு மோசமான பொருளை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று ஒரு சாராரும், அதிகமாக எடுத்துக் கொண்டார்கள் என்று இன்னொரு சாராரும் மாறி மாறி புகார்களை சொல்லிக் கொண்டு கலகம் வெடித்து ஒரு வழியாக நடந்து முடிந்தது.

Image Courtesy

எல்லைக் கோடு :

எல்லைக் கோடு :

உடைமைகளையும் பொருட்களையும் மட்டும் பிரித்தால் போதுமா எல்லைக்கோட்டினை யார் முடிவு செய்வது, நாட்டின் எல்லை எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்ற உண்மை தெரியாமல் எப்படி ஒரு நாடு என்று அதனை அடையாளப்படுத்துவது. இதோ இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கோடு பிரிக்க ஆரம்பித்தார்கள்.

இந்த தட்டுமுட்டு சாமான்களுக்கே சண்டைக்கு வந்தவர்கள் எல்லை பிரிப்பதில் சண்டைக்கு வராமல் இருப்பார்களா? அதற்காக ஒரு முடிவு செய்யப்பட்டது. இந்தியாவைப்பற்றி தெரியாத ஒரு அதிகாரி வர வேண்டும். அவர் பிரித்தால் எந்த உள்ளடி வேலைகளும் இருக்காது என்று நினைத்தார்கள்.

Image Courtesy

வந்தார் ராட்கிளிப் :

வந்தார் ராட்கிளிப் :

நேருவும் ஜின்னாவும் இணைந்து சர் சிரில் ராட்கிளிப்பை தேர்ந்தெடுத்தனர். இவர் ஓர் அரசாங்க அதிகாரி, திறமையான வழக்கறிஞர் இதைத் தாண்டி மிக முக்கியமாக இவருக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றுமே தெரியாது.

மிகுந்து சிரமம். காடு,மலை, வயல், தொழிற்சாலை, ரயில் நிலையம், தபால் நிலையம் , கிராமம்,பள்ளிக்கூடம், எல்லாம் தாண்டி ஒரு எல்லைக்கோடு வரையவேண்டும்.

நடுநடுவே வருகிற வெவ்வேறு மக்கள் அவர்களின் வாழ்வாதாரம், பிரச்சனைகள் எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும், ஹிந்துக்கள் அதிகமிருக்கும் ஓர் ஊர் பாகிஸ்தான் பக்கமும், முஸ்லீம்கள் அதிகமிருக்கும் ஊர் இந்தியாவின் பக்கமும் சேர்ந்தால் அவர்களை எப்படி சமாளிக்க முடியும்.

எண்ணற்ற குழப்பங்கள் இத்தனையும் கடந்து ஆகஸ்ட் பதினைந்துக்கு முன்பு தன் வேலையை கச்சிதமாக முடித்துக் கொடுத்தார் ராட்கிளிப்.

Image Courtesy

ஆரம்பம் :

ஆரம்பம் :

பிரித்த வரைபடத்தை நேருவிடமும் ஜின்னாவிடமும் கொடுத்தர இருவருக்கும் திருப்தியில்லை. விளை நிலம் எங்கள்க்கு அதனை பதப்படுத்தும் தொழிற்சாலை அவர்களுக்கா? தொழிற்சாலையும் எங்களுக்கே இருந்தால் தானே அதை வைத்து பயன்பெற முடியும். இப்படியாக எண்ணற்ற குறைகள் இருபக்கமும் இருந்தது.

இப்போது இது தான் பாகிஸ்தான் என்று ஓர் வடிவம் கிடைத்து விட்டது. பாகிஸ்தானில் இருக்கப்போகும் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்கள், இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் ஹிந்துக்கள்.

Image Courtesy

கிளப்புங்கள் :

கிளப்புங்கள் :

நடுவில் சிக்கிக் கொண்டது பஞ்சாப். மேற்கு பஞ்சாப் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று விட்டது அங்கே முஸ்லீம்கள் பெரும்பான்மை என்றாலும்,ஹிந்துக்களும் சீக்கியர்களும் இருந்தார்கள்.

இந்தியாவிற்கு கிடைத்த கிழக்குப் பகுதியில் முஸ்லீம்களும் இருந்தார்கள்.

பெரும்பான்மை இருக்கும் இடத்தில் சிறுபான்மையினருக்கு என்ன வேலை என்று இரண்டு பக்கமும் மக்கள் அடித்து விரட்டப்பட்டார்கள்.

சில இடங்களில் தாங்களாகவே இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறி விடலாம் என்று பிரிந்தார்கள்.

Image Courtesy

ஹிந்து முஸ்லீம் :

ஹிந்து முஸ்லீம் :

ஹிந்து முஸ்லீம் பிரச்சனை மிகத் தீவிரமானது.காரணம் எதுவும் தேவையாய் இருக்கவில்லை அவன் ஹிந்துவா அப்படியானால் அவன் என் எதிரி அவனைக் கொல்ல வேண்டும் என்று கொக்கரித்தான் ஒரு முஸ்லீம். அதே போலத்தான் இங்கேயும் முஸ்லீம் என்றால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று கிளம்பினார்கள்.

Image Courtesy

பெண்கள் :

பெண்கள் :

இந்த வன்முறையில் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்கள் தான். ஏனென்றால் பெண்கள் தங்கள் கலாச்சாரத்தின் ஓர் அடையாளமாக பார்த்தார்கள். பெண்களை தாக்குவது மூலமாக அவர்களின் கலாச்சாரத்தையே குலைத்து விட்டதாக பெருமை கொண்டார்கள்.

உன்னை அழிக்க வேண்டும் என்பது மட்டுமே என் இலக்கு என்று இறங்கியவர்களுக்கு அது சிறுமியை, கர்பிணியா, வயது முதிர்ந்தவளா என்று எதுவும் பார்க்கத் தெரியவில்லை எதிரி நாட்டிலிருந்து வந்திருக்கிறாள். அவளை சிதைத்தாள் அவர்களின் கலாச்சாரமே குலையும்.பிறகென்ன கொண்டு வா....

எப்படியும் இறக்கத்தானே போகிறாள் அதற்கு முன்பாக அவளை ஒரு முறை பாலியல் வன்முறை செய்து விடலாம் என்று களமிறங்கினார்கள்.

Image Courtesy

பாலியல் வன்முறை :

பாலியல் வன்முறை :

பெண்களை களங்கப்படுத்துவது மூலம் எதிராலியின் மதத்தை களங்கப்படுத்தியதாக நினைத்தார்கள். இதற்கு பாலியல் வன்முறை மட்டும் தீர்வல்ல வாழ்நாள் முழுமைக்கும் அந்த வடு அவர்களுடனே இருக்க வேண்டும் என்று நினைத்து சில கொடூரங்களையும் நிகழ்த்தினாரக்ள்.

இஸ்லாமிய பெண்களின் உடலில் சூலத்தை, சக்கரம்,ஓம் என்ற அடையாளத்தை பொறித்தார்கள்.ஹிந்துப் பெண்களின் மார்பகங்களில் பிறை நட்சத்திரத்தை பொறித்தார்கள்.

Image Courtesy

கர்பிணிப்பெண்கள் :

கர்பிணிப்பெண்கள் :

இந்த கொடூர நிகழ்விலிருந்து கர்பிணிப்பெண்கள் கூட தப்பிக்கவில்லை. நடுவீதியில் இழுத்து வரப்பட்டு கருவில் இருக்கும் குழந்தை வெளியில் பிடுங்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்கள் கர்பிணிப்பெண்கள்.

என் எதிர்கால எதிரியை கொன்று விட்டேன் என்று கொக்கரித்தான் அந்த கொலைகாரன். என் வம்சம் உன் வயிற்றில் வளர்வதன் மூலம் உன் மதம் அழியட்டும் என்று கத்திக் கொண்டே எதிரி நாட்டுப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தார்கள்.

Image Courtesy

கொலை :

கொலை :

பாலியல் வன்புணர்வு செய்ததோடு மிகவும் கொடூரமாக பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள். கிட்டத்தட்ட சிதைந்த நிலை. அதோடு லட்சக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டார்கள், கட்டாயத்திருமணம் செய்து அடிமைகளாக வைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

எதிரி நாட்டினரால் திடீரென்று கடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மட்டுமே பல்லாயிரத்தை தாண்டியது.

Image Courtesy

இனி இவர்களின் கதி :

இனி இவர்களின் கதி :

அரசாங்கம் அந்தப் பெண்களை மீட்க, காப்பாற்ற அவசரச் சட்டமும் கொண்டு வந்தது. சரி, அரசாங்கத்தின் திட்டப்படி மீட்கப்படும் பெண்களை என்ன செய்வது எங்கே பாதுகாப்பது.

நீ இன்னொருவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறாய், அவன் உன்னை புணர்ந்த நேரத்தில் உன் உயிர் பிரிந்திருக்க வேண்டாமா இன்னுமா நீ உயிருடன் இருக்கிறாய் என்று சொல்லி எதிரி நாட்டினரிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களை இங்கே யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனாலேயே பல பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

Image Courtesy

புரளியால் இறந்தப் பெண்கள் :

புரளியால் இறந்தப் பெண்கள் :

பக்கத்து தெருவில் எதிரி நாட்டினர் நுழைந்து ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெண்களை கடத்திப் போகிறார்களாம் என்ற புரளி பரவ இங்கே தன் வீட்டுப் பெண்களை வரிசையாக நிற்க வைத்து கிணற்றில் தள்ளியோ அல்லது கழுத்தை நெரித்தோ கொன்று விடுவான்.

எங்கள் வீட்டுப் பெண் என் கையால் இறந்துவிட்டாள். அவள் எதிரியின் கைகளில் சிக்கவில்லை எங்கள் குலப்பெருமையை காப்பாற்றிவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் அவர்கள் தங்களின் தாய், மனைவி சகோதரிகள், மகள்கள் ஆகியோறை கொன்று குவித்தனர். இப்படியான புரளியால் மட்டும் ஆயிரக்கணக்கான பெண்களின் தங்களின் குடும்ப உறுப்பினர்களாலேயே கொன்று குவிக்கப்பட்டனர்.

கிட்டத்தட்ட லட்சசக்கணக்கான பெண்கள் இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டார்கள். அதேயளவு பெண்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.ஏராளமானோர் மனநிலம் குன்றி தெருக்களில் அனாதைகளாக திரிந்தார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse women
English summary

In Indian History More than one Lakhs women Raped At a time.

In Indian History More than one Lakh women Raped At a time.
Story first published: Saturday, January 6, 2018, 12:00 [IST]