For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ண ஜெயந்தி 2019: கிருஷ்ண ஜெயந்தி எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நன்மையை வழங்கும்?

கிருஷ்ணர் பூமியில் ஜனித்த தினத்தை கிருஷ்ணா ஜெயந்தி என்று வருடா வருடம் நாம் அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விழா இந்தியா முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டப்பட உள்ளது.

|

இந்து மத கடவுள்களில் மிக முக்கியமான ஒருவர் பகவான் விஷ்ணு ஆவார். திருமாலுடைய பல அவதாரங்களில் அனைவரையும் கவர்ந்த ஒரு அவதாரம் என்றால் அது ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம்தான். கம்சனை அழிக்கவும் மகாபாரத போரை தலைமையேற்று நடத்தி பூமியில் அதர்மத்தை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரமே வாசுதேவ கிருஷ்ணர் என்னும் அவதாரமாகும்.

How to worship Lord Krishna on Krishna Jayanthi?

கிருஷ்ணர் பூமியில் ஜனித்த தினத்தை கிருஷ்ணா ஜெயந்தி என்று வருடா வருடம் நாம் அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விழா இந்தியா முழுவதும் வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் கிருஷ்ணரை வழிபட்டு உங்கள் வீட்டுக்கு கண்ணனை அழைத்து அவரின் அருளை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி

பகவான் கிருஷ்ணர் புயல், மழை சூழ்ந்த இருட்டு நேரத்தில் சிறைச்சாலையில் வசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாய் பிறந்தார். பின்னர் அவரின் மாமா கம்சனுக்கு பயந்து பிருந்தாவனத்தில் இருந்த தனநந்தர் மற்றும் யசோதையின் மகனாக வளர்க்கப்பட்டார். கிருஷ்ணர் பிறந்த இந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. இது கொண்டாடப்படும் இடத்தை பொறுத்து கோகுலாஷ்டமி, அஷ்டமி ரோகினி, கிருஷ்ணா ஜென்மசாந்தி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஏன் கிருஷ்ண ஜெயந்தி?

ஏன் கிருஷ்ண ஜெயந்தி?

திருமால் காக்கும் கடவுளாவார். அவரின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரும் நமக்கு பல நன்மைகளை வழங்க கூடியவர். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு செய்வது உங்களுக்கு சகல செல்வங்களையும் வழங்கக்கூடும். கடன் தொல்லை, செழிப்பு, குழந்தை வரம் என அனைத்தும் கிடைக்க கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு அவசியமானது.

எப்படி வழிபட வேண்டும்?

எப்படி வழிபட வேண்டும்?

கிருஷ்ண ஜெயந்தி பூஜையை தொடங்குவதற்கு முன் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை பூஜைத் தொடங்கும் முன் குளித்துவிட்டு சிவப்பு நிற துணிகளை அணிந்து கொண்டு பூஜையறையில் அமரவும். 10 லக்ஷ்மி நாணயங்களை பூஜையறையில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து விளக்கேற்றவும்.

கிருஷ்ண ஜெயந்தி மந்திரம்

கிருஷ்ண ஜெயந்தி மந்திரம்

மந்திரம்:

" ஓம் ஹிரும் ஸ்ரீம ஸ்ரீ ஃபேட் " என்னும் மந்திரத்தை முழு மனதுடன் கூறி பூஜையை தொடங்குங்கள். பூஜையில் வைக்கப்பட்ட நாணயங்களை பூஜை முடிந்தவுடன் உங்கள் வாகனம், பணபெட்டி மற்றும் எங்கெல்லாம் நீங்கள் செல்வம் நிறைய வேண்டுமென விரும்புகிறீர்களா அங்கெல்லாம் வைத்து விடுங்கள். ஒரு நாணயம் மட்டும் பூஜையறையிலேயே இருக்க வேண்டும்.

பலன்கள்

பலன்கள்

கிருஷ்ணரை தினமும் வணங்கினாலும் கிருஷ்ண ஜெயந்தி அன்று வழிபடுவது கூடுதல் சிறப்பானது. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபட்டால் கிருஷ்ணர் தன் பூரண அருளை வழங்குவதோடு அவர்களுக்கு ஏற்படும் அனைத்து சோதனைகளில் இருந்தும் பாதுகாப்பார் மேலும் அவர்களை சுற்றியுள்ள தீயசக்திகள் மற்றும் எதிர்மறை சக்திகளை விரட்டுவார்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு சிவப்பு சந்தனம் வைத்து வழிபடுவது அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை அதிகரிக்கும், இவர்கள் படைக்கவேண்டிய நெய்வேத்தியம் மாதுளை மற்றும் லட்டு ஆகும்.

ரிஷபம்

ரிஷபம்

குழந்தையில்லா ரிஷப ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயநதி அன்று சந்தனம் வைத்து வழிபடுவது அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அளிக்கும். இவர்கள் படைக்க வேண்டிய நெய்வேத்தியம் ரசகுல்லா.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் துளசி வைத்து வழிபடுவது உங்களுக்கு நீண்ட ஆரோக்கியத்தை வழங்கும். இவர்கள் முந்திரியால் செய்யப்பட்ட இனிப்புகளை நெய்வேத்தியமாக படைக்கலாம்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் பசும்பால் வைத்து கிருஷ்ணரை வழிபடுவது அவர்கள் வாழ்வில் அமைதியை வழங்கும். இவர்கள் தேங்காய் கொண்டு செய்யப்பட்ட இனிப்புகளை படைக்கலாம்.

சிம்மம்

சிம்மம்

எதிரிகளின் தொல்லை நீங்க சிம்ம ராசிக்காரர்கள் உலோகத்தால் செய்யப்பட்ட புல்லாங்குழலை வைத்து வழிபடலாம். இவர்கள் நெய்வேத்தியமாக படைக்க வேண்டியது வெல்லத்தை.

கன்னி

கன்னி

தங்களின் அனைத்து வேண்டுதல்களும் பழிக்க கன்னி ராசிக்காரர்கள் பச்சரிசி மாவும், நாட்டு சர்க்கரையும் வைத்து வழிபடவேண்டும். இவர்கள் துளசி அல்லது பச்சை நிற பழங்களை நெய்வேத்தியமாக உபயோகிக்கலாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய் வைத்து வழிப்பட்டால் அவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும். இவர்கள் ஆப்பிள் அல்லது கல்கண்டை நெய்வேத்தியமாக படைக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுக கிருஷ்ணருக்கு தேன் வைத்து கிருஷ்ண ஜெயந்தி அன்று வழிபடுங்கள். மேலும் வெல்லத்தால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை படைக்கலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வாசுதேவனின் அருள் கிடைக்க மஞ்சள் நிற பூக்களை வைத்து வழிபடவும்.

இவர்கள் சுண்டலை வேகவைத்து படையலாக வைத்து வழிபடலாம்.

மகரம்

மகரம்

உங்கள் வேண்டுதல்கள் பழிக்க கிருஷ்ணருக்கு மயிலிறகுகளை வைத்து வணங்குங்கள். நீங்கள் படைக்க வேண்டிய நெய்வேத்தியம் கருப்பு திராட்சை ஆகும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் கங்கை நீரை வைத்து கிருஷ்ணரை வழிபட வேண்டும். இவர்கள் நெய்வேத்தியமாக வைத்து வைத்து வணங்க வேண்டியது சப்போட்டா பழத்தை.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் நெய் வைத்துகிருஷ்ணரை வழிபட வேண்டும். இவர்கள் படைக்கவேண்டிய நெய்வேத்தியம் வாழைப்பழங்கள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to worship Lord Krishna on Krishna Jayanthi?

Krishna Jaynathi is one of the India's most popular festival celebrated across the country with great zest and zeal, to commemorate the birth of Lord Krishna. Considered one of the most powerful human incarnations of Lord.
Desktop Bottom Promotion