For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவையே நடுங்கச் செய்த டஸ்ட் பவுல் பற்றி தெரியுமா?

அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய இயற்கை பேரிடர்

|

வரலாற்றில் நிகழ்ந்த சில சம்பவங்களை காலப்போக்கில் நாம் மறந்து விடுவோம். அல்லது வருடங்கள் கடந்து சென்றதும் அப்படியே அதை திரித்து வேறு கதையாக அல்லது அமானுஸ்ய கதையாக மாற்றிவிடுவார்கள். காலப்போக்கில் அப்படி மாறிவிட்டது என்று நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு விஷயங்களுக்கு பின்னாலும் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

இன்றைக்கு தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ச்சிகளை சந்தித்தாலும் இயற்கையை இன்னமும் யாராலும் வெல்ல முடியவில்லை. இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதை முன்கூட்டியே நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. பேரிடர் நடந்த பிறகு அதிலிருந்து மீள, பேரிடர் ஏற்படும் போது நம்மை தற்காத்துக் கொள்ள புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்தாலும் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னால் முன்கூட்டியே கண்டுபிடிக்க இன்றும் முடியவில்லை.

1930களில் அமெரிக்காவை புரட்டிப் போட்ட ஓர் பயங்கரமான பேரிடடைப் பற்றித் தான் இப்போது பார்க்கப்போகிறீர்கள். இதனை டஸ்ட் பவுல் என்று வழங்குகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுற்றுச்சூழல் :

சுற்றுச்சூழல் :

கடந்த முன்னூறு வருடங்களில் வட அமெரிக்காவில் நிகழ்ந்த மிகப்பெரிய இயற்கை பேரிடர் என்று இதனை குறிப்பிடலாம். இதனை டஸ்ட் பவுல் என்று அழைக்கிறார்கள். மழையின்மை, தண்ணீர் பஞ்சம், வறட்சி ஆகியவற்றினால் இந்த டஸ்ட் பவுல் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது தரையிலிருந்து மண் காற்றோடு பறந்து எல்லா பொருட்களையும் மூடிவிடும் சாலை, வீடு என எங்கு திரும்பினாலும் மணல் தான்.

Image Courtesy

பத்து வருடங்கள் :

பத்து வருடங்கள் :

இந்த பேரிடர் சுமார் பத்து வருடங்கள் வரை தொடர்ந்திருக்கிறது. இது பொருளாதார ரீதியாகவே பலத்த அடியை கொடுத்திருக்கிறது. 1934 ஆம் ஆண்டு சுமார் 34 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிப்படைந்தன. 125 மில்லியன் ஏக்கர் அளவு நிலத்தின் மணல் இடம் மாறியிருந்தது.

பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள். விவசாயம் முழுவதும் அழிந்தது.

Image Courtesy

மரணம் :

மரணம் :

கண்ணுக்குத் தெரியாத மண் துகள்களை மக்கள் சுவாசிக்க ஆரம்பித்தார்கள். இதனால் உடல் உபாதைகள் ஏற்பட ஆரம்பித்தது. அங்கு வசித்த மக்களுக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஆகியவை சர்வ சாதரணமாக இருந்தது.

ஏற்கனவே பஞ்சம் மற்றும் உணவுக்கே சிரமப்பட வேண்டிய நிலையிருந்ததால் மக்கள் மருத்துவத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்த பேரிடரில் எவ்வளவு மக்கள் உயிரிழந்தார்கள் என்கிற சரியான தரவும் இல்லை.

Image Courtesy

2000 மைல் :

2000 மைல் :

அந்த மண் துகள்கள் எங்கும் படர்ந்திருக்கும். அது மிகவும் மெல்லியதாக இருப்பதால் நம் சருமம், உணவு,தண்ணீர் சேமிக்கும் தொட்டி என எல்லா இடங்களிலும் மணல் தான் இருக்குமாம். 1934 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி மணல் புயல் வீசியது. இதில் மணல் சுமார் 2000 மைல் வரை பறந்திருக்கிறது. லிபர்டி சிலையே மணலால் மூழ்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Image Courtesy

இடம்பெயர்வு :

இடம்பெயர்வு :

பல நாட்கள் இது சரியாகிடும் என்று சொல்லி மக்கள் காத்திருந்தார்கள் ஆனால் மாதக்கணக்கில் தொடர்ந்ததால் மக்கள் இடம்பெயர ஆரம்பித்தார்கள். மாதக்கணக்கிலும் தொடர்ந்து இந்த டஸ்ட் பவுல் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்தது. இந்த காலத்தில் சுமார் 2.5 மில்லியன் மக்கள் வரை இடம் பெயர்ந்தார்கள்.

டெக்சஸ்,நியூ மெக்சிகோ,க்ளோரடோ,நெபராஸ்கா,கன்சாஸ் மற்றும் ஒகலாஹோமா ஆகிய மாவட்டங்கள் எல்லாம் காலியானது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய இடப்பெயர்வு இந்த சம்பவத்தின் போது தான் நடந்திருக்கிறது.

Image Courtesy

 ஒக்கீஸ் :

ஒக்கீஸ் :

இந்த டஸ்ட் பவுல் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை ஒக்கீஸ் என்று அழைத்தார்கள். வந்த இடத்தில் தங்க இடம், உணவு, வேலை என எல்லாமே கேள்விக்குறியானது. நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தார்கள். தங்க இடமின்றி சாலையில் ஏரளமான மக்கள் தஞ்சமடைந்தார்கள்.

அரசாங்கமும் திண்டாடியது.

Image Courtesy

காரணம் :

காரணம் :

1930 ஆம் ஆண்டு வானிலையில் இயற்கையாகவே ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அதாவது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் நிகழ்ந்த இந்த மாற்றம் தான் அமெரிக்காவையே இப்படி துவம்சம் ஆக்கியிருக்கிறது.

வழக்கத்தை விட பசிபிக் கடல் பக்கம் குளிர்ச்சியானது. அதே நேரத்தில் அட்லாண்டி கடல் இருக்கும் பக்கம் வெப்பம் அதிகமானது. இந்த காம்பினேஷன் மாறியதால் காற்றின் திசையும் வேகமும் மாறியது.

இது நாட்டின் 75 சதவீத பகுதியை பாதித்தது. அதாவது கிட்டத்தட்ட 27 மாநிலங்கள்.

Image Courtesy

மழை :

மழை :

மழையில்லாமல் ஏற்பட்ட வறட்சியினால் தான் இவ்வளவும் நடந்திருகிக்கிறது. ஆக வறட்சி தான் இதற்கு காரணம் மழை பெய்தால் எல்லாம் சரியாகிடும் என்று நினைத்தவர்கள் மழை பெய்ய பல முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள்.

அவற்றில் சில, பாம்பைக் கொன்று வேலியில் தொங்கவிட்டால் தங்கள் நிலத்தின் மீது விழுந்த திருஷ்டி மறைந்து மழை பொழியும் என்று நம்பினார்கள்.

Image Courtesy

பட்டாசு :

பட்டாசு :

ஐநூறு டாலர் செலவழித்து டயனமைட் மற்றும் நைட்ரோ க்ளிசரின் ஆகிய மருந்துகளை கலந்து வானத்தில் போய் வெடிக்க வைத்தார்கள். இப்படிச் செய்வதால் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து மழை பொழியும் என்று நம்பினார்கள். இது மழை பொழியவைக்க பல்வேறு முயற்சிகள் ஒரு புறம் எடுத்துக் கொண்டிருந்தால் இன்னொரு பக்கம் டஸ்ட் பவுலில் இருந்து தங்கள் நிலங்களை காப்பாற்றவும் சில முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

காற்றை தடுக்கும் வகையில் அந்த திசைகளில் மரங்களை நடுவது.விவசாய நிலத்தை மிகப்பெரிய வாட்டர் ப்ரூஃப் கவர் கொண்டு மூடுவது என திட்டமிட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

உள்ளே அனுமதியில்லை :

உள்ளே அனுமதியில்லை :

ஐந்தில் ஒரு பங்கு மக்கள் ஒக்கலாஹோமாவினர். பெரும்பாலும் இந்த மாவட்டதை விட பிற ஊர்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள். பின் காலப்போக்கில் விவசாயம் பொய்த்துப் போனதால் இடம்பெயர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாக மாறியது.

இப்படி இடம்பெயர்ந்து புது வாழ்விடம் தேடி வரும் மக்களுக்கு யாரும் அவ்வளவு எளிதாக உதவிக்கரம் நீட்டவில்லை. கலிஃபோர்னியாவிற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள். அங்கே வெளியில் ஒக்கீஸ்களுக்கும், நாய்களுக்கும் உள்ளே அனுமதியில்லை என்று எழுதி ஒட்டியிருந்தார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

History of Dust Bowl

History of Dust Bowl
Story first published: Saturday, April 21, 2018, 16:53 [IST]
Desktop Bottom Promotion