For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நொடி வேலைக்கு பல கோடி ஊதியம் வாங்கும் விராத் கோலி, ரொனால்டோ!

ஒரு நொடி வேலைக்கு பல கோடி ஊதியம் வாங்கும் விராத் கோலி, ரொனால்டோ!

|

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவையின் வருகைக்கு பிறகு செய்திகளின் தாக்கம் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. ஒரு அரசியல் தலைவரோ, விளையாட்டு வீரரோ, சினிமா நட்சத்திரமோ முன்பு ஏதாவது கருத்து கூறினால், அது செய்தித்தாள், ரேடியோ, தொலைக்காட்சி போன்றவற்றில் வெளியாகும். அதை பிடித்திருந்தால் மக்கள் தங்களுக்குள் பேசி பாராட்டிக் கொள்வார்கள். பிடிக்கவில்லை என்றால், தங்களுக்குள்ளேயே திட்டித் தீர்த்து கொள்வார்கள்.

ஆனால், சமூக இணையங்கள் வந்த பிறகு... பிரபலங்கள் தங்கள் முகவரியில் பகிரும் பதிவுக்கு கீழேயே ஒரு மோதல் வெடிக்கிறது. அந்த மோதல் பல குழுக்கள், பல்வேறு பக்கங்களுக்கு பரவி டிரெண்ட் டாகிவிடுகிறது. மேலும், தங்களுக்கு பிடித்த / பிடிக்காத தலைவர்கள், வீரர்கள், நட்சத்திரங்களை நேரடியாக பாராட்டவும், திட்டவும் கூட இது வழிவகுகிறது.

இதெல்லாம் தாண்டி... பொதுஜனம், ரசிகர்களின் லைக்ஸ் மூலம் பிரபலங்கள் சம்பாதிக்கவும் செய்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் இடும் லைக்ஸ், பகிர்வுகள் எப்படி அவர்களுக்கு பணத்தை கொடுக்கிறது என்று நீங்கள் அறிவீர்களா?

பொதுவாக பிரபலங்கள் சொந்த வாழ்க்கை படம், வெற்றி, விழா, விருது, பொதுவான கருத்துக்களை தங்கள் சமூக இணையங்களில் பகிர்வார்கள். இதுப்போக இவர்கள் பெய்டு ப்ரமோஷன் என்ற பெயரில், பணம் வாங்கிக் கொண்டும் பதிவிடுவது உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு!

ஆய்வு!

HopperHQ.com என்பது இன்ஸ்டாகிராமில் ஸ்கெட்யூல் போஸ்ட் பதிவிட உதவும் டூல் ஆகும். இதன் டூல் மூலம் ஆராயாப்பட்ட போது, சமூக தளங்களில் அதிகமாக பணம் சம்பாதிக்கும் பிரபலம் யார் என்பது கண்டறியப்பட்டது. இது, அவர்கள் பதிவுக்கு எத்தனை பேர் லைக் செய்கிறார்கள், எத்தனை பேர் ஷேர் செய்கிறார்கள், அவர்களை பின்தொடரும் ரசிகர் எண்ணிக்கை எவ்வளவு என்பதை எல்லாம் சார்ந்தது ஆகும்.

விராட் கோலி!

விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் மொத்தல் 23.2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். விராட் கோலி ஒரு பிராண்டை குறித்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டால் அவருக்கு 1,20,000 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.

17வது இடம்!

17வது இடம்!

இப்படி சமூக தளங்களில் பெய்டு ப்ரமோஷன் மூலமாக அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் உலக அளவில் விராட் கோலி 17வது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இந்தியர்களில் விராட் கோலி பெயர் தான் முதன்மையாக இருக்கிறார்.

ரியாலிட்டி ஷோ பிரபலம்!

ரியாலிட்டி ஷோ பிரபலம்!

அமெரிக்கன் ரியாலிட்டி டெலிவிஷன் ஷோ பர்சனாலிட்டி, மாடல் மற்றும் தொழிலதிபர் என பன்முகம் கொண்ட கைலி ஜென்னர் ஒரு பதிவுக்கு மில்லியன் டாலர்கள் பெற்று முதன்மை இடத்தை வகிக்கிறார்.

விராட் கோலி NBA சூப்பர்ஸ்டாராக கருதப்படும் ஸ்டீபன் கரியை விட பத்தாயிரம் டாலர்கள் அதிகம் சம்பாதிக்கிறார். அவர் 21.3 மில்லியன் பின்தொடர்பாளர்களுடன் ஒரு பதிவுக்கு 1,10,000 டாலர்கள் சம்பாதிக்கிறார்.

மற்றும் ஓய்வுபெற்ற குத்துசண்டை லெஜண்ட் மேவெதர் 20.7 மில்லியன் பின்தொடர்பாளர்களுடன் 1,07,000 டாலர்கள் பெற்றுவருகிறார்.

ரொனால்டோ, நெயமர்!

ரொனால்டோ, நெயமர்!

கால்பந்தாட்ட முன்னணி வீரர் ரொனால்டோ 136 மில்லியன் பின்தொடர்பாளர்கள் கொண்டிருக்கிறார். இவர் தனது ஒரு பதிவுக்கு 7,50,000 அமெரிக்க டாலர்கள் பெறுகிறார். மற்றும் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெயமர் ஆறு இலட்சம் டாலர்களும், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லெஜண்ட் மெஸ்ஸி ஐந்து இலட்சம் டாலர்களும் பெறுகிறார்கள். ஓய்வுபெற்ற முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பக்கம் ஒரு பதிவுக்கு மூன்று இலட்சம் டாலர்களும் பெறுகிறார்.

தற்சமயம்!

தற்சமயம்!

அனுஷ்காவை திருமணம் செய்த பிறகு, இன்ஸ்டாகிராமில் கோலியின் பிரொபைல் மதிப்பு கூடி இருக்கிறது என்று அறியப்படுகிறது.

கோலி தற்சமயம் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாட காத்திருக்கிறார். நடந்து முடிந்த இருபது ஓவர் போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டிகளில் இங்கிலாந்தும் தொடரை கைப்பற்றி இருக்கின்றன.

கடந்த 86 ஆண்டுகளில் நடந்த 17 தொடர்களில் இந்தியா இங்கிலாந்தை அதன் மண்ணில் மூன்று முறை மட்டுமே வென்றுள்ளது. அஜித் வடாகர் (1971), கபில் தேவ் (1986) மற்றும் ராகுல் திராவிட் (2007).

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரை விராட் கோலி கைப்பற்றினால் இந்த பட்டியலில் நான்காவது இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெற வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Much Instagram Pays For International Celebrities For Each Post?

You will surely shocked, it you got to know, How Much Instagram Pays For International Celebrities For Each Post. It is more than lakhs and crores.
Desktop Bottom Promotion